Thursday, March 31, 2011

சிரியுங்கள்....சில நிமிஷம்.
நண்பர்களே...வரும் வெள்ளிக்கிழமை வரை விடுப்பு அதுவரை யாருடைய வலைப் பூவிர்க்கும் வர இயலாமைக்கும் பின்னூட்டத்திர்க்கும் பதில் தர இயாலாமைக்கும் மனம் பொருந்திக் கொள்ளவும்.


சந்திப்போம் 06/04/2011.அன்று.


மெட்ரஸ்-ல தேட்ர வேலைக்கு எதுக்கு டெல்லிலே வந்து அப்ளிக்கேசன் ஃபில்லப் பன்றே?

கேப்பிட்டல்ளே எழுதுனு போட்டிருக்கு அதான் டெல்லிக்கு வந்து எழுதுறேன்.

ஒரு மாமி இட்லியை தலைல வச்சிக்கிட்டாக ஏன்?

ஏன்னா இட்லி பூ போல இருந்துச்சு அதுனாலேதான்.ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் என்ன டூத்பேஸ்ட் யூஸ் பன்னுவாங்க?

சிக்னல்.ஏண்டா.. உங்க அப்பா எந்நேரமும் உன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு.

" "ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல.. அதான்!!"பரிமளம்! கத்திரிக்காய் வாங்கப் போன என் கணவர், லாரி மோதி இறந்துவிட்டார்..."

"ஐயோ, பிறகு..?"

"பிறகு என்ன? கையிலிருந்த முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைச்சேன்.."

சர்தார்ஜி டர்பன் இல்லாமல் சென்று கடைக்காரரிடம் கேட்டார், "ஏங்க பஞ்சாப் கோதுமை குடுங்க"

கடைக்காரர்: நீங்க பஞ்சாப் சர்தார்ஜியா?

சர்தார்: ஆமாம். ஏன்? ஆந்திரா அரிசி கேட்டா நீங்க ஆந்திரான்னு கேப்பீங்களா?

க.காரர்: இல்லையே.

சர்தார்: பின்ன என்னை மட்டும் ஏன் பஞ்சாப் சர்தார்ஜியான்னு கேட்ட?

கடைக்காரர்: ஏன்னா, இது துணிக்கடை..!ப‌ி‌ச்சை‌க்கார‌ன்..

கைகாலெல்லாம் நல்லாத்தான இருக்கு! ஏன் இப்படி வீடு வீடா அலஞ்சு பிச்சை எடுக்கற?

ரொம்ப நன்றி சாமி! எனக்கு புத்தி புகட்டினீங்க! இனிமே அலையாம ஒரே இடத்துல உட்கார்ந்து பிச்சை எடுக்கறேன் சாமி.


அவன்: பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு.

இவன்: ஏன்?

அவன்: சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்கா!
அவர்: எப்ப பார்த்தாலும் மரத்துமேல ஏறி உட்காந்துக்குறாரே, அவர் யாரு?

இவர்: அவர்தாங்க தொகுதியோட 'கிளை'ச் செயலாளர்.


நீதிபதி: (தூக்கு தண்டனைக் கைதியிடம்) சாகறதுக்கு முன்னாடி உனக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுப்பா?

கைதி: மகாத்மா காந்தியை ஒரே ஒரு முறை நேர்ல பாத்துட்டு நான் சாகணும் எசமான்.
வாடிக்கையாளர்: (தொலைபேசியில்) ஹலோ, பேப்பர் தோசை இருக்குங்களா?"

ஓட்டல்காரர்: இருக்குதே.

வாடிக்கையாளர்: அப்ப 408-991-4950-க்கு அதை ஃபேக்ஸ் பண்ணிடுங்க..."


"டாக்டர், பையன் லட்டை முழுங்கிட்டான். ஆபரேஷன் பண்ணியாவது வெளியில எடுத்திடுங்க."

"லட்டுக்கு ஏன் இந்தப் பயம் பயப்படறீங்க?"

"ஐயோ அது வேட்பாளர் தந்த லட்டு. உள்ளே வைர மோதிரம் வெச்சிருக்காறாம்."
என்னங்க "இன்றைய கூட்டு"ன்னு தலைப்பு எழுதி இருக்கீங்க. கீழே என்ன கூட்டுன்னு எழுதலே. இது என்ன ஓட்டல்?

இது ஓட்டல் இல்ல. கட்சி அலுவலகம். இன்னிக்கு எந்த கட்சியோட கூட்டணில இருக்கோம்னு எங்களுக்குத் தெரிஞ்ச உடனே எழுதி வைக்கறோம்.


ஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..?

நான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..!


ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..

" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

"அப்படியா..? எப்படி செத்தார்..?"

" மூளைக் காய்ச்சல்லே...!"
சர்தார்ஜீ: ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க ?

மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு

சர்தார்ஜீ: முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் பின்னால் கலைத்துக்கொண்டு ஓடனும் ?..!!


சர்தார்ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!

தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே?

சர்தார்ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது…


ஜோக்குகள் எல்லாம் நண்பர்கள் அனுப்பியது யாருடைய தலத்திலும் இருந்து நண்பர்கள் சுரண்டி இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் முகவரியை தெரியப் படுத்துங்கள் விடுப்பு முடிந்து வந்து சரி செய்து கொள்கிறேன்.

ஜோக்குகள் எல்லாம் சர்தார்ஜீயைப் பற்றி வருவதால் யாரும் தவராக நினைக்கவேண்டாம் சிரிக்க மட்டுமே.


 வட நாட்டில் மதராஸி ஜோக்குதான் நம்பர் ஒன்னாக திகழ்கிறது.

Wednesday, March 9, 2011

சிரிப்புபிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம். 

இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம்.
 
வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.

அன்னியன் இன்னும் இரன்டு வாரத்தில் வந்து விடுவார் அவரின் வலைப் பூவை நான்தான் பார்த்து வருகிறேன் தவருதலாக யாருக்கும் பின்னூட்டம் போட்டிருந்தால் வருத்தப் படவேன்டாம்.


சல்மா1 .அக்பர் யாரு?

தெரியல டீச்சர்.

படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

நீங்க சொல்லுங்க டீச்சர், சுரேஷ் யாரு?

தெரியல

உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.....2.   நீங்க எல்லாரும் அறிவளிங்கனு நினைச்சிங்கன்ன இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். 

பாட்டி வடை சுட்ட கதையில, வடையை சுட்டது பாட்டியா? காகாவா?


3. பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம். 
இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம். 
வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.


4.  மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..5.  ( Exam ஆரம்பிக்கும் முன்... )

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?


6.  அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


7.  நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!


8. "அந்த டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"

"எப்படி சொல்ற?"
"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன் `சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு பாரு."


9. கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!