Sunday, January 30, 2011

அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சிரிக்கவும் !!!மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றது !!!
இதுக்கெல்லாம் காரணம் எய்ட்ஸை பற்றி மக்கள்களுக்கு ஒழுங்கான முறையில் விழிப்புணர்வை அரசு செய்ய தவறியக் காரணத்தால் அரசியல்வாதிகள் அனைவரும் நம் சமுதாயத்தை அவர் அவர் சக்த்திக்குயேற்றவாறு சீரழிக்கின்றனர் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.

சாரிங்க எனது அடுத்தப் பதிவு எய்ட்ஸை பத்தியதுங்க கொஞ்சம் முன்னோட்டம் எழுதி பார்த்தேன் இதில் என்ன கொடுமை என்றால் இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.....


1 போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,  
                          உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் :    அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

2 எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...." "
அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

3 ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை
நினைச்சுக்கிட்டீங்களா?

இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!


4 ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன்
பண்ணப் போறீங்க...?

நீங்கதானே....ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!5 டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"

ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!

ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?


6 ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!

யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!"


7 குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..

குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல்
போயிருப்பார் என்றுதான்....


8 அந்த ஆள் உண்மையிலயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா
இருக்கு...

ஏன்?

துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!


9 சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!

ஏன்..?

பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!10 எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?

நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!


11 ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?

சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."


12 ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"

டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!


13 அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"

மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!


14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!


15 அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல எச்சு துப்பினேன்

சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக
தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??


16 ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை "

EXAMPLE:
மனிதர்கள் யாரும் ஆசை பட கூடாது என்று "ஆசை " பட்டார் புத்தர்..!

ஆசைப்படகூடாது எண்டு சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?


17 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்..

ஆசிரியர்: !!!


18 தமிழ் நாட்டில மொத்தம் 3 கடல் , 45 ஆறு, 239 ஏறி, 1836 குளம், 3200 வாய்கள், 21340கிணறு ..

இத்தனை இருந்தும் ஏன்டா என்னோட படத்த பாத்து சாவுரிங்க ??? (T.RAJENDAR )


19 உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குதுஇதிலிருந்து என்ன தெரியுது?

ஒரு பொண்ணு நினைச்சா,எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)


20 டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
AJITH: இல்லை 200நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......
AJITH: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


21 அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
     இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
      அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
       இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூனு பேர்தான்..........

22 மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.

ஏங்க என்னாச்சி!

அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட்
இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

23 மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!

ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!

முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!

அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!


24 கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;

"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."

" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam


25 ஆசிரியர் :: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..

     மாணவர் :: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..

      ஆசிரியர் :: ஏண்டா???

       மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..


26 ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?

மாணவன்: டன் டன் டன்.

உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப் பட்டு இருப்பிர்கள் ஆனால் தினமும் ஒரு அரை மணி நேரம் சிரித்திர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.


Wednesday, January 26, 2011

ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது!
தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் நமது அரசியல் தலைவர்களின் உழைப்பும் அதிகமாகிக் கொண்டு போகிறது அவர்களது அயாராத உழைப்பும் சிந்திய வேர்வையும்தான் தமிழ் நாட்டு மக்கள்களின் கஷ்ட்டத்தை போக்கப் போகின்றது !!!

தேநீர் விற்றவனல்லாம் அரசியலில் நுழைந்தப்பிறகு தேயிலை எஸ்டேட் வைத்திருக்கான் ஆறடி நிலம் வாங்க நாதியற்றதல்லாம் அரசியலில் பொறுப்புக்கள் வந்ததும் ஏக்கர் கணக்கில் சொத்துகளை வாங்கி குவிக்கின்றான் எழுத படிக்க தெரியாத கூமுட்டைகள் கூட உதவியாளரை வைத்துக்கொண்டு அரசியலில் வளம் வருகிறது.
இதைவிட கொடுமை என்னவென்றால் நடிகர் நடிகைகளும் அரசியலில் நுழைந்து அமைச்சராக நினைப்பது வியப்பளிக்கிறது ! .

பொதுமக்களாகிய நாம் பொறுமையாக எருமை மாதுரி அசப்போட்டுக் கொண்டு இருக்கோம் இதைப்பற்றி சிந்திப்பதிலியோ அல்லது கருத்து தெரிவிக்கிறதிலியோ கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருப்பது தொலை நோக்கப் பார்வையாளர்களுக்கு,இந்த அரசியல் ஒரு விருப்பம் உள்ள விழையாட்டு தளமாக தெரிகிறது.

நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் இருகண்கள் என்று சுவாமி விவேகானந்தா சொன்னார் ஆனால் அந்த நேர்மைக்கும் உண்மைக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் அரசியல் தலைவர்கள் பொறுப்பில்லாமல் நடப்பது வெட்கமாக இருக்கின்றது,இந்நிலையினை போக்கிவிட தமிழ் நாடு மட்டுமின்றி இந்தியா முழுதும் தலைவர்களை "களை" எடுக்க வேண்டும்.

மதங்களை முன்னிறுத்திஅரசியல்செய்யும்தலைவர்களை,பொதுமக்களாகியா நாம்,தகுந்த பாடத்தினை புகுத்த வேண்டும்.
இனவெறி,ஜாதிவெறி,மதவெறி என்று துவேசம் பாடும் அரசியல் தலைவர்கள் மீது, ஆசிட்டை தூக்கி ஊத்தினாலும் தவறு என்று எந்த ஒரு மானிடனும் கூறமாட்டான், காரணம் அப்படியொரு விசமி தலைவானாக வந்து நாட்டு மக்கள்களை கலவரங்கள் மூலம் கொன்னு குவிப்பதை விட,நாமே அவர்களை முளையிலே "கிள்ளி"எறிவது நமக்கும், நம் நாட்டு மக்கள்களுக்கும் நல்லது.


அதாவது நான் என்ன சொல்ல வர்றேன் என்றால் நாம ஓட்டு போட்டாதாங்க இதுகளெல்லாம் ஜெயித்து அரசியலுக்கு வர முடியும் படிக்காத பட்டிகாட்டான் நானே மாறி விட்டப் பிறகு நீங்களும் மாறி விடுவிர்கள் என்று நினைக்கின்றேன்.

விவசாயி.

எந்திருப்பா...சீட்டு உனக்குத்தான்.

ஜெயலலிதா இவர் ஒரு சக்ரவர்த்தி...காற்று வீசும் போதெல்லாம் தூற்றிக் கொள்வார்.

                                                        மருத்துவர் ராமதாஸ்   ஹலோ..ஒபாமாவா....நான் புஷ் பேசுறேன்,நான் வேண்ணா தமிழ் நாட்டிற்கு போயி அரசியல் பண்ணவா ? ( விளங்கிடும்)
இராக்கின் போரின் போது ஐநா தலைவர்களிடம் இப்படித்தான் போன் பேசினார் புஷ்.
அடுத்து அம்மா ஆட்ச்சிக்கு வந்தால் இந்த லட்டு பட்டுலாம் கிடைக்காது வேகமா சாப்பிடுங்கள்.


Wednesday, January 19, 2011

வெள்ளை நீக்ரோ !!!

நீக்ரோக்கள் தங்களை தாழ்வாகவே கருதினர். ஏன் என்றால் தாம் கருப்பாக இருப்பதினால் பிறர் கண்களுக்கு நாம் அசிங்கமாக தெரிகிரோமே என்ற மன வருத்தமும் கவலையும்தான் அவர்களை அப்படி நினைக்க தோன்றியது,அது மட்டுமில்லாது வெள்ளையரின் கலரைப் பார்த்தும் பொறாமையும் கூட அவர்களுக்கு,எப்படியாவது இவர்களைப் போன்று நாமும் மாறிவிட வேண்டும் என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஒரு முறை ஒரு மருந்து விற்பனைக்கு வந்தது. அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது இதை உங்கள் உடலில் பூசினால் நீங்கள் வெண்நிறமாவீர்கள். இதை உங்கள் முடியில் பூசினால் உங்கள் சுருண்ட முடி நீண்டு வெள்ளைகாரனின் முடி போல் வரும் என்று. இதை பார்த்த பலரும் அதை வாங்கி முடியிலும் உடம்பிலும் பூசிக் கொண்டார்கள். பூசியது தான் தாமதம் எல்லோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள.....

காரணம் அவர்கள் மருந்து என ஏமாந்து வாங்கியது ஒரு வெடி பொருளுக்கு போடும் ஒரு வகையான வெடிமருந்து. எல்லோரும் வெள்ளையரை போல ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை பூசிக் கொண்டார்கள்,நிலை அவர்களின் உடலும் முடியும். எரிந்து அசிங்கமாக விகாரமாக மாறியது.

இந்த நீக்ரோவின் நிலைதான் நம்மில் பல இளைஞர்களுக்கு,அவர்கள் இயல்பிலே அழகாக இருப்பார்கள். ஆனால் அது அவர்களுக்கு சந்தோசத்தை கொடுப்பதில்லை,அவர்களுக்க சந்தோசம் எப்போதென்றால்,நடிகர்கள் பிழைப்பிற்காக அவர்கள் ஹேர் ஸ்டைலை கலர் கலராக கழுதையைப் போலவும்,குரங்கைப் போலவும் மாற்றிக் கொள்வார்கள்,பார்க்கவே அசிங்கமாக இருக்கும் அந்த ஸ்டைலுதான் நம்ம இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்.

அதே மாதுறியே தம் ஸ்டைலையும் மாற்றிக் கொள்வார்கள்,அது போலத்தான் தற்போது காலேஜில் படித்து வரும் சில அம்மணிகள் கூட தம் தலையில் பொடுகு இருந்தும் தலையை பரட்டு..பரட்டுன்னு சொறிஞ்சாலும்..நடிகைகளின் ஹேர் ஸ்டைலில் அப்படியே முடியை தோள்வரை முறித்துக் கொண்டு நடப்பதை பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கின்றது.

நீக்ரோக்கள் வெள்ளைகாரனைப் போல் இருப்பதுதான் பெருமை என்று கருதியது போல்,இவர்கள் நடிகர் கூட்டத்தை போல இருக்க நினைப்பது வெட்க்க படகூடிய விஷயம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் என்ன ?

மனதை பக்குவப் படுத்துங்கள்,சினிமாவை தூரமா தள்ளி வையுங்கள்,நடிக நடிகைகளை கனவிலும்கூட நினைக்காதிர்கள்,உங்களின் உள்ளுணர்வை கட்டுப் படுத்துங்கள்,நடிகர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளாமல்,சாக்ரட்டிஸ்,அப்துல் கலாம்,பில்கேட்ஸ்,அம்பானி மற்றும் டாடா பிர்லா இவர்களை முன்னிறுத்திஉங்களின் பயணம் இருக்கட்டும் .

அறிவின் உச்சிக்கும் அழகின் உச்சிக்கும் போட்டி என்று வந்தால் அறிவை தேர்ந்தெடுங்கள்.
காரணம் அறிவென்பது நமது உயிர் இருக்கும் வரை செழி செழிப்பாகவே இருக்கும்,அழகு என்பது வயதேர்க்கேற்றவாறு மங்கி கொண்டே போகும்,அழகை விட அறிவு ஆயிரம் மடங்கு மேன்மையானது.அது போல மாடு மாதுரி உழைக்கிறதை விட புத்திசாலியாக உழைத்தால் நமது இலக்கை சிரமின்றி நெருங்கிடலாம்,நாம் பிறரின் அனுபவங்கள்மூலமாக பல பாடங்களை தெரிந்து கொள்ளலாம் இலவசமாக,ஆனால் அவரோ பல மலைகளை கஷ்ட்டத்துடன் கடந்து வந்திருப்பார் இந்நிலையை அடைவதற்கு.கொடுக்கலும் வாங்கலும் இருந்தால்தான் வாழ்க்கை,அது இல்லையேல் வாழ்வதில் அர்த்தம் இல்லை.

                   நமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்வோம் ! 
                   நமக்கு தெரியாததை பிறரிடமிருந்து பெறுவோம் !

நாமளும் வெள்ளையாவதர்க்கு ஏதாவது போட்டிருக்கா என்று பார்ப்போம்.

Saturday, January 15, 2011

மரணங்கள் எல்லாம் ஒன்றல்ல !!!
இதோ இந்த வீடியோ பதிவினைப் பாருங்கள் அப்பாவி மக்கள்களும் குழந்தைகளும் இஸ்ரேலியர்களால் எப்படி கொல்லப் படுகிறார்கள் என்று.

இந்தியாவில் ரிக்ஸா மிதிப்பவன் கொலையாவதும் ரோல்ஸ் ராய்ஸ் ஓட்டுபவன் கொலையாவதும் ஒன்றாகிவிடாது,ரிக்ஸாகாரன் குத்திக் கொல்லப் பட்டால் அவனின் சடலம் போலவே அந்த நியுசும் ஏழாம் பக்கத்தில் ஏதோ ஒரு மூலையில் நாலு வரிகளில் புதைக்கப்படும்,கோடீஸ்வரன் கொலை என்றால்,தலைப்பு செய்தி போட்டு ஏழெட்டு நாளைக்கு கொண்டாடிட மாட்டார்களா பத்திரிகை உலகமும்,மீடியாவும்.

அதுபோலதான் பாலஸ்த்தினியரின் நிலைமையும்,அப்பாவி மக்கள்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இஸ்ரேலிய காட்டு மிராண்டிகளை எந்த ஒரு மீடியாவும் அல்லது பத்திரிக்கைகளும் செய்தியாகவே போட வில்லை ஒன்னிரெண்டை தவிர.

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று,அமெரிக்காவால் கூறப்பட்டு இராக்கையும் இராக் மக்கள்களையும் கொன்னு குவித்த அமெரிக்காவை எந்த ஒரு பத்திரிக்கையும் அல்லது மீடியாவும் அமெரிக்கா செய்தது தவறு என்று சுட்டிக் காட்டாமல்,அந்த ரெட்டைக் கோபுரத்தையே ஒரு அஞ்சு வருசத்திற்கு தலைப்பு செய்தியாக காண்பித்துக் கொண்டு இருந்தார்கள் இந்த பச்ச துரோக பச்சோந்திகள்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து எந்த ஒரு மீடியாவும் தலைப்பு செய்தியாக வெளியிட வில்லை,தமிழ்நாட்டை தவிர.
போலி வேடம் பூண்டு பொறம்போக்கு செய்திகளை தரும் அந்த பத்திரிகை சுதந்திரம் எதற்கு ???

மிருகங்களை வதை செய்தால் பெருங்குற்றம் என்று கூறும் மனித ஜென்மங்கள்,மனித வர்க்கம் சல்லடை சல்லடையாக நச்சுக் குண்டால் துளைக்கப் பட்டு கொடூரமாக கொல்லப் படுவதை தடுப்பதற்கு ஒரு அமைப்பும் இல்லாதது வருந்தக்கூடிய விஷயம்,மனித உரிமை மீறல் என்று போலி அமைப்பை வைத்துக் கொண்டு அந்த அமைப்பிற்கு தலைவராய் அமெரிக்காவை பொருத்திக் கொண்டு,தீர்ப்பு சொல்லுங்கள் என்றால் எப்படி ???

காட்டு மிராண்டிகள் இஸ்ரேயிலிகளை தட்டிக் கேட்கப் போவது யாரு ?

இந்த அயோக்கிய ராணுவத்திற்கு உலக அரங்கில் மரியாதை வேறே,நாம் பார்த்த கோப்பினைத்தான் ஐநா என்று சொல்லப்படும் குருட்டு மன்றமும் பார்த்திருக்கும்,அவர்கள் மூலமாவது தீர்வு காணலாம் என்று பார்த்தாலும்கூட அந்த அமைப்பிற்கு அமெரிக்காதான் தலைவன் !!! பிறகு எப்படி நியாயம் கிடைக்கும் ?

இப்படி ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களகளையும்,பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் அரசாங்கம் நாசமாக போகட்டும்,இறைவனின் கோபமும்,உலக மக்கள்களின் சாபமும் உண்டாகட்டும்,அவர்களின் சவத்தை கழுகுகளும்,நாயிகளும் புசித்து திங்கட்டும்,உலகத்தில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்,எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

குறிப்பு : முன்னாள் ஐநா சபையின் செயலாளர் காபிஅண்ணன் புஷ்ஷுவின் வலது கையாக இருந்தார்.இராக்கிற்கு எதிரா நடந்த போரில்.

தற்போதுள்ள ஐநா பொதுசெயலாளர் பான் கீ மூன்,இலங்கை அதிபர் ராஜ பக்சேயின் தீவிர அரசியல் ஆதரவாளர்.
செயலாளர்கள் இப்படி இருந்தால் எப்படி நியாயம் கிடைக்கும் ?நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ! அதில் பாரபட்ச்சம் பார்க்கக் கூடாது !

Monday, January 10, 2011

மூன்றறிவு படைச்ச தமிழன் !!!கண்ணா பின்னான்னு விலைவாசி ஏற்றம்,ஆனால் சரக்கு... டாஸ் மார்க்கில் நேற்று வியாபாரம் 95 கோடி..கேக்குறேன் ஒரு படத்திற்கு டைட்டில் வைக்குறானுக....பார்....குவாட்டர் கட்டிங் !!!

நான்லாம் வீரமுள்ள தமிழன்,உணர்ச்சிவுள்ள தமிழன்,மானமுள்ள தமிழன்,துனிச்சமுள்ள தமிழன்,ஆறறிவு படைச்ச தமிழன்,சப்ராஸ்த அப்ரஸ் அண்ட் டெப்ராஸ்....???

என்ன கொடுமை ..கொஞ்சம் நிம்மதியா வலையை சுத்தலாம்னு பார்த்தால் இந்த டிஆர் தொல்லை தாங்கமுடியலையா.இந்த கூகிளும் பாருங்க டீனு அடிச்சாலே இந்த டிஆரின் மூஞ்சியைத்தான் முதலில் காட்டுகிறது என்ன செய்றது ? சேகரித்து வைத்த முக்கிய செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கிடைப்பதற்காக வலையை ரொம்ப தீவிரமா ஆராயும்போது இந்த மாதுரி நகைச்சுவை க்ளிப்புகள் கிடைக்கும் போது இதற்கும் ஒரு பதிவு போட்டால் என்ன என்று மனசு ஏங்குகிறது.

சரி..சரி பாட்டிலியே சிரிப்பு இருக்கு பொங்கல் வருகிறது எல்லோரும் நல்லபடியாக பொங்கலை கொண்டாடுங்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடபபட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.

மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழி்ப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரி்ந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.

இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.

உடல் களைப்பு
உடலுக்கு மட்டும்
மனதிற்கு என்றும்
தேவை இனிப்பு
அதை இணைப்பதுதான்
பொங்கலின் சிறப்பு.
அதை மனதில் கொண்டு
மனதை சந்தோசத்தால் நிரப்பு.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இவன் திருந்தவே மாட்டான் என்னமோ இவன் மட்டும் தான் தமிழன் மாதுரியும்,மற்றவர்கள் எல்லாம் மலையாளி மாதிரியும் நினைப்பு அவனுக்கு.(டிஆரை கலைஞர் பேசுகிறார் )


தமிழ் மக்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நாங்க ரெண்டு பேருலேயாரு அழகா இருக்கா ?

எல்லோருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் !!!

                                            அதுக்காக சிரிக்காமல் இருக்க முடியுமா ?

                          ம்ம்..மா...பொங்கல் வாழ்த்துக்கள் சி..சி..சிழ்பா...(ஷில்ப்பா )

   குஷ்புவை நான் வழர்ப்பு மகளாக தத்தெடுத்து 
மணிமொழியென்று பெயர் சூடுகிறேன்.

                                        நல்லா இருப்பா... எனக்குப் பிறகு நீதான் ....???

அப்பாவும் மகனும் கொஞ்சுறதை பார்த்தால் எனக்கு என்னமோ சந்தேகமாத்தான் இருக்கு 

 தேர்தல் வருதுலே அதான் கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கேன்.

                     பேசாமல் இந்த தம்பியையும் தத்து எடுத்துவிட்டால் என்ன ?

               தேர்தல் முடியும்வரை இப்படியே இருந்திட வேண்டியதுதான் 


இதுதான் நாடக மேடை 

ச்சே..ச்சே..ஒரே தலைவலி 


அவுங்க எதையாவது சொல்லிட்டுப் போகட்டும் பொண்ணுதாயி நாம விதை விதைச்சாத்தான் நாளைக்கு கருது அறுக்க முடியும்.வேலையைப் பாரு.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துங்க......................

Tuesday, January 4, 2011

த்தூப்......என்ன அரசியல் ???அரசியலில் ஒரு கோர முகம் இருக்கிறது. 
பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பது தான் அது.

உதாரணமாய் தமிழ் நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் குற்றம் என்கிறார்கள். உணவுப் பொருளான கள்ளை விற்றால் கூட குற்றம் என்று போலீஸ் தென்னந்தோப்புகளில் காவல் இருந்த கதையை நாமெல்லாம் தினசரிகளில் படித்தோம். ஆனால் லைசென்ஸ் வாங்கி சாராயம் விற்றால் அது குற்றமில்லையாம்.

இல்லாத ஏழைகள் எங்கே போவது கோடிக்கு?

கோடீஸ்வரனக் கோமானுக்கு கோடிகள் பெரிது இல்லை. இதோ சாராயம் விற்கும் விஜய மல்லையாவை கட்டிப் பிடிக்கும் சமீரா ரெட்டியைப் பாருங்கள். இந்த நடிகை ரசிகன் எவனையாவது கட்டிப்பிடிப்பாரா?

விஜய் மல்லையாவைக் கட்டிப் பிடித்தால் கோடிகளில் காசு கிடைக்கும். ரசிகனைக் கட்டிப்பிடித்தால் என்ன கிடைக்கும் ???
இவர்கள் எல்லாம் சினிமாவிற்கு ஏன் வருகிறார்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள முயலுங்கள். நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்களை வைப்பவர்கள் மண்ணிலேயே வாழ அருகதை அற்றவர்கள்


நடிகைகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சினிமா பைத்தியங்கள் என்றைக்காவது நாட்டின் தியாகிகளையும் நல்ல எழுத்தாளர்களையும் சமூக சேவகர்களையும் நினைத்துப் பார்த்ததுண்டா ?
நடிகைகள் அடிக்கும் கூத்தையும் கும்மாளத்தையும் பார்த்தப் பிறகாவது திருந்தட்டும் இந்த ஜென்மங்கள்.

நடிகைகள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமிது இது,காரணம் தன்மானத்தையும் இழந்து கண்ட கண்ட பணக்கார காமுகர்களை கட்டாயப் படுத்தி தன் வசப் படுத்துவதே மிக பிரபலாமான நடிகைகளின் பொழுது போக்கா போச்சு,அதில் அவர்கள் சில நேரம் நரக வேதனைக் கண்டாலும் வருடக் கணக்கில் சந்தோசமாக இருக்கின்றார்கள் கிடைத்த பண மூட்டையைப் பெற்றுக் கொண்டபிறகு.நடிகைகளை குற்றப்படுத்தி நான் எழுதவில்லை அவர்களில் குடும்ப பெண்களும் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் மறுப்பதற்கு இல்லை,சினிமாவில் இருக்கும் இவர்களுக்கு அரசியல் எதற்கு ?

நடிகர் விஜய் அரசியலில் நுழைவதால் யாருக்கும் எந்த இழப்பும் கிடையாது அப்படி அவர் ஜெயித்து நாட்டின் மந்திரியாகவோ அல்லது முதல் மந்திரியாகவோ ஆகி நாட்டு மக்களுக்கு நல்லது செய்வாரென்றால் நாமும் அதை வரவேற்கத்தான் செய்வோம்,அதற்காக ஷகீலா,குஷ்பு,நமிதா போன்ற நடிகைகள் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டுவது கண்டிக்க தக்கது.இந்த வேகத்தை எந்த நடிகைகளாவது உங்கள் தெருவிற்கு ஓட்டு கேட்டு வந்தால் நாங்கள் ஏமாளிகள் இல்லை என்று நிருபியுங்கள்.