Thursday, November 25, 2010

விளங்குமா இந்தியா ?

படத்தின் மீது ஒரு க்ளிக் ப்ளீஸ் 

இப்பத் தெரிகிறதா ?

இந்தியா ஏன் இன்னும் பின்னுக்கு தள்ளப் படுகிறது என்று...!!!

வளரும் நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று,இவ்வளர்ச்சியினை கெடுப்பதற்கு,வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,பிரிட்டன்,சீனா,மற்றும் எதிரி நாடான பாக்கிஸ்தானும் இதில் முழுப் பங்கு வகிக்கிறது.

அதற்காக அவர்கள் எந்த விதத்தில் துன்பத்தை இந்தியாவிற்கு தரமுடியுமோ,அவ்விதத்தில் அதிகப்பட்ச்சமாக மறைமுகமாகவும்  , குறைந்தப் பட்சம் நேரிடையாகவும், நண்பனைப் போன்று நடித்து, தந்து கொண்டு இருக்கிறார்கள்,நமது இந்தியாவும் வெளுத்தெதல்லாம் பால் என்று நினைத்து, அவர்களின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாத குருடரைப் போன்று, தட்டு தடுமாறி காலத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறது.

என்னடா இவன், கல்லூரி துணை வேந்தர்கள் உறங்கும் போட்டோவினைப் போட்டு விட்டு,சம்பந்தம் இல்லாமல் உளறுகிறானே என்று, திட்டி விடுவதற்குள் முழுவதையும் படியுங்கள்.

ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்னா, வீட்டுத் தலைவன் புத்திசாலியாக இருக்கணும்,ஒரு ஊரு நல்லப் பேரு எடுக்கணும்னா ஊர் மக்கள் நல்லதை செய்யணும்,நாடு நல்லா இருக்கணும்னா நாட்டுத் தலைவர்கள் நல்லவர்களாக இருக்கணும்,சரி..சீக்கிரம் விசயத்திற்கு வந்துடறேன்.

எத்தனையோ எதிர்ப்புகளை இந்தியா, ராணுவம் மூலம் சந்தித்து சாதனைப் பல புரிந்திருக்கு,வெற்றியும் பெற்றிருக்கு,ஆனால் இயற்க்கை பேரழிவுகளை எதிர்த்து இதுவரைக்கும் எந்த ஒரு நாடும் வெற்றிக் கண்டதில்லை.
வருமுன் காப்போம் என்ற திட்டம் எதற்கு கொண்டு வந்தது என்றால்,இயற்கைப் பேரழிவுக்குக் காரணமான சிலவற்றை கண்டறிந்து, நாம் செய்கின்ற செயலை குறைப்போமானால்,அதனின் பலன்கள் நன்மையில் போயி முடியும்.அதற்க்கத்தான் இந்த வேந்தர்கள் கூடி இருக்கிறார்கள்.

இங்கு நடந்து கொண்டிருக்கிற கூட்டம் ஒன்னும் சாதாரணக் கூட்டம் இல்லை, மிகப் பெரியக் கூட்டம்,பல்கலைக் கழகத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் துணை வேந்தர்கள் கூடியிருக்கும் மகா சபை.இச்சபையில் பேசக்கூடிய பேச்சுக்கள் அனைத்தும் கோடிக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எத்தி வைக்கக் கூடிய ஒரு ரகசிய காப்பு பாடம்,இந்தக் கூட்டத்திற்காக பல இலட்ச்சங்களை தமிழக அரசு செலவழித்து நடத்திக் கொண்டிருக்கிறது.
நமது அய்யாக்களோ ஒரு கவலையில்லாமல், கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
அய்யா அப்துல் கலாம் அவர்கள் கனவு காணசொன்னதை,தவறாக நினைத்துக் கொண்டு கனவு காண்கிறார்களோ ?

விளங்குமா இந்தியா ?

எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று, புகைப் படத்தின் கீழேயே எழுதி இருக்கு படித்து கொள்ளுங்கள் !

இவர்களைப் போன்றவர்கள் நாட்டிற்கு தேவையா ?


இவர்களுக்கு தண்டனைக் கொடுத்தால் தப்பா ?


ஒரு மாறுதலுக்காக தண்டனையை நீங்கள் வழங்குங்கள் !

அந்நியன் 2

7 comments:

  1. நியாயமான கோபம்..என்ன பண்ணுறது பழக்க தோஷம்,,

    ReplyDelete
  2. நம்மால் ஒன்னும் பன்னமுடியாது என்ற காரணத்தால், இந்த தளத்தின் மூலம் தவறு செய்பவர்களை தண்டிக்கிறோம் வெறும் மனத் திருப்த்திக்காக, அதுக்காக இவர்களை தண்டிக்கவா முடியும் ? ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவரவர் வேலையை அரசு கொள்கைக்கு உட்பட்டு நடப்பெமேயானால் நமது இந்தியாவை யாரும் ஒன்னும் செய்துவிட முடியாது.

    நன்றி ஹரிஸ்

    ReplyDelete
  3. இதுகளே இந்த லட்சணத்துல இருந்துட்டு நாங்க காலேஜ்ல தூங்குனா திட்டுறது :(
    சாரி அந்நியா ஜோக் சொல்லல. நெசமா சீரியஸா தான் சொன்னேன்...

    இவங்களாம் என்னருகில் வந்தால் குறைந்தபட்சம் காரி துப்பிட்டு வருவேன்.

    ReplyDelete
  4. உங்களின் ஆதங்கம் புறிகிறது என்ன செய்ய ?
    அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.

    Thanks

    ReplyDelete
  5. அட ஒண்ணும் இல்ல தல.. பன்னிரண்டு மணிக்கு சாப்பிட்ட முரட்டுத் தீனி, மற்றும் அவர்களது வயது.. தூக்கம் வருவது சகஜம் தான்..

    அந்தத் தீனி தின்னா நமக்கே கொஞ்சம் தூக்கம் வரும் தான்.. ஹி ஹி .. இது சும்மா.. இப்ப சீரியஸ்..

    சுற்றுச் சூழல் பற்றிக் கவலையோ, அவர்களது சமூகக் கடமையோ அவர்களுக்கு இருந்து இருந்தால் தூக்கம் வராது.. ஏதோ போகணும், வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று வந்திருக்கும் கூட்டம்.. என்ன செய்ய.. ஒண்ணு செய்யலாம். இந்த போட்டோவை பெருசா ப்ளெக்ஸ் பிரிண்ட் அடித்து நான்கு ரோடு சந்திப்புகளில் வைக்க வேண்டும்... அனைவரும் திருந்தி விடுவார்கள்..

    ReplyDelete
  6. Thanks Brother Ippoththaan unkal commentsai paarththen rompa nandri

    ReplyDelete
  7. இவனுங்களுக்கு வேலை கொடுத்தவனை ஒதைக்கனும்

    ReplyDelete