Friday, August 17, 2012

ஆணாதிக்கம்


உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்.

யுத்தம் புரியும் ராணுவ அரக்கர்களும் சரி பயங்கரவாத தீவிரவாதிகளும் சரி கண்ணில் படும் ஆண்களை சுட்டுக் கொன்ற பிறகு பயத்தில் மயங்கி கிடக்கும் பெண்களை சீரழித்து தம் வக்கிர புத்தியால் அவளின் அந்தரங்களை அனுபித்தப் பிறகு அவளையும் சுட்டுக் கொள்கிறார்கள் கூட இருக்கும் சின்னஞ்சிறு மழலைகளையும் கொன்னு குவிக்கின்றார்கள். 

யுத்த வெறி பிடித்து அழையும் ஆண் ஆதிக்க அரக்கர்கள் யுத்தம் என்ற பெயரிலே சும்மா இருக்கும் பெண்களை துன்புறுத்தி வன்புணர்ச்சி செய்யும் காட்சிகளை கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்ப்போமேயானால் நமது கண்களில் கண்ணீர் வராது மாறாக குருதிதான் வரும். 

இராக் காஷ்மீர் இலங்கை சூடான் ஆப்கானிஸ்தான் இன்னும் எத்தனையோ நாடுகளை நாம் உதாரணத்திற்கு எடுத்து வைக்கலாம் ஆனால் நமக்கு கிடைக்கப் போவது என்ன ?

நீதியா...இல்லை அநீதி இழைத்த அரக்கர்களுக்கு தண்டனையா ? 
ஒன்னும் கிடைக்கப் போவதிலை இந்த உலகில். 

 ஆயுதம் தயாரிக்கும் ஆணாதிக்கம் அதனை உபயோகிப்பது எங்கே தெரியுமா ? 
 கூடி இருக்கும் குடும்ப பெண்கள் மீதும் ஓடி திரியும் சின்னஞ்சிறுவர்கள் மீதும்தான் தாம் எதற்க்காக கொல்லப் படுகின்றோம் என்று காரணமே தெரியாமல் மரணத்தை தழுவும் இவர்களுக்காக இந்த மனித உலகம் என்ன நீதி வழங்கியது ? 
 யுத்த பூமியில் பித்து பிடித்து திரியும் ஆண் ஓநாய்கள் கிட்லரிலிருந்து ராஜபக்ஷே வரை அல்லது ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து டோனி ப்ளேயர் வரை எதை சாதித்தார்கள் ?  
உலக சாம்ராஜ்யத்தில் அரசானாக அமெரிக்கா இருக்கலாம் ஆனால் அது நீடித்து நிற்காது என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளனும்.

அப்பாவி தமிழர்களை இலங்கையில் ராஜ பக்சே கொன்னு குவிக்கலாம் ஆனால் அவனின் ஆட்சிக்கு இது ஒரு இழுக்கு என்பதை அவன் தெரிந்து கொள்ளனும்.
யுத்தத்தினால் அரங்கேறும் அக்கிரமங்களை இந்த ஆணாதிக்க அரக்கர்கள் புரிந்து கொள்வதில்லையே ஏன்?

வளங்களை அழித்து நிலங்களை வளைத்து விரும்பிய பெண்களை சீரழித்து வாழ்வு,கலாச்சாரம்,பண்பாடு,வழிமுறை,எல்லாவற்றையும் அல்லவா புதைக்கின்றார்கள்.

பெண்களை பிள்ளை தயாரிக்கும் மிஷினாக பயன்படுத்தி அவள் பெற்றெடுக்கும் பிள்ளையை தீவிரவாதியாகவோ அல்லது ராணுவ வீரன் என்ற போர்வையில் ஒரு அரக்கனாகவோ பயிற்சிகள் கொடுக்கும் ஆணாதிக்க வர்க்கங்கள் தமது குடும்பத்தை போன்று மற்ற குடும்பத்தையும்  பார்க்க வேண்டாமா ? 

 இன்றைய புள்ளி விவரப்படி உலகில் நடக்கும் இன அழிப்பு என்னும் கொடுமையானப் போரில் 85 சதவிகிதம் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்கள்தான் என்று செய்தி நிறுவனங்கள் சொல்கின்றது.உகாண்டாவில் நடந்த இன வன்முறை புரட்சியில் ஐந்து லட்சம் பெண்கள் கற்பை இழந்து கடும் சித்திரவதைக்கு ஆளாகிவுள்ளார்கள் என்பதை பத்திரிக்கை வாயிலாக நாம் பார்க்கின்றோம் அதே சமயம் இராக்கில் அமெரிக்கா ராணுவ அரக்கர்கர்கள் ஆயிரத்திற்கும் மேலானா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் சிலரை கொன்றும் பலரை நிர்வாணப் படுத்தி கொடுமைகள் செய்ததை பல காணொளிகளிலும் கண்டோம்  இலங்கையில் பல நூறு பெண்களின் அங்கங்களை வெட்டியும் அவளை வன்புணர்ச்சிகள் செய்தும் தம் கணவன் முன்னே கொன்னு குவித்த ராணுவ மிருகங்களும் இன்னும் உயிரோடுத்தான் இருக்கின்றார்கள்.

 மனித நலன்களுக்கு எதிராக தொடுக்கப் படுகின்ற போர்களுக்கு சர்வதேச மக்கள்கள அங்கீகாரம் கொடுப்பது ஏன் ? 

நாட்டின் எல்லைக்காக பல உயிர்களை நாம் காவு கொடுக்கின்றோம் பல இன்னல்களை பொருளாதார ரீதியாகவோ அல்லது மனக் குழப்பம் ரீதியாகவோ இழந்து வருகின்றோம் வாழப் போகும் இந்த குறுகிய வாழக்கைக்குள் இப்படிப் பட்ட போர்கள் தேவைதானா ? 

ஆண்கள் நினைத்தால் உலகில் எங்கு வேணும்னாலும் அனுகுண்டையோ அல்லது அழிவு பயங்கர ஆயுதத்தையோ பயன் படுத்தலாம் இதை தட்டி கேட்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ பெண்களுக்கு உரிமை இல்லை என்பதைப் போலவே தெரிகிறது இல்லை...இல்லை அப்படித்தான் இருக்கின்றது.

வேலையில் சம உரிமை அதிகாரத்தில் தனியுடமை இதுதான் இன்றைய ஆணாதிக்கத்தின் கொள்கையாக இருக்கின்றது. 
இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது ? 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திக்கின்றேன் அனேகமாக பதிவிட்டது உங்கள் கவனத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை எப்பொழுது உங்களுக்கு நேரம் கிடைக்கின்றதோ அப்பொழுது உங்கள் கருத்துரைகளை எடுத்துரைங்கள் திருத்திக் கொள்கிறேன் அல்லது திருந்தி கொள்கிறேன் நானும் உங்கள் தளங்களில் வந்து பல மாதங்களாகிவிட்டது இனி அடிக்கடி வருவேன் (இன்ஷால்லாஹ்)  

எல்லோருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

குழி விழுந்த என் குழந்தையின் கன்னமும்  குழியில் புதைக்க நினைக்கும் சில ஆண்களின் எண்ணமும் வழியற்று வரையற்று முடிவில்லா இப்போராட்டம்  முடியும் எப்போது ? 

ஏங்கும் இதயம் பற்றி  தூங்கும் மானிடனே உனக்கு தெரியவில்லையா  என் வலி ?         

என்றும் உங்கள் ஆதரவோடு 

 அந்நியன் 2