Saturday, May 14, 2011

இலவசம்..இலவசம்..அரசியல்வாதிகள் திறுந்துவது எப்போது?


திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது நிச்சயம் மிகையாகாது.
வடிவேலு பேசியது சாதாரணப் பேச்சா ?
 நான்கு சுவர்களுக்குள் கூட யாரும் இப்படி நாராசமாக பேச மாட்டார்கள். விஜயகாந்த்தை அவர் பொது இடங்களில் வாய் வலிக்க விமர்சித்துப் பேசியது நிச்சயம், தேமுதிகவுக்கு அனுதாப ஓட்டுக்களாகப் போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
திமுக ஆட்சியின் நிறைகளை பற்றி மட்டுமே வடிவேலு பேசியிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. ஆனால் விஜயகாந்த்தை அவன் இவன் என்றும், லூசுப் பயல் என்றும், கேஸு என்றும், பீஸு என்றும், குடிகாரன் என்றும் தாறுமாறாக வடிவேலு பேசியது பொதுமக்களிடையே விஜயகாந்த் மீதான ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும் வடிவேலுவின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் விஜயகாந்த்தும் சரி, தேமுதிகவினரும் சரி பொருட்படுத்தவே இல்லை. இது திமுகவுக்கு சற்று அதிர்ச்சிதான். காரணம், வடிவேலு ஏதாவது பேசி, அதற்கு தேமுகவினர் பதிலடி கொடுத்தால் அது எந்தவிதத்திலாவது தங்களுக்கு சாதகமாக மாறாதா என்ற எண்ணம் திமுகவிடம் இருந்தது.

ஆனால் விஜயகாந்தோ வடிவேலு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, தன் மீது விழுந்த வசவுகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து திமுக அரசின் குறைகளைப் பற்றி மட்டுமே மக்களிடம் ஹைலைட் செய்து பேசி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

நடிகர்களை முன் நிறுத்தி ஒவ்வொரு அரசியல் வாதியும் பயனடைந்தாலும் பாதிக்கப் படுபவர் பொது மக்கள்கள்தான்.


இன்று இலவசமாக வாரி வழங்கும் சழுகைகள் நாளைய தலை முறையினருக்கு சேர்க்கப் பட்ட கடன் என்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்திருக்கனும்.
இலவசமாக எது கிடைத்தாலும் வாங்கித் தின்னும் தமிழ்கூட்டம் கொஞ்சம் பக்கத்து மாநிலமான கேரளாவையும் "கண்"கொண்டு பார்க்கனும்.
ஒரு லட்சம் கோடி ரூபைக்கு மேலே கடன் பட்டிருக்கும் தமிழக அரசு அக்கடனை அடைப்பது எப்பொழுது ?
சுமத்தப்பட்ட கடனுக்கு தமிழக அரசு வருடந்தோரும் பத்தாயிரம் கோடி "வட்டி"என்னும் கொடிய வைரசை உலக வங்கிற்க்கு கட்டிக் கொண்டு இருக்கின்றது,இந்நிலமையில் இருக்கும் நாம்,இலவசமாக எதையும் கொடுக்கலாமா? 
மூளை இல்லாத அரசியல் வாதி சொல்கிறான் என்பதர்க்காக ஆறறிவு படைத்த படைத்த நாம் ஏன் சிந்திப்பது இல்லை ?


நாட்டின் கடன் என்றாலும், அது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான கடன்தான் என்பதை நாம் யாரும் இன்னும் உணரவில்லை. அப்படி உணர்ந்தால் இலவசங்களைத் தேடி ஓடமாட்டோம்.
இனிமேலாவது ஓடாது இருப்போம்.


செல்வி ஜெயலலிதா செய்ய வேண்டியது என்ன?
முதலில் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும்.
தமிழக அரசு கடனை உடனே திரும்பி அடைக்க வேண்டும்.
இலவச மின்சாரம் மூலம் கொள்ளை அடிக்கும் நாட்டாமைகளை"களை" எடுக்க வேண்டும்.
தமிழக முழுவதும் ஏழைகளுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சழுகைகளை கிடைக்க செய்ய வேண்டும்.
இன்னும் ஏகப்பட்ட கோரிக்கைகள் இருக்கின்றது முதலில் இதை செய்யட்டும். 
மின்சாரம் தங்குதடையின்றி கிடைத்தால்தான் ஒரு மாநிலம் தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகையால் மின்சார தங்கு தடையின்றி கிடைக்க இணை ஆலைகள் திறக்கப் படவேண்டும்.
கடந்த தீமுக்க ஆட்சியில் இலவச தொலைக் காட்சி வழங்கியதற்க்காக ஆகிய செலவு அய்யாயிரம் கோடி ரூபாயாம் இந்தப் பணம் நாட்டு மக்கள் நலனிற்கோ, அல்லது நதி நீர் இனைப்பிற்க்கோ உபயோகப் படுத்தி இருந்தால்,கேரளாவின் உதவி நமக்கு தேவை பட்டிருக்காது.


இன்னொரு விஷயம் மின்சார வாரியம் சுமார் 35,000 கோடி ரூபாய் வரையில் கடனில் இயங்குகிறதாம். அதை நிமிர்த்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அப்படி இருக்கும்போது மின் உற்பத்தி எப்படி நடக்கும்? இந்த லட்சணத்தில் இலவச மின்சாரம் தேவையா ?


உண்மையான ஏழைகளுக்கு சென்றடைந்தால் நமக்கு சந்தோசமே ஆனால் பயன் அடைவது பெரும் பணக்காரர்கள் என்று எல்லோருக்கும் தெறியும்.
இனியாவது ஆட்சியாளர்கள் கவனமாக ஆட்சி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன்....


அந்நியன் 2