Friday, July 29, 2011

வால் இல்லாமலும் குரங்கு இருக்கும் என்று... !!


உறவுகளை தள்ளி வைத்து.
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,
என்னையவே புண்ணாக்கி.
என்னை நீயாகவும்.
உன்னை நானாகவும்.
கண்ணே என் கணவன் என்று
நம்பியிருந்த எனக்கு.
கிடைத்தப் பட்டம் மலடி.

மாமியார் என்ற ராட்சசி.
போலி சாமியாரைப் போல பொய் பேசி.
கதிரவன் உதித்து மறையும் வரை.
மருமகளை தினம் மிதித்து சாகும் வரை.
செய்யும் கொடுமைகளை தட்டி கேட்க
யாரும் இல்லையா?

மனதைத் தொலைத்து
பெற்றவர்களை பகைத்து
உறவுகளை புதைத்து
என் அழகினை சிதைத்து
என் உணர்ச்சிகளை வதைத்து
தினம் தினம் பைத்தியம் பிடித்து
நடை பிணமாக அலைகின்றேன்
கடைசியில் கல்லறைதான் முடிவு என்றால்....
பிறகு எதற்கு அந்த காதல்?

பல்லில் விஷம் வைத்திருக்கும்
ஜீவனை பாம்பு என்கிறோம்!!..
சொல்லில் விஷம் வைத்திருக்கும்
மாமியாக்களை என்னவென்பது ?

கண்ணிர் சிந்தும் நம் கண்களை விட
அதை மறைத்து புன்னகை பூத்திடும் நம் இதழுக்கே வலி அதிகம்.
ஆனால் பலருக்குப் புறியாது.
புறிய வைத்தாலும் விளங்காது.

புத்தகத்தில் படிச்சும் புரியவில்லை.
தொலைக்காட்சியில் பார்த்தும் நம்பவில்லை.
ஆசிரியர் சொல்லியும் தலையில் ஏற வில்லை
ஆனால் மாமியாரை நேரில் பார்த்தப் பிறகுதான் புறிந்தது.
எவ்வளவு கொடுமைக் காரி என்று.

கல்லூரி கன்னிகளே.
கஸ்தூரி பொன்னுகளே.
வேண்டாம் நமக்கு காதல்.
நீ காதலிப்பவன் நல்லவன்தான்.
ஆனால் கடும் சொல்லால் வதைப்பது
அவன் குடும்பத்தார்தான்,காரணம்
சீரும் சீராட்டாமும்,சில்லரை எனும்
கைக்கூலியும் கொடுக்காமல்
சிட்டாய் நீ புகுந்து விட்டாய்.
பிணம் தின்னும் கழுகுகள் கூட
உயிரற்ற உடலைத்தான் உணவாக்கி திண்ணும்
நற் குணமற்ற மாமியாக்கள் உயிருள்ள மருமகளை
உயிரோடுதான் உண்னுகிறார்கள்.
வசைப் பாடுவதின் மூலம்.

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...
வாசலில் வந்து அழைத்தான் பிச்சைக்காரன் "அம்மா" என்று...

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...
வீட்டினுள் ம்மா...என்று அழைத்தது அவள் வளர்க்கும் பசு.

இதுதான் எதார்த்தம்,இதுதான் உண்மை, இதுதான் சத்தியம்,இதுதான் ஜெயிக்கும்.

மலடு என்பது பெண்களுக்கு மட்டும் உள்ள குறை இல்லை இது ஆண்களுக்கும் பொருந்தும்,இதை அறியாத ஆண்களும் கண்வன் வீட்டு பெண்களும் புறிந்து கொள்ளனும்.

வெறுமையை நிரப்பி விம்மும் இதயத்துக்கு
விடை கூற முடியாமலும்...
பொறுமையை மதித்து பொங்கி எழும் உணர்சிக்கு
இடை விடாமலும்...
என்னைக் கட்டியவனே கதி என்றும்
என்னை திட்டியவனே விதி என்றும்
தினம் தினம் செத்தும் பிழைக்கும்
சகோதரிகளுக்காக இந்த பதிவு.

மனதில் மலர்ந்தவைகள் எல்லாம்...
பொழுதில் மறைந்து கொண்டு இருக்கின்றன.
வசந்த காலங்களெல்லாம்...
வாடிப் போய் கொண்டு இருக்கின்றன.
நட்சத்திர இரவெல்லாம் உமைப் பார்த்து...
அழுது கொண்டு இருக்கின்றன.
சோலை மரங்கலெல்லாம் வதங்கி...
வாடிக் கொண்டு இருக்கின்றன.
வெள்ளைப் பூக்களும் முல்லைப் பூக்களும்...
கண்ணீர் பூக்களாக மாறிக் கொண்டு இருக்கின்றன.

காலங்களில் ஒரு நாள் வசந்த காலம் பிறக்கும்...
அது உனது வாழ்க்கை கண்ணீரை துடைக்கும்.

என்ற நம்பிக்கையோடு......

அந்நியன்:2

காணொளியில் காதலைப் பற்றி என்ன அழகாக வர்ணிக்கின்றார்கள் அது நிஜத்தில் சாத்தியமாகுமா?

இது எல்லா மாமியாக்களுக்கும் பொருந்தாது சில நல்ல சீதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Thursday, July 21, 2011

கொஞ்சம் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ காட்டிச் சிரிங்க!


நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'

குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமீ.
நீதிபதி:              !!!
^^^^^^^^^^^^^^^^^^^^
ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன். 
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்.
அவ சிரிச்சா சிரிப்புல, 100 பேரு செத்து போயிட்டான்!!!

அய்யோ...யோ..அய்யோ...யோ..
^^^^^^^^^^^^^^^^^^^
ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.

மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.

^^^^^^^^^^^^^^^^^^^

ஏண்டா ஹோம் வொர்க் பண்ணலை கோபாலு?

கரண்ட் இல்லை

மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி எழுத வேண்டியதானே?

தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு.

போய் எடுக்க வேண்டியதானே?

நான் குளிக்காம சாமி ரூம் போக மாட்டேன்.

ஏன் குளிக்கலை?

மோட்டார் ஓடலை. தண்ணி வரலை.

ஏன் மோட்டார் ஓடலை?


சனியனே அதான் சொன்னனே. கரண்ட் இல்லைன்னு

^^^^^^^^^^^^^^^^^^^^^^

மதுரையில் ஒரு டயர் கடையிலுள்ள விளம்பரம்

"உங்கள் தலை வழுக்கையாக இருந்தால் அறிவு அதிகம் என்று அர்த்தம்.

உங்கள் கார் டயர் வழுக்கையாக இருந்தால் ஆபத்து அதிகம் என்று அர்த்தம்."

-----------------------------

கணவன்; "நான் சொல்றது எதையுமே, உன் காதிலே போட்டுக்க 
மாட்டேங்கிறியே?"

மனைவி;"முதல்ல நான் கேட்ட வைரத்தோடு வாங்கித் தாங்க!
என் காதுல போட்டுக்கிறேன்!" [கல்கி

-----------------------------

"இன்னிக்கு பட்டினி கிடந்து ஆஃபீஸ்ல வேலை செஞ்சேன்....!"

"ஏன்...?"

"சாப்பாட்டு நேரத்துல யாருமே என்னை எழுப்பிவிடல..அதான்!"
[கல்கி]

------------------------

“செல்ஃபோனை எதுக்குடா பல் டாக்டரிடம் எடுத்துட்டுப் போறே?”

‘ப்ளூ டூத்’ நல்லாயிருக்கான்னு செக் பண்ணத்தான்!”

------------------------

தொழில் படுத்துட்டுதுன்னு சோகமா இருக்கீங்களே....என்ன பிசினஸ்?"

"பாய் வியாபாரம்!"

------------------------

கணவர்: நமக்குள்ள எது நடந்தாலும் நாலு சுவத்துக்குள்ளதான் நடக்கணும்...''

மனைவி: ""அதைத்தானே நானும் சொல்றேன்... இதைப் புரிஞ்சுக்காம போன வாரம், நாலு தட்டு தட்டுனதுக்குச் சத்தம் போட்டு, ஊரையே நீ கூட்டிட்டேய்யா...!''

------------------------

"நம்ம தலைவரோட பேரன் அழும்போது, பூச்சாண்டி கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன்னு சொன்னா பயப்படமாட்டேங்கிறானே..எப்படி
அழுகையை நிறுத்தறது?"

"சி.பி,ஐ.,கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன்னு சொல்லிப்பாருங்க.....
உடனே அழுகையை நிறுத்திடுவான்!"

----------------------------

"நம்ம டாக்டர் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகு மாறிட்டார்..."

"மாறிட்டாரா?"

"ஆம், சாதாரண காய்ச்சலுக்குக்கூட ஆறு மாதம் மாத்திரை தருகிறாரே!" [கல்கி]

------------------------

"ஒரு வாரமா என் காது சரியா கேட்கவே மாட்டேங்குது டாக்டர்?"

"நீங்க சொல்லியே கேட்காத காது நான் சொன்னா மட்டும் கேட்கவா
போகுது?" [குமுதம்]

--------------------

டாக்டர்! இந்த ஆப்ரேஷனுக்காக நான் நிறைய பேர் கிட்ட கடன் வாங்கி இருக்கேன்."

"கவலைப்படாதீங்க,
ஆப்பரேஷனுக்கு அப்புறம் எந்த கடன்காரனும் உங்களைத் தேடி
வரமாட்டாங்க." [குமுதம்]

---------------------------

"தலைவர் சந்தோஷப்படுற மாதிரி எதை வாங்கிக் கொடுக்கலாம்?"

"ஜாமீன் வாங்கிக் கொடுங்க!" [விகடன்]

----------------------------

"அந்த டாக்டர் உங்களை ஆறுமாசம் தங்கி வைத்தியம் பார்க்கச் சொல்றாரே...ஏன்?

என்னோட சொத்து மதிப்பு இருபது லட்சமுன்னு சொன்னேன்."

----------------------------

"கட்சியில மாற்றம் தேவைன்னு தலைவர் சொன்னது தப்பாப் போச்சா... ஏன்?

அவரைத் தவிர எல்லோரும் வேற கட்சிக்கு மாறிட்டாங்க...

----------------------------


(ராஜபாளையம் கடைத் தெருவில் இரண்டு நண்பர்கள்)

""என்ன மச்சான் ரொம்ப மூடு அவுட்டா இருக்கிறே?''

""அதையேன்டா கேக்குற? எங்கப்பா என்னை அரை லூசுன்னு திட்டிட்டாரு''

""சரி.. சரி... கவலைப்படாதே... அவரு உன்னை இன்னும் முழுசாப் புரிஞ்சுக்கலை''

----------------------------

"சார், கேடி பக்கிரி போட்டோ வேணும்னு கேட்டிங்கல்லே...எந்த அமைச்சரோட சேர்ந்து இருக்கிற போட்டோ வேணும்'னு கேக்கிறான்!"

----------------------------

"வரவேற்பு வாசகம் எழுதினதுக்கு, தலைவர் என்னை பின்னி எடுத்துட்டாரு!"

"சரி...அதுக்காக' இன்னும் சி.பி.ஐ. கையில் சிக்காத சிங்கமே வருக'ன்னா எழுதறது?" [விகடன்]

---------------------------------

கொஞ்சம் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ காட்டிச் சிரிங்க!

கண்டக்டர்: டிக்கெட் வாங்கிட்டியா??

பயணி: பஸ்ஸிலே போகும்பொழுது யாரு என்ன கொடுத்தாலும் வாங்கக் கூடாதுனு என் அம்மா சொல்லி இருக்காங்க சார்!

கண்டக்டர்: ???

------------------------

ஹெல்லோ, ஹெல்லோ, நான் தேனீ மாவட்டம் கம்பத்துலே இருந்து பேசறேங்க.

ஹைய்யோ...யோ,..கீழே விழுந்து வைக்கப் போறீங்க, இறங்கி வந்து பேசுங்க.

--------------------------

உன்னிடம் எட்டு ஆப்பிள்கள் இருக்கு. அவற்றை ஆறு பேருக்குச் சமமாக எப்படிப் பிரிச்சுக் கொடுப்பே?

ஜூஸ் போட்டுத் தான்.

---------------------------

"ஆட்சியில பங்கு கேட்க மாட்டோம்னு கூட்டணித் தலைவர்கள் எல்லாம் சொல்லிட்டாங்க தலைவரே...!

"ரொம்ப சந்தோஷம்...!

ஆனா, ஊழல்ல பங்கு கேட்பாங்களாம்...!"

-----------------------------

"என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!

ஐயையோ! அப்படியெல்லாம் வளர்க்காதீங்க... நல்ல பையனா வளர்க்கப் பாருங்க!"

---------------------------------

ஒரு அழகான பொண்ண 'பப்'ல பாத்துட்டு சர்தார்ஜி நாளைக்கு வீட்டுக்கு வா.... யாரும் இருக்க மாட்டாங்கன்னுட்டு அட்ரஸ் கொடுத்துட்டு போயிட்டார்.

மறு நாள் நைட் அந்த பொண்ணு வந்து பாத்தா, யாருமேயில்ல. 

எப்படி சர்தார்ஜீ ?

--------------------------

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.


டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?


நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்

-------------------------

சிரியுங்கள் ஆனால் பிறர் சிரிக்கும்படி நடந்து கொள்ளாதிர்கள்,சிரிப்பு என்பது நமது வாழ்க்கையில் ஒரு பகுதி நேரமாக இருக்காமல் நூற்றில் இருபது சதவீதமாக இருக்கட்டும்.


அதிகமாக சிரிப்பது ஆபத்தில் முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.


இவை அனைத்தும் வார இதழ் மற்றும் மாத இதழ்களில் சுட்டது.

சந்திப்போம்.


Thursday, July 14, 2011

அர்த்தமற்ற வாழ்க்கை.

வீடிழந்து,வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து,வாழ்க்கை வண்டியை ஓட்ட நினைப்பவறே கொஞ்சம் கேளுங்கள்.


வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள்,துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது சமாளித்து எழுவது எப்படி?

அலையும் மனங்களோடு,அலையாத மனிதர்களோடு,அள்ளி தர ஆள் இருந்தும் வாங்குவதற்க்கு உன் "கை" வரவில்லையே ஏன்?
ஒரு வேளை இரவல் வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணமா ?

இந்திரியாத்தால் உருவெடுத்து ஒரு பிடி மண்ணில் உனைப் படைத்து உயிரை இரவலாக தந்து உமை காத்த இறைவனை மறக்கலாமா ?

சத்தியம் வெல்லும் தருவாயில் அசத்தியம் வென்று உமைக் கொன்றாளும் கலங்காதே நாளை நீதான் வெற்றி அடைவாய்.

துன்பச் சுமைகள் உமை அழுத்த கண்களில் கண்ணீர் மடை திறக்க இதயமே வெடித்து போனாலும் கலங்காதே.

அடுத்தவர்,பணம் படைத்தவர்,உமை ஏசினாலும்,அல்லது "நா"கூவ பேசினாலும் கண்டு கொள்ளாதே.


நித்தம் புறியாமல் நிசப்த்தம் கூடாமல் துணிச்சலான உம் வாழ்க்கையை நீச்சல் அடித்து கரை சேர்க்க வந்து விட்டான் நல்லோர் வடிவில்.

ஆம்...தானம் தர்மம் என்ற பெயரிலும்,தானும் உண்டு மீதி போக,பிறருக்கு கொடுக்கும் நல்ல மனப்பான்மையும் வந்து விட்டது பலருக்கு.


நித்தம் புரியாமல் நீண்ட நினைவலைகள்,அர்த்தம் விளங்காமல் ஆயிரமாயிரம் கனவுகள்,அர்த்தமற்ற காத்திருப்பு,நிரப்பப்படாத இடைவெளியாய்
நீண்ட சிந்தனைகள்...போதும்..போதும்..நிறுத்து விடு இக்கனவினை.

அதோ பார்....வானத்தில் விடி வெள்ளி அது போல உமது வாழ்க்கையிலும் வந்து விழும் பெரும் சள்ளி.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல.
நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம்.

நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,இன்பத்திலும்,துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும்.

தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.

அது போல வறுமையில் வாடியிருக்கும் குடும்ப நண்பர்களை நல் வழி காண்பிப்போம் அதில் அவர்களுக்கு கிடைக்கப் போவது அற்ப்ப சுகமே அதில் நமக்கு கிடைப்பது பெரும் சொர்க்கமே.

Sunday, July 3, 2011

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.


உணவு,வீட்டு வாடகை, நீர், மின்சாரம்,எரி பொருள்,போக்குவரத்து என இது போன்ற அடிப்படை செலவுகளையே நாம் சமாளிக்க முடியாமல் போனால் பிள்ளைகளின் கல்வியை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் நாமே இப்படி விலை வாசி ஏற்றத்தக் கண்டு பயந்தால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைப் பற்றி நினைக்கும் போது மனம் படபடக்கிறது அவர்களின் நிலை உண்மையில் பரிதாபத்துக்குரியது நாமும் அவர்களின் நிலையில் இருந்தால் எப்படி வாழ்க்கையைச் சமாளிப்போம் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த சில வருடங்களில் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் நிச்சயம் கடந்த ஐந்து வருட காலங்களில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை பெட்ரோலின் விலை உலகச் சந்தையில் ஏறிக் கொண்டிருந்தபோது வெளி நாட்டில் கொள்முதல் செய்யும் இந்தியா மட்டும் பெட்ரோலின் விலையை உயர்த்துவதற்க்கு யோசித்தது காரணம் அரசியல் தலைவர்களும் பொருப்புள்ள எதிர்க்கட்ச்சியும் நேர்மையாக நடந்து கொண்ட காரணத்தினால்.

ஆனால் இன்றைய நிலமையை ஆராய்வோமேயானால் ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சியினர் வரை ஊழல் பரந்து விரிந்து கிடப்பதால் வாயளவில் கூவி விட்டு பாராளு மன்றத்தில் வெட்டிப் பேச்சு பேசி மக்கள்களின் வரிப் பணத்தை ஏமாற்றி நாடகமாடும் அரசியல் குள்ள நரிகள் செய்யும் தவறுகளால் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சரித்திரம் காணாத வகையில் நாளுக்கு ஒரு விலையாக அதிகரித்துக் கொண்டு போகிறது.

அரசாங்கமோ,இஷ்டத்துக்கு பொருட்களின் விலையை ஏற்றும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விடுவதில் மட்டுமே மும்முரமாக இருந்ததை தவிர அதற்க்கு முற்றுப் புள்ளி வைப்பதற்க்கு எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்க வில்லை என்பதே நாடறிந்த உண்மை.

உண்மை நிலவரம், மக்கள் குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் விலையேற்றத்தால் பட்ட இன்னல்கள் இன்றும் கூட புரிந்து கொள்ளப்பட்டதா என்பது கேள்விக்குறியே?

ஒன்று மட்டும் உண்மை. பொருட்களின் விலை ஒரு வழி பாதையை போன்றது ஏற்றம் மட்டும்தான்....விலை குறைவு என்ற பேச்சுக்கு இடமில்லை.

அரசாங்கம் தமது செலவீனங்களில் வீண் விரயத்தைத் தவிர்ப்பதையும், ஊழலைத் தடுப்பதையும் தனது முதல் கடமையாகக் கருதிச் செயல்பட்டால் நாடு மட்டு மின்றி நாட்டு மக்கள்களும் உம்மை போற்றுவார்கள்.

ஆயிரக் கணக்கில் கொள்ளை அடித்த அரசியல் அயோக்கியர்கள் எல்லாம் லட்சம்,கோடி,என்று ஊழல் புரிவதால் நாட்டு மக்கள்களுக்கு சேர வேண்டிய அந்தப் பணம் சேராமலியே நின்று விடுகிறது. 

ஊழல் செய்தவர்களுக்கு எதிராக,சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து இருந்தாலும் இது நடை முறைக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருக்கின்றது அவருக்கும் தெறியும் அதை எழுதிக் கொடுத்தவருக்கும் தெரியும்.

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.

கரூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் சர்வேயராக உள்ள
கிருஷ்ணன் அவரிடம் நில அளவை செய்வதற்காக வந்த கண்ணன் என்பவரிடம் ரூபாய்.500 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கண்ணன் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர் புகாரின் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை சர்வேயர் கிருஷ்ணன் பெறும் போது பாய்ந்து சென்று பிடித்து கைது செய்தனர்.

இது போன்ற பல்வேறு செய்திகளை வாசகர்கள் செய்தித் தாளில் படித்திருப்பீர்கள் அந்த சர்வேயர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது தவறில்லையா என்றால் தவறு தான் சந்தேகமே இல்லை.

இப்படி 500ம்,1000மும் லஞ்சம் வாங்கும் கீழ் மட்ட ஊழியர்களை பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் என்றைக்காவது கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கும் அரசியல் தலைவர்களை கைது செய்ததுண்டா?

தி.மு.க.ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது.ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள கமிஷன் சம்பாதிப்பதற்காக,அரசு மின் உற்பத்தி நிலையங்களை முடக்கிவிட்டு,அதிக விலை கொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கினர் என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார் நூற்றுக்கு நூறு உண்மையும் அதுதான்.

தீமுக்கா ஆட்சி இழந்தற்க்கு முக்கிய காரணமே இந்த மின்சாரம்தான்.

இலவச மின்சார திட்டத்தின் மூலம் பல லட்சம் கோடிகளை அரசாங்கம் இழந்து வருகின்றது இத்திட்டத்தின் மூலம் அற்ப்ப விவசாயிகளே பயன் அடைகிறார்கள் இருபத்தி நாளு மணி நேரமும் கரண்ட் தேவைப்படும் மில்களை தென்னந் தோப்பில் மறைத்து வைத்து பணம் சம்பாதிக்கும் பெரும் பணக்காரர் முதலாளிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.

முதலில் முதல்வர் இதற்க்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும்.

ஊழல் என உயர் நிலையில் உள்ளவர்கள் செய்யும் தவற்றுக்கு விலையேற்றம் என்ற தண்டனையை பாமர மக்களுக்கு வழங்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது !

அந்நியன் 2