Showing posts with label Zirku Island. Show all posts
Showing posts with label Zirku Island. Show all posts

Monday, February 28, 2011

நான் வசிக்கும் தீவு




எத்தனையோ நண்பர்கள் துபாயில் இருந்தாலும் சரி மற்றும் பிற ஊர்களிலும் இருந்தாலும் சரி நேரில் பார்ப்பதற்கு நேரமின்மைக் காரணத்தால் யாரையும் சந்திக்க முடிவதில்லை.

இந்த தீவில் இருந்து அபுதாபிக்கு தன்னிச்சையாக யாரும் வந்து விட முடியாது அது போல அபு தாபியிலிருந்தோ அல்லது பிற நாட்டிலிருந்தோ எவரும் உள்ளே நுழைந்து விட முடியாது இப்பேர்ப் பட்ட சூழலில் நாங்கள் இங்கு வாழ்கிறோம்,இங்கு குடும்பமோ அல்லது பிற மக்களோ கிடையாது,எல்லோருமே வேலைப் பார்க்கும் ஊழியர்களே.

இங்கு மொத்தம் முப்பதற்கு மேற்ப்பட்ட கம்பெனிகள் இருக்கு அவை ஒவ்வொன்றும் ஜாட்கோ ( ZADCO ) என்ற எண்னைக் கம்பெனியின் கட்டுப் பாட்டில் இயங்குகின்றது,எண்ணை வளம் ஆராய் ஓடுகிறது இந்த தீவில்,இங்கு எடுக்கப்படும் எண்ணைகள் வெளி நாட்டிற்கு கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்யப் படுகின்றது,அதில் நமது தாய் நாட்டின் கப்பல்களும் வந்து போவது நமக்கு பெருமையே.

இந்த தீவானாது சுமார் ஆயிரம் ஊழியர்களை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது இங்கு போட்டி, பொறாமை,குடி ,கெட்டஎண்ணம்,தகாத வெட்டிப் பேச்சு எதுவும் காணக்கிடைக்காது காரணம், வேலையை விட இங்குள்ள ஊழியர்களுக்கு நல்ல புத்திமதிகளும் நற்க்குனங்களும் மனிதாபிமானம் முறையில் செயல் படுவதற்கு பயிர்ச்சிகளும் கொடுக்கப் படுகின்றன,ஆகையால் இங்குள்ளவர்களின் எண்ணங்கள் நூற்றுக்கு தொண்ணுறு சதவிகிதம் நல்லவையாகவே இருக்கும்.

இங்கு சாதாரண ஊழியர் மாதம் ஊதியமாக ஐயாயிரம் திர்கத்திலிருந்து ஏழாயிரம் திர்கம் வரை பெறுகின்றார்,மூன்று மாத இடை வெளிக்குப் பிறகு ஒரு மாத லீவுடன்.

டெக்னிசியன் என்றழைக்கப்படும் ஊழியர் மாதம் இருபத்தோராயிரம் திர்கம் சம்பளத்துடன் நாற்ப்பத்தி ஐந்து நாள் வேலைக்குப் பிறகு ஒரு மாத விடுமுறையும் செல்கிறார்.

சீனியர் டெக்னிசியன் என்பவர் மாதம் இருபத்தி மூன்றாயிரம் சம்பளத்துடன் ஒவ்வொரு மாதமும் விடுமுறை செல்கிறார்.( ஒரு மாதம் வேலை,ஒரு மாதம் விடுமுறை )

இஞ்சினியர் என்பவர் இருபத்தி ஐந்து ஆயிரம் திர்கம் சம்பளத்துடன் பதினான்கு நாள் வேலை பதினான்கு நாள் விடுமுறை என்ற லெவலில் இருக்கின்றார்.

இன்னும் எண்ணற்ற கம்பெனிகள் அவர்கள் வேலைக்கு ஏற்றவாறு தொழிலாளர்களுக்கு ஊதியமும் கொடுத்து மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு மாதம் விடுமுறையும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த தீவு அபு தாபிக்கு சொந்தமானது,இங்கு ஐநூறு ராணுவத்தினர் முப்படை தளபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

இது தாங்க எங்களின் வாழ்க்கை.

ஊருக்கு போகும்போது அப்படியே காரின் கண்ணாடி வழிYE அபுதாபியைப் பார்த்து விட்டு ஊருக்கு பறந்திடுவோம் அதுனாலே யாரையும் வந்து
சந்திப்பதில் நேரம் இருக்காது அதுனாலே கோவித்துக் கொள்ளவேண்டாம். 


சிலப் பதிவர் நண்பர்கள் நேரில் அழைத்ததின் பேரில் இதை எழுதுகிறேன்.