தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் நமது அரசியல் தலைவர்களின் உழைப்பும் அதிகமாகிக் கொண்டு போகிறது அவர்களது அயாராத உழைப்பும் சிந்திய வேர்வையும்தான் தமிழ் நாட்டு மக்கள்களின் கஷ்ட்டத்தை போக்கப் போகின்றது !!!
தேநீர் விற்றவனல்லாம் அரசியலில் நுழைந்தப்பிறகு தேயிலை எஸ்டேட் வைத்திருக்கான் ஆறடி நிலம் வாங்க நாதியற்றதல்லாம் அரசியலில் பொறுப்புக்கள் வந்ததும் ஏக்கர் கணக்கில் சொத்துகளை வாங்கி குவிக்கின்றான் எழுத படிக்க தெரியாத கூமுட்டைகள் கூட உதவியாளரை வைத்துக்கொண்டு அரசியலில் வளம் வருகிறது.
இதைவிட கொடுமை என்னவென்றால் நடிகர் நடிகைகளும் அரசியலில் நுழைந்து அமைச்சராக நினைப்பது வியப்பளிக்கிறது ! .
பொதுமக்களாகிய நாம் பொறுமையாக எருமை மாதுரி அசப்போட்டுக் கொண்டு இருக்கோம் இதைப்பற்றி சிந்திப்பதிலியோ அல்லது கருத்து தெரிவிக்கிறதிலியோ கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருப்பது தொலை நோக்கப் பார்வையாளர்களுக்கு,இந்த அரசியல் ஒரு விருப்பம் உள்ள விழையாட்டு தளமாக தெரிகிறது.
நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் இருகண்கள் என்று சுவாமி விவேகானந்தா சொன்னார் ஆனால் அந்த நேர்மைக்கும் உண்மைக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் அரசியல் தலைவர்கள் பொறுப்பில்லாமல் நடப்பது வெட்கமாக இருக்கின்றது,இந்நிலையினை போக்கிவிட தமிழ் நாடு மட்டுமின்றி இந்தியா முழுதும் தலைவர்களை "களை" எடுக்க வேண்டும்.
மதங்களை முன்னிறுத்திஅரசியல்செய்யும்தலைவர்களை,பொதுமக்களாகியா நாம்,தகுந்த பாடத்தினை புகுத்த வேண்டும்.
இனவெறி,ஜாதிவெறி,மதவெறி என்று துவேசம் பாடும் அரசியல் தலைவர்கள் மீது, ஆசிட்டை தூக்கி ஊத்தினாலும் தவறு என்று எந்த ஒரு மானிடனும் கூறமாட்டான், காரணம் அப்படியொரு விசமி தலைவானாக வந்து நாட்டு மக்கள்களை கலவரங்கள் மூலம் கொன்னு குவிப்பதை விட,நாமே அவர்களை முளையிலே "கிள்ளி"எறிவது நமக்கும், நம் நாட்டு மக்கள்களுக்கும் நல்லது.
அதாவது நான் என்ன சொல்ல வர்றேன் என்றால் நாம ஓட்டு போட்டாதாங்க இதுகளெல்லாம் ஜெயித்து அரசியலுக்கு வர முடியும் படிக்காத பட்டிகாட்டான் நானே மாறி விட்டப் பிறகு நீங்களும் மாறி விடுவிர்கள் என்று நினைக்கின்றேன்.
விவசாயி.
எந்திருப்பா...சீட்டு உனக்குத்தான்.
ஜெயலலிதா
இவர் ஒரு சக்ரவர்த்தி...காற்று வீசும் போதெல்லாம் தூற்றிக் கொள்வார்.
மருத்துவர் ராமதாஸ்
ஹலோ..ஒபாமாவா....நான் புஷ் பேசுறேன்,நான் வேண்ணா தமிழ் நாட்டிற்கு போயி அரசியல் பண்ணவா ? ( விளங்கிடும்)
இராக்கின் போரின் போது ஐநா தலைவர்களிடம் இப்படித்தான் போன் பேசினார் புஷ்.
அடுத்து அம்மா ஆட்ச்சிக்கு வந்தால் இந்த லட்டு பட்டுலாம் கிடைக்காது வேகமா சாப்பிடுங்கள்.





