Tuesday, August 30, 2011

கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!! JOKES


திறுத்தப்பட்ட அதே பதிவுதான் பதிவை படித்தவர் படிக்க வேண்டாம்.
: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.
--------------------------------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு...."SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--------------------------------------------------------
நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர்!
டாக்டர்: எப்படி சொல்ற?
நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?
------------------------------------------------
மனைவி: ”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
கணவன்:அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்.
-----------------------------------------------
ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டாள்.
மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.
மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.
மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?
மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.
-----------------------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
-----------------------------------------------
அன்றோரு நாள்.....
-
-ஒரு மாலை வேளை.....
-
-ரயில்வே ஸ்டேஷன் அது.......
_
_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......
_
_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......
_
_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......
_
_அப்போது தான்....
_
_அப்போது தான்....
_
_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......
_
_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......
----------------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
-----------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
----------------------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
----------------------------------------------
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?
அவன் : 4.
ஆசிரியர் : ப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா? அவன் யாருக்கும் எதுவும் தரமாட்டன்
-----------------------------------------------
ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....
தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?
ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்
தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!
-----------------------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
-----------------------------------------------
மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி :ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
------------------------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
------------------------------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
--------------------------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்
டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க
-------------------------------------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க? 
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
--------------------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
--------------------------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
--------------------------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
-------------------------------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
-------------------------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
------------------------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
-----------------------------------------------
 என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
------------------------------------------------
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"
-------------------------------------------------
கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
-------------------------------------------------
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
-------------------------------------------------
" இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா? "
" இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே,அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க "
---------------------------------------------------
 அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? "
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம் "
----------------------------------------------------


எல்லோருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த நாள் மட்டுமின்றி எல்லா நாள்களிலும் எல்லோரும் குறிப்பாக ஏழைகள் அனைவரும் சந்தோசமாக இருக்க இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்.


அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.


43 comments:

 1. அனைத்தும் கலக்கல் ஜோக்ஸ்.குறிப்பா,’’அய்யா தர்மம் போடுங்க சாமி’’. இனிய ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்... அனைத்து துணுக்குகளும் கலக்கல்.. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது...:)

  ReplyDelete
 3. சிரி சிரி...
  ஈத் முபாரக்!

  ReplyDelete
 4. சிரி சிரி...
  ஈத் முபாரக்!

  ReplyDelete
 5. சிரி சிரி...
  ஈத் முபாரக்!

  ReplyDelete
 6. சிரி சிரி...
  ஈத் முபாரக்!

  ReplyDelete
 7. சிரி சிரி...
  ஈத் முபாரக்!

  ReplyDelete
 8. இனிய ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
 9. சிரிச்சு சிரிச்சு முடியல ...அதுவும் சர்தார் ஜி ஜோக்ஸ் ஹை லைட்.... சிரிச்சு கிட்டே இருக்கேன் ... வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 10. காணொளி பாடலை இரண்டு முறை கேட்டேன்... சூப்பரா இருக்கு நண்பரே ... எல்லா புகழும் இறைவனுக்கே

  ReplyDelete
 11. சில ஜோக்குகள் ஏற்கனவே படித்திருந்தாலும், அனைத்துமே ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது, பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 12. //R.Elan. said...
  அனைத்தும் கலக்கல் ஜோக்ஸ்.குறிப்பா,’’அய்யா தர்மம் போடுங்க சாமி’’. இனிய ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்.//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 13. //சாமக்கோடங்கி said...
  இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்... அனைத்து துணுக்குகளும் கலக்கல்.. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது...:)//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
  அப்படியா!சிரித்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 14. //NIZAMUDEEN said...
  சிரி சிரி...
  ஈத் முபாரக்!//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
  சிரித்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 15. //மாய உலகம் said...
  இனிய ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள் நண்பா...//

  //மாய உலகம் said...
  தமிழ் மணம் 3//

  //மாய உலகம் said...
  சிரிச்சு சிரிச்சு முடியல ...அதுவும் சர்தார் ஜி ஜோக்ஸ் ஹை லைட்.... சிரிச்சு கிட்டே இருக்கேன் ... வாழ்த்துக்கள் நண்பா//

  //மாய உலகம் said...
  காணொளி பாடலை இரண்டு முறை கேட்டேன்... சூப்பரா இருக்கு நண்பரே ... எல்லா புகழும் இறைவனுக்கே//

  நண்பரே !

  சிரித்தமைக்கும் காணொளி பார்த்தமைக்கும் ஓட்டு இட்டமைக்கும் வாழ்த்துமைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 16. அஸ்ஸ்லாமு அலைக்கும் வரஹ்...
  ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட ஃபித்ரா வழங்குவதைபோல்,
  இப்பதிவும் நல்ல சந்தோசத்தையே தந்தது

  இனிய ஈதுல் ஃபித்ரு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. //இரவு வானம் said...
  சில ஜோக்குகள் ஏற்கனவே படித்திருந்தாலும், அனைத்துமே ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது, பகிர்வுக்கு நன்றி நண்பா//


  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

  ஆமா ஜோக்குகள் எல்லாம் புக்குகளில் வந்தவையும் எனக்கு மெயிலில் வந்தவையும்தான் நன்றி சகோ.

  ReplyDelete
 18. //மு.ஜபருல்லாஹ் said...
  அஸ்ஸ்லாமு அலைக்கும் வரஹ்...
  ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட ஃபித்ரா வழங்குவதைபோல்,
  இப்பதிவும் நல்ல சந்தோசத்தையே தந்தது

  இனிய ஈதுல் ஃபித்ரு நல்வாழ்த்துக்கள்//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் அண்ணே.

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி.

  இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் இனிக்கட்டும்.

  மீண்டும் நன்றி சகோ.

  ReplyDelete
 19. 3 பதிவுல போட வேண்டியது ஒரே பதிவ போட்டுடிங்க

  ReplyDelete
 20. //என் ராஜபாட்டை"- ராஜா said...
  3 பதிவுல போட வேண்டியது ஒரே பதிவ போட்டுடிங்க//

  //என் ராஜபாட்டை"- ராஜா said...
  ரமலான் வாழ்த்துகள்//

  சவ்வா... இழுக்க... விரும்பளை நண்பா.

  அதான் ஒரே பதிவா போட்டு விட்டேன் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 21. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  ஹா ...ஹா ...ஹா ...
  திண்ட பிரியாணி செமைச்சுட்டு.

  பெருநாள் முடிந்து விட்டன .அதனால் வாழ்த்து சொல்லல.


  ////ஹலோ! யார் பேசுறது?
  பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
  சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.////


  இந்த காமெடி என் புதிய வசந்தத்தில் வெளியீட்டு உள்ளேன்.

  ReplyDelete
 22. தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு

  ReplyDelete
 23. //ஆயிஷா அபுல். said...
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  ஹா ...ஹா ...ஹா ...
  திண்ட பிரியாணி செமைச்சுட்டு.

  பெருநாள் முடிந்து விட்டன .அதனால் வாழ்த்து சொல்லல./*/

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

  வாழ்த்து சொல்லாட்டா என்ன சகோ பெருநாள் நல்லவிதமாக போயி விட்டது.

  கருத்திட்டமைக்கும் ஓட்டு இட்டமைக்கும் நன்றி சகோ.

  சர்தார் ஜோக்கு உங்கள் தளத்தில் இட்டிருந்திர்களா நான் பார்க்க வில்லை அல்லது மறந்து போயிருக்கும்.

  ReplyDelete
 24. எல்லா ஜோக்குமே சிரிக்க வச்சது. நல்லா இருந்தது.
  ஈத் பெர் நாள் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. //Lakshmi said...
  எல்லா ஜோக்குமே சிரிக்க வச்சது. நல்லா இருந்தது.
  ஈத் பெர் நாள் நல் வாழ்த்துக்கள்.
  August 31, 2011 9:44 AM //

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.

  ReplyDelete
 26. இப்ப்டியா அள்ளி வீசுவது
  ஹிஹி
  செம்ம ச்சிரி சிரி தான்
  கண்டிப்பா ஓட்டு உண்டு

  ReplyDelete
 27. //Jaleela Kamal said...
  இப்ப்டியா அள்ளி வீசுவது
  ஹிஹி
  செம்ம ச்சிரி சிரி தான்
  கண்டிப்பா ஓட்டு உண்டு//

  கருத்திட்டமைக்கும் ஓட்டு இட்டமைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 28. அத்தனையும் கலக்கல் பாஸ் ...

  ReplyDelete
 29. //கந்தசாமி. said...
  அத்தனையும் கலக்கல் பாஸ் ...//

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 30. செம சிரிப்பு தான் போங்க!
  உங்க பின்னூட்டத்தை பல தளங்களில் பார்த்துள்ளேன்!இன்றைக்கு தான் முதல் வருகை!
  கலக்குறிங்க! வாழ்த்துக்கள்.தொடருகிறேன்!

  ReplyDelete
 31. //கோகுல் said...
  செம சிரிப்பு தான் போங்க!
  உங்க பின்னூட்டத்தை பல தளங்களில் பார்த்துள்ளேன்!இன்றைக்கு தான் முதல் வருகை!
  கலக்குறிங்க! வாழ்த்துக்கள்.தொடருகிறேன்!//

  வருக வருக கோகுல் சார்.

  உங்கள் அன்பான கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. சகோதரர் முஹம்மது அய்யூப்,

  வ அலைக்கும் சலாம்...

  ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதீரா...

  என்னுடைய கமெண்ட்டுகளை அழித்துவிட்டேன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 39. ஹாய் நகைச்சுவை அருமை. தூங்குமுன்பு ஏதேச்சையாக வலை தளத்தில் தேடினேன் இந்த தளத்தைக் கண்டேன்.நகைச்சுவைகளை படித்து நகைச்சு வைத்தேன் .சுவைத்தேன். சந்தோசமான நித்திரையும் அடைந்தேன்.நன்றி

  ReplyDelete