Sunday, September 11, 2011

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
$$$$$$$$$$$$$$$$$$$$
பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா 
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????
$$$$$$$$$$$$$$$$$$$$
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"
$$$$$$$$$$$$$$$$$$$$$
"என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே?"
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."
$$$$$$$$$$$$$$$$$$$$$
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$
"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ" போட்டாங்க...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நர்ஸ்:ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க...
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? 
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
நீதிபதி:ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி:என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே? வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மெயில் அனுப்பி தந்த நண்பர்களுக்கு நன்றி.


59 comments:

 1. ஆஹா நிலாவிலயும் போயி வடை சுட ஆரம்பிச்சுட்டாங்களா. சூப்பர்

  ReplyDelete
 2. //மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
  கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
  மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
  கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
  மனைவி:-????????//

  ஹா..ஹா...ஹா..ஹா... ஹா..ஹா... :-)))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 3. பறட்டை அரங்கம் நக்கலோ நக்கல் ஹா..ஹா.. :-)))

  ReplyDelete
 4. ஆஹா... அனைத்து காமெடிகளும் சூப்பர் சகோ... மெதுவா காதலை சொன்ன காமெடி கலக்கல்..குபீர் என சிரிப்பு வந்தது.... வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 5. சகோ... கீழே போட்டோவில் இருப்பது நீங்கள் தானா?

  ReplyDelete
 6. ஜோக்ஸ் எல்லாமே சூப்பர் அந்த பூசார் எல்லாருமே சூப்பரோ சூப்பர் .

  ReplyDelete
 7. ஜோக்ஸ்,குறிப்பாக பரட்டை அரங்கம் சூப்பர்,:)))))))))

  ReplyDelete
 8. ஓ போட்ட மேட்டர் கலக்கல்

  ReplyDelete
 9. //Lakshmi said...
  ஆஹா நிலாவிலயும் போயி வடை சுட ஆரம்பிச்சுட்டாங்களா. சூப்பர்//

  வாங்கம்மா.

  நம்மாளு நிலவிலே மட்டும் இல்லை சூரியனிலியும் வடை சுட்டு விடுவார்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.

  ReplyDelete
 10. //Riyas said...
  Ha ha Superb Jokes well//

  வாங்க ரியாஸ் பாய்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 11. //ஜெய்லானி said...

  ஹா..ஹா...ஹா..ஹா... ஹா..ஹா... :-)))))))))))))))))))))))))))))))))))))//

  //பறட்டை அரங்கம் நக்கலோ நக்கல் ஹா..ஹா.. :-)))//

  வாங்க ஜெய்லாணி பாய்.

  வருகைக்கும் கருத்திற்கும் மற்றும் சிரித்தமைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 12. //மாய உலகம் said...
  ஆஹா... அனைத்து காமெடிகளும் சூப்பர் சகோ... மெதுவா காதலை சொன்ன காமெடி கலக்கல்..குபீர் என சிரிப்பு வந்தது.... வாழ்த்துக்கள் சகோ
  September 11, 2011 6:50 AM //

  வாங்க ராஜேஷ் சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் மற்றும் சிரித்தமைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 13. //மாய உலகம் said...
  தமிழ் மணம் 2//

  சகோ... கீழே போட்டோவில் இருப்பது நீங்கள் தானா?//

  ஓட்டு போட்டமைக்கு நன்றி சகோ.

  அய்யோயோ..அது நான் இல்லை கருணாநிதியும் ஒபாமாவும்.

  ஏற்றம் அடியில் இரட்டை வேடத்தில் அப்பாவி போல இருப்பதுதான் நான்.

  ReplyDelete
 14. //angelin said...
  ஜோக்ஸ் எல்லாமே சூப்பர் அந்த பூசார் எல்லாருமே சூப்பரோ சூப்பர் .//


  வாங்க ஏஞ்சலின்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  கை வசம் நிறைய பூசார் இருக்கிறார்.

  ReplyDelete
 15. //R.Elan. said...
  ஜோக்ஸ்,குறிப்பாக பரட்டை அரங்கம் சூப்பர்,:)))))))))//


  வாங்க சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
  நானும் இந்த பறட்டை அரங்கத்தை ஒரு பத்து தடவையாவது பார்த்திருப்பேன் நல்ல காமெடி.

  ReplyDelete
 16. //ஆமினா said...
  ஓ போட்ட மேட்டர் கலக்கல்//

  வாங்க சகோ.

  எப்படியெல்லாம் யோசிக்கிறானுக?
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 17. ஹா...ஹா...ஹா... சிரிச்சு முடியுதில்லை:)).

  சந்திரனில வடை சுடுவதைத்தான் நம்ப முடியேல்லை:)), இனி ஆரியபவான் வாணாம்... சந்திரமண்டலத்துக்கே ஓடர் கொடுக்கப்போகிறேன்:)).

  ReplyDelete
 18. ஷோஃபாவில ஒய்யாரமாக இருந்து கோக் குடிக்கும் பூஸார்.... கலக்கலோ கலக்கல்.

  அதென்ன ஸூசில செத்த எலி மணத்ததாமோ? பூஸார் மயங்கிட்டாரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும், அது ஆருடைய ஸூ?:))))))).

  ReplyDelete
 19. மனைவியை வைத்துக்கொண்டு, பெண் பார்க்கப் போனாராமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அப்பூடியெண்டால் மயங்கித்தான் விழவேணும்:))).

  அனைத்துப் பகிடிகளும் சூப்பர், ரசித்தேன்.

  ReplyDelete
 20. கலக்கீட்டீங்க அயுப்...மெதுவா காதலை சொன்ன காமெடி கலக்கல்...ரெவெரி

  ReplyDelete
 21. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. எல்லாமே புதுசாவும் சூப்பராவும் இருக்கு பாஸ்.. நம்மாளுங்க கிட்ட காமெடிக்கு மட்டும் பஞ்சமே வராது போலிருக்கு..

  ReplyDelete
 23. குளிர்ல கை நடுங்குது, அதனால் ஒழுங்க டைப் அடிக்க முடியலன்னு பின்னூட்டம் போட முடியுமோ - டவுட் கோவாலு..

  ReplyDelete
 24. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் அய்யூப்,

  மாஷா அல்லாஹ்...

  சூப்பர் ஜோக்ஸ்...எப்படித்தான் யோசிக்குராங்களோ!!!!!!!!!!

  பகிர்வுக்கு நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 25. ஜோக்ஸ் சூப்பர்

  தமிழ்மனம் 10

  ReplyDelete
 26. நல்ல நகைச்சுவைத் தொகுப்பு..

  ReplyDelete
 27. ஹா ஹா
  ஒரே ஹி ஹி சிப்பு சிப்பா வருது,.
  எங்கிருந்து தான் புட்சாங்களோ..

  இரண்டு முறை வந்து படிச்சாச்சு
  கமெண்ட் போட முடியாம போய் இது முன்றாம் முறை
  அந்த பூஸாராலே சிரிப்ப அடக்கமுடியல

  ReplyDelete
 28. குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
  "ஏன்?"
  "ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"

  ஹிஹி

  ReplyDelete
 29. பொருத்தமான போட்டோஸ் கலக்கலோ கலக்கல்

  ReplyDelete
 30. ஜோக்குகள் நன்றாக உள்ளன. மதுரை முத்துவை நினைவு படுத்துகின்றன...

  ReplyDelete
 31. ///Aashiq Ahamed said...

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் அய்யூப்,

  மாஷா அல்லாஹ்...

  சூப்பர் ஜோக்ஸ்...எப்படித்தான் யோசிக்குராங்களோ!!!!!!!!!!

  பகிர்வுக்கு நன்றி...///

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  இன்று சென்னையிலும்,பாண்டிச்சேரியிலும்
  பயங்கரமாக மழை வரப்போவுது.
  கமெண்ட் போடும் போதே சாரல் விழுந்து விட்டன.

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. எல்லா சகோதர சகோதரிகளுக்கும் மதியம் வந்து நன்றி சொல்கிறேன் (நெட் வொர்க் எர்ரர்)நேற்றிலிருந்து.

  ReplyDelete
 34. அனைத்து ஜோக்குகளுமெ பொறுக்கி எடுத்து கவனமாக தேர்ந்தெடுக்கப்படவை போன்றதொரு தரமான ஜோக்குகள் மிகவும் ரசித்து சிரித்தேன்.

  ReplyDelete
 35. //athira said...
  ஹா...ஹா...ஹா... சிரிச்சு முடியுதில்லை:)).

  சந்திரனில வடை சுடுவதைத்தான் நம்ப முடியேல்லை:)), இனி ஆரியபவான் வாணாம்... சந்திரமண்டலத்துக்கே ஓடர் கொடுக்கப்போகிறேன்:)).//

  வாங்க சகோ.

  சந்திர மண்டலத்து வடைன்னா சும்மாவா?
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 36. //athira said...
  ஷோஃபாவில ஒய்யாரமாக இருந்து கோக் குடிக்கும் பூஸார்.... கலக்கலோ கலக்கல்.

  அதென்ன ஸூசில செத்த எலி மணத்ததாமோ? பூஸார் மயங்கிட்டாரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும், அது ஆருடைய ஸூ?:))))))).//


  அப்படியா...பூசார் என்றால் உங்களுக்கு பிரியம்தானே?

  அது YAARUDAIYA ஷுவுன்னு எனக்கு தெரியாது சகோ பூனை என்ன செத்தா போச்சு?

  எழுந்திருக்கட்டும் கேட்டு சொல்றேன்.

  ReplyDelete
 37. //athira said...
  மனைவியை வைத்துக்கொண்டு, பெண் பார்க்கப் போனாராமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அப்பூடியெண்டால் மயங்கித்தான் விழவேணும்:))).

  அனைத்துப் பகிடிகளும் சூப்பர், ரசித்தேன்.//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 38. //Philosophy Prabhakaran said...
  ரசித்தேன்...//

  வாங்க பாஸ்.
  வருகைக்கும் ரசித்தததிற்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 39. //id said...
  கலக்கீட்டீங்க அயுப்...மெதுவா காதலை சொன்ன காமெடி கலக்கல்...ரெவெரி//

  வருக வருக சகோ ரெவரி.

  வருகைக்கும் சிரித்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 40. //ஆயிஷா அபுல். said...
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 41. //ஆயிஷா அபுல். said...
  தமிழ்மணம் ஓட்டு 7//

  கண்டிப்பா திருப்பி தந்துட்றேன் சகோ.

  ReplyDelete
 42. //விக்கியுலகம் said...
  சூப்பருங்கோ!//

  யாருங்கோ அது....

  அட... மாப்பிள்ளையா நன்றி மாப்பிளே.

  ReplyDelete
 43. //Mohamed Faaique said...
  எல்லாமே புதுசாவும் சூப்பராவும் இருக்கு பாஸ்.. நம்மாளுங்க கிட்ட காமெடிக்கு மட்டும் பஞ்சமே வராது போலிருக்கு..//

  ஆமா பாஸ் இந்த காமெடியை எனக்கு அனுப்பிய பயவுள்ளைக பெயரையும் சொல்லிட்றேன் பாஸ்.

  சிவகங்கை சிங்கமும் ராம்நாடு ---- ம் பாஸ்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 44. //suryajeeva said...
  குளிர்ல கை நடுங்குது, அதனால் ஒழுங்க டைப் அடிக்க முடியலன்னு பின்னூட்டம் போட முடியுமோ - டவுட் கோவாலு..//

  என்ன பாஸ் இப்போ வெயில் காலம்ங்கிறதை மறந்துட்டிங்கலோ?

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 45. //Aashiq Ahamed said...
  அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் அய்யூப்,

  மாஷா அல்லாஹ்...

  சூப்பர் ஜோக்ஸ்...எப்படித்தான் யோசிக்குராங்களோ!!!!!!!!!!

  பகிர்வுக்கு நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் //


  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

  நல்ல ஜோக்குகள்தான் இதனை அனுப்பி தந்த என் நண்பர்களுக்கு நன்றி பயபுள்ளைக எங்காவது சுட்டு அனுப்பியிருக்குமோனு பயந்து வேர கிடக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடி வரலை... பார்ப்போம்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 46. //Raazi said...
  ஜோக்ஸ் சூப்பர்

  தமிழ்மனம் 10//


  நன்றி சகோ ராசி.

  வருகைக்கும் உங்கள் வாக்களிப்பிற்கும் எனது பங்கு நிச்சயம் உண்டு பாஸ்.

  ReplyDelete
 47. //முனைவர்.இரா.குணசீலன் said...
  நல்ல நகைச்சுவைத் தொகுப்பு..//

  முனைவர் அவர்களே வருக வருக.

  இதனைப் படித்து சிரித்தமைக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 48. //Jaleela Kamal said...
  ஹா ஹா
  ஒரே ஹி ஹி சிப்பு சிப்பா வருது,.
  எங்கிருந்து தான் புட்சாங்களோ..

  இரண்டு முறை வந்து படிச்சாச்சு
  கமெண்ட் போட முடியாம போய் இது முன்றாம் முறை
  அந்த பூஸாராலே சிரிப்ப அடக்கமுடியல//


  அப்படியா சகோ....

  ரொம்பத்தான் சிக்கியிரிங்கோ உங்கள் இரண்டு தடவை வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ.

  ReplyDelete
 49. //Jaleela Kamal said...
  குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
  "ஏன்?"
  "ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"

  ஹிஹி//

  அட மறுபடியுமா?

  சிரித்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 50. //Jaleela Kamal said...
  பொருத்தமான போட்டோஸ் கலக்கலோ கலக்கல்//

  எந்த பயபுள்ளை பிடிச்ச ஃபோட்டோவோ?

  இன்னும் பொழுது விடியலைனு நினைக்கிறேன் உரிமை கொண்டாடி யாரும் இன்னும் வரலை.

  ரொம்ப நன்றி சகோ.

  ReplyDelete
 51. //பாலா said...
  ஜோக்குகள் நன்றாக உள்ளன. மதுரை முத்துவை நினைவு படுத்துகின்றன...//

  வாங்க பாலா சார்.

  மதுரை முத்துனாலே நல்ல ஜோக்குகள்தான் ஞாபகத்திற்கு வரும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 52. //ஆயிஷா அபுல். said...
  ///Aashiq Ahamed said...

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரர் அய்யூப்,

  மாஷா அல்லாஹ்...

  சூப்பர் ஜோக்ஸ்...எப்படித்தான் யோசிக்குராங்களோ!!!!!!!!!!

  பகிர்வுக்கு நன்றி...///

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  இன்று சென்னையிலும்,பாண்டிச்சேரியிலும்
  பயங்கரமாக மழை வரப்போவுது.
  கமெண்ட் போடும் போதே சாரல் விழுந்து விட்டன.//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

  ரொம்ப நன்றி சகோ.

  ஜோக்கை படித்து கொண்டே மழையில் நனைந்து விடாதிர்கள் என்பது சகோதரனின் கட்டளை.

  கருத்திற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 53. //ஸாதிகா said...
  அனைத்து ஜோக்குகளுமெ பொறுக்கி எடுத்து கவனமாக தேர்ந்தெடுக்கப்படவை போன்றதொரு தரமான ஜோக்குகள் மிகவும் ரசித்து சிரித்தேன்.//


  அட இது யாரு?

  வள்ளல் சீதக்காதியின் வம்ச வழியாச்சே?
  வாங்க..வாங்க.
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 54. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

  வாழ்த்துக்கள்

  ReplyDelete