மகிழ்ச்சியோடு படித்துக் கொன்டிருக்கையில் பேரிடியாய் இப்புகைப்படம் கண்ணில் பட்டது
மனம் பொருக்கமுடியாமல் ரென்டு வார்த்தை அழுது கொட்டலாம்னு இதை எழுதுகிறேன்.
இது பாக்கிஸ்த்தானில் காமக் கொடூர நாய்களாலும், குடும்ப தலைவன் என்ற அரக்கர்களாலும்,அமில திரவம் மூலம் இவர்களின் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டார்கள் அழகு தேவதைகளான இச்சகோதரிகள் நரக வாழ்வினை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
கருவிலியே ச்சீ..என கருவப்படும் பெண்ணானவள் கண்ணீருடன் காலடி எடுத்து வைத்தாலும் காலத்தை வெல்வது கேள்விக்குறியே ?
மரமே..மரமே..உம்மை துளையிட்டு உம்மேனியை ரதமாக்கி அதில் நான் கூடு கட்டுவதை நான் விரும்பவில்லை, ஆனால் பறவையா பிறந்த எனக்கு வேரு வழி தெரியலையே என்று பறவை அழுதுச்சாம்.
இந்தப் பறவைக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட நன்றி கெட்ட மனித ஜாதியிடம் இல்லையே...!!!
பெண்ணை போதைப் பொருளாய் நினைக்கும் மனித மிருகம் இருக்கும் வரை இந்த அழகிகளை போல், எத்தனை அழகிகள் நரக வேதனை அனுபவிக்கிறார்களோ ?
இந்த அவலத்திற்க்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் உலகில் பெண் இனமே கோரமாகி போய்விடும்.
பாலியல் பலத்காரம் மற்றும்ஆசிட் என்னும் கொடிய திரவத்தை எரிதல் போன்ற, நாச வேலைகளில் ஈடுபடும் நாசக்கார நாய்களை இனம் கண்டு அவர்களின் வாயினுள் ஆசிட்டை ஊற்றவேண்டும், இது நீதி மன்றம் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவேண்டும்.
இது போன்ற காட்டுமிரான்டிகளை காப்பற்ற வரும் கேடுகட்ட கட்சிதலைவன்,லஞ்சம் வாங்கும் போலீசு மற்றும் ஊழல் வக்கீலு,இவர்களுக்கும் இந்த தண்டனையைக் கொடுக்கனும்,இதைப் பார்த்து எல்லா மனிதரும் திருந்தனும்.
பெண்கள் எப்படி வாழனும்னு இஸ்லாம் மிக தெளிவாக கூறி இருக்கு, அதை பின்பற்றினாலே போதும் உங்கள் பாதுகாப்பிர்க்கு.
அந்நியன் 2
காட்சிகள் மனதை காயப் படுத்தி விட்டன,