Saturday, August 13, 2011

(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

ஏழை பங்காளானின் ஆட்சியும் 
கோழை காங்கிரசின் காட்சியும் 
காண்பதற்கு பசுமையாக தெரிகிறது கண்களுக்கு.
வெள்ளையரிடம் சுதந்திரம் பெற்று இந்த கொள்ளையரிடம் நாட்டை கொடுத்தால்...
முல்லை பெரியார் அனை தொடங்கி
எல்லை தேசம் வரை ஊழல்
வெள்ளையரின் ஆட்சியும்
கொடுமையான காட்சியும் மாறி
64 ஆண்டு ஆகியும் நம் நாட்டின் அவலம் மாறவில்லை.
இறந்த பிறகே சிதைக்கு தீ மூட்டும் இந்நாட்டில்
பிறந்த உடனேயே பெண் சிசுவுக்கு தீ மூட்டுகிறார்கள் 
சிந்திய ரத்தமும்
தியாகிகளின் சத்தமும் 
தூக்கு கொட்டடியிலே
கழுத்து நெரிபட்டு
கைகள் முறிபட்டு
தசைகள் வடு பட்டு
கண்களும் கட்டப்பட்டு
கொல்லப் பட்ட காட்சியோ...
சொல்லி விட முடியாது.
கூடி அழ அவர் சவங்கள் கிடைக்காமலும்
தேடி எழ வீரர்கள் இல்லாமலும்
அழிக்கப்பட்டனர் தியாகிகள்
அத்தியாகளின் நினைவாகத்தான் நாம் சுதந்திரம் கொண்டாடனுமே தவிர
போலியாக இல்லை.
இந்த அவஸ்தைகளை போக்கி சுதந்திரம் கொண்டாடுங்கள்.


அவஸ்தை எண் 1: இந்திய திரு நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விவர கணக்கு தெரிவிக்கின்றதை உடனே சரி செய்து தடுத்திடும் போது...
அவஸ்தை எண் :2 ஏழை இந்தியா பணக்கார இந்தியா என இரு வேஷம் போடுகிறது நாடு,பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பதை மாற்றிட முயற்சிகள் எடுக்கும் போது...
அவஸ்தை எண் : 3 பட்டினி சாவும்,பாலியல் கொடுமையும் தீண்டாமை வன் கொடுமையும்,தீண்ட தகாத மனித ஜாதி என, மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தாலும்,நய வஞ்சக மனிதர்களை கண்டும் காணாமல் இருக்கும் இருட்டு சட்டமும்,அதனின் பாது காவலர்களும் திருந்திடும் போது...
அவஸ்தை எண் :4 வதைக்கப்படும் பெண்ணுக்காக சிதைக்கப்படும் அவள் கற்பிற்க்காக எத்தனையோ வழக்குகள் நீதி மன்றத்தில் இருந்தும் அவளின் வாழ்க்கை மண்ணில் புதைக்கபடும் தருவாயில் தீர்ப்பு அளிப்பதை நினைத்து பார்க்கும் போது...
அவஸ்தை எண் :5 இன்னும் அன்னம் இல்லை என தினம் என்னும் மனிதர்கள் பசியின்றி பசித்துண்ண வசதிகள் செய்யப் படாத நிலையிலும் அரசியல்வாதிகள் வெட்டி பேச்சை நிறுத்தி கொள்ளும் போது...
அவஸ்தை எண் :6 சரித்திர ஏட்டில் சித்திரம் வரைக்க 
சாமானிய இளைஞர்கள் முற்பட்ட போதும் வேலை இல்லா தின்டாட்டம் ஒழிக்கப் படும் போது...
அவஸ்தை எண் :7 குடியை தடுத்து குடி மகன்களை தத்தெடுத்து குற்றம் குறைவதற்கு முயற்சி எடுக்காத போதும்...
அவஸ்தை எண் :8 காவல் நிலையங்கள் கட்ட பஞ்சாயத்து நிலங்களாக மாறாமல் இருந்திடும் போதும்...
அவஸ்தை எண் :9 நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் கண்கள் அதற்கு கலங்கம் கற்பிக்கும் அரசியல் வாதிகளை தண்டிக்க மறுத்திடும் போதும்...
அவஸ்தை எண் :10 கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறுக்கப்பட்ட போதும்...

என்ன சுதந்திரம்?
(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

என்ன முட்டாள்தனமான பதிவு இதுலாம் நடக்கிற காரியமா?
ஹா..ஹா..ஹா.
எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்.
ஐயா இன்னைக்கு சுதந்திர தினம் தண்ணீர் குடிச்சது போதும்
போயி எண்ணை தேச்சு குழிச்சுட்டு வாங்கள்

எப்படியாவது அந்த ஃபைலில் கையெழுத்து போட்டிருங்கள் என்னைக்குமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஆமா...பக்கத்தில் பொம்மை மாதிரி நிற்கிறாரே யாரு?


கண்டிப்பாக நீங்கள் இலங்கை வரனும் 

உங்களுக்காக மனுசகிட்னி வருவல்

மனுசதலை பொறியல்
மனுசகுடல் சூப்பு எல்லாம் தயாரா இருக்கு.
இந்த கொடுமைகளை பார்ப்பதற்கு 
     நல்ல வேளை நான் உயிரோடு இல்லை

36 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.அய்யூப்,
  'நச்' பதிவு. செம ஹாட்..!
  கடைசி மூன்றும் (11,12,13) சற்று காமெடி என்றாலும் நிறைய அர்த்தம் இருக்கின்றன.

  ReplyDelete
 2. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.அய்யூப்

  அர்த்தமுள்ள பதிவு. வாழ்த்துக்கள்!

  உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.
  பதில் தரவும்.

  ReplyDelete
 4. ஈழ மக்களின் அவலத்துக்குக் காரணமான காங்கிரஸ் ஆட்சிய வுட்டுட்டீங்களே?சுதந்திர தின நல வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. //என்ன சுதந்திரம்?//
  அதுதானே?:)..
  சுதந்திர தின வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. //எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்.//

  என்ன சொல்லப்போறீங்க? :).

  // நல்ல வேளை நான் உயிரோடு இல்லை.//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
 7. //மு.ஜபருல்லாஹ் said...
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.அய்யூப்

  அர்த்தமுள்ள பதிவு. வாழ்த்துக்கள்!

  உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.
  பதில் தரவும்.//

  வ அலைக்கும் வஸ்ஸ்லாம் அண்ணே.
  நீங்கள் அனுப்பிய தபால் கிடைக்க பெற்றேன் உங்களின் அட்வைஸ் படி வரிகளை மாற்றி அமைத்துள்ளேன் நன்றிண்ணே.

  ReplyDelete
 8. //Yoga.s.FR said...
  ஈழ மக்களின் அவலத்துக்குக் காரணமான காங்கிரஸ் ஆட்சிய வுட்டுட்டீங்களே?சுதந்திர தின நல வாழ்த்துக்கள்!//

  பதிவின் தலைப்பே அவர்கள்தானே தலை.

  காங்கிரஸின் ஃபோட்டோ கிடைக்க வில்லை அதான் போட முடியவில்லை
  நண்பர் சவுக்கு தளத்தில் இந்த ஃபோட்டோ கிடைத்தது அப்படியே சுட்டுட்டு வந்தாச்சு மனுசன் பார்த்தார் என்றால் என்ன செய்யப் போகிறாரோ.

  ReplyDelete
 9. //athira said...
  //என்ன சுதந்திரம்?//
  அதுதானே?:)..
  சுதந்திர தின வாழ்த்துக்கள்....//

  வாங்கள் சிஸ்ட்டர்.

  உங்களுக்கும் சுதந்தி...தீ..தீ...தீ..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. //athira said...
  //எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்.//

  என்ன சொல்லப்போறீங்க? :).

  // நல்ல வேளை நான் உயிரோடு இல்லை.//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

  நான் என்ன சொல்லப் போறேன் விஜய காந்திடம்தான் கேட்கனும்.

  உங்கள் வருகைக்கும் கருதிற்கும் நன்றி சகோ.

  எனக்கு கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்..இர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுஉஉஉஉஉஉனு தெரியாது சகோ.

  ReplyDelete
 11. The BJP is the only way to through out the congress...so please join the bjp national force...lets join hands with BJP will boycott the congress......

  ReplyDelete
 12. என்ன சுதந்திரம்? அதான்னே?

  ReplyDelete
 13. //இறந்த பிறகே சிதைக்கு தீ மூட்டும் இந்நாட்டில்
  பிறந்த உடனேயே பெண் சிசுவுக்கு தீ மூட்டுகிறார்கள் //
  :(

  ReplyDelete
 14. தாத்தா பண்ற கொடுமைய பாக்காம இந்த தாத்தா தப்பிட்டுட்டார் :)

  ReplyDelete
 15. போட்டோ கமெண்ட் காமெடி நச்

  ReplyDelete
 16. //youthforce said...
  The BJP is the only way to through out the congress...so please join the bjp national force...lets join hands with BJP will boycott the congress......//

  Welcome Brother we are doing our best but i'have heard lot about BJP. God knows

  Thank you very much for your valuable comment and visit here.

  ReplyDelete
 17. //Lakshmi said...
  என்ன சுதந்திரம்? அதான்னே?//

  இதாம்மா...சுதந்திரம்.

  வருகைக்கும் கருதிற்கும் நன்றி

  ReplyDelete
 18. //ஆமினா said...
  தாத்தா பண்ற கொடுமைய பாக்காம இந்த தாத்தா தப்பிட்டுட்டார் :)//

  வாங்கோ சகோ

  எந்த தாத்தானு விவரமாக சொன்னால் நல்லா இருக்கும்.

  ReplyDelete
 19. //ஆமினா said...
  போட்டோ கமெண்ட் காமெடி நச்...//

  அச்..சு..

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 20. என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. //Reverie said...
  என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...//

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 22. சோகத்தையும், மனித உருவில் இருக்கும் மிருகங்களையும் மிகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தீர்கள். நல்ல பதிவு.

  ReplyDelete
 23. //சத்யா said...
  சோகத்தையும், மனித உருவில் இருக்கும் மிருகங்களையும் மிகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தீர்கள். நல்ல பதிவு.//


  இது போன்ற அரசியல் தலைவர்களை கொடூரமாக எழுதிட ஆசைதான் ஆனால் எழுத்து சுதந்திரம்னு சொல்லி பிரச்சினைகள் வந்திட கூடாது பாருங்கள் அதற்காத்தான் இத்தோடு விட்டேன்.

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 24. ஆஹா காமெடியாக சொல்லியிருந்தாலும் அரசியலை அசத்தலா சொல்லியுள்ளீர்கள்.. பட்ங்களையும், அதற்கான வரிகளயும் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது... கடைசியில் காந்திஜியின் நினைவு நச்... கலக்கல் நண்பா

  ReplyDelete
 25. //மாய உலகம் said...
  ஆஹா காமெடியாக சொல்லியிருந்தாலும் அரசியலை அசத்தலா சொல்லியுள்ளீர்கள்.. பட்ங்களையும், அதற்கான வரிகளயும் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது... கடைசியில் காந்திஜியின் நினைவு நச்... கலக்கல் நண்பா//

  என்ன செய்ய நண்பா...
  நம்ம தலை எழுத்தை சீரியஸாக எழுதியால் படிக்கிறதிற்கு விருந்தினர் வர மறுக்கிறார்கள் அதான் இடை இடையே கொஞ்சம் காமெடியும் சேர்க்க வேண்டி இருக்கு.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 26. சிரிப்பதா அழுவதா...
  கடைசி படம் நெஞ்சை குத்துகிறது.

  ReplyDelete
 27. //பாலா said...
  சிரிப்பதா அழுவதா...
  கடைசி படம் நெஞ்சை குத்துகிறது.//

  சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.
  அழுபவர்கள் இதை மறக்கட்டும்

  கொடுமை..ஜனநாயக நாட்டில்தான் இது போல காட்சியினை காண முடியும் சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  தாமத பின்னுட்டத்திற்கு வருந்துகிறேன்

  அருமையான அழகான உங்க ஸ்டைலில் வந்து விழுந்த பதிவு நல்லாயிருக்கு சகோ.

  //கண்டிப்பாக நீங்கள் இலங்கை வரனும்

  உங்களுக்காக மனுசகிட்னி வருவல்
  மனுசதலை பொறியல்
  மனுசகுடல் சூப்பு எல்லாம் தயாரா இருக்கு.//

  ஒரு கைகுலுக்கலின் கதை
  படம் சொல்லும் சேதி
  சிரிப்பிற்குள் இருக்கும் குரூரம்

  ”ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும்,ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்”
  (அல்குர்ஆன் 5:32)

  ReplyDelete
 30. வேதனைகள் நிறைந்த பதிவு நண்பரே இதெல்லாம் நடக்கக் கூடியதா என்று கேட்பவரிடம் சொல்லுங்கள் நடக்கும் என்று பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 31. //ஹைதர் அலி said...
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  தாமத பின்னுட்டத்திற்கு வருந்துகிறேன்

  அருமையான அழகான உங்க ஸ்டைலில் வந்து விழுந்த பதிவு நல்லாயிருக்கு சகோ.//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஹைதர்.

  நீங்கள் தாமதமாக வந்தாலும் அறிய பொக்கிஷமாம் அல் குரானின் உதாரணத்தோடு வந்துள்ளிர்கள்.

  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 32. //M.R said...
  வேதனைகள் நிறைந்த பதிவு நண்பரே இதெல்லாம் நடக்கக் கூடியதா என்று கேட்பவரிடம் சொல்லுங்கள் நடக்கும் என்று பகிர்வுக்கு நன்றி நண்பரே//

  கண்டிப்பாக எத்தி வைப்போம் நண்பரே!

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. முதல் நான்கு படங்கள் ரொம்ப கொடுமையாக இருக்கு.

  //எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்//
  அதான் குடிச்சாச்சே அப்பர என்ன சொல்ல போறார் ஒரு அண்டா வீட்டுக்கு பார்சலுன்னா?

  ReplyDelete
 35. காந்தி தாத்தா பட்த்தின் கீழ் , உண்மையான வார்த்த்தை

  ReplyDelete
 36. //aleela Kamal said...
  காந்தி தாத்தா பட்த்தின் கீழ் , உண்மையான வார்த்த்தை//

  ஜனநாயக நாட்டில்தான் இது போல காட்சியினை காண முடியும் சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete