மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.
அப்புறம் என்ன சிரிக்க வேண்டியதுதானே.
ஆசிரியர்; நான் வரும்போது ஏன் சிரிக்கிறீர்கள்?
மாணவர்கள்; துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க.
ஆசிரியர்;தண்ணீரில் வாழும் மூன்று உயிரினங்கள் சொல்லு
மாணவன்; மீன்,முதலை,எங்க அப்பா.
நோயாளி: டாக்டர் இதுக்கு மேலே என் வாயை திறந்தால் வாய் வலிக்கிறது.
டாக்டர்: யோவ்... நான் திறக்க சொன்னது வாயை இல்லை உன் மணி பர்ஷை.
---------------
கபாலிக்கு அந்த இன்ஸ்பெக்டர் சல்யூட் அடிக்கிறாரே எதுக்கு?
மாமூல் கொடுக்கிற பட்டியல்ல 30 வருஷமா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறானாம்.
-------------
ஒருவர்:என் மனைவியை இன்னிக்குத்தான் பயங்கரமா திட்டினேன்.
மற்றொருவர்: நீ திட்டுற வரைக்கும் உன் மனைவி சும்மாவா இருந்தாங்க?
ஒருவர் : இல்லை அவ நல்லா தூங்கிட்டு இருந்தா.
கணவன்: சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
---------------
கபாலி: ஹலோ! சுந்தரா ஜவுளிக்கடையா?
ஓனர் : ஆமாங்க நீங்கள் யாரு பேசுறது?
கபாலி: நான் சைதாப்பேட்டை கபாலி பேசுறேன் ராத்திரி உங்க கடைக்கு வந்திருந்தேன் நல்ல டிஷைன் புடவைகள் இல்லை எப்போ வரும்னு சொல்ல முடியுமா சார்?
ஓனர்: !!!
---------------
நோயாளி: டாக்டர் எனக்கு இப்போ ஆப்ரேசன் பன்ன வேண்டாம் எனக்கு டைம் நல்லா இல்லைனு ஜோசியகாரர் சொல்லி இருக்கார்.
டாக்டர்: அதே ஜோசியகாரன்தாய்யா டைம் நல்லா இருக்கு நீங்கள் ஆப்ரேஷன் பன்னலாம் என்று என்னிடம் சொல்லி இருக்கார்.
நர்ஸ்: டாக்டர்..டாக்டர் ஸ்கேன் மெசினை கானோம்!!
டாக்டர்: அய்யோயோ...கபாலிகிட்டே ஸ்கேன் எடுக்கனும் சொன்னதை தப்பா புறிஞ்சுக்கிட்டு ஸ்கேன் மெசினை தூக்கிட்டு போயிட்டானே.
----------------
நோயாளி: நாய் துரத்துற மாதுரியே கனவு வருது டாக்டர்.
டாக்டர்: அப்படியா மூணு நாலு கல்லை வைத்துக் கொண்டு தூங்கு நாய் துரத்தாது.




