Showing posts with label joke. Show all posts
Showing posts with label joke. Show all posts

Wednesday, March 9, 2011

சிரிப்பு



பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம். 

இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம்.
 
வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.





அன்னியன் இன்னும் இரன்டு வாரத்தில் வந்து விடுவார் அவரின் வலைப் பூவை நான்தான் பார்த்து வருகிறேன் தவருதலாக யாருக்கும் பின்னூட்டம் போட்டிருந்தால் வருத்தப் படவேன்டாம்.


சல்மா



1 .அக்பர் யாரு?

தெரியல டீச்சர்.

படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

நீங்க சொல்லுங்க டீச்சர், சுரேஷ் யாரு?

தெரியல

உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.....



2.   நீங்க எல்லாரும் அறிவளிங்கனு நினைச்சிங்கன்ன இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். 

பாட்டி வடை சுட்ட கதையில, வடையை சுட்டது பாட்டியா? காகாவா?


3. பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம். 
இறக்கும்போது எல்லோரையும் அழ வைக்கிறோம். 
வாழும் போதாவது எல்லோரிடமும் சிரிக்க பழகுவோம்.


4.  மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..



5.  ( Exam ஆரம்பிக்கும் முன்... )

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?


6.  அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


7.  நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!


8. "அந்த டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"

"எப்படி சொல்ற?"
"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன் `சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு பாரு."


9. கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!