Friday, September 16, 2011

என்னது...மீண்டும் சிரிப்பா? jokes


மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.அப்புறம் என்ன சிரிக்க வேண்டியதுதானே.ஆசிரியர்; நான் வரும்போது ஏன் சிரிக்கிறீர்கள்?
மாணவர்கள்; துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க.
ஆசிரியர்;தண்ணீரில் வாழும் மூன்று உயிரினங்கள் சொல்லு
மாணவன்; மீன்,முதலை,எங்க அப்பா.
நோயாளி: டாக்டர் இதுக்கு மேலே என் வாயை திறந்தால் வாய் வலிக்கிறது.
டாக்டர்: யோவ்... நான் திறக்க சொன்னது வாயை இல்லை உன் மணி பர்ஷை.
---------------
கபாலிக்கு அந்த இன்ஸ்பெக்டர் சல்யூட் அடிக்கிறாரே எதுக்கு?
மாமூல் கொடுக்கிற பட்டியல்ல 30 வருஷமா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறானாம்.
-------------
ஒருவர்:என் மனைவியை இன்னிக்குத்தான் பயங்கரமா திட்டினேன்.
மற்றொருவர்: நீ திட்டுற வரைக்கும் உன் மனைவி சும்மாவா இருந்தாங்க?
ஒருவர் : இல்லை அவ நல்லா தூங்கிட்டு இருந்தா.
கணவன்: சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
---------------
கபாலி: ஹலோ! சுந்தரா ஜவுளிக்கடையா?
ஓனர் : ஆமாங்க நீங்கள் யாரு பேசுறது?
கபாலி: நான் சைதாப்பேட்டை கபாலி பேசுறேன் ராத்திரி உங்க கடைக்கு வந்திருந்தேன் நல்ல டிஷைன் புடவைகள் இல்லை எப்போ வரும்னு சொல்ல முடியுமா சார்?
ஓனர்: !!!
---------------
நோயாளி: டாக்டர் எனக்கு இப்போ ஆப்ரேசன் பன்ன வேண்டாம் எனக்கு டைம் நல்லா இல்லைனு ஜோசியகாரர் சொல்லி இருக்கார்.
டாக்டர்: அதே ஜோசியகாரன்தாய்யா டைம் நல்லா இருக்கு நீங்கள் ஆப்ரேஷன் பன்னலாம் என்று என்னிடம் சொல்லி இருக்கார்.
நர்ஸ்: டாக்டர்..டாக்டர் ஸ்கேன் மெசினை கானோம்!!
டாக்டர்: அய்யோயோ...கபாலிகிட்டே ஸ்கேன் எடுக்கனும் சொன்னதை தப்பா புறிஞ்சுக்கிட்டு ஸ்கேன் மெசினை தூக்கிட்டு போயிட்டானே.
----------------
நோயாளி: நாய் துரத்துற மாதுரியே கனவு வருது டாக்டர்.
டாக்டர்: அப்படியா மூணு நாலு கல்லை வைத்துக் கொண்டு தூங்கு நாய் துரத்தாது.

36 comments:

 1. பட்டாய கிளப்புது போங்க!
  ஆமாங்க முக்கியமா இந்த சாக்ஸ தொவைக்காம போடுறவங்கள வன்மையா தண்டிக்கணும்!கப்பு தாங்கல!

  ReplyDelete
 2. மிஸ்டர் பீன் கையில் வண்டு முருகன் கலக்கல் காமெடி படம் .

  ReplyDelete
 3. //கணவன்: சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே?
  மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.//

  எனக்கென்னமோ கணவரை ஏமாற்ற வச்ச மாதிரி தெரியுது

  ReplyDelete
 4. யோவ் கோகுல் என்னை திட்டாதய்யா...

  ReplyDelete
 5. சலாம் சகோ அய்யூப்,
  சிரிப்பு வரவழைத்த நல்ல ஜோக்ஸ்.
  அப்புறம்... ஜோக்ஸ் க்கு நடுவே எதற்கு வெள்ளம் சூழ்ந்த ஒரு சோகமான போட்டோ..? புரியலை.

  ReplyDelete
 6. //Mohamed Faaique said...
  kalakkal.. all new jokes//

  வருகைக்கும் உங்கள் கருத்திற்க்கும் நன்றி முஹம்மது.

  ReplyDelete
 7. //கோகுல் said...
  பட்டாய கிளப்புது போங்க!
  ஆமாங்க முக்கியமா இந்த சாக்ஸ தொவைக்காம போடுறவங்கள வன்மையா தண்டிக்கணும்!கப்பு தாங்கல!//

  ஹா..ஹா..பிரபா...உங்களை கூப்பிடுகிறார்.

  வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 8. //angelin said...
  //கணவன்: சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே?
  மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.//

  எனக்கென்னமோ கணவரை ஏமாற்ற வச்ச மாதிரி தெரியுது//

  எல்லாம் அனுபவம் மாதிரி தெரியுதே சகோ.

  வருகைக்கும் உங்கள் கருத்திற்க்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 9. //Philosophy Prabhakaran said...
  யோவ் கோகுல் என்னை திட்டாதய்யா...//


  பாஸ்...சும்மா இருங்க.

  கோகுல் எல்லாம் நல்லதுக்குத்தான் சொல்றார் கேட்டு நடங்கள்.

  சாக்ஸை தொவைக்கிறதுலாம் ஒரு வேலையா?

  ReplyDelete
 10. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...
  சலாம் சகோ அய்யூப்,
  சிரிப்பு வரவழைத்த நல்ல ஜோக்ஸ்.
  அப்புறம்... ஜோக்ஸ் க்கு நடுவே எதற்கு வெள்ளம் சூழ்ந்த ஒரு சோகமான போட்டோ..? புரியலை.///

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

  எல்லாமே காமெடி படங்கள்தான் வெள்ளம் புகுந்தது கூட தெரியாமல் ஷேவிங் பன்னுகிறவரைப் பாருங்கள்.

  வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 11. நகைச்சுவைகள் அனைத்தும் அருமை . அதிலும் புகைப்படங்கள் மிகவும் அதிக சிரிப்பை ஏற்ப்படுத்துகிறது

  ReplyDelete
 12. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு சொல்வாங்க. ஜோக் படங்கள் எல்லாமே வாய் விட்டு சிரிக்க வச்சது. நன்றி

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  எல்லாம் சூப்பர் ஜோக்ஸ்.

  சகோ ஒரே சிரிப்பு பதிவா இருக்கே. எங்கிருந்து சுருட்டுறீங்க ஸாரி எடுக்கிறீங்க. நமக்கும் அந்த லிங்க கொடுங்க சகோ.இந்த ரகசியம் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்.

  ReplyDelete
 14. தமிழ்மணம் ஒட்டு 6

  ReplyDelete
 15. //வைரை சதிஷ் said...
  பாஸ் கலக்கிட்டீங்க

  நேரடி ரிப்போர்ட்//

  வருகைக்கும் அந்நியனின் தளத்தில் இணைந்தமைக்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 16. //! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
  நகைச்சுவைகள் அனைத்தும் அருமை . அதிலும் புகைப்படங்கள் மிகவும் அதிக சிரிப்பை ஏற்ப்படுத்துகிறது//

  வாங்க சார்.
  வருகைக்கும் உங்கள் கருத்திற்க்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 17. //Lakshmi said...
  வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு சொல்வாங்க. ஜோக் படங்கள் எல்லாமே வாய் விட்டு சிரிக்க வச்சது. நன்றி//

  சிரித்தமைக்கு நன்றிமா.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 18. //ஆயிஷா said...
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  எல்லாம் சூப்பர் ஜோக்ஸ்.

  சகோ ஒரே சிரிப்பு பதிவா இருக்கே. எங்கிருந்து சுருட்டுறீங்க ஸாரி எடுக்கிறீங்க. நமக்கும் அந்த லிங்க கொடுங்க சகோ.இந்த ரகசியம் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்.//


  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

  எனக்கு சுருட்டலாம் தெரியாது சகோ நண்பர்கள் மெயிலில் அனுப்பி வைப்பார்கள்.

  சில ஜோக்குகள் வடிவேலு படம் பார்த்ததில் சில காட்சிகள் மோடிஃபை செய்யப்பட்டு எழுதுவேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 19. //ஆயிஷா said...
  தமிழ்மணம் ஒட்டு 6//

  நன்றி சகோ.

  ReplyDelete
 20. கலக்கல் ஜோக்ஸ்.அப்புறம் டீக்கடையில் ஒசியில் பேப்பர் படிக்க கூடாதா சகோ? அவ்வ்வ்வ்!!!!

  ReplyDelete
 21. //R.Elan. said...
  கலக்கல் ஜோக்ஸ்.அப்புறம் டீக்கடையில் ஒசியில் பேப்பர் படிக்க கூடாதா சகோ? அவ்வ்வ்வ்!!!!//

  வாங்கோ..சகோ.

  சும்மா காமெடிக்குத்தானே இதுலாம் தமிழ் நாட்டில் 3 கோடி மக்கள் டீக்கடையில்தானே பேப்பர் படிக்கின்றார்கள்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 22. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
  http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

  ReplyDelete
 23. //ஆசிரியர்; நான் வரும்போது ஏன் சிரிக்கிறீர்கள்?
  மாணவர்கள்; துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க.//

  ஹா ஹா செம காமடி

  ReplyDelete
 24. //மாய உலகம் said...
  இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்//

  நன்றி சகோ.

  ReplyDelete
 25. //மதுரன் said...

  ஹா ஹா செம காமடி//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 26. அடடா.. நான் இதை மிஸ் பண்ணிட்டனே... பழைய தலைப்பென்றே நினைத்திட்டேன்...

  //ஆசிரியர்;தண்ணீரில் வாழும் மூன்று உயிரினங்கள் சொல்லு
  மாணவன்; மீன்,முதலை,எங்க அப்பா.//

  சூப்பர்:)).

  அனைத்தும் சூப்பர்... புவஹா...புவஹா....:))

  ReplyDelete
 27. படங்கள் கலக்கல்...

  என்னாது கரப்பான் பூச்சியார் தற்கொலை பண்ணிட்டாரோ?:)), தூக்குப் போட்டோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ:)))).

  ReplyDelete
 28. //athira said...
  அடடா.. நான் இதை மிஸ் பண்ணிட்டனே... பழைய தலைப்பென்றே நினைத்திட்டேன்...//

  பரவா இல்லை சகோ.

  இது காமெடி பதிவுதானே எப்ப வேனும்னாலும் படித்துக் கொள்ளலாம்.

  வருகைக்கும் உங்கள் இரண்டு கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 29. ஜோக்... படங்கள் கலக்கல் சகோ...

  ReplyDelete
 30. //ரெவெரி said...
  ஜோக்... படங்கள் கலக்கல் சகோ...//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 31. அன்னியன் 2 வில அன்னியன் ஜோக்கா ஹா..ஹா.. ஒவ்வொரு ஜோக்கும் சூப்பர் . தண்ணீர் படம்தான் கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கு :-(

  ReplyDelete
 32. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜெய்லானி சகோ.

  ReplyDelete
 33. அஸ்ஸலாமு அலைக்கும்
  தலைப்பில் இதையும் சேர்க்கலாமோ?

  கடன் வாங்கியபின் அதை சுத்தமாக மறந்தேபோய்விட்டேன் என்பவர்கள்.

  ReplyDelete
 34. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete