ஊரோடு உறவுகள் இல்லை!
பேரோடு யாரும் பிறப்பதும் இல்லை!
அன்போடு அழைக்க மானிடர் இல்லை!
பண்போடு பார்க்க மனம் கசிந்தவரும் இல்லை!
கணவுகள் காணும் நான் ஒரு ஏழை!
வாழ்க்கையை அமைக்க தெரியாத ஒரு பாவை!
புரண்டோடும் பொழுதுகளே!
என் கண்ணீரை கொஞ்சம் பாராயோ!
சோகத்தில் அழுது வடிக்கும் கண்ணீர் கூட!
கரு...மேகத்தை கரைத்து விடும்!
தாகத்தில் நான் கதறி அழுதும்...மனிதா
போதத்தில் தள்ளாடுகிறாயே ஏன்?

கைக்கு எட்டாத வானமும்!
உனக்கு ஏதேனும் தரவா என கேட்கிறது!
என்னை சுற்றியுள்ள பசுமையும்!
பசி மயக்கம் கண்டு...அழுகிறது!
நளினம் ஆடும் தென்றலும்!
சோகத்தில் நின்றுதான் போனது!
புது வரவாய் பூக்கும் பூக்கள் கூட!
என் வறுமை கண்டு கண்ணீர் சிந்தியது!
இயற்கையே... என்னை கண்டு அழும்போது!
இயற்கை எய்திடப் போகும் நீ அழ வில்லையே!
புன்னகை வலையில் மறைந்து கிடக்கும்!
நீதான் மனித பிறவியோ?
கருவானேன்... பின்பு உருவானேன்!
சாக்கடையில் ஜனித்த நான்!
பூக்கடையையும் கண்டதில்லை!
யார் கண்ணுலேயும் படுவதும் இல்லை!
சுட்டப் புண்ணும் ஆறி விடும்!
கை பட்ட பூவும் மலர்ந்து விடும்!
என் வாழ்க்கை மட்டும் மாற வில்லை!
ஏழையாய் பிறந்ததினால்!
சொந்தத்தில் வந்த பாசமும்!
சோகத்தில் உடைந்து பிரிந்தனர்!
பந்தத்தில் இருந்த நேசமும்!
பசியின் கொடுமைக்கு மாண்டனர்!
தோல்வியின் முதற்படி வெற்றி என்றார்கள்!
வெற்றியின் ரகசியம் பணமும் என்றார்கள்!
இரண்டும் இல்லாத என் வாழ்க்கைக்கு!
மரணம்தான் பரிசா?
ஆவேச வரிகள்---
புன்னைகையில் பிழிந்தெடுத்த என் அன்புத் தமிழ் வார்த்தைகளை பின்னுரையில் ஆரம்பித்து,முன்னுரையில் முடிப்பவன்தான் இந்த அந்நியன்,கிழக்கே உதிக்கும் சூரியனும் சரி,இரவில் ஜொலிக்கும் சந்திரனும் சரி கடவுளின் கட்டுப் பாட்டுக்குள்தான் இருக்கின்றது.
மனித சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கிய தடைக்"கல்" மனித சமுதாயமே,ஏழையாக பிறந்தது எனது குற்றமா? இல்லை பதறாத காரியம் சிதறாது, பயம் கொண்ட மனம் சிறக்காது என்று சொன்னவரின் குற்றமா? யார் குற்றம்?
நேற்றென்பது முடிந்துபோனது,நாளையென்பது அறியாதது,இன்றிந்த நொடியே,நாம் வாழ்ந்துணர்வது...வாழ்க்கை இப்படி இருக்க ஆனவம் எதற்கு?
காலுக்கு தோல் செறுப்பு வாங்க பணம் இல்லையே...என்று கடவுளிடம் வேண்டுகிறாயே...கால் இல்லாத மனிதர்களின் நிலையை நினைத்து பார்த்தாயா?
நூற்று கணக்கான நேற்றுகள் நகர்ந்து விட்டன ஆயிர கணக்கான நாளைகள் பின்பு வரும்,ஒரே ஒரு "இன்று" மட்டும் ஏழைக்கு உதவி செய்...வாழ்க்கையில் என்றுமே சந்தோசமா இருப்பாய்.
கருமியோடு உறவு வைத்தால் இருமியே நம்மை கொண்ணுடுவான்.
பொய்யனுடன் கூட்டு வைத்தால் சமயம் கிடைக்கும் போது மாட்டி விடுவான்.
முட்டாளோடும் ஒட்டாதிர் அவன் உங்களுக்கு உதவி செய்தாலும் அது உபத்திரத்தில்தான் போயி முடியும்.
பாவியோடு சுற்றாதிர் ஒரு பவுன் கொழுசுக்கு கூட உன்னை விற்றுவிடுவான்.
ஏழைகளை ஆதரியுங்கள் வாழ் நாள் பூரா நன்றியுள்ளவனாக இருப்பான்.
கவிதை எழுதி பழகுறேன்,கவிஞர்கள் யாராவது.... குறைகள் இருந்தால் கண்டு பிடித்து சொல்லவும்.



