Tuesday, December 28, 2010

இதை கேட்க்க யாரும் இல்லையா ?


 1. என்ன சிகரட் விக்கிராணுக...முதல்லே இவனுகளை உள்ளே புடிச்சுப் போடணும்.
அண்ணன் ரஜினிகாந் இப்படித்தான் அடிக்க சொன்னாரு.



 2.             நீ..வர...வர கமல் படத்தைப் பார்த்து ரொம்ப கெட்டுப் போயிட்டே.


 3.                                               எங்க பீர் பாட்டிலியே கானோம் 

 4.                              நெருப்பை கொஞம் பக்கத்தில் கொன்டு வாடா

.
 5 .வீசா கார்டு இருக்கிறதுனாலெ யாரிடமும் கைய்யைக் கட்டி நிக்குறதுல்லை 


 6.                                           அதுக்கிலியா தீர்ந்து போச்சு



 7.மொலச்சு மூணு இலை விடலை அதுக்குள்ளே தண்ணியை அடிச்சிட்டு உளறவா செய்யுறே போதை தெளியட்டும் உன்னை என்ன செய்யுறேன் பாரு.



8.                                                   அம்மா.....மா...மா..மா..ங்....


 9.ஐயோ...யாராவது காப்பாத்துங்களேன் என் அம்மா துவைச்சு காயப் போட்டு விட்டார்கள். 


 10.கொஞ்சம் பக்கத்தில் வைக்காமல் தூரத்தில் வச்சுட்டு போயிருக்கு சனியன்.


11.வர..வர உனக்கு பீரு செலவுக்கு காசு அதிகமா தேவைப்படுது காய்கறிகாரனிடம் உன்னை கொடுத்து விட்டு ஒரு கிலோ வெங்காயம் வாங்கிட வேண்டியதுதான்.


 12.              சரக்குனா இதுவல்லவா சரக்கு..சும்மா குப்புன்னு ஏருதுலே. 



13.  ச்சே..பேப்பரை தொறந்தாலே ஒரே..சண்டைதான்..மனுஷன் நிம்மதியா ஆய் போக முடியுதா ?

14.                                                           ஆளைப் பாரு.....



15.டே..மரியாதையா என் பீர் பாட்டிலை தந்திடு இல்லை வகுந்துடுவேன்.





 16.என்னை தின்னுடாதே அப்பா..இனிமேல் பீர் குடிக்க மாட்டேன்... உன் மீது சத்தியமா.




17.             என்ன மச்சி கம்பெனிக்கு ஒரு ஆள் குறையுது வாவேன்.


18.                                        என்ன செய்றதுன்னு புரியலைங்க.



 
19.அவனுக எதையாவது செஞ்சுட்டு போகட்டும்..வா.... நாம் டூயட் பாடலாம்.



20.அடப் பாவிகளா..இருங்கடா உங்கள் எல்லோரையும் அந்நியனிடம் சொல்லி தண்டனை வாங்கித்தர்றேன்.


21.     அந்நியனுக்கு என்ன கொம்பா முளைச்சு இருக்கு போயி சொல்லுடா..

 22.  ச்சே..நம்ம பொழப்பு நாயை விட மோசமா போச்சு டப்பாவில் வச்சு கொண்டு போறானே இவன்லாம் என்ன அப்பா ?


23.உனக்கு தெரியுமா... கமல் அங்க்கிள் இப்படித்தான் எல்லோருக்கும் கொடுப்பாரு.



24.இன்னிக்கி எப்படியாவது பாய் fபிரெண்டை புடிச்சுட வேண்டியதுதான்.


25.                                     டேய்..என்னை கை விட்டுட மாட்டியே ?
 26.டேய் அப்பா..மரியாதையா சொத்தை பிரிச்சு தந்துடு இல்லாவிட்டால் வழக்கு தொடர்ந்து உன்னை நாரடிச்சுடுவேன்.


 27.            இப்படித்தான் என் அண்ணன் ராமராஜன் பால் குடிச்சாரு.



28.டேய் லைசன்சை எடுத்து வச்சுக்கோ..போலிஸ் இப்போ லஞ்சம்லாம் வாங்கிறது இல்லை.


29.காலில் ஆணி என்றால் உன்னைப் பிடிக்க முடியாதுனு நினைச்சியோ இப்போ பாரு உன்னை என்ன செய்றேன் என்று.


30.தமாசுக்காக எழுதினது..படித்து மகிழுங்கள் என்னடா அந்நியன் வர வர சிரிக்க வைக்கிறானே என்று நினைக்காதிர்கள் கூடிய சீக்கிரம் ஒரு பதிவு ரெடியாகிக்கொண்டு இருக்கிறது ஜனவரியில் இடுவதற்கு.

இதற்க்கு சில ஆதாரங்கள் தேவைப் படுகிறது அதுனாலே அந்த ஆதாரம் கிடைக்கப் பெற்றப் பிறகு கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.


// Nijam ஆனால், ரொம்ப்ப்ப்ப்ப 'பீர்' வாடை
அடிக்கிறதே!//


யாராவது இப்படி ஒரு கேள்வி கேட்க்க மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தேன் நல்ல வேலை நீங்கள் கேட்டு விட்டிர்கள் அப்படி நீங்களும் கேட்க்காமல் போயிருந்தால் நானே பின் குறிப்புன்னு போட்டிருப்பேன் கடைசியில்.

புதிய வருடத்திற்கு இளைஞர்கள் அடிக்கும் கூத்தினை இப்படி சிறுசுகள் மூலம் விளக்கியுள்ளேன்,டிசம்பர் ராத்திரி பனிரெண்டு மணிக்கு பீர் மழையில்தானே குழிக்கப் போகிறார்கள் அதற்காகத்தான் இந்தப் பதிவை போட்டேன்.
எனக்கும் ஒரு மாதுரியாத்தான் இருந்துச்சு என்ன செய்ய கண்ணை மூடிக் கொண்டு போட்டு விட்டேன்.


எல்லோரும் மனம் பொறுக்கவும்.


Thursday, December 23, 2010

டிஆர். புரட்சி பாடல்



பதிவைப் படித்து,போரடித்துப் போன நண்பர்களுக்கு ஒரு மாற்றத்திற்காக நகைச்சுவை இதில் இடம் பெறுகிறது,பாட்டைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்.


"
ஜெயில்ல இவ்வளவு நாள் இருந்தேனே.....ஒரு மரியாதைக்காவது அந்த ஆள் வந்து பாத்தானா பாரு?"

"நேரமில்லையாம் தலைவரே.... இன்னும் எத்தனையோ கேஸ்ல உள்ளே போகப்போறாரு, அப்போ போய்ப் பாத்துக்கலாம்னு சொல்லிக்கிட்டுருக்காராம்!"

-------------------------------------------------------
எங்க தலைவரோட நாட்டுப்பற்று வேற யாருக்குமே இருக்காதுங்க!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"தீபாவளிக்குக்கூட தெருவுல 'நாட்டு வெடிகுண்டு'தான் வெடிப்பாரு!"

--------------------------------------------------------
வேட்பாளர்: என் பேரை "தர்மம்"னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?

உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட "தர்மம்" தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!
----------------------------------------------------------------


சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?

அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!

----------------------------------------------------------------

வேட்பாளர்: அந்த தொகுதிக்கு "கால்நடை"யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!

தொண்டர்: "மனுஷனா"வே போயி கேளுங்க தலைவரே!
------------------------------------------------------------------

"ஓட்டுப் போட்டுட்டு வெளியே வர்ற வாக்காளர்களுக்கெல்லாம் அந்த வேட்பாளர் ஏதோ ஸ்வீட் தர்றாரே...என்னங்க அது?"

"வேறென்ன...."அல்வா"தான்!"

"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"

"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"

------------------------------------------------------------------------------------

"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!"

“எதைப்பார்த்துச் சொல்கிறீர் அமைச்சரே?"

"அண்டை நாட்டுக்கு நாம் ஓலை கொடுத்து அனுப்பிய புறா, அந்த ஓலையை ஒரு மரத்தில் வைத்துத் தின்றுகொண்டிருக்கிறதாம் மன்னா!"

-----------------------------------------------------------------------------------

"
என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!"

"ஏன் சந்தேகம் மன்னா?"

"சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"

------------------------------------------------------------------------------------

"பட்டினியால் வாடும் நம் மக்கள் அகழியிலுள்ள முதலைகளைப் பிடித்துச் சாப்பிடுகிறார்களாம் மன்னா....!"

"ஆகா! மக்களுக்குத் தெரிந்த மாற்றுணவுத் திட்டம் மந்திரியாகிய உமக்குத் தெரியவில்லையே....யாரங்கே? இன்று முதல் அரண்மணையிலும் முதலைக்கறி சமைக்க ஏற்பாடு செய்யுங்கள்!"




கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி


------------------------------------------------------------------------------------







Saturday, December 18, 2010

போக்குவரத்து விதிகளை மீறிய மாடு கைது...!!!




சென்னை மாநகருக்கு உட்பட்ட முக்கிய சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மாட்டினை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்,இதைப் பற்றிய ஒரு தொகுப்பு.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை மூன்றினையும் தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் தமிழக காவல் துறையினர்,தவறு செய்யும் யாவரும் சட்டத்திற்கு முன் சமம் என்று சமிப காலமாக நிருபித்து வருவது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே வியப்பளிக்கிறது...!!!

சென்ற பதிவில் வக்கீலை கொலை செய்ய முயன்ற சேவலை அதிரடியாக வலை விரித்துப் பிடித்து கைது செய்த போலீசாருக்கு,தமிழக முதல்வர் விருதிற்கு,காவல் துறை டிஜிபி அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு விருது கிடைக்கப் போகும் தருவாயில்,மற்றொரு போலீசார் போக்குவரத்து விதியை மீறிய குற்றத்திற்காக மாட்டினை மிகத் துணிச்சலுடன் பிடித்து வரும் காட்ச்சியினை கண்டு, யாருக்கு அந்த விருதை கொடுப்பதற்கு பரிந்துரை செய்யலாம் என்று டிஜிபி அவர்கள் மிக தீவிர யோசனையில் உள்ளார்.

மிக துணிச்சலுடன் மாட்டினை கைது செய்த போலீசாரை "அந்நியன் 2"  நேரில் சென்று வாழ்த்தினை தெரிவித்தார் அவர்களின் உரையாடல் சில, இதோ உங்கள் பார்வைக்கு.

அந்நியன் : உங்களின் தீர செயலை பாராட்டுகிறேன் எங்கு வைத்து அந்த மாட்டினை பிடித்தீர்கள் ?

போலிஸ் : தம்பி.. நீங்கல்லாம் படத்தில்தான் சட்டம் பேசுவிர்கள் ஆனால் நானோ உண்மையில் சட்டத்தை காப்பாற்றக் கூடிய ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி,நேற்று மாலை மூணு மணிக்கு சென்னை நகரில் முக்கிய வளைவில் விளக்கு சிவப்பு நிறத்தைக் காண்பித்தும் கொஞ்சம்கூட பயம் இல்லாமல் கடந்து சென்ற இந்த மாட்டினை கைது செய்து உள்ளேன்,இது முடிவு இல்லை,இது ஆரம்பம் இதை எல்லோரும் புரிஞ்சு நடந்துக்கணும்.

அந்நியன் : மாட்டிற்கு முன்னாடி ரெண்டு மோட்டார் சைக்கிலு சிக்னலை மதிக்காமல் சென்றதாக மக்கள் பேசிக்கொள்கிறார்களே அப்போ அவர்களை கைது செய்யலியா ?

போலிஸ் : என்ன தம்பி புரியாமல் பேசுறே..அவனுக பெரிய இடத்துப் பசங்கள் அவனுக மீது கையை வச்சா,அப்புறம் சாப்பிடறதுக்கு எனக்கு கை இருக்காது.

அந்நியன் : அப்போ..உங்கள் சட்டத்தில் ஆடு மாடு கோழி,தப்பு செய்தால் மட்டும்தான் கைது பண்ணுவதற்கு இடம் இருக்கு,மனுசர்கள் தப்பு செய்தால் கைது பண்ணுவதற்கு இடம் இல்லை..அப்படித்தானே ?

போலிஸ் : என்ன அந்நியன்,கிறுக்குத் தனமா கேள்வி கேக்குறே,யார் சொன்னா,தப்பு செய்ற மனுஷரைக் கைது பண்ண சட்டத்தில் இடம் இல்லை என்று ? ஒருநாளைக்கு எத்தனை தள்ளு வண்டிக்காரனை சட்டம் தண்டிக்கிது,எத்தனை பழ வியாபாரிகள் மீது சட்டம் பாயிகிறது,எத்தனை பிச்சைக் காரர்கள் மீது சட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கிறது,இவர்கள் எல்லாம் உன் கண்ணுக்கு மனுஷர்களா தெரியலையா ?

அந்நியன் : நல்லாவே தெரியுது..என் கண்ணுக்கு எல்லாமே...நல்லாவே தெரியுது.உங்களை மாதுரி போலீசார் இருக்கிறதுனாலத்தான் இந்தியா இந்த நிலைமைக்கு இருக்கு.உம்மை போன்ற நேர்மையான போலீசார் இருக்கும் வரை அந்நியனின் வேட்டை தொடரும்.


சிரிப்புப் பதிவு.யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் ஆடு மாடுகளை அள்ளிசெல்ல மாநகராட்சி ஊழியர்கள் இருக்கும் போது,போலீசார் இதில் ஈடு படுவது அவ்வளவு நல்லா தெரியலை.

Tuesday, December 14, 2010

பத்திரிக்கையர் மீது டி.ராஜேந்தர் கடும் தாக்கு !!!




திண்டுக்கல் பூச்சாண்டி நகரில் டி.ராஜேந்தரின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் நிகழ்ச்சி நடை பெற்றது அப்போது ஒரு பிரபல தொலைக் காட்ச்சியின் நிருபர் உங்கள் கூட்டத்திற்கு மக்கள் கூட்டமே கூடுவதில்லையே ஏன்?என்று கேள்வி எழுப்பினார்.

இதைக் கேட்ட டி.ராஜேந்தர் பானையில் அரிசி பொங்குவதைப் போல் பொங்கி அந்நிருபரை தாக்க முயன்றார் அவரின் கட்சி இயக்குனர்கள் டி.ராஜேந்தரை சமாதனம் செய்து அழைத்து சென்றனர் பதிவினைப் பாருங்கள்.

இச்சம்பவம் பற்றி மக்கள் தலைவன் விஜயகாந்திடம் கருத்து கேட்டப் போது :

ம்ஹே..ம்ஹே...ம்ஹே..(சிரிப்பு)எனக்கு அப்பவே தெரியும் டி ஆர் இப்படிலாம் நடந்துக் கொள்வார் என்று அதுனாலேதான் என் மனைவி அவரிடம் கூட்டணி வைத்துக் கொள்ளாதிர்கள் என்று சொன்னார் அவர் ரொம்ப கோவக்காரர் பார்க்கவே பூச்சாண்டி மாதுரி இருக்கார் என்று.இன்று அதுபோலவே நடந்து விட்டது.

மொத்தம் தமிழ் நாட்டில் ஆயிரத்து எண்ணூற்றி என்பெத்தேழு உறுப்பினர்கள் மட்டுமே அவர் கட்ச்சிக்கு இருக்கு அதுலே அரநூற்றி எழுபத்தேழு உறுப்பினர்கள் வட நாட்டை சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்தில் கட்சி அடையாள அட்டை டி.ராஜேந்தரால் வழங்கப் பட்டபோது இலவச பஸ் பாஸ் என நினைத்து வாங்கிக் கொண்டவர்கள்தான் அவர்கள்.

ஐநூற்றி முப்பத்தேழு உறுப்பினர்கள் லாட்டரி சீட்டு வாங்குபவர்கள்,பொது இடத்தில் வைத்து கலர் கலரா கட்சி அடையாள அட்டை வழங்கப் பட்டபோது காசு கொடுத்து வாங்கிய அப்பாவிகள்.
காசை பெற்றுக் கொண்ட டி.ஆரோ,மக்கள் கட்ச்சிக்கு நிதி தருகிறார்கள் என்று எண்ணி பையில் போட்டுக் கொண்டார்.

மீதமுள்ள அரநூற்றி எழுபத்தி மூணு பேர்களுக்கு இன்னும் ஓட்டுரிமையே வழங்கப் படவில்லை இந்த நிலைமையில் அவர் கட்சி நடத்துகிறார்.

நீங்களே சொல்லுங்கள் இப்படிப் பட்டவரிடம் கூட்டணி அமைத்தால் நாளைக்கு நான் முதல் அமைச்சரா ஆகமுடியுமா ?

இல்லை அந்தக் கோட்டை பக்கம்தான் போகமுடியுமா ?

இன்னிக்கு தமிழ் நாடு இந்த நிலைமைக்கு இருக்கிறதுக்குக் காரணமே இந்த ராஜேந்தர்தான்.அதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும் என்பதால் எங்கள் கட்சி வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடும் நான் முதல் அமைச்சரா பொறுப்பேற்றப் பிறகு,முதல் வேலையா காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளை வைத்து ஒரு படம் எடுக்கிறது.
கதா நாயகனாக டவுசர் ராமராஜன்,அவர் கதையின் ஆரம்பமமே அவர் ஒரு தீவிரவாதி,சுடுவதில் இல்லை பாட்டு பாடுவதில்.இந்தியாவை தீவிரவாதிகள் பாம் வைத்து தகர்க்கும் போகும் சமயத்தில்..பாட்டுப் பாடி தீவிரவாதிகளை எப்படிக் கொல்லுகிறார் என்பதே கதை.

கேப்ட்டனின் பதிவை அப்படியே டி.ராஜேந்தரிடம் போட்டு காண்பித்து,கருத்துக் கேட்ட போது.

அவன் கிடக்குறான் லூசு !
அவன் கையில் மின்னுது காசு !
டேய்..வார்த்தையை அளந்து.. நீ பேசு !
உன்னை சும்மா விடமாட்டார் ஏசு !

இப்படி அடுக்கி கொண்டே போகும்போதே அவருக்குத் தெரியாமலேயே நாங்கள் வெளியே வந்துட்டோம்.

கண்ணை மூடிகிட்டு இன்னும் பேசிக் கொண்டே இருக்கார் டி ஆர். (அவர் முதல் அடுக்கு வார்த்தை அவருக்கே பொருந்தும்)

அந்நியன் :

கூத்தைப் பார்த்தோம்,படித்தோம் சினிமாவில் கூத்தடிப்பவர்களுக்கு அரசியலில் என்ன வேலை ?

திரையில் முதல்வரா ஆகுங்கள்,பிரதமரா ஆகுங்கள்,உங்கள் தீற்றை ஏன் அரசியலில் காண்பிக்கிரிகள் ?

அரசியல் தலைவரா ஆகுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு ?

MGRல் தொடங்கிய இந்த வியாதி இன்று விஜய் வரை வந்து நிக்குது !!!

இதுக்கெல்லாம் காரணம் முட்டாள் மக்கள்கள், இவர்கள் மாறாதவரை நாமும் மாறமாட்டோம்.




Saturday, December 11, 2010

வக்கீலை கொத்தி கொலை செய்ய முயன்ற சேவல் கைது !!!




.சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு அதிரடியாக விரைந்து சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை வலை வீசி தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

போலிசாரின் அதிரடி நடவடிக்கையை பற்றி பொது மக்கள் சிலரிடம் கேட்டபோது :

@ சேவல் கொத்துனதுனாலே அந்த வக்கீல் புகார் கொடுத்தார் ஒரு பாம்பு கொத்தி இருந்துச்சுனா புகார் கொடுத்திருப்பாரா ? இல்லை அந்த போலீசுதான் பாம்பை கைது பண்ணியிருக்குமா ?


@ கைது செய்யப் பட்ட சேவலை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தாதது போலிசின் மெத்ததனத்தை காட்டுகிறது.


@ கைது பண்ணுவதற்கு முன்னாள் அர்ரஸ்ட் வாரன்ட் இல்லாமல் கைது பண்ணியது மிகப் பெரிய குற்றம்.


@ இரவு முழுதும் காவல் நிலையத்தில் உயிரோடு அந்த சேவல் இருந்தது ஆச்சர்யமாக இருக்கு.


@ இந்த வழக்கை சிபி சிஐ டி போலீசார் விசாரிக்கணும்.


@ இந்த கைது விசயத்தில் நீதி மன்றம் முன்னுக்கு பின்னா தீர்ப்பளிச்சது வேதனையா இருக்கு,இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.


@ எங்க ஊரு கொலைகாரனை பிடிக்க சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் பிடிக்காமல் இருப்பது வெட்கமா இருக்கு.


@ சேவல் தப்பியோடியால் சூட்டிங் ஆர்டர் கொடுத்தது கண்டிக்க தக்கது.


@ குற்றவாளியை பிடிக்கிறதை விட்டுட்டு பேசாமல் போலீசார் கோழிகளை வலை விரித்து தேடலாம்.


@ ஒரு வேலை இது கந்த சாமியோடு வேலையாக இருந்தாலும் இருக்கலாம்,அந்த வக்கீலு கொஞ்சம் கறாரா பணம் கரப்பாறு.

எது எப்படியோ நடந்த சம்பவம் போலீசாருக்கு மெடலை ஒன்னும் வாங்கி தந்திடாது,சும்மாவே தமிழனை கேலி செய்யும் மலையாளிகளுக்கு வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைச்சு இருக்கு,வருஷம் பூரா மெண்டு கொண்டே இருப்பான்,நாமளும் இல்லைன்னா..நொல்லைன்னா..என்று சமாதனம் சொல்ல வேண்டியதுதான்.

ஆறறிவு படைத்த நமக்குத்தான் நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியும்,அறிவே இல்லாத அந்த சேவலுக்கு தெரியுமா நாம செய்றது நல்லதா அல்லது கெட்டதா என்று ?

Friday, December 10, 2010

காந்தியும் ஒபாமாவும்



இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு மிசிசிபி விமானநிலையத்தில் நேர்ந்த அவமரியாதை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர் கடந்த 4ஆம் தேதி மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் பார்லிடிமோர் செல்வதற்காக, ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார்.

அப்போது அங்குள்ள அதிகாரிகள் மீராசங்கரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். தான் ஒரு தூதர் என்று மீராசங்கர் மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் எடுத்துக்கூறியும், சமாதானம் அடையாத அதிகாரிகள், சாதாரண பயணிகளை நடத்துவதைப்போல் சோதனையிட்டனர்.
உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது நாளிதழ்களில் காணப் படும் செய்தி !!!

இந்தியாவால் புகார்தான் கொடுக்க முடியும், அமெரிக்கா செய்தது தவறு என்று கண்டனம் தெரிவிக்க இயலாது காரணம் அமெரிக்காவுக்கு காட்டும் விசுவாசமும் பயமும்.
இந்திய ஜனாதிபதியையே டவுசரை அவிழ்க்க சொன்ன அமெரிக்க அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரியை சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்தது கண்டிக்க தக்கது.இந்தியர்களை அவர்கள் இழிவுப் படுத்தாவிட்டால் தூக்கம் வராது அது அதிகாரியானாலும்சரி அரசியல் தலைவர்கலானாலும்சரி எல்லாம் ஒன்றுதான் அவர்களுக்கு.

ஒரு சாதாரண அமெரிக்க கம்பெனியின் குளிர்பான தலைவர் இந்தியாவிற்கு வருகை தந்தால், பாதுகாப்பு சோதனையை தளர்த்தி, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் இந்தியா,நமது தேச தலைவர்களும்,ஜனாதிபதிகளும்,அரசு அதிகாரிகளும் அமெரிக்கர்களால் அவமானப் படுவது ஏன் ?

நாசாவை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இந்திய விஞ்ஞானிகள் கொஞ்சம் அமெரிக்காவுக்கு புத்திமதி சொல்லலாமே.

ஒருநாள் இந்த நிலமைக்கெல்லாம் மாற்றம் உண்டு,அந்த மாற்றங்களை செய்வதற்கு மக்கள் பலம் இருக்கு,அது பொங்கி கத்ரீனவா மாறுவதற்குள்,அமெரிக்கா மற்ற நாடுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளனும், இல்லையேல் அது அழிவுக்கு அவர்களே விதைத்த வித்தாகும்.

Saturday, December 4, 2010

ஏழைகளை தத்தெடுப்போம்.


சொந்தங்களை அரவணைப்போம் - ஏழைகளை தத்தெடுப்போம்.

அந்நியர்கள் மீது கூட வன்முறையை வெறுத்த மகாத்மா காந்தி வாழ்ந்த நாட்டில்,,குடும்ப வன்முறை மூலம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதும், பேசாமலிருப்பதும், வேதனையிலும் வேதனை.
குடும்பத்தில் ஏற்ப்படும் குழப்பம், அது சமுதாயத்திற்கே அழிவே ஏற்ப்படுத்தும் என்று, யாரும் புரிந்துக் கொள்வதில்லை,இதனால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு பின்னடைவே ஏற்ப்படுத்துமே தவிர, எந்த ஒரு நண்மையையும் தராது.
இதன் மூலம் அவர்களின் வாரிசுகள் மட்டுமின்றி பகையாக்கப் பட்ட அண்ணனோ, அல்லது தம்பியோ,அக்காவோ அல்லது தங்கையோ,இவர்களின் வாரிசுகளும் மனதால் பாதிக்கப் படுகிறார்கள்.

இதைப் பற்றி பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், என்னை சார்ந்த எவர் ஒருவரும்,என்னை சார்ந்தவரிடம், தொடர்ந்து மூன்று நாட்கள் பேசாமளிருப்பாறேனில், அவர் என்னை சார்ந்தவர் இல்லை என்று.

அண்ணல் மகாத்மாவும், மனிதருக்கு மனிதர் நேசித்து கொள்ளுங்கள்,துரோகித்துக் கொள்ளாதிர்கள் என்று தமது நண்பர்களுக்கு தினமும் அறிவுருத்துபவராக இருந்தார்.

குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுக்கு உணர்ச்சிவசப் படாமல், உறவுகள் செய்த நன்மையை மட்டும் எண்ணி, முடிவு எடுத்தால், குடும்பம் பிரிவதற்கு யாரும் காரணமாக இருக்கமாட்டார்கள்.
ஒரு ஊரை,சுற்றி ஆராய்ந்தோம் என்றால்,நாற்ப்பது சதவிகித மக்கள் குடும்ப பிரச்சினையால், சகோதர சகோதரிகளை இழந்து வாழ்கிறார்கள்.

இதற்க்கு காரணம் என்ன ?

வசதியும், வாய்ப்புகளும் கூடும்போது, தமது சம்பாத்தியத்தின் நிழலில், மற்ற உறவுகள் ஒண்டி வாழ்வதால், நமது குடும்பத்திற்கு நஷ்ட்டம் ஏற்படுமே என்று எண்ணம் கொள்வது. (ஒரு வகையினர்)

சொத்தினை பங்கிடும்போது, ஏற்ப்படும் பிரச்சினைகளுக்கு, சரியான முறையில், பேசி தீர்வு காணாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் விவாதிப்பது.(ஒரு வகையினர்)

கவுரவம் என்று அழைக்கப்படும் பெருமதிப்பை, உடையவர்கள் தமக்குத் தரவில்லையே என்று வருந்தி, ஒதுங்குபவர்கள்.
(ஒரு வகையினர்)

மரணத்தின் வாயிக்குள் போய் கொண்டிருக்கும் இந்த மனிதப் பிறவிகள், வாழும் கொஞ்ச நாட்களில் நன்மையை செய்து, தீமையை தவிர்த்து,உற்றார் உறவினருடன்,ஏழை எளியவருடன் ஒற்றுமையாய் வாழ்வதற்கு, மனம் வரவில்லையே ஏன் ?

கடினமான காரியத்தையும்,தமது பேச்சு திறனால் சாதிக்கும் மனித ஜாதி, காசுகள் பெருகியதும் கண்டும் காணாமல் போவது ஏன் ?

பணப் புழக்கம் அதிகரிப்பதால், உங்களின் அறிவுகளும்,அன்பு இதயங்களும் மங்கி போகின்றன, உங்களின் பலமும்,பலவீனமும் உணரும் சந்தர்ப்பம், கண்டிப்பாக ஒரு நாள் வரும்.

இது எல்லா மனிதருக்கும் பொருந்தாது.
நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி சொந்தங்களால் துரத்தி அடிக்கப் பட்டு,
நடுத்தெருவில் வீசி எறியப்பட்ட இந்த மூன்று ஜீவன்களை,
யார் காப்பாற்றுவார் ?

உழைக்கிறார்,தெருவில் சாப்பிடுகிறார்,நடை பாதையில் தூங்குகிறார்.
பச்சை மண்ணோடு...!!!

மழை பெய்வதற்கு முன்னேயே, நம் குழந்தைகளுக்கு குடையை கொடுத்து பள்ளிக்கு அனுப்பும் நாம்,திடிரென்னு மழை பெய்து விட்டால் இவர்கள் எங்கு போயி தூங்குவார்கள் ?

சொந்தங்களை அரவணைப்போம்..!!! 
ஏழைகளை தத்தெடுப்போம்...!!!

Wednesday, December 1, 2010

திருமணம் என்ற போர்வையில் விபச்சாரம்...!!!



திருமணமா.. இல்லை, திருமணம் என்ற பெயரில் விபச்சாரமா ?

இன்றைய இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்.ஆகவும்,ஐ.பி.எஸ்.ஆகவும்,டாக்ட்டராகவும்,தொழில் நுட்ப்ப வல்லுனர்களாகவும் சாதனை புரிந்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாது இந்தியாவை உலக அரங்கில் ஒரு வல்லரசுநாடாக மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள்.

கவிஞர் சிநேகன்..!!! கவிஞர் என்று யார் பட்டம் கொடுத்தது ?

இவர் அப்படி என்ன புரட்ச்சியை உண்டுபன்னிவிட்டார் ?

ஓடி போயிட்டு புள்ளைகளெல்லாம் பெத்தப் பிறகு கல்யாணம் பண்ணச் சொன்னவர்தானே இந்த சிநேகன்.!

சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் கண்ணில் படுபவனை கட்டிப் பிடிக்கிரிகளே வெட்கமா இல்லை உங்களுக்கு ?

தமிழ் இலக்கியம்,திருவருட்ப்பா,திருக்குறள்,செம்மொழி என்று பறை சாட்டும் தமிழக முதல்வர்,தமிழக கலாச்சாரம் அழிந்து போவதற்கு இந்த மனிதக் கூட்டம் காரணமா இருக்கே என்று கண்டிக்காதது ஏன் ?

புரட்ச்சி திருமணம் செய், வேணான்னு சொல்லவில்லை வரதட்ச்சனை வாங்காதே,மூட நம்பிக்கையை ஒழி,விதவைக்கு வாழ்வு கொடு வரவேற்கிறேன், இப்படி வர்றவன் போறவன்லாம் உன் பொண்டாட்டியைக் கட்டிப் பிடிக்காரானே,நீ இல்லாத நேரத்தில் உன் இடத்தில் அவன் இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் ?

பெண்ணுகளும், நாசமா போனவர்களுடன் சேர்ந்து கெட்டு சீரழிந்து போகிறார்கள்,திருத்தப் போவது யாரு ?

கட்டிப்பிடி கட்டிபிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா... என்று நக்கீரன் கோபால் கேலி பண்ணுவது எல்லோருக்கும் கேட்க்கிறது.

நாடு முழுக்க திராவிடர்களின் கூட்டம்,குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பட்டிமன்றம்,சந்து பொந்தெல்லாம் இலக்கியம் பேசும் பொது மக்கள் வாழும் தமிழ் நாட்டில், இப்படி ஒரு கேடுகட்ட சமூகம் இருப்பது வேதனையே..!!!

பொது இடங்களிலும், பொது போக்குவரத்து பேருந்துகளிலும்,பொண்ணுகளை லேசா உரசியாலே உள்ளே தள்ளும் சட்டம், இப்படி பொது இடத்தில் கண்டவனை கட்டிப் பிடிப்பவரை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?
ஒரு வேலை யாரும் புகார் கொடுக்காதக் காரணத்தால் கைது பன்னலியோ ???

இப்பவுள்ள சூழ்நிலையில் சமூக புரட்ச்சி தேவைதான், அதற்காக தனது வெட்கத்தை அடகு வைத்து அடுத்தவனை கட்டிப் பிடித்து புரட்ச்சி செய்பவரைக் கண்டிக்காமல் இருக்க முடியாது,

எப்படியோ இப்படி பல திருமணத்தை நடத்தி வைப்பதின் மூலமாக, பல சுகங்கள் கிடைக்கப் போவது அந்தக் கவிஞனுக்கும், அந்த சொட்டைத் தலையனுக்கும்தான்.

பொது மக்கள் விழிப்பது எப்போது ?


அந்நியன் 2