Wednesday, January 26, 2011

ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது!




தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் நமது அரசியல் தலைவர்களின் உழைப்பும் அதிகமாகிக் கொண்டு போகிறது அவர்களது அயாராத உழைப்பும் சிந்திய வேர்வையும்தான் தமிழ் நாட்டு மக்கள்களின் கஷ்ட்டத்தை போக்கப் போகின்றது !!!

தேநீர் விற்றவனல்லாம் அரசியலில் நுழைந்தப்பிறகு தேயிலை எஸ்டேட் வைத்திருக்கான் ஆறடி நிலம் வாங்க நாதியற்றதல்லாம் அரசியலில் பொறுப்புக்கள் வந்ததும் ஏக்கர் கணக்கில் சொத்துகளை வாங்கி குவிக்கின்றான் எழுத படிக்க தெரியாத கூமுட்டைகள் கூட உதவியாளரை வைத்துக்கொண்டு அரசியலில் வளம் வருகிறது.
இதைவிட கொடுமை என்னவென்றால் நடிகர் நடிகைகளும் அரசியலில் நுழைந்து அமைச்சராக நினைப்பது வியப்பளிக்கிறது ! .

பொதுமக்களாகிய நாம் பொறுமையாக எருமை மாதுரி அசப்போட்டுக் கொண்டு இருக்கோம் இதைப்பற்றி சிந்திப்பதிலியோ அல்லது கருத்து தெரிவிக்கிறதிலியோ கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருப்பது தொலை நோக்கப் பார்வையாளர்களுக்கு,இந்த அரசியல் ஒரு விருப்பம் உள்ள விழையாட்டு தளமாக தெரிகிறது.

நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் இருகண்கள் என்று சுவாமி விவேகானந்தா சொன்னார் ஆனால் அந்த நேர்மைக்கும் உண்மைக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் அரசியல் தலைவர்கள் பொறுப்பில்லாமல் நடப்பது வெட்கமாக இருக்கின்றது,இந்நிலையினை போக்கிவிட தமிழ் நாடு மட்டுமின்றி இந்தியா முழுதும் தலைவர்களை "களை" எடுக்க வேண்டும்.

மதங்களை முன்னிறுத்திஅரசியல்செய்யும்தலைவர்களை,பொதுமக்களாகியா நாம்,தகுந்த பாடத்தினை புகுத்த வேண்டும்.
இனவெறி,ஜாதிவெறி,மதவெறி என்று துவேசம் பாடும் அரசியல் தலைவர்கள் மீது, ஆசிட்டை தூக்கி ஊத்தினாலும் தவறு என்று எந்த ஒரு மானிடனும் கூறமாட்டான், காரணம் அப்படியொரு விசமி தலைவானாக வந்து நாட்டு மக்கள்களை கலவரங்கள் மூலம் கொன்னு குவிப்பதை விட,நாமே அவர்களை முளையிலே "கிள்ளி"எறிவது நமக்கும், நம் நாட்டு மக்கள்களுக்கும் நல்லது.






அதாவது நான் என்ன சொல்ல வர்றேன் என்றால் நாம ஓட்டு போட்டாதாங்க இதுகளெல்லாம் ஜெயித்து அரசியலுக்கு வர முடியும் படிக்காத பட்டிகாட்டான் நானே மாறி விட்டப் பிறகு நீங்களும் மாறி விடுவிர்கள் என்று நினைக்கின்றேன்.

விவசாயி.





எந்திருப்பா...சீட்டு உனக்குத்தான்.

ஜெயலலிதா 



இவர் ஒரு சக்ரவர்த்தி...காற்று வீசும் போதெல்லாம் தூற்றிக் கொள்வார்.

                                                        மருத்துவர் ராமதாஸ்   



ஹலோ..ஒபாமாவா....நான் புஷ் பேசுறேன்,நான் வேண்ணா தமிழ் நாட்டிற்கு போயி அரசியல் பண்ணவா ? ( விளங்கிடும்)
இராக்கின் போரின் போது ஐநா தலைவர்களிடம் இப்படித்தான் போன் பேசினார் புஷ்.




அடுத்து அம்மா ஆட்ச்சிக்கு வந்தால் இந்த லட்டு பட்டுலாம் கிடைக்காது வேகமா சாப்பிடுங்கள்.


22 comments:

  1. ஜெயலலிதா ஒரு குள்ளநரி..

    ReplyDelete
  2. வரலாறு அவங்களை மன்னித்தாலும் மன்னிக்காவிட்டாலும் அவங்களுக்கு அதுபற்றி சொரணை எல்லாம் எங்க இருக்கு?

    ReplyDelete
  3. //NKS.ஹாஜா மைதீன் said...
    ஜெயலலிதா ஒரு குள்ளநரி..//

    சரி..சரி . பனங்காட்டு நரின்னு சொல்லுங்கள் நண்பா..
    வருகைக்கும் கருத்திட்டதிற்க்கும் நன்றி !

    ReplyDelete
  4. //ரஹீம் கஸாலி said...
    என்ன எழவை சொல்றது?//

    அவர்கள் அடிக்கும் களவைப் பற்றித்தான் சொல்லணும் தலை....
    நன்றிகள் கருத்திட்டதற்கு

    ReplyDelete
  5. /Lakshmi said...
    வரலாறு அவங்களை மன்னித்தாலும் மன்னிக்காவிட்டாலும் அவங்களுக்கு அதுபற்றி சொரணை எல்லாம் எங்க இருக்கு?//

    சரியாக சொன்னிர்கள் அம்மா.. இவர்களுக்கு அதுலாம் இருந்து விட்டால் அப்புறம் எதற்கு அரசியலுக்கு வரப் போகிறார்கள் ?

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  6. சகோ அந்நியன் அவர்களுக்கு
    நல்ல விழிப்புணர்வு கட்டுரை

    ஒவ்வொரு மனிதனும் தனது செயல், சிந்தனை,குறிக்கோள் ஆகியவற்றின் மூலமாகவே உலகத்தைப் பார்க்கிறான். அவனது செயல் நல்லதாக இருந்தால், அவனது சிந்தனை தூய்மையானதாக இருந்தால், அவனது குறிக்கோள் உயர்வானதாக அமைந்தால், உலகத்தைப் பார்க்க உதவும் அவனது கண்ணாடியும் தூய்மையானதாக இருக்கும்.

    சகோ. உங்களுடைய எழுத்துக்கள் மிக தூய்மையாக இருக்கிறது. பாலின் வென்மையை போல

    நன்றி சகோ

    ReplyDelete
  7. நல்ல விழிப்புணர்வு கட்டுரை... உங்கள் சேவை தொடரட்டும்...

    மொத்தத்தில் யாரைத் தான் தேர்ந்தெடுப்பது என்று புரியவில்லை...

    ReplyDelete
  8. //ஹைதர் அலி said...
    சகோ அந்நியன் அவர்களுக்கு
    நல்ல விழிப்புணர்வு கட்டுரை//

    ரொம்ப நல்லது அண்ணே,நீங்கல்லாம் இப்படி சொல்றதைப் பார்க்கும் போது மனது கொஞ்சம் கூலாக இருக்கின்றது காரணம் நாலு பேரு நம்மை வாழ்த்துவதை நினைத்து அல்ல,அட நம்ம எழுதினதும் பிறர் படிக்கும்படி இருக்கின்றதே என்று நினைத்துத்தான்.

    //ஒவ்வொரு மனிதனும் தனது செயல், சிந்தனை,குறிக்கோள் ஆகியவற்றின் மூலமாகவே உலகத்தைப் பார்க்கிறான். அவனது செயல் நல்லதாக இருந்தால், அவனது சிந்தனை தூய்மையானதாக இருந்தால், அவனது குறிக்கோள் உயர்வானதாக அமைந்தால், உலகத்தைப் பார்க்க உதவும் அவனது கண்ணாடியும் தூய்மையானதாக இருக்கும்.//

    நூற்றுக்கு நூறு உண்மையை தர வரிசைப் படுத்தி சொல்லி இருக்கியே வாழ்த்துக்கள்.

    //சகோ. உங்களுடைய எழுத்துக்கள் மிக தூய்மையாக இருக்கிறது. பாலின் வென்மையை போல//

    உங்களையும் மற்ற ஏனைய பதிவரையும் கம்பல் பண்ணும் போது நான் ஒரு ஜீரோதான் அண்ணே.
    வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி அண்ணே.

    ReplyDelete
  9. //hilosophy Prabhakaran said...
    நல்ல விழிப்புணர்வு கட்டுரை... உங்கள் சேவை தொடரட்டும்...
    மொத்தத்தில் யாரைத் தான் தேர்ந்தெடுப்பது என்று புரியவில்லை...//

    ரொம்ப நன்றி தலை....
    யாரை தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் நாட்டிற்கு ஒன்னும் செய்யப் போறது இல்லை இப்படி உள்ள சூழ்நிலையில்தான் நாம் நாமே அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்கணும்.

    உதாரணத்திற்கு உங்கள் ஊரிலியே எந்த ஒரு கட்ச்சியினையும் சாராத நல்ல மனிதர் இருப்பார் அது போன்ற மனிதர்களை ஒவ்வொரு ஊரில் தேர்வு செய்து சுயேட்ச்சையை ஜெயிக்க வையுங்கள் பிறகு பார்ப்போம் அரசியல் கட்ச்சிகளின் நிலைமையை,வண்டியை மட்டும்தான் அவர்களால் ஓட்டமுடியும் ஆனால் கடிவளாம் என்னும் கண்ட்ரோல் நம்ம ஆளு கையில்தான் இருக்கும் அவர்கள் மூலமாக நமக்கு கிடைக்க வேண்டிய சழுககைகளை ஈசியாக கிடைப்பதற்கு வழி வகுத்து விடும்.

    நன்றி தலை கருத்திட்டதற்கு.

    ReplyDelete
  10. யாரைத்தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம்.இப்ப உள்ள மக்களின் கண்ணோட்டத்தில் ஒருவர் ஆட்சியையே பிடிக்கக்கூடாது என்பதற்காக யாருக்கேன்னும் ஓட்டளிக்கும் நிலைதான் உள்ளது.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

    நல்ல விழிப்புணர்வு கட்டுரை.கலக்கல் பதிவு.

    உங்கள் அரசியல் சேவை தொடருங்கள்.

    ReplyDelete
  12. ஜெயலலிதாவை மட்டும் தான் வரலாறு மன்னிக்காதா சகோ...பட்டியல் போட்டால் ஏகப்பட்ட குப்பைகள் பெயர் வரும்...ஜெயலலிதா ஹீரோயின் என்றால் நம்ம முதல்வர் ஹீரோ இல்லையா...ஹ ஹ...

    ReplyDelete
  13. //ஸாதிகா said...
    யாரைத்தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம்.இப்ப உள்ள மக்களின் கண்ணோட்டத்தில் ஒருவர் ஆட்சியையே பிடிக்கக்கூடாது என்பதற்காக யாருக்கேன்னும் ஓட்டளிக்கும் நிலைதான் உள்ளது.//

    யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நமக்கு ஒன்னும் கிடைக்கப் போறது இல்லை அடுத்தவர் சொல் பேச்சைக் கேட்டு ஓட்டுப் போடாமல் சுயமா சிந்தித்து ஒட்டு போட்டாலே போதும் சகோ....வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் !

    ReplyDelete
  14. //ஆயிஷா அபுல். said...
    அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}
    நல்ல விழிப்புணர்வு கட்டுரை.கலக்கல் பதிவு.
    உங்கள் அரசியல் சேவை தொடருங்கள்.//

    வ அழைக்கும் வஸ்ஸலாம் சகோ.....
    கருத்திட்டதற்கு ரொம்ப நன்றி நீங்கள் சொன்னது போலவே தொடர்கிறேன்.

    ReplyDelete
  15. //ஆனந்தி.. said...
    ஜெயலலிதாவை மட்டும் தான் வரலாறு மன்னிக்காதா சகோ...பட்டியல் போட்டால் ஏகப்பட்ட குப்பைகள் பெயர் வரும்...ஜெயலலிதா ஹீரோயின் என்றால் நம்ம முதல்வர் ஹீரோ இல்லையா...ஹ ஹ.//

    வாங்க சகோ...இவர்களை வச்சு ஒரு ஆறு மாசத்திற்கு பதிவு போடலாம்னு பார்த்தால் ஒரே நாளில் எல்லா தலைகளையும் போடச் சொன்னால் எப்படி ?

    இப்பத்தானே ஆரம்பித்து இருக்கு அடுத்து அந்த மாமாதான்.
    நன்றிகள் பல........

    ReplyDelete
  16. நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு

    சொல்ல வந்ததை தெளீவாக சொல்லிட்டீங்க...

    இனி மக்கள் கையில் தான் உள்ளது

    ReplyDelete
  17. //ஆமினா said...
    நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு

    சொல்ல வந்ததை தெளீவாக சொல்லிட்டீங்க...

    இனி மக்கள் கையில் தான் உள்ளது//

    ரொம்ப நன்றி தங்கச்சி.....நீங்கள் இப்படி கருத்து எழுதுவிர்கள் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை நன்றி !

    ReplyDelete
  18. நதியின் பிழையன்று நறும் புனளின்மை ... என்பார்கள் அரசியல் பிழைத்தேர்க்கு அறம் கூற்றாவதும் .. என்பர் இளங்கோவடிகள் ன்பதுபோல இங்கு எல்லாமே வெத்துவேட்டு சா...... தான் என்ன செய்வது மக்கள் தான் விழித்தெழ வேண்டும் .

    ReplyDelete
  19. அருமையான எடுத்துக் காட்டை மிக அருமையாக எடுத்து காட்டிய சித்த மருத்துவர்.. அய்யா அவர்களே வருக ! வருக !

    அன்பே வாழ்க்கை என்று...அறம் பல செய்திட்ட நீவிர் நீடூழி வாழ்க ! வாழ்க !

    அச்சமில்லை..அச்சமில்லை...அரசியல் தலைவர்களை கண்டு அச்சமில்லை,அச்சமில்லையே !
    அய்யா உங்களின் சேவையும்,எங்களின் தேவையும் இறைவனுக்கே வெளிச்சம் !

    வருகைக்கு நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  20. இவர்கள் செய்வதையெல்லாம் பார்த்தால் இவர்களுக்கு ஓட்டு போட்ட நமக்குத் தான் கேவலமாயிருக்கு... ஆனாலும் யாராவது ஒருவர் (அவர் சுயேச்சையோ, கட்சி சார்ந்தவரோ)வந்து நம் ஊரைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்பது ஒருவித சுயநலம் என்று நான் அடிக்கடி நினைப்பேன்... அந்த யாரோ ஒருவர் நாமாக இல்லாத பட்சத்தில் அரசியலுக்குள் நுழைய தைரியமுமோ விருப்பமோ இல்லாத நிலையில் இவர்களுள் கொஞ்சமேனும் நல்லவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு கண்டும் காணாமலிருப்பதைத் தவிர வேறு வழி எனக்கு தோன்றவில்லை... உங்கள் பதிவை நான் குறை சொல்லவில்லை... இந்த அரசியல்வாதிகள் நடத்தும் கிறுக்குத்தனங்களைப் பார்த்து ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தியனுக்கும் தோன்றும் விரக்திதான் இது.... ஆனால் தீர்வு கிடைக்காத பிரச்சினை...:(

    ReplyDelete
  21. உங்கள் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் நன்றி சகோ....

    உங்களின் பெயரில் ஒரு விசித்திரமான பொருளைக் கண்டேன்,அதுதான் வயது...என்றுமே நீங்கள் பதினாறுதான் அது கூட உங்களை சிந்திக்க வைத்துள்ளது.

    ஓட்டுருமையை பெறாத நீங்கள் நாட்டு நலனில் இவ்வளவு அக்கறைக் கொண்டவர்களாக இருப்பதை நினைத்து பெருமைப் படுகின்றேன்,அதே நேரத்தில் ஊரையோ,அல்லது நாட்டையோ நல்ல முறையில் வழி நடத்தி செல்வது தலைவர்கள்தான்,அதே யாராலும் மறுக்க முடியாது.

    நாம் தலைவர்களை தேர்ந்தெடுப்பதே நாட்டு மக்கள்களுக்கு நல்லதை செய்வதற்குத்தான்,நீங்கள் சொல்லும் போல...நாம் தேர்ந்தெடுத்த தலைவர்,ஊரை காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்பது ஒரு வித சுயநலம் என்று நினைக்கின்றிகள் அது தவறு.

    காரணம் நீங்கள் தனி ஒரு ஆளாக நின்று போராட்டமோ அல்லது உண்ணா விரதமோ அரசுக்கு எதிராக நடத்துவீரானால் உங்கள் வீட்டிற்க்கே தெரியாது நீங்கள் போராடுகிரிர்கள் என்று,அதே சமயம் ஒரு அமைப்பின் தலைவராக நின்று சும்மா..குரல் கொடுத்து பாருங்கள் அது நாட்டு தலை எழுத்தையை மாற்றும்.

    கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் சகோ ....ஒரு சட்ட திருத்தத்தின் மூலம் நமது அரசியல் தலைவர்களை ஓட..ஓட விரட்ட முடியும் ஆனால் அந்த திருத்தத்தை கொண்டு வருவது யாரு ?

    இதுதான் இப்போதையக் கேள்வி இளைஞர் சமுதாயம் புரட்சி கொண்டு எழுந்தாலொழிய இவர்களை யாரும் ஒன்னும் செய்ய முடியாது.

    நன்றி சகோ உங்கள் கருத்திற்கு.

    ReplyDelete