Wednesday, August 31, 2011

திரண்ட தமிழகம்!


ஏழு கோடி...தலையுடையாள்
ஏழாதவற்கும் அள்ளி தருவாள்
நாளு நாளாய் கண்ணீர் துயரால்
தவிக்கின்றாள் தமிழ் தாயவள்.

மத்திய அரசின் ஆனவமும்
கத்திய தமிழனின் ஆவனமும்
நீதியரசின் முன்னிலையில்
முட்டித்தான் பார்த்தது.

நீதிக்கு தலை வணங்கி
அநீதிக்கு குரல் சினுங்கி
வீர கம்பீரத்துடன்
தீர்ப்பளித்தார் நீதிமான்கள்.

மத்திய அரசின் படைகளும்
காந்திய பேரில் மனிதர்களும்
சிறையை பிடித்து வைத்தாலும்
திரையை அகற்ற முடியாது.

கொக்கரிக்கும் சுப்ரமணி சாமியும்
அதற்கு துணை போகும் ஆசாமியும்
குளத்தில் மிதக்கும் ஆமையென்று
செய்தி தாள்கள் சொல்லுகிறது.

மனித காந்தி சோனியாவும்
மவுனம் காப்பது சரியல்ல
மன்னிக்கும் பக்குவம் காந்திக்கு உண்டு
என்னைக்கு மாறும் இந்நிலை கண்டு.

மாநில அரசின் தீர்மானம்
மத்திய அரசு மதிக்காதாம்
விடையும் அவர்கள் நடையும்
வியப்பளிக்கிறது எங்களுக்கு.

ஓர் இந்தியா ஒரு மக்கள் ஒரு நாடு
கொள்கைக்கு உகந்ததல்ல உம் கோட்பாடு
மறவோம் மன்னிப்போம் மனித நேயத்தோடு
இறையான்மை காப்போம் ஒரு பலத்தோடு.

வாழ்க இந்தியா.

Tuesday, August 30, 2011

கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!! JOKES


திறுத்தப்பட்ட அதே பதிவுதான் பதிவை படித்தவர் படிக்க வேண்டாம்.
: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.
--------------------------------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு...."SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--------------------------------------------------------
நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர்!
டாக்டர்: எப்படி சொல்ற?
நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?
------------------------------------------------
மனைவி: ”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
கணவன்:அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்.
-----------------------------------------------
ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டாள்.
மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.
மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.
மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?
மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.
-----------------------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
-----------------------------------------------
அன்றோரு நாள்.....
-
-ஒரு மாலை வேளை.....
-
-ரயில்வே ஸ்டேஷன் அது.......
_
_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......
_
_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......
_
_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......
_
_அப்போது தான்....
_
_அப்போது தான்....
_
_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......
_
_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......
----------------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
-----------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
----------------------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
----------------------------------------------
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?
அவன் : 4.
ஆசிரியர் : ப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா? அவன் யாருக்கும் எதுவும் தரமாட்டன்
-----------------------------------------------
ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....
தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?
ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்
தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!
-----------------------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
-----------------------------------------------
மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி :ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
------------------------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
------------------------------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
--------------------------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்
டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க
-------------------------------------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க? 
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
--------------------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
--------------------------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
--------------------------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
-------------------------------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
-------------------------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
------------------------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
-----------------------------------------------
 என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
------------------------------------------------
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"
-------------------------------------------------
கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
-------------------------------------------------
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
-------------------------------------------------
" இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா? "
" இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே,அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க "
---------------------------------------------------
 அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? "
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம் "
----------------------------------------------------


எல்லோருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த நாள் மட்டுமின்றி எல்லா நாள்களிலும் எல்லோரும் குறிப்பாக ஏழைகள் அனைவரும் சந்தோசமாக இருக்க இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்.


அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.






நீ வேஷ்ட்டி கட்டிய ஆண்மகன் என்றால்...


3 பேரை தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்புசட்டப்படி அதிகாரம் இல்லை : சுப்பிரமணிய சாமி.


அடே அறிவுகெட்ட எருமை இந்த மூனு பேரும் நேரடியாக ராஜுவை கொல்லவில்லைடா அறியாமையின் கோளாறினால் பேட்டரி வாங்கி கொடுத்தவர்கள்தான் அது இந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்று கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

நீ கூடத்தான் சோரு வாங்கி கொடுத்தே ஆடைகள் வாங்கி கொடுத்தே உனக்கும் இந்த கொலையில் பங்கு இருக்கு நீ மட்டும் எப்படிடா ஹாயாக சுற்றுகிறாய்?

நீ வாயை திறந்தாலே வெறும் பொய்யுதான் வரும் நீ சொல்லுகிறாய் மரண தண்டனை விதிக்கப் பட்ட நளினியை ஆயுள் தண்டனையாக குறைத்தது இந்திய சட்ட அமைப்பிற்கு கொடுக்கப்பட்ட சவால் என்று.
ஒரு மனு தாக்கல் செய்தால் நளினியையும் இவர்களோடு சேர்த்து தூக்கிலிட முடியும் என்று கொக்கரிக்கிறாய்.

நீ வேஷ்ட்டி கட்டிய ஆண்மகன் என்றால் முதலில் சென்னை தலமை நீதிமன்ற வாசலில் கால் வைத்து பார்.

நீ மத்திய அரசை மிரட்டியதாலதான் பத்து வருடமாக இழுவையில் இருந்த இந்த வழக்கு முடிவிற்கு வந்தது என்று சொல்லுகிறாயே யாரடா சொன்னது முடிவிற்கு வந்து விட்டது என்று ?

இல்லை இன்னும் முடிவிற்கு வரவில்லை இனிமேல்தான் ஆரம்பம் ஆக போகிறது ஆம் சிவராசன் உன் வீட்டில் தங்கினதற்க்கான ஆதாரம் இப்பொழுது சி பி ஐ வசம் சிக்கியுள்ளதாக ஏஜெண்ட் நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு கொண்டு இருக்கின்றன மவனே அது மட்டும் உறுதியானால் உனக்கு இரண்டு தடவை தூக்கு...தான்டி.

தமிழக மக்கள்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்ட மன்றத்தில் தூக்கிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்கு தமிழக மக்கள்களின் சார்பாகவும் பதிவர் நண்பர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தற்காலிகமாக எட்டு வாரங்களுக்கு தூக்கினை நிறுத்தி வைத்த சென்னை உயர் மன்ற நீதியரசர்கள் அவர்களுக்கும்
உயர் நீதிமன்ற கதவினை தட்டியதுமில்லாமல் அவசர கால அடிப்படையில் இவ்வழக்கினை விசாரிக்கனும் என்று டெல்லியில் இருந்து பறந்து வந்த வசந்தகால ராஜன் அய்யா ராம்ஜெத் மலானி அவர்களுக்கும்.
 இப்பிரச்சினையை பொதுமக்கள்கள் முன்னிலைற்கு முதலில் கொண்டு சென்ற நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும்
 பத்திரிகை தர்மகத்தார் அனைவருக்கும் தோளோடு தோல் கொடுத்து தொனிவில்லாமல் அற்புதம்மாளுடன் துணையிருந்த வைகோ அவர்களுக்கும்.
 தடா வக்கீல் புகழேந்தி அவர்களுக்கும் எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும் .
சட்ட மன்ற உருப்பினர்கள் அனைவருக்கும் அவசர தந்தியினை ஜனாதிபதிக்கு அனுப்பி தந்த தாயுள்ள்ம் கொண்ட வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கும்.
 புரட்சி புயல் சீமான் அவர்களுக்கும் தொல் திருமாவளவன் அவர்களுக்கும் 
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களுக்கும் மற்றும் டாக்டர் கிருஷ்ண சுவாமி அவர்களுக்கும் 
மக்கள் ஆதரவை மதித்து பொருமை காத்த தமிழக காவல் துறையினருக்கும் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும்

நன்றி...நன்றி...நன்றி.

செங்கொடியே நீ செய்த காரியத்தால் நாம் உம்மை மறந்தோம் எதர்க்காக தெரியுமா?

உன்னை தியாகி என்று நாம் புகழாராம் சூடியால் இன்னும் எத்தனை கொடிகள் வீழும் இம்மண்ணில்?

அதற்காகத்தான்.


Monday, August 29, 2011

தூக்கு தண்டனை ரத்தாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தி ஓராண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்த முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு நிறுத்தப் போவது உறுதி.


இவ்வழக்கில் புதிய திருப்பமாக அனைத்து கட்சிகளும் போர் கொடி தூக்கி இருப்பதால் மக்கள் சக்தி ஓரனியில் திகல்கிறது அதைத்தான் நாமும் எதிர்பார்த்தோம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கையை மீறி மத்திய அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆனையிட்டாலும் அது செல்லுபடியாகாது இதை தடுத்து நிறுத்தும் உரிமம் சென்னை ஐ கோர்ட்டிற்கு இருக்கு இருந்த போதிலும் அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை இது மெது மெதுவாக இணைந்து கொண்டு இருக்கின்றது.

கண்டிப்பாக இது கிடைக்கும்.

வாயை மூடி கொண்டிருந்த விஜய்காந்தும் குரல் எழுப்பியது மட்டுமில்லாமல் போராடவும் வருவார் என தெறிகிறது இப்படி ஒவ்வொரு கட்சியும் முடிவெடுத்தால் மத்திய அரசின் ஆனையையும் சுப்ரீம் கோர்ட்டின் ஆனையையும் தூக்கி வீசி விடலாம்.

மக்களின் தீர்ப்பே இறுதி என்று அரசியல் வாதிகள் புறிந்து கொள்ளனும் மக்களே இவர்களின் கொட்டத்தை அடக்க இவர்களின் திட்டத்தை முறியடிக்க வெகுன்டெழுந்து அநீதியை எதிர்க்க வாருங்கள்.


 இதுதான் இந்த இருபத்தியோராம் ஆண்டில் தாய் மண்ணிற்க்காக நாம் செய்யகூடிய கடமையாகும்.

Tuesday, August 23, 2011

வெற்று உடம்புகள்

வீடற்று நாதியற்று

வீட்டாரின் உறவற்று
காடற்று கடலற்று
கண்டிராத புகழற்று
நடைப்பாதை புழுதியிலே
விடையில்லா பொழுதினிலே
உடையும் என் மனதினை
ஒட்டிவிட ஆளில்லை.

மரணம் நெருங்குமென்று
கரணம் நானிட்டாலும்
சரணம் துதிப்பாடியே
ரணம் ஆனது வாழ்க்கை.
ஆண்பாதி பெண்பாதி
கண்ணீர் வழியும் சரிபாதி
வெண்மை இதயத்தில் 
இருண்ட வாழ்க்கைதான் மீதி.

வெற்று உடம்புகளும்
பற்றற்று போகின
பற்று உறவினமும்
புண்பட்டு மடிந்தன.
கூவ நீரில் நானும்
குழாய் நீரில் நீயும்
போராடி வாழ்ந்தாலும்
மரணம் நிச்சயம்.

உயிரில்லா உறவுகளும்
நடைபிணமாய் அழைகின்றது
பெயரில்லா மனிதர்களும்
படைகொண்டு வாழ்கின்றது.
இதுதான் வாழ்க்கையா
இல்லையேல் இயற்கையா
வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.

என் ஏக்கங்களை தொலைத்து விட்டு
என் ஆக்கங்களை மண்ணில் புதைத்து விட்டு
வீன் தர்க்கத்தில் வாதிட்டால்
விளங்குமா வாழ்க்கை?
இறுகிய இதயத்தில்
இறையருள் பெற்றிட வேண்டும்
குறுகிய காலத்தில்
குறைகள் போக்கிட வேண்டும்

அங்கும் இங்கும் கடன்பெற்று
அன்பு எனும் பயிரை விதைத்திட்டு
அல்லல் படும் மாந்தர்களை
அனைத்திடுவோம் இருகரம் தொட்டு.
இலை உதிர்ந்து கிளை ஒடிந்து
கருகி போன மரம்கூட தளிர்கின்றது
நிலை குழைந்து நில்லாமல்
கலை மகள் காவியமாய் 
நிற்பாய் என நான் நம்புகிறேன்.

வலிகள் நிறைந்த உன் வாழ்க்கையில்
நல் வழிகள் திறக்கட்டும்.
ரணங்கள் ஆன உன் மேனிகள்
நருமணம் கொண்டு சிறக்கட்டும்.
வாழ்க ஏழைகள்.











Saturday, August 13, 2011

(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

ஏழை பங்காளானின் ஆட்சியும் 
கோழை காங்கிரசின் காட்சியும் 
காண்பதற்கு பசுமையாக தெரிகிறது கண்களுக்கு.
வெள்ளையரிடம் சுதந்திரம் பெற்று இந்த கொள்ளையரிடம் நாட்டை கொடுத்தால்...
முல்லை பெரியார் அனை தொடங்கி
எல்லை தேசம் வரை ஊழல்
வெள்ளையரின் ஆட்சியும்
கொடுமையான காட்சியும் மாறி
64 ஆண்டு ஆகியும் நம் நாட்டின் அவலம் மாறவில்லை.
இறந்த பிறகே சிதைக்கு தீ மூட்டும் இந்நாட்டில்
பிறந்த உடனேயே பெண் சிசுவுக்கு தீ மூட்டுகிறார்கள் 
சிந்திய ரத்தமும்
தியாகிகளின் சத்தமும் 
தூக்கு கொட்டடியிலே
கழுத்து நெரிபட்டு
கைகள் முறிபட்டு
தசைகள் வடு பட்டு
கண்களும் கட்டப்பட்டு
கொல்லப் பட்ட காட்சியோ...
சொல்லி விட முடியாது.
கூடி அழ அவர் சவங்கள் கிடைக்காமலும்
தேடி எழ வீரர்கள் இல்லாமலும்
அழிக்கப்பட்டனர் தியாகிகள்
அத்தியாகளின் நினைவாகத்தான் நாம் சுதந்திரம் கொண்டாடனுமே தவிர
போலியாக இல்லை.
இந்த அவஸ்தைகளை போக்கி சுதந்திரம் கொண்டாடுங்கள்.


அவஸ்தை எண் 1: இந்திய திரு நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விவர கணக்கு தெரிவிக்கின்றதை உடனே சரி செய்து தடுத்திடும் போது...
அவஸ்தை எண் :2 ஏழை இந்தியா பணக்கார இந்தியா என இரு வேஷம் போடுகிறது நாடு,பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பதை மாற்றிட முயற்சிகள் எடுக்கும் போது...
அவஸ்தை எண் : 3 பட்டினி சாவும்,பாலியல் கொடுமையும் தீண்டாமை வன் கொடுமையும்,தீண்ட தகாத மனித ஜாதி என, மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தாலும்,நய வஞ்சக மனிதர்களை கண்டும் காணாமல் இருக்கும் இருட்டு சட்டமும்,அதனின் பாது காவலர்களும் திருந்திடும் போது...
அவஸ்தை எண் :4 வதைக்கப்படும் பெண்ணுக்காக சிதைக்கப்படும் அவள் கற்பிற்க்காக எத்தனையோ வழக்குகள் நீதி மன்றத்தில் இருந்தும் அவளின் வாழ்க்கை மண்ணில் புதைக்கபடும் தருவாயில் தீர்ப்பு அளிப்பதை நினைத்து பார்க்கும் போது...
அவஸ்தை எண் :5 இன்னும் அன்னம் இல்லை என தினம் என்னும் மனிதர்கள் பசியின்றி பசித்துண்ண வசதிகள் செய்யப் படாத நிலையிலும் அரசியல்வாதிகள் வெட்டி பேச்சை நிறுத்தி கொள்ளும் போது...
அவஸ்தை எண் :6 சரித்திர ஏட்டில் சித்திரம் வரைக்க 
சாமானிய இளைஞர்கள் முற்பட்ட போதும் வேலை இல்லா தின்டாட்டம் ஒழிக்கப் படும் போது...
அவஸ்தை எண் :7 குடியை தடுத்து குடி மகன்களை தத்தெடுத்து குற்றம் குறைவதற்கு முயற்சி எடுக்காத போதும்...
அவஸ்தை எண் :8 காவல் நிலையங்கள் கட்ட பஞ்சாயத்து நிலங்களாக மாறாமல் இருந்திடும் போதும்...
அவஸ்தை எண் :9 நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் கண்கள் அதற்கு கலங்கம் கற்பிக்கும் அரசியல் வாதிகளை தண்டிக்க மறுத்திடும் போதும்...
அவஸ்தை எண் :10 கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறுக்கப்பட்ட போதும்...

என்ன சுதந்திரம்?
(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

என்ன முட்டாள்தனமான பதிவு இதுலாம் நடக்கிற காரியமா?
ஹா..ஹா..ஹா.
எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்.
ஐயா இன்னைக்கு சுதந்திர தினம் தண்ணீர் குடிச்சது போதும்
போயி எண்ணை தேச்சு குழிச்சுட்டு வாங்கள்

எப்படியாவது அந்த ஃபைலில் கையெழுத்து போட்டிருங்கள் என்னைக்குமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஆமா...பக்கத்தில் பொம்மை மாதிரி நிற்கிறாரே யாரு?


கண்டிப்பாக நீங்கள் இலங்கை வரனும் 

உங்களுக்காக மனுசகிட்னி வருவல்

மனுசதலை பொறியல்
மனுசகுடல் சூப்பு எல்லாம் தயாரா இருக்கு.
இந்த கொடுமைகளை பார்ப்பதற்கு 
     நல்ல வேளை நான் உயிரோடு இல்லை

Wednesday, August 10, 2011

யார் கொலையாளி?


நிலவொளி முற்றத்தில்
ஆசை தீர்க்கும் திட்டத்தில்
நிழலாய் இரண்டு உருவங்கள்
நிஜமான உருவத்தில்.

விரல் தொட்டு பேசியே
எல்லை மீறவும் ஆசையே
குளிர் காற்றின் பாவனையும்
தளிர் அவளின் தோரனையும்

துடி துடிக்கும் இதயங்களுடன்
நெருங்கி வந்தனர்சிறுபயங்களுடன்
அரும்பியதும் அவன் விரும்பியதும்
பறக்க போகிறது மானம்


பிஞ்சு மகளை காணோம் என்று
நெஞ்சு வலிக்க பெற்றோர்கள்
காவல் நிலையம் சென்றங்கே
கண்ணீர் வடித்து அழுதார்கள்


காரணம் அறிந்த போலிசார்
யாரேனும் இதற்கு சதியா என்றனர்
பதினெட்டு கடக்காதவளுக்கு
யாரய்யா சதி செய்வார்?


உரிமை என அவனின் கல் நெஞ்சம்
அவளை சீரழிக்கப் போகிறது
அறியாமை என்னும் பிஞ்சு அவள்
சீரழியும் நேரமிது


மழலை பருவ மங்கையே
கண்ணீரில் மிதக்கிறாள் உன் தங்கையே
போலியில்லா உன் முகம் பார்த்து
உன் சிறகுகளை பிடுங்க வில்லையே.


தொலை பேசியின் அலறலும் 
எதிர் முனை உலறலும் 
நம்ப முடிய வில்லை போலிசுக்கு
பெற்றோருடன் பறந்தது வாகனம்.


எத்தனை வேதனை இவர்களுக்கு
மனசு தந்தியடிக்க 
இரு இதழ்களும் துடி துடிக்க
விழிகளிலும் அவர் பேசும் மொழிகளிலும் கண்ணீர் தெறிந்தது.


கூடிய கூட்டத்தையும் 
கூவி அழைத்த கிழவனையும்
குடைந்து எடுத்தது போலிசு.
கொல்லப் பட்ட சடலங்களும்
இனி எங்களை யாரும் தேடாதிர் என்றது.



சத்தம் போட்டு 
கண்களை பொத்திக் கொண்டு
கதறி அழுதது ஒரு கூட்டம்

ரத்தம் பார்த்து மனதினை
தட்டிக் கொண்டு சிதறி ஓடியது
இன்னொறு கூட்டம்.

அப்போ கொலையாளி யார்?

நண்பர்களே இது கவிதை இல்லை இது ஒரு புதிர்.


வஞ்சகம் தீர்க்க நய வஞ்சகம் செய்து ஒரு அப்பாவி பெண்ணை சீரழித்தான் காமுகன்,இறுதியில் கொலைதான் தண்டனை,அவன் மட்டும் இல்லை அவளும் கொலை செய்ய பட்டாள் அப்போ அவர்களை கொன்றது யார்?


இருட்டில் நடந்தது காதலா?


இல்லை இருவருக்கும் நடந்த மோதலா?


பரந்து விரிந்த பூமியில் படு பயங்கரத்தின் ஊதலா? 


யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.

காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை.



























Monday, August 8, 2011

மரணம்தான் பரிசா?


ஊரோடு உறவுகள் இல்லை!
பேரோடு யாரும் பிறப்பதும் இல்லை!
அன்போடு அழைக்க மானிடர் இல்லை!
பண்போடு பார்க்க மனம் கசிந்தவரும் இல்லை!
கணவுகள் காணும் நான் ஒரு ஏழை!
வாழ்க்கையை அமைக்க தெரியாத ஒரு பாவை!
புரண்டோடும் பொழுதுகளே!
என் கண்ணீரை கொஞ்சம் பாராயோ!
சோகத்தில் அழுது வடிக்கும் கண்ணீர் கூட!
கரு...மேகத்தை கரைத்து விடும்!
தாகத்தில் நான் கதறி அழுதும்...மனிதா
போதத்தில் தள்ளாடுகிறாயே ஏன்?
கைக்கு எட்டாத வானமும்!
உனக்கு ஏதேனும் தரவா என கேட்கிறது!
என்னை சுற்றியுள்ள பசுமையும்!
பசி மயக்கம் கண்டு...அழுகிறது!
நளினம் ஆடும் தென்றலும்!
சோகத்தில் நின்றுதான் போனது!
புது வரவாய் பூக்கும் பூக்கள் கூட!
என் வறுமை கண்டு கண்ணீர் சிந்தியது!
இயற்கையே... என்னை கண்டு அழும்போது!
இயற்கை எய்திடப் போகும் நீ அழ வில்லையே!
புன்னகை வலையில் மறைந்து கிடக்கும்!
நீதான் மனித பிறவியோ?
கருவானேன்... பின்பு உருவானேன்!
சாக்கடையில் ஜனித்த நான்!
பூக்கடையையும் கண்டதில்லை!
யார் கண்ணுலேயும் படுவதும் இல்லை!
சுட்டப் புண்ணும் ஆறி விடும்!
கை பட்ட பூவும் மலர்ந்து விடும்!
என் வாழ்க்கை மட்டும் மாற வில்லை!
ஏழையாய் பிறந்ததினால்!
சொந்தத்தில் வந்த பாசமும்!
சோகத்தில் உடைந்து பிரிந்தனர்!
பந்தத்தில் இருந்த நேசமும்!
பசியின் கொடுமைக்கு மாண்டனர்!
தோல்வியின் முதற்படி வெற்றி என்றார்கள்!
வெற்றியின் ரகசியம் பணமும் என்றார்கள்!
இரண்டும் இல்லாத என் வாழ்க்கைக்கு!
மரணம்தான் பரிசா?
ஆவேச வரிகள்---
புன்னைகையில் பிழிந்தெடுத்த என் அன்புத் தமிழ் வார்த்தைகளை பின்னுரையில் ஆரம்பித்து,முன்னுரையில் முடிப்பவன்தான் இந்த அந்நியன்,கிழக்கே உதிக்கும் சூரியனும் சரி,இரவில் ஜொலிக்கும் சந்திரனும் சரி கடவுளின் கட்டுப் பாட்டுக்குள்தான் இருக்கின்றது.
மனித சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கிய தடைக்"கல்" மனித சமுதாயமே,ஏழையாக பிறந்தது எனது குற்றமா? இல்லை பதறாத காரியம் சிதறாது, பயம் கொண்ட மனம் சிறக்காது என்று சொன்னவரின் குற்றமா?   யார் குற்றம்?


நேற்றென்பது முடிந்துபோனது,நாளையென்பது அறியாதது,இன்றிந்த நொடியே,நாம் வாழ்ந்துணர்வது...வாழ்க்கை இப்படி இருக்க ஆனவம் எதற்கு?
காலுக்கு தோல் செறுப்பு வாங்க பணம் இல்லையே...என்று கடவுளிடம் வேண்டுகிறாயே...கால் இல்லாத மனிதர்களின் நிலையை நினைத்து பார்த்தாயா?
நூற்று கணக்கான நேற்றுகள் நகர்ந்து விட்டன ஆயிர கணக்கான நாளைகள் பின்பு வரும்,ஒரே ஒரு "இன்று" மட்டும் ஏழைக்கு உதவி செய்...வாழ்க்கையில் என்றுமே சந்தோசமா இருப்பாய்.
கருமியோடு உறவு வைத்தால் இருமியே நம்மை கொண்ணுடுவான்.
பொய்யனுடன் கூட்டு வைத்தால் சமயம் கிடைக்கும் போது மாட்டி விடுவான்.
முட்டாளோடும் ஒட்டாதிர் அவன் உங்களுக்கு உதவி செய்தாலும் அது உபத்திரத்தில்தான் போயி முடியும்.
பாவியோடு சுற்றாதிர் ஒரு பவுன் கொழுசுக்கு கூட உன்னை விற்றுவிடுவான்.
ஏழைகளை ஆதரியுங்கள் வாழ் நாள் பூரா நன்றியுள்ளவனாக இருப்பான்.


 கவிதை எழுதி பழகுறேன்,கவிஞர்கள் யாராவது.... குறைகள் இருந்தால் கண்டு பிடித்து சொல்லவும்.

Friday, August 5, 2011

மூணுக்கு மேலே எழுதியால்... ஒதுக்கி வைத்து விடுவார்களாம்!!!



நான் விரும்பும் மூன்று விஷயங்கள்.

(1) சீர்வரிசை கொடுத்துன்னை வழியனுப்பும் பெற்றோர்க்கு
சீரழிவை கொடுக்கக்க கூடாது அப்பெண்.
(2)பட்டினியின் கோரப் பிடியில் மயங்கிருக்கும் மனித கூட்டம் மூன்று வேளையும் உணவருந்த வேண்டும்.
(3)ஏழைகள் பணக்காரர்களாக மாறனும்.

நான் விரும்பாத மூன்று விஷயங்கள்.

(1)பெற்ற தாயையும் பொறந்த நாட்டையும் ஒதுக்கும் மனிதர்கள் பிடிக்காது.
(2)பணத்தாசையில்"மார்"தட்டும் மானிடமும் புறம் பேசி குழி பறிக்கும் நட்பகத்தையும் பிடிக்காது.
(3)நாம் வாழும் வாழ்க்கை அரியது வறுமையும் கொடியது நாம் வாழும் வரை எழியோரை வாழ வைக்க முயற்சிக்காதவரையும் பிடிக்காது.

பயப்படும் மூன்று விஷயங்கள்.

(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.
(2)உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.
(3)வாழ்க்கையின் பாதையினில் வேதனைகளும் சோதனைகளும் தோன்றும் அதற்காக வாழ்க்கையினை அழித்துக் கொள்ளும் காதலர்களின் பெற்றோரை கானும் போது ஒரு பயம்.

புரியாத மூன்று விஷயங்கள்.

(1)விடியாத இரவுகள் புது வரங்களோடு விடிந்தும் முன்னேராத இந்தியாவை கானும் போது.
(2)போலியும்...கலப்படமும் தமிழகத்தின் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல இருக்கின்றது,எந்த அரசியல்வாதிகளாலும் அதை மாற்ற முடியாததை நினைத்து பார்க்கும் போது.
(3)பரந்து வாழும் நம் மக்கள்களின் கருத்தை விட பன்னாட்டு நிருவனங்களுக்கு மன்மோகன் சிங் நமது வணிகத்தை ஏன்?தாரை வார்க்கிறார் என்று என்னும் போது.

மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
(1)கம்ப்யூட்டர்.
(2)டிஷ்னரி.
(3)குறிப்பேடு.

சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்.

(1)சர்தார் ஜோக்கை படித்து விட்டு நிஜ சர்தாரை ஃபீல்டில் பார்க்கும் போது என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.
(2)நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பேசும் பேச்சுகளையும் அரசியலுக்கு வந்த பின்பு பேசும் பேச்சுக்களையும் யூ டூபில் பார்த்து சிரிப்பேன்.
(3)டாம் அன்ட் ஜெர்ரியையும் பார்த்து சிரிப்பேன்.

தற்போது செய்துகொண்டிருக்கும் காரியம்.

(1)எப்படி இந்த தொடர் பதிவை முடிப்பது என்று யோசித்துக் கொண்டு "டைப்" பண்ணிக் கொண்டு இருக்கின்றேன்.
(2)கடிகாரம் ஏன் சீக்கிரமாக சுற்றி கொண்டு இருக்கின்றது என்று கறுவிக் கொண்டு இருக்கின்றேன்.
(3) இடை இடையே கொட்டாவி உட்டுக் கொண்டும் இருக்கேன்.

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.

(1) தீமைககளிருந்து விலகி நண்மைகளை ஏவி ஹஜ் செய்யனும்(இன்ஷா அல்லாஹ்)
(2)வறுமையிலிருந்த என்னை வைர பொக்கிஷமாக மாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கனும்.
(3)என்னிடம் பணம் இருக்கும் போது எல்லோருக்கும் உதவிடனும்.

செய்து முடிக்கக்கூடிய மூன்று விஷயங்கள்.

(1) முடியாததை முடியும் என்று சவாலாக எடுத்து செய்து முடிப்பது.(தொழில் ரீதியாக)
(2)அன்றைய வேலைகளை அன்றே முடிப்பது.
(3)ஊரில் இருக்கும் போது சமையல் அட்டாகாசங்கள் ப்ளாக்கை திறந்து பிரியாணி செய்து,வீட்டில் பாராட்டைப் பெருவது.

கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்.
(1)குடிகாரனின் பேச்சு.
(2)அவசியம் இல்லாத கடன்.
(3)இரவலாக வாகனம்.

கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்.

(1) கவிதைக்கு எப்படி மெருகூட்டுவது என்று கற்றுக் கொள்ள ஆசை.
(2)ப்ளாக்கின் தொழில் நுட்பங்களை எளிதாக புறிந்து கொள்ளவும் ஆசை.
(3)தைய்யல் தைக்கவும் ஆசை.

பிடித்தமூன்று உணவு வகைகள்.

(1) கஞ்சி (பழைய சோறு)
(2)பிரியாணி.
(3)இட்லி

அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்.
(1)(முதல்வன் திரைப்படத்திலிருந்து)

குறுக்கு சிறுத்தவளே... என்னை குங்குமத்தில் கரைச்சவளே...நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்... என்னக் கொஞ்சம் பூசு தாயே...
உன் கொலுசுக்கு மனியாக... என்னக் கொஞ்சம் மாத்து தாயே.

(2)இதய கோவில் படத்திலிருந்து)

நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூஙவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்.

(3)காணொளியில் இனைத்துள்ளேன்

பிடித்த மூன்று படங்கள்.

(1) அந்நியன்.
(2) அந்நியன்.
(3) அந்நியன்.

இது இல்லாம வாழமுடியாது மூன்று விஷயம்.

(1) உயிர் இல்லாமல் வாழ முடியாது.
(2) இறை நம்பிக்கை.
(3) அமைதி.

இவ்வளவுதான் என்னால் எழுத முடியும்,இதுக்கு மேலே என்னத்தை நாம எழுதி அதை நீங்கள் படித்து கண்டனங்களை அனுப்புவதற்குள் நான் எஸ்கேப்.
என்னை இப்பதிவிற்கு தொடராக அழைத்ததற்கு லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் எழுதி விட்டிர்கள் என்று நினைக்கிறேன்,சகோ ஆஷிக் அவர்களும் சகொ ஹைதர் அலி அவர்களும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன் எதற்கும் சொல்லி பாற்ப்போம்.