Saturday, January 7, 2012

வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் பல


நேற்று: 

என் அம்மா என்னிடம்........

"கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா" 
"எடுத்துக்கிட்டேன் மா" 
"பேக்ல சிலேட் இருக்கா பாரு" 
"இருக்குமா" 
"டப்பால PENCIL இருக்கா பாரு" 
"இருக்குமா" 
"டிபன் பாக்ஸ் வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டியா?" 
"எடுத்துகிட்டேன்மா" 
"சமத்துல நீ ஸ்கூலுக்கு போயிட்டு வாப்பா. ஸ்கூல் பஸ் வந்திருக்கும் பாரு" 

இன்று: 
என் மனைவி என்னிடம்................
"ஏங்க வாட்ச் கட்டி கிட்டீங்களா?" 
"கட்டிகிட்டேன்மா"
"மொபைல் போன் எடுத்துக்கிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேன்" 
"ஆபிஸ் ACCESS கார்டு எடுத்துக்கிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேன்மா" 
"சமத்தா ஆபிஸ் போயிட்டு வாங்க. கம்பெனி பஸ் வந்திருக்கும் பாருங்க" 

நாளை: 
என் மகள் என்னிடம்...............

"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேம்மா" 
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?" 
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா" 
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?" 
"குறிச்சிகிட்டேன்மா" 
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா.அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா. 
முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா" 

வாழ்க்கை ஒன்று தான். காட்சிகள் பல
Salma Lifaya



எனக்கு பதிவிட நேரம் இல்லாமையால் இன்னும் ஒரு மாதத்திற்கு வலைப்பூ பக்கம் வர இயாலாது ஆகையால் எல்லோரும் நிம்மதியாக இருக்கவும் அப்பப்ப உங்கள் பகுதிக்கு வந்து செல்கிறேன் சல்மா அவர்கள் பதிவிடுவார்கள் என நம்புகிறேன்.

மெயில் அனுப்பி தந்த சகோ சல்மாவிற்கு நன்றி 



அய்யுப். 

24 comments:

  1. அ ந் நியன் சார் எங்க போனீங்க ரொம்ப நாளா காணோம். பிசியா? வாழ்க்கை ஒன்றுதான் காட்சிகளும் பலதான் நல்லாவே சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.அய்யூப்,
    ///ஆகையால் எல்லோரும் நிம்மதியாக இருக்கவும்///---ஹலோ... என்ன இது..? இந்த பதிவை படித்தவுடன் இனி யார்தான் நிம்மதியா இருக்க முடியும்..? பயத்தை கிளப்பி விட்டுட்டீங்க சகோ.அய்யூப்.

    நாம் நமது பெற்றோரை எப்படி கவனிக்கிறோம் என்று நமது பிள்ளைகள் கவனிக்கிறார்கள்...

    ஒன்று மட்டும் உறுதி...

    நாம் நமது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினால்...

    கோடி கோடியாக பிள்ளைகள் காலடியில் நாம் கொட்டினாலும்...

    நமக்கு முதியோர் இல்லமா அல்லது முக்குடு சந்தா இரண்டில் எது என்றுதான் தெரியாது.

    ReplyDelete
  3. //"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா.அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா.
    முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா" //

    :-(

    ReplyDelete
  4. ஆஆஆ அந்நியனா... பிடிங்க பிடிங்க பதிவைப் போட்டிட்டு ஓடுறார்.. நான் எங்கின எல்லாம் தேடித்திரிந்தேன் தெரியுமோ? சரி அது போகட்டும்... வந்ததுதான் வந்தீங்க... வர நேரமில்லை எனச் சொல்லலாமோ... முடியும்போது அப்பப்ப பதிவு போட்டிடுங்க....

    ReplyDelete
  5. மாத்தி யோசிச்சுப் பார்க்கிறன்:)

    நாளை:
    என் மகள் என்னிடம்...............

    "அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?"
    "எடுத்துக்கிட்டேம்மா"
    "அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?"
    "அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா"
    "அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?"
    "குறிச்சிகிட்டேன்மா"
    "அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'தாஜ்மஹால் பார்க்க' கிளம்புங்கப்பா.அங்கேயும் எங்களைப் பற்றியே நினைச்சுக் கவலைப்படாமல்.. நிம்மதியா சுத்திப்பார்த்திட்டு வாங்கப்பா உங்க
    உல்லாசப் பயணிகள் பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா".. பத்திரமா போயிட்டு வாங்கப்பா...


    இப்படி ஒரு மகள் கிடைத்தால்:).

    ReplyDelete
  6. ///நாளை:
    என் மகள் என்னிடம்...............

    "அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?"
    "எடுத்துக்கிட்டேம்மா"
    "அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?"
    "அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா"
    "அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?"
    "குறிச்சிகிட்டேன்மா"
    "அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'தாஜ்மஹால் பார்க்க' கிளம்புங்கப்பா.அங்கேயும் எங்களைப் பற்றியே நினைச்சுக் கவலைப்படாமல்.. நிம்மதியா சுத்திப்பார்த்திட்டு வாங்கப்பா உங்க
    உல்லாசப் பயணிகள் பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா".. பத்திரமா போயிட்டு வாங்கப்பா...


    இப்படி ஒரு மகள் கிடைத்தால்:). //




    ஹிஹி
    மகன் என்றல்லவோ போடனும்

    ReplyDelete
  7. ம்ம்ம் வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் தான் பல பல பல.....

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அய்யூப்!
    ஒரு பெரிய குண்டை தூக்கி எறிஞ்சிட்டு மறுபடியும் எஸ்கேப்பா?
    வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்புதானே. நல்லதையே நினைப்போம்.
    நம் குழந்தைகள் நம்மைபோல நல்லவர்களாகவே இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  9. Lakshmi said...

    //அந்நியன் சார் எங்க போனீங்க ரொம்ப நாளா காணோம். பிசியா? வாழ்க்கை ஒன்றுதான் காட்சிகளும் பலதான் நல்லாவே சொல்லி இருக்கீங்க//.

    வாங்கம்மா...நல்லா இருக்கின்றிர்களா?

    வேலையின் காரணமாக வரமுடியலை இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அனைத்து தளங்களுக்கும் வருகின்றேன் நன்றிமா கருத்திற்கும் உங்கள் வருகைக்கும்.

    ReplyDelete
  10. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
    /ஸலாம் சகோ.அய்யூப்,
    ///ஆகையால் எல்லோரும் நிம்மதியாக இருக்கவும்///---ஹலோ... என்ன இது..? இந்த பதிவை படித்தவுடன் இனி யார்தான் நிம்மதியா இருக்க முடியும்..? பயத்தை கிளப்பி விட்டுட்டீங்க சகோ.அய்யூப்.

    நாம் நமது பெற்றோரை எப்படி கவனிக்கிறோம் என்று நமது பிள்ளைகள் கவனிக்கிறார்கள்...

    ஒன்று மட்டும் உறுதி...

    நாம் நமது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினால்...//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்

    எனக்கு போதிய நேரம் கிடைப்பது இல்லை முன்பு மாதிரி ஆகையால் டூட்டி டயமும் மாறிடுச்சு ஆகையால் வலைப் பூ தலங்களுக்கு வருவது குறைவுதான் அப்பப்ப உங்கள் தலத்திற்கும் வந்து போகிறேன் சகோ.

    //நாம் நமது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினால்...//
    நமக்கும் அதே கதிதான் சகோ.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. /ஜெய்லானி
    //"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா.அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா.
    முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா" //

    :-(

    வாங்க அன்னாத்தே புள்ளி வைத்து பேசும் வார்த்தை எனக்கு புரியாது சகோ இருந்த போதிலும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  12. athira said...


    //ஆஆஆ அந்நியனா... பிடிங்க பிடிங்க பதிவைப் போட்டிட்டு ஓடுறார்.. நான் எங்கின எல்லாம் தேடித்திரிந்தேன் தெரியுமோ? சரி அது போகட்டும்... வந்ததுதான் வந்தீங்க... வர நேரமில்லை எனச் சொல்லலாமோ... முடியும்போது அப்பப்ப பதிவு போட்டிடுங்க....//

    வலையுலகில் ரொம்ப தமாஷாகாவும் நல்ல நண்பராகவும் திகழும் உங்களை வாழ்த்துகிறேன் சகோ உங்கள் தலத்திற்கும் வரமுடியவில்லை மனம் பொறுக்கவும் சகோ.
    சகோ அதிரா நீங்கள் எப்படி வேனும்னாலும் யோசிச்சு பாருங்கள் அது உங்கள் உரிமை மகள் மகனிடமிருந்து பெற்றோரை பாதுகாக்கிறாள்.

    ReplyDelete
  13. ஜலீலா ...
    //ம்ம்ம் வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் தான் பல பல//

    வாங்க சகோ வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ சமையல் எல்லாம் எப்படி போகிறது ?

    ReplyDelete
  14. /மு.ஜபருல்லாஹ....
    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அய்யூப்!
    ஒரு பெரிய குண்டை தூக்கி எறிஞ்சிட்டு மறுபடியும் எஸ்கேப்பா?
    வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்புதானே. நல்லதையே நினைப்போம்.
    நம் குழந்தைகள் நம்மைபோல நல்லவர்களாகவே இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்!//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    இது என்னுடைய ஆக்கம் இல்லை சகோ இருந்த போதிலும் எனக்கு மெயில் அனுப்பியவரும் இதை படிக்கத்தான் செய்வார் புறிந்து கொள்வார்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

    Comeback soon..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அ ந் நியன் 2 உங்களுக்கு என் பக்கம் ஒரு விருது கொடுத்திருக்கேன் வாங்க,.

    ReplyDelete
  17. ரெவெரி said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

    Comeback soon..

    வாழ்த்துக்கள்...//

    ரொம்ப நன்றி ரேவரி சார் தாமதத்திற்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  18. //Lakshmi said...
    அ ந் நியன் 2 உங்களுக்கு என் பக்கம் ஒரு விருது கொடுத்திருக்கேன் வாங்க,.//

    ரொம்ப நன்றிமா உடனே வந்து வாங்க முடியாமைக்கு வருந்துகிறேன் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  19. அசத்தல். ஒவ்வொரு காட்சியிலும் வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்துள்ளது. அருமையான இடுகை. நன்று.

    ReplyDelete
  20. //min mini RS said...
    அசத்தல். ஒவ்வொரு காட்சியிலும் வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்துள்ளது. அருமையான இடுகை. நன்று//

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. எங்கே அந்நியனைக் காணவில்லையே நீண்ட காலம்:(

    ReplyDelete
  23. நலமா?

    எழுதுவதை விட்டுவிட்டீரா நண்பரே...?

    ReplyDelete