Showing posts with label ???. Show all posts
Showing posts with label ???. Show all posts

Saturday, August 13, 2011

(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

ஏழை பங்காளானின் ஆட்சியும் 
கோழை காங்கிரசின் காட்சியும் 
காண்பதற்கு பசுமையாக தெரிகிறது கண்களுக்கு.
வெள்ளையரிடம் சுதந்திரம் பெற்று இந்த கொள்ளையரிடம் நாட்டை கொடுத்தால்...
முல்லை பெரியார் அனை தொடங்கி
எல்லை தேசம் வரை ஊழல்
வெள்ளையரின் ஆட்சியும்
கொடுமையான காட்சியும் மாறி
64 ஆண்டு ஆகியும் நம் நாட்டின் அவலம் மாறவில்லை.
இறந்த பிறகே சிதைக்கு தீ மூட்டும் இந்நாட்டில்
பிறந்த உடனேயே பெண் சிசுவுக்கு தீ மூட்டுகிறார்கள் 
சிந்திய ரத்தமும்
தியாகிகளின் சத்தமும் 
தூக்கு கொட்டடியிலே
கழுத்து நெரிபட்டு
கைகள் முறிபட்டு
தசைகள் வடு பட்டு
கண்களும் கட்டப்பட்டு
கொல்லப் பட்ட காட்சியோ...
சொல்லி விட முடியாது.
கூடி அழ அவர் சவங்கள் கிடைக்காமலும்
தேடி எழ வீரர்கள் இல்லாமலும்
அழிக்கப்பட்டனர் தியாகிகள்
அத்தியாகளின் நினைவாகத்தான் நாம் சுதந்திரம் கொண்டாடனுமே தவிர
போலியாக இல்லை.
இந்த அவஸ்தைகளை போக்கி சுதந்திரம் கொண்டாடுங்கள்.


அவஸ்தை எண் 1: இந்திய திரு நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விவர கணக்கு தெரிவிக்கின்றதை உடனே சரி செய்து தடுத்திடும் போது...
அவஸ்தை எண் :2 ஏழை இந்தியா பணக்கார இந்தியா என இரு வேஷம் போடுகிறது நாடு,பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பதை மாற்றிட முயற்சிகள் எடுக்கும் போது...
அவஸ்தை எண் : 3 பட்டினி சாவும்,பாலியல் கொடுமையும் தீண்டாமை வன் கொடுமையும்,தீண்ட தகாத மனித ஜாதி என, மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தாலும்,நய வஞ்சக மனிதர்களை கண்டும் காணாமல் இருக்கும் இருட்டு சட்டமும்,அதனின் பாது காவலர்களும் திருந்திடும் போது...
அவஸ்தை எண் :4 வதைக்கப்படும் பெண்ணுக்காக சிதைக்கப்படும் அவள் கற்பிற்க்காக எத்தனையோ வழக்குகள் நீதி மன்றத்தில் இருந்தும் அவளின் வாழ்க்கை மண்ணில் புதைக்கபடும் தருவாயில் தீர்ப்பு அளிப்பதை நினைத்து பார்க்கும் போது...
அவஸ்தை எண் :5 இன்னும் அன்னம் இல்லை என தினம் என்னும் மனிதர்கள் பசியின்றி பசித்துண்ண வசதிகள் செய்யப் படாத நிலையிலும் அரசியல்வாதிகள் வெட்டி பேச்சை நிறுத்தி கொள்ளும் போது...
அவஸ்தை எண் :6 சரித்திர ஏட்டில் சித்திரம் வரைக்க 
சாமானிய இளைஞர்கள் முற்பட்ட போதும் வேலை இல்லா தின்டாட்டம் ஒழிக்கப் படும் போது...
அவஸ்தை எண் :7 குடியை தடுத்து குடி மகன்களை தத்தெடுத்து குற்றம் குறைவதற்கு முயற்சி எடுக்காத போதும்...
அவஸ்தை எண் :8 காவல் நிலையங்கள் கட்ட பஞ்சாயத்து நிலங்களாக மாறாமல் இருந்திடும் போதும்...
அவஸ்தை எண் :9 நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் கண்கள் அதற்கு கலங்கம் கற்பிக்கும் அரசியல் வாதிகளை தண்டிக்க மறுத்திடும் போதும்...
அவஸ்தை எண் :10 கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறுக்கப்பட்ட போதும்...

என்ன சுதந்திரம்?
(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

என்ன முட்டாள்தனமான பதிவு இதுலாம் நடக்கிற காரியமா?
ஹா..ஹா..ஹா.
எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்.
ஐயா இன்னைக்கு சுதந்திர தினம் தண்ணீர் குடிச்சது போதும்
போயி எண்ணை தேச்சு குழிச்சுட்டு வாங்கள்

எப்படியாவது அந்த ஃபைலில் கையெழுத்து போட்டிருங்கள் என்னைக்குமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஆமா...பக்கத்தில் பொம்மை மாதிரி நிற்கிறாரே யாரு?


கண்டிப்பாக நீங்கள் இலங்கை வரனும் 

உங்களுக்காக மனுசகிட்னி வருவல்

மனுசதலை பொறியல்
மனுசகுடல் சூப்பு எல்லாம் தயாரா இருக்கு.
இந்த கொடுமைகளை பார்ப்பதற்கு 
     நல்ல வேளை நான் உயிரோடு இல்லை

Thursday, November 25, 2010

விளங்குமா இந்தியா ?

படத்தின் மீது ஒரு க்ளிக் ப்ளீஸ் 

இப்பத் தெரிகிறதா ?

இந்தியா ஏன் இன்னும் பின்னுக்கு தள்ளப் படுகிறது என்று...!!!

வளரும் நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று,இவ்வளர்ச்சியினை கெடுப்பதற்கு,வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,பிரிட்டன்,சீனா,மற்றும் எதிரி நாடான பாக்கிஸ்தானும் இதில் முழுப் பங்கு வகிக்கிறது.

அதற்காக அவர்கள் எந்த விதத்தில் துன்பத்தை இந்தியாவிற்கு தரமுடியுமோ,அவ்விதத்தில் அதிகப்பட்ச்சமாக மறைமுகமாகவும்  , குறைந்தப் பட்சம் நேரிடையாகவும், நண்பனைப் போன்று நடித்து, தந்து கொண்டு இருக்கிறார்கள்,நமது இந்தியாவும் வெளுத்தெதல்லாம் பால் என்று நினைத்து, அவர்களின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாத குருடரைப் போன்று, தட்டு தடுமாறி காலத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறது.

என்னடா இவன், கல்லூரி துணை வேந்தர்கள் உறங்கும் போட்டோவினைப் போட்டு விட்டு,சம்பந்தம் இல்லாமல் உளறுகிறானே என்று, திட்டி விடுவதற்குள் முழுவதையும் படியுங்கள்.

ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்னா, வீட்டுத் தலைவன் புத்திசாலியாக இருக்கணும்,ஒரு ஊரு நல்லப் பேரு எடுக்கணும்னா ஊர் மக்கள் நல்லதை செய்யணும்,நாடு நல்லா இருக்கணும்னா நாட்டுத் தலைவர்கள் நல்லவர்களாக இருக்கணும்,சரி..சீக்கிரம் விசயத்திற்கு வந்துடறேன்.

எத்தனையோ எதிர்ப்புகளை இந்தியா, ராணுவம் மூலம் சந்தித்து சாதனைப் பல புரிந்திருக்கு,வெற்றியும் பெற்றிருக்கு,ஆனால் இயற்க்கை பேரழிவுகளை எதிர்த்து இதுவரைக்கும் எந்த ஒரு நாடும் வெற்றிக் கண்டதில்லை.
வருமுன் காப்போம் என்ற திட்டம் எதற்கு கொண்டு வந்தது என்றால்,இயற்கைப் பேரழிவுக்குக் காரணமான சிலவற்றை கண்டறிந்து, நாம் செய்கின்ற செயலை குறைப்போமானால்,அதனின் பலன்கள் நன்மையில் போயி முடியும்.அதற்க்கத்தான் இந்த வேந்தர்கள் கூடி இருக்கிறார்கள்.

இங்கு நடந்து கொண்டிருக்கிற கூட்டம் ஒன்னும் சாதாரணக் கூட்டம் இல்லை, மிகப் பெரியக் கூட்டம்,பல்கலைக் கழகத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் துணை வேந்தர்கள் கூடியிருக்கும் மகா சபை.இச்சபையில் பேசக்கூடிய பேச்சுக்கள் அனைத்தும் கோடிக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எத்தி வைக்கக் கூடிய ஒரு ரகசிய காப்பு பாடம்,இந்தக் கூட்டத்திற்காக பல இலட்ச்சங்களை தமிழக அரசு செலவழித்து நடத்திக் கொண்டிருக்கிறது.
நமது அய்யாக்களோ ஒரு கவலையில்லாமல், கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
அய்யா அப்துல் கலாம் அவர்கள் கனவு காணசொன்னதை,தவறாக நினைத்துக் கொண்டு கனவு காண்கிறார்களோ ?

விளங்குமா இந்தியா ?

எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று, புகைப் படத்தின் கீழேயே எழுதி இருக்கு படித்து கொள்ளுங்கள் !

இவர்களைப் போன்றவர்கள் நாட்டிற்கு தேவையா ?


இவர்களுக்கு தண்டனைக் கொடுத்தால் தப்பா ?


ஒரு மாறுதலுக்காக தண்டனையை நீங்கள் வழங்குங்கள் !

அந்நியன் 2