Friday, August 17, 2012

ஆணாதிக்கம்


உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்.

யுத்தம் புரியும் ராணுவ அரக்கர்களும் சரி பயங்கரவாத தீவிரவாதிகளும் சரி கண்ணில் படும் ஆண்களை சுட்டுக் கொன்ற பிறகு பயத்தில் மயங்கி கிடக்கும் பெண்களை சீரழித்து தம் வக்கிர புத்தியால் அவளின் அந்தரங்களை அனுபித்தப் பிறகு அவளையும் சுட்டுக் கொள்கிறார்கள் கூட இருக்கும் சின்னஞ்சிறு மழலைகளையும் கொன்னு குவிக்கின்றார்கள். 

யுத்த வெறி பிடித்து அழையும் ஆண் ஆதிக்க அரக்கர்கள் யுத்தம் என்ற பெயரிலே சும்மா இருக்கும் பெண்களை துன்புறுத்தி வன்புணர்ச்சி செய்யும் காட்சிகளை கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்ப்போமேயானால் நமது கண்களில் கண்ணீர் வராது மாறாக குருதிதான் வரும். 

இராக் காஷ்மீர் இலங்கை சூடான் ஆப்கானிஸ்தான் இன்னும் எத்தனையோ நாடுகளை நாம் உதாரணத்திற்கு எடுத்து வைக்கலாம் ஆனால் நமக்கு கிடைக்கப் போவது என்ன ?

நீதியா...இல்லை அநீதி இழைத்த அரக்கர்களுக்கு தண்டனையா ? 
ஒன்னும் கிடைக்கப் போவதிலை இந்த உலகில். 

 ஆயுதம் தயாரிக்கும் ஆணாதிக்கம் அதனை உபயோகிப்பது எங்கே தெரியுமா ? 
 கூடி இருக்கும் குடும்ப பெண்கள் மீதும் ஓடி திரியும் சின்னஞ்சிறுவர்கள் மீதும்தான் தாம் எதற்க்காக கொல்லப் படுகின்றோம் என்று காரணமே தெரியாமல் மரணத்தை தழுவும் இவர்களுக்காக இந்த மனித உலகம் என்ன நீதி வழங்கியது ? 
 யுத்த பூமியில் பித்து பிடித்து திரியும் ஆண் ஓநாய்கள் கிட்லரிலிருந்து ராஜபக்ஷே வரை அல்லது ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து டோனி ப்ளேயர் வரை எதை சாதித்தார்கள் ?  
உலக சாம்ராஜ்யத்தில் அரசானாக அமெரிக்கா இருக்கலாம் ஆனால் அது நீடித்து நிற்காது என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளனும்.

அப்பாவி தமிழர்களை இலங்கையில் ராஜ பக்சே கொன்னு குவிக்கலாம் ஆனால் அவனின் ஆட்சிக்கு இது ஒரு இழுக்கு என்பதை அவன் தெரிந்து கொள்ளனும்.
யுத்தத்தினால் அரங்கேறும் அக்கிரமங்களை இந்த ஆணாதிக்க அரக்கர்கள் புரிந்து கொள்வதில்லையே ஏன்?

வளங்களை அழித்து நிலங்களை வளைத்து விரும்பிய பெண்களை சீரழித்து வாழ்வு,கலாச்சாரம்,பண்பாடு,வழிமுறை,எல்லாவற்றையும் அல்லவா புதைக்கின்றார்கள்.

பெண்களை பிள்ளை தயாரிக்கும் மிஷினாக பயன்படுத்தி அவள் பெற்றெடுக்கும் பிள்ளையை தீவிரவாதியாகவோ அல்லது ராணுவ வீரன் என்ற போர்வையில் ஒரு அரக்கனாகவோ பயிற்சிகள் கொடுக்கும் ஆணாதிக்க வர்க்கங்கள் தமது குடும்பத்தை போன்று மற்ற குடும்பத்தையும்  பார்க்க வேண்டாமா ? 

 இன்றைய புள்ளி விவரப்படி உலகில் நடக்கும் இன அழிப்பு என்னும் கொடுமையானப் போரில் 85 சதவிகிதம் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்கள்தான் என்று செய்தி நிறுவனங்கள் சொல்கின்றது.உகாண்டாவில் நடந்த இன வன்முறை புரட்சியில் ஐந்து லட்சம் பெண்கள் கற்பை இழந்து கடும் சித்திரவதைக்கு ஆளாகிவுள்ளார்கள் என்பதை பத்திரிக்கை வாயிலாக நாம் பார்க்கின்றோம் அதே சமயம் இராக்கில் அமெரிக்கா ராணுவ அரக்கர்கர்கள் ஆயிரத்திற்கும் மேலானா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் சிலரை கொன்றும் பலரை நிர்வாணப் படுத்தி கொடுமைகள் செய்ததை பல காணொளிகளிலும் கண்டோம்  இலங்கையில் பல நூறு பெண்களின் அங்கங்களை வெட்டியும் அவளை வன்புணர்ச்சிகள் செய்தும் தம் கணவன் முன்னே கொன்னு குவித்த ராணுவ மிருகங்களும் இன்னும் உயிரோடுத்தான் இருக்கின்றார்கள்.

 மனித நலன்களுக்கு எதிராக தொடுக்கப் படுகின்ற போர்களுக்கு சர்வதேச மக்கள்கள அங்கீகாரம் கொடுப்பது ஏன் ? 

நாட்டின் எல்லைக்காக பல உயிர்களை நாம் காவு கொடுக்கின்றோம் பல இன்னல்களை பொருளாதார ரீதியாகவோ அல்லது மனக் குழப்பம் ரீதியாகவோ இழந்து வருகின்றோம் வாழப் போகும் இந்த குறுகிய வாழக்கைக்குள் இப்படிப் பட்ட போர்கள் தேவைதானா ? 

ஆண்கள் நினைத்தால் உலகில் எங்கு வேணும்னாலும் அனுகுண்டையோ அல்லது அழிவு பயங்கர ஆயுதத்தையோ பயன் படுத்தலாம் இதை தட்டி கேட்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ பெண்களுக்கு உரிமை இல்லை என்பதைப் போலவே தெரிகிறது இல்லை...இல்லை அப்படித்தான் இருக்கின்றது.

வேலையில் சம உரிமை அதிகாரத்தில் தனியுடமை இதுதான் இன்றைய ஆணாதிக்கத்தின் கொள்கையாக இருக்கின்றது. 
இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது ? 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திக்கின்றேன் அனேகமாக பதிவிட்டது உங்கள் கவனத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை எப்பொழுது உங்களுக்கு நேரம் கிடைக்கின்றதோ அப்பொழுது உங்கள் கருத்துரைகளை எடுத்துரைங்கள் திருத்திக் கொள்கிறேன் அல்லது திருந்தி கொள்கிறேன் நானும் உங்கள் தளங்களில் வந்து பல மாதங்களாகிவிட்டது இனி அடிக்கடி வருவேன் (இன்ஷால்லாஹ்)  

எல்லோருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

குழி விழுந்த என் குழந்தையின் கன்னமும்  குழியில் புதைக்க நினைக்கும் சில ஆண்களின் எண்ணமும் வழியற்று வரையற்று முடிவில்லா இப்போராட்டம்  முடியும் எப்போது ? 

ஏங்கும் இதயம் பற்றி  தூங்கும் மானிடனே உனக்கு தெரியவில்லையா  என் வலி ?         

என்றும் உங்கள் ஆதரவோடு 

 அந்நியன் 2        

Saturday, January 7, 2012

வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் பல


நேற்று: 

என் அம்மா என்னிடம்........

"கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா" 
"எடுத்துக்கிட்டேன் மா" 
"பேக்ல சிலேட் இருக்கா பாரு" 
"இருக்குமா" 
"டப்பால PENCIL இருக்கா பாரு" 
"இருக்குமா" 
"டிபன் பாக்ஸ் வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டியா?" 
"எடுத்துகிட்டேன்மா" 
"சமத்துல நீ ஸ்கூலுக்கு போயிட்டு வாப்பா. ஸ்கூல் பஸ் வந்திருக்கும் பாரு" 

இன்று: 
என் மனைவி என்னிடம்................
"ஏங்க வாட்ச் கட்டி கிட்டீங்களா?" 
"கட்டிகிட்டேன்மா"
"மொபைல் போன் எடுத்துக்கிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேன்" 
"ஆபிஸ் ACCESS கார்டு எடுத்துக்கிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேன்மா" 
"சமத்தா ஆபிஸ் போயிட்டு வாங்க. கம்பெனி பஸ் வந்திருக்கும் பாருங்க" 

நாளை: 
என் மகள் என்னிடம்...............

"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேம்மா" 
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?" 
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா" 
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?" 
"குறிச்சிகிட்டேன்மா" 
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா.அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா. 
முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா" 

வாழ்க்கை ஒன்று தான். காட்சிகள் பல
Salma Lifayaஎனக்கு பதிவிட நேரம் இல்லாமையால் இன்னும் ஒரு மாதத்திற்கு வலைப்பூ பக்கம் வர இயாலாது ஆகையால் எல்லோரும் நிம்மதியாக இருக்கவும் அப்பப்ப உங்கள் பகுதிக்கு வந்து செல்கிறேன் சல்மா அவர்கள் பதிவிடுவார்கள் என நம்புகிறேன்.

மெயில் அனுப்பி தந்த சகோ சல்மாவிற்கு நன்றி அய்யுப். 

Monday, October 17, 2011

விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


வலை உலகில் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை முழுதாக படிக்கவும் நேரம் இல்லை
ஆகையால் தமிழ் மணத்தின் தவறுகள் நண்பர்களால் கோடிட்டு காண்பிக்கப் பட்டுள்ளதால் தமிழ்மணம் தார்மிக பொறுப்பேற்று மன்னிப்போ அல்லது விளக்கமோ அளிப்பதுதான் நீதி.

விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

Wednesday, September 28, 2011

நண்பர்களே.....


நண்பர்களே கடந்த நான்கு நாட்களாய் வெளி ஊரில் இருப்பதால் உங்கள் வலை பூவிற்கு வர இயலவில்லை இன்னும் இரண்டு நாட்களில் வேலை முடிந்தப் பிறகு சந்திக்கிறேன்.


நன்றி.

Thursday, September 22, 2011

பெற்ற குழந்தையை உயிரோடு திண்ணும் அப்பா !!!


தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசியான இக்கொடியவன் தாம் பெற்ற பிள்ளையை உயிரோடு கடித்து சாப்பிட்டுள்ளான்.

பெற்ற மனம் கல்லாகி
குற்றமெனும் தெரிந்தும்
கற்றதறியா பிஞ்சுதனை
கடித்து குதறும் காட்சியினை பார்.


மழை துளி விழுந்தும்
மலர் பல நனைந்தும்
மங்காத மண் பூமியில்
கொடூரத்தின் சாட்சியினை பார்.


பசிக்காத வயிறும்
ருசிக்காத நாவும்
இக்கொடுஞ் செயலை 
செய்வதை நன்றாக பார்.


என் இதயம் கிழித்து
குரல் வளையை நெரித்து
என் குருதி குடித்த
கொலைகாரனை உற்றுப் பார்.


நெற்றி முத்தமிட்டு
வெற்றி என சத்தமிட்டு
எனை சுற்றி நீ வருவாய் என
காத்திருந்தேனே அப்பா.


கன்னத்தில் என் வண்ணத்தில்
என்ன குறை கண்டாயோ
மது கிண்ணத்தில் பொடியாக்கி
குடிக்கிறியே நான் பிறந்தது தப்பா?


உதிர்ந்த முத்தங்களும்
உணர்வற்ற சத்தங்களும்
உணர்ச்சிகள் இல்லாமல்
அழுத்து போகவில்லையே.


கறை படிந்த உன் உள்ளங்களை
சிறை பிடிக்க வேண்டும் என
பறை போட்டு சொல்லவும்
என் உயிரும் இல்லையே.


என் நினைவுகளை நீ சுமந்து
பின் விளைவுகளை நீ அடைந்து
மனித கழிவை திண்ணும்
நாளும் உனக்கு வராதோ?


உன் உயிரோடு உயிராக
நான் இல்லாமலும்...
உன் உயிருக்கு உறவாக 
ஆள் இல்லாமலும்...
உன் உயிர் இருக்கும் வரை
உணர்ச்சியின் வலிகள் தொடரட்டும்.Friday, September 16, 2011

என்னது...மீண்டும் சிரிப்பா? jokes


மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.அப்புறம் என்ன சிரிக்க வேண்டியதுதானே.ஆசிரியர்; நான் வரும்போது ஏன் சிரிக்கிறீர்கள்?
மாணவர்கள்; துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க.
ஆசிரியர்;தண்ணீரில் வாழும் மூன்று உயிரினங்கள் சொல்லு
மாணவன்; மீன்,முதலை,எங்க அப்பா.
நோயாளி: டாக்டர் இதுக்கு மேலே என் வாயை திறந்தால் வாய் வலிக்கிறது.
டாக்டர்: யோவ்... நான் திறக்க சொன்னது வாயை இல்லை உன் மணி பர்ஷை.
---------------
கபாலிக்கு அந்த இன்ஸ்பெக்டர் சல்யூட் அடிக்கிறாரே எதுக்கு?
மாமூல் கொடுக்கிற பட்டியல்ல 30 வருஷமா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறானாம்.
-------------
ஒருவர்:என் மனைவியை இன்னிக்குத்தான் பயங்கரமா திட்டினேன்.
மற்றொருவர்: நீ திட்டுற வரைக்கும் உன் மனைவி சும்மாவா இருந்தாங்க?
ஒருவர் : இல்லை அவ நல்லா தூங்கிட்டு இருந்தா.
கணவன்: சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
---------------
கபாலி: ஹலோ! சுந்தரா ஜவுளிக்கடையா?
ஓனர் : ஆமாங்க நீங்கள் யாரு பேசுறது?
கபாலி: நான் சைதாப்பேட்டை கபாலி பேசுறேன் ராத்திரி உங்க கடைக்கு வந்திருந்தேன் நல்ல டிஷைன் புடவைகள் இல்லை எப்போ வரும்னு சொல்ல முடியுமா சார்?
ஓனர்: !!!
---------------
நோயாளி: டாக்டர் எனக்கு இப்போ ஆப்ரேசன் பன்ன வேண்டாம் எனக்கு டைம் நல்லா இல்லைனு ஜோசியகாரர் சொல்லி இருக்கார்.
டாக்டர்: அதே ஜோசியகாரன்தாய்யா டைம் நல்லா இருக்கு நீங்கள் ஆப்ரேஷன் பன்னலாம் என்று என்னிடம் சொல்லி இருக்கார்.
நர்ஸ்: டாக்டர்..டாக்டர் ஸ்கேன் மெசினை கானோம்!!
டாக்டர்: அய்யோயோ...கபாலிகிட்டே ஸ்கேன் எடுக்கனும் சொன்னதை தப்பா புறிஞ்சுக்கிட்டு ஸ்கேன் மெசினை தூக்கிட்டு போயிட்டானே.
----------------
நோயாளி: நாய் துரத்துற மாதுரியே கனவு வருது டாக்டர்.
டாக்டர்: அப்படியா மூணு நாலு கல்லை வைத்துக் கொண்டு தூங்கு நாய் துரத்தாது.

Sunday, September 11, 2011

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
$$$$$$$$$$$$$$$$$$$$
பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா 
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????
$$$$$$$$$$$$$$$$$$$$
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"
$$$$$$$$$$$$$$$$$$$$$
"என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே?"
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."
$$$$$$$$$$$$$$$$$$$$$
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$
"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ" போட்டாங்க...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நர்ஸ்:ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க...
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? 
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
நீதிபதி:ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி:என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே? வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மெயில் அனுப்பி தந்த நண்பர்களுக்கு நன்றி.