Friday, April 29, 2011

வாங்க...வாங்க....வந்து சிரிச்சிட்டு போங்கள். நகைச்சுவை கலாட்டா."என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

**************

"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..."

"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"

***************

நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்..."

"அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..

****************
படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.

ஏன் என்னாச்சு..?

அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.

*****************
"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"

"ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க!"

*****************

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?

டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

*****************

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?

ஆபீஸ்லியா வீட்டிலியா...?

*****************

ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?

ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.

*****************

தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?

ஏன்?

டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

**************

தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!

இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...!

**************

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

***************

இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?

ஏனாம்?

தீப கர்ப்பமா இருக்கிறதுனால.

***************

உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.

*****************

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.

மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

******************

எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?

என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.

இந்நேரம் விழுந்திருக்குமே சார்?

இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

************

மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?

டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.

மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?

டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!

**************

"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"

"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

***************
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

***************

முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

பின்னவர் : எப்படி?

முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

******************
வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!

ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?

******************

நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."

"போகும் போது டாக்டர் ...?"

"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"

*****************

"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..."

"அவ்வளவு அழகா?."

"இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."

**************

இந் நிகழ்ச்சியை வழங்கியோர் கோபால் பல் பொடி நிருவனத்தினர்.

பற்க்கள் பல..பலனு இருக்க.


கோபால் பற்பொடி உபயோகிங்கள்.


Tuesday, April 26, 2011

பெண்ணாய் பிறந்துவிட்டால்... இதுலாம் சகஜம்...!!!

கண்ணில் ஒரு மின்னல்,முகத்தில் ஒரு சிரிப்பு,சிரிப்பில் ஒரு பாசம்,பாசத்தில் ஒரு நேசம், நேசத்தில் ஒரு இதயம்,இதயத்தில் ஒரு உதயம்,அவ்வுதயத்தில் ஒரு புரட்சி,அப்புரட்சியில் இருதியாய் கண்டது மிரட்சி.

காரணம் பெண்ணாய் பிறந்த நீ எத்தனை சுமைகளை தாங்குவாய் ?

மருத்துவச்சி பார்வையிலே,நீ பிரசவிச்சு போகையிலே,தலை மன்னன் உறுதி என்றால்...உச்சி முகம் முகர்ந்து, பிச்சிப் பூவால் பிணைந்து, உச்சி வாங்கெடுத்து, உலராத பூவெடுத்து, உன்னை போல வருமா ? என் கண்ணைப் போல வருமா என்று புகழ்கின்ற,மாமியாக்களும் பெண்கள்தானே ?

அவள்தான் காரணம் கைக்கூலி வாங்குவதர்க்கும் உன்னை வதைத்து எடுப்பதர்க்கும்.

மகளின் உணர்வை மதிக்கும் தாயவள் மருமகளின் உணர்வை கொல்வது ஏனோ?

அழகு அறிவு அருங்கலை ஆற்றல்,அடக்கம் பனிவு உயர்ந்தோரை போற்றல் என்று தம்மை பம்பரமாக சுற்றிக் கொள்ளும் பெண்ணவள் பாவம்.
ஆட்டி வைப்பதும் பெண்ணே,நிலை தடுமாறி ஆடுவதும் பெண்ணே.

"வரதட்சனை" இதைப் பிறித்து எழுதியால் வர+தட்சனை=வருவதற்க்கு தட்சனை.
யார் வருவதர்க்கு யார் தட்சனை கொடுக்கனும் ?

சமுதாய கணக்கின்படியே வருவோம் ஒரு பெண் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு ஆடவனை திருமணம் செய்துள்ளாள் என்று வைத்துக் கொள்வோம் விலைக் கொடுத்து வாங்கப்பட்ட அந்த ஆடவன் யாருக்கு சொந்தம் ?
அவளுக்குத்தானே சொந்தம் இது ஏன் மர மண்டை மாமியார்மார்களுக்கு தெரிய மாட்டேங்கிறது விலை கொடுத்து வாங்கப்பட்ட அந்த அடிமை உயிர் உள்ளவரை எசமாணியம்மாளான மனைவிக்குத்தான் உழைத்துக் கொடுக்கனும் இதில் யாரும் பங்கு கேட்பதை அனுமதிக்க முடியாது.

கடுமையான குளிரிலும் கொடுமையான பிரிவினிலும் கொடூரத் தனிமையிலும் கடும் நிசப்த்த இரவினிலும் காவியம் படைப்பாள் பெண்ணவள் ஆனால் அவளின் வாழ்க்கை இருட்டறையே.

பெண் எழுத்து...பெண் எழுத்து.. என்று பறை சாற்றும் நாம் சாதித்தது என்ன ?

நான்கு பெண்கள் நன்றாக இருப்பதினால் பெண் சமுதாயம் முன்னேறி விட்டதா?

இங்கு நான்காயிரம் பெண்கள் பஞ்சத்திலும் பசியிலும் வரதட்சனைக் கொடுமையிலும் செத்து மால்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது ?

பிச்சை எடுத்து வயிற்றை கழுவும் மனித ஜாதி கூட நிம்மதியாய் மூன்று வேலை சாப்பிடுகிறது எச்சை தட்டு கழுவிப் செத்து பிழைக்கும் மனித ஜாதிக்கு ஒரு வேலை சாப்பாடு கிடைப்பதே அரிது.

வரதட்சனையை ஒழிப்போம் !
வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !
யா அல்லாஹ்..எங்களை போன்ற கோடான கோடிஏழைகளுக்குவெளிச்சத்தை தந்தருள்வாயாக. 


ஆமின்.


Thursday, April 21, 2011

இன்ஸ்பெக்ட்டர் குடும்பத்தை வெட்டிக் கொன்ற ஆறு கொலை அமைச்சரும் அவரும் அராஜாகங்களும்...!!!

வீரபாண்டி ஆறுமுகம் இந்தப் பெயரைக் கேட்டாலே பத்து மாசக் குழந்தையும் "பால்குடி"மறக்கும்.

பெயருக்கு ஏற்றார் போல் உடற் தோற்றமும் தேவை இல்லாத ஆடம்பர வாழ்க்கையும் மந்திரியை உசுப்பி விட்டாலும்,இந்த தேர்தல் அவருக்கு சரியான பாடம் கற்ப்பிக்கும் என்று எதிர் பார்த்திருப்போம்.

என்பது வருட காலம் ஏழை மக்கள்கள் குடியிருந்த குடிசைகளை கொடூர அரக்கன்கள் மூலம் வீட்டை இடித்து தள்ளியது மட்டுமின்றி அப்பாவி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்கட்டர் குடும்பத்தினர் ஆறு பேரையும் வெட்டி கொன்னு குவித்த அவரது உறவுகள் வெகு சீக்கிரமாக அழிந்து போவார்கள் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை.

பல கோடிகளுக்கு விலைப் பேசப்பட்டுள்ள அந்த ஏழைகளின் சொத்துக்களை மீட்டு கொடுக்க உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியாலும் அரசியல் சக்தியால் அத்தீர்ப்புகளை குப்பையில் கிடத்தியாளும்,அந்த ஏழை மக்கள்களின் கண்ணீரும் அந்த இன்ஸ்பெக்ட்டரின் குடும்பத்தின் நினைவுகளும்,கூடிய விரைவில் அமைச்சரின் குடும்பத்தை "கல்லறையை"நோக்கி இழுத்து செல்லும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்கள்களின் பிறார்த்தனை.

இந்த நாட்டின் வளங்களை சுரண்டிக் கொண்டும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்தியும், ஏமாற்றியதை கையும் களவுமாக பிடித்தவுடன் சில நூறு கோடிகளை மட்டும் அபராதமாக கட்டி மத்திய அரசையும் இந்த நாட்டு மக்களையும் ஏமாற்றும் இது போன்ற அமைச்சர்களை இனம் கண்டு அவர்களுக்கு சரியானப் பாடம் புகுத்தப் பட்டிருக்கும் இந்த தேர்தலில்.

இருள் இன்னும் முழுமையாய் விலகாமல் பஞ்சத்தில் தவிக்கும் இந்த ஏழை மக்கள்களுக்கு சூரியன் தோன்றி என்ன செய்திடப் போகிறது...?

காடுகளை அழித்து கானும் இடமெல்லாம் புறா கூடுகளாக கட்டிடங்களை எழுப்பி பல கோடிகளை கை மற்றியது போதாதா?

மரங்கள் இருக்கும் இடத்தில்தான் மழை வரும். நீர் இருக்குமென தமிழனின் நீர்நிலையறிவு சொல்வதை இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். பறிபோனது விவசாய நிலங்கள் மட்டுமன்று. நமது தமிழிய மருத்துவம் சொன்ன முதன்மையான மூலிகைகளும் இனி நமக்குச் சொந்தமில்லை.

காரணம் அரசியல் வாதிகளின் ஆக்கிரமிப்பால் அத்தனை இடங்களும் ஃப்ளாட் போடப்பட்டு விட்டன,மிச்சம் இருந்தது இந்த ஏழைகளின் கூடுதான்,அதர்க்கும் இப்போ அழிவு வந்து விட்டதை எண்னும்போது அரசியல் ஒரு சாக்கடை என்பதே நிருபனம் ஆகிறது.

இந்த நிலை நீடித்தால் தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவில் மனிதர்கள் வாழ தகுதியற்றவர்களாக மாறி விடுவார்கள்.


Thursday, April 14, 2011

மனித இனம் நாயை விட கேவலமானதா ?

திரைப்படங்களின் ஹீரோக்களை தலைவராகவும் கடவுளாகவும் சித்தரிக்கும் நமது தமிழக திரு மக்கள் ஒன்றை நன்றாக புறிந்து கொள்ள வேண்டும்.
படத்தில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று நம்பி கரவோஷம் போடுங்கள்,கை ஓஷம் போடுங்கள்.கொஞ்சம் பொறுப்புள்ள உண்மையான தமிழனாகவும் வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் ,சேவை மனப்பான்மையுடனும் ,துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக ,தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக,ஆசிரியாராக,சமுக சேவகராக,துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்,அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்.அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஓட்டு போடுவோம்.என்று நான் சொன்னால் என்னை நீங்கள் "லூசு" என்றுதான் சொல்லுவீர்கள்,காரணம் நமது அரசியல் கலாச்சாரம் அப்படி.

சொற்போர்,விற்போர்,மற்போர் என அனைத்து விதத்திலும் பொது மக்களை போர் அடித்து கொண்டிருக்கும் ஆளும்,மற்றும் எதிர் கட்சியினர் கண்டிருப்பதெல்லாம் ஓட்டு போடுபவருக்கு எல்லாம் இலவசம்.

சில நேரங்களில் நாம் காண்பது உண்மையா அல்லது பொய்யா என்பது உணர்வது மிகவும் கடினமாக உள்ளது,அந்த அளவிர்க்கு இலவச சழுகைகளை வாரி வழங்குகின்றனர்,ஆனால் வறுமையை ஒழிப்போம் என்று எந்த ஒரு கட்சியும் அறிவிப்பு கொடுக்க வில்லை என்பது நெஞ்சில் பாரமாக உள்ளது.

மேலே கண்ட வீடியோ பதிவைப் பார்த்த நாம் கற்றுக் கொண்டது என்ன?

தம் பிள்ளை ஒரு வேளை சாப்பிட வில்லை என்பதர்க்காக நாம் எத்தனை மருத்தவரிடம் சென்று ஆலோசனை பெற்றிருப்போம் ?

எத்தனை லக்ஷ்மிகள் பசியால் மாண்டு மண்ணறைக்கு சென்றிருப்பார்கள்?

இப்படி என்னற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டேபோகலாம் ஆனால் தீர்வுதான் கிடைக்கப் போவது இல்லை.

மனித இனம் நாயை விட கேவலமாக நடத்தப் படுவதைப் பார்க்கும் போது இறைவன் ஏன் இன்னும் இந்த உலகை அழிக்காமல் வைத்திருக்கான் என்று மனசு கேட்கின்றது.

பிரபலங்கள் உடுத்திய உள்ளாடைகளை கோடிக்கு மேலே ஏலம் எடுத்து பொக்கிஷமாக அலமாரியில் வைத்து அழகு பார்க்கும் அயோக்கிய மனிதர்கள்
கிழிசல் ஆடைகளை உடுத்தி பல வருடங்காலாக பட்டினியினில் செத்து பிழைக்கும் ஏழைகளை ஏறெடுத்து பார்க்கமால் இருப்பது விசித்திரமே !!!

உலக கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்து இந்தியா ஜெயித்து பட்டத்தை வென்றதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்,ஆனால் அதில் கிடைத்த கோடானு கோடிகள் பணம் மறைக்கப்பட்ட இடம் எங்கே?

அடுத்து ஒரு கிரிக்கெட் சூதாட்டம் தொடங்கி விட்டது போயி தாராளமாக பணத்தை அள்ளி வீசுங்கள் அந்த கொள்ளைக் காரர்களிடம்.

அந்தக் கயவர்களும் ஆயிரம் கோடிக்கு மாளிகை கட்டட்டும்,மது போதை பெண்களுடன்,உல்லாச உணவோடு,ஒவ்வொரு நாளும் பல லட்சங்களை செலவு செய்யட்டும்.

இந்த குறும் படத்தில் பார்த்த லக்ஷ்மியை போன்ற பல லட்ச அப்பாவி ஏழைகள் பட்டினியால் செத்தால் இவர்களுக்கு என்ன ?

இறைவனின் கோபம் இந்த பணக்காரகள் மீது விழாத வரை லக்ஷ்மி போன்ற ஏழைகளுக்கு விடிவு காலம் பொறக்காது.

                                    .
Friday, April 8, 2011

லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் அதிகாரி காலைப் பிடித்து கதறல்...!!!
லஞ்சம்,ஊழல் இவற்றை ஒழிக்க முடிகிறதோ இல்லையோ பெயரளவில் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் தம்மை விளம்பரம் பண்ணிக் கொள்கின்றார்கள்,லஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்து விட்டோம் என்று.

திருப்பூர் நகரில் இப்படியொரு சம்பவம் நடந்தேரியது நம்மை அதிர்ச்சிக்கி உள்ளாக்கியுள்ளது அந்த பெண் போலிஸ் அதிகாரியின் நிலையினைக் காணும்போது மனது ரொம்ப கஷ்ட்டப் படுகின்றது.

இந்திய நாட்டில் எந்த அதிகாரிதான் ஊழல் புரிய வில்லை ?

மேல் அதிகாரி,கீழ்அதிகாரி,அரசியல்வாதி,ஆன்மிகவாதி,
போலிசு,வக்கீலு,டாக்ட்டரு,நீதியரசர் இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.


பாவம் இந்த அதிகாரியும் ஒரு பெண் தானே எத்தனை கெஞ்சல் எத்தனை கதறல் அதையும் தாண்டி அந்த நபரின் காலைப் பிடிக்கும் பரிதாபக் காட்சி அந்த வீடியோ மனிக்கு தெரிய வில்லையே !

தவறுகள் செய்யாத மனிதரை உலகத்தில் காணக் கிடைப்பது அரிது,தவறுகள் செய்வதும் பின்பு திருந்துவதும் மனித இயல்புதான்,அந்த வகையில் அந்த பெண் போலீஸ் அதிகாரி மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்ட்டவஷமே,இருந்த போதும் எப்போ ஒரு அதிகாரி தம் காலைப் பிடித்து மன்னிக்கும்படி சொன்னாரோ அப்பவே அவ்விசயத்தை மன்னிப்பதும் மறப்பதும் பிறருக்கு தெரியாமல் மறைப்பதும் நல்ல ஒரு மனிதனுக்கு அடையாளம்.

யார் இந்த வீடியோ மணி ?

இவரும் ஒரு அரசியல் வாதிதான் அரசியல் செல்வாக்கில் பிரசிடன்ட்டாக வலம் வருபவர்தான் இவரும் ஊழல் செய்யாமலா இருந்திருப்பார்?

சென்னை பாஸ் போர்ட் அலுவலகத்தில் பெரும் ஊழல் செய்து கைதாகி அடுத்த பனிரெண்டு மணி நேரத்தில் ஜாமினில் வெளியாகி
எண்ணிமுப்பதே நாளில் அஞ்சல் துறையில் அதிகாரியாக பணி புரிய வில்லையா ?

கோடிக் கணக்கில் ஊழல் புறிந்தவர்கள் ஹாயாக வலம் வரும்போது ஒரு அரசியல் வாதியிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியது ஒன்னும் குற்றமா தெரிய வில்லை.

அவரின் காலில் விழுந்து கதறியதுதான் குற்றமா தெரியுது,பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திர்க்காக உங்களை என்ன தூக்கிலியா போட்டு விடப்போகிறார்கள்?

இல்லை நாடு கடத்திவிடப் போகிறார்களா?

லட்சம் கோடிகளை கொள்ளை அடித்த கும்பல்கள் எல்லாம் ஹாயா வரும்போது ஒரு அரசியல் வாதி மிரட்டலுக்கு அழுது கண்ணிர் வடித்தது போலிஸ் இனத்திர்க்கே அவமானமாக இருக்கின்றது,இதுவே ஒரு ஆண் சிங்கம், போலிஸ் அதிகாரியாக இருந்திருந்தால் இப்படியா அழுது கொண்டிருந்திருப்பார் ?

துப்பாக்கியை எடுத்து அவரின் நெற்றியை குறி பார்த்திருப்பாரல்லவா.

இந்த பெண் அதிகாரியைப் பார்க்கும்போது புதுசா லஞ்சம் வாங்கிரதை போல் தெரிகின்றது அதுனாலேதான் காலைப் பிடிக்கும் அளவிற்கு சென்று விட்டார்எதற்கு லஞ்சம்?

அரசு தரும் சம்பளமும் சழுகைகளும் போதாதா?