Showing posts with label maladi. Show all posts
Showing posts with label maladi. Show all posts

Friday, July 29, 2011

வால் இல்லாமலும் குரங்கு இருக்கும் என்று... !!


உறவுகளை தள்ளி வைத்து.
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,
என்னையவே புண்ணாக்கி.
என்னை நீயாகவும்.
உன்னை நானாகவும்.
கண்ணே என் கணவன் என்று
நம்பியிருந்த எனக்கு.
கிடைத்தப் பட்டம் மலடி.

மாமியார் என்ற ராட்சசி.
போலி சாமியாரைப் போல பொய் பேசி.
கதிரவன் உதித்து மறையும் வரை.
மருமகளை தினம் மிதித்து சாகும் வரை.
செய்யும் கொடுமைகளை தட்டி கேட்க
யாரும் இல்லையா?

மனதைத் தொலைத்து
பெற்றவர்களை பகைத்து
உறவுகளை புதைத்து
என் அழகினை சிதைத்து
என் உணர்ச்சிகளை வதைத்து
தினம் தினம் பைத்தியம் பிடித்து
நடை பிணமாக அலைகின்றேன்
கடைசியில் கல்லறைதான் முடிவு என்றால்....
பிறகு எதற்கு அந்த காதல்?

பல்லில் விஷம் வைத்திருக்கும்
ஜீவனை பாம்பு என்கிறோம்!!..
சொல்லில் விஷம் வைத்திருக்கும்
மாமியாக்களை என்னவென்பது ?

கண்ணிர் சிந்தும் நம் கண்களை விட
அதை மறைத்து புன்னகை பூத்திடும் நம் இதழுக்கே வலி அதிகம்.
ஆனால் பலருக்குப் புறியாது.
புறிய வைத்தாலும் விளங்காது.

புத்தகத்தில் படிச்சும் புரியவில்லை.
தொலைக்காட்சியில் பார்த்தும் நம்பவில்லை.
ஆசிரியர் சொல்லியும் தலையில் ஏற வில்லை
ஆனால் மாமியாரை நேரில் பார்த்தப் பிறகுதான் புறிந்தது.
எவ்வளவு கொடுமைக் காரி என்று.

கல்லூரி கன்னிகளே.
கஸ்தூரி பொன்னுகளே.
வேண்டாம் நமக்கு காதல்.
நீ காதலிப்பவன் நல்லவன்தான்.
ஆனால் கடும் சொல்லால் வதைப்பது
அவன் குடும்பத்தார்தான்,காரணம்
சீரும் சீராட்டாமும்,சில்லரை எனும்
கைக்கூலியும் கொடுக்காமல்
சிட்டாய் நீ புகுந்து விட்டாய்.
பிணம் தின்னும் கழுகுகள் கூட
உயிரற்ற உடலைத்தான் உணவாக்கி திண்ணும்
நற் குணமற்ற மாமியாக்கள் உயிருள்ள மருமகளை
உயிரோடுதான் உண்னுகிறார்கள்.
வசைப் பாடுவதின் மூலம்.

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...
வாசலில் வந்து அழைத்தான் பிச்சைக்காரன் "அம்மா" என்று...

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...
வீட்டினுள் ம்மா...என்று அழைத்தது அவள் வளர்க்கும் பசு.

இதுதான் எதார்த்தம்,இதுதான் உண்மை, இதுதான் சத்தியம்,இதுதான் ஜெயிக்கும்.

மலடு என்பது பெண்களுக்கு மட்டும் உள்ள குறை இல்லை இது ஆண்களுக்கும் பொருந்தும்,இதை அறியாத ஆண்களும் கண்வன் வீட்டு பெண்களும் புறிந்து கொள்ளனும்.

வெறுமையை நிரப்பி விம்மும் இதயத்துக்கு
விடை கூற முடியாமலும்...
பொறுமையை மதித்து பொங்கி எழும் உணர்சிக்கு
இடை விடாமலும்...
என்னைக் கட்டியவனே கதி என்றும்
என்னை திட்டியவனே விதி என்றும்
தினம் தினம் செத்தும் பிழைக்கும்
சகோதரிகளுக்காக இந்த பதிவு.

மனதில் மலர்ந்தவைகள் எல்லாம்...
பொழுதில் மறைந்து கொண்டு இருக்கின்றன.
வசந்த காலங்களெல்லாம்...
வாடிப் போய் கொண்டு இருக்கின்றன.
நட்சத்திர இரவெல்லாம் உமைப் பார்த்து...
அழுது கொண்டு இருக்கின்றன.
சோலை மரங்கலெல்லாம் வதங்கி...
வாடிக் கொண்டு இருக்கின்றன.
வெள்ளைப் பூக்களும் முல்லைப் பூக்களும்...
கண்ணீர் பூக்களாக மாறிக் கொண்டு இருக்கின்றன.

காலங்களில் ஒரு நாள் வசந்த காலம் பிறக்கும்...
அது உனது வாழ்க்கை கண்ணீரை துடைக்கும்.

என்ற நம்பிக்கையோடு......

அந்நியன்:2

காணொளியில் காதலைப் பற்றி என்ன அழகாக வர்ணிக்கின்றார்கள் அது நிஜத்தில் சாத்தியமாகுமா?

இது எல்லா மாமியாக்களுக்கும் பொருந்தாது சில நல்ல சீதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.