ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)
Showing posts with label sontham. Show all posts
Showing posts with label sontham. Show all posts
Saturday, December 4, 2010
ஏழைகளை தத்தெடுப்போம்.
சொந்தங்களை அரவணைப்போம் - ஏழைகளை தத்தெடுப்போம்.
அந்நியர்கள் மீது கூட வன்முறையை வெறுத்த மகாத்மா காந்தி வாழ்ந்த நாட்டில்,,குடும்ப வன்முறை மூலம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதும், பேசாமலிருப்பதும், வேதனையிலும் வேதனை.
குடும்பத்தில் ஏற்ப்படும் குழப்பம், அது சமுதாயத்திற்கே அழிவே ஏற்ப்படுத்தும் என்று, யாரும் புரிந்துக் கொள்வதில்லை,இதனால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு பின்னடைவே ஏற்ப்படுத்துமே தவிர, எந்த ஒரு நண்மையையும் தராது.
இதன் மூலம் அவர்களின் வாரிசுகள் மட்டுமின்றி பகையாக்கப் பட்ட அண்ணனோ, அல்லது தம்பியோ,அக்காவோ அல்லது தங்கையோ,இவர்களின் வாரிசுகளும் மனதால் பாதிக்கப் படுகிறார்கள்.
இதைப் பற்றி பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், என்னை சார்ந்த எவர் ஒருவரும்,என்னை சார்ந்தவரிடம், தொடர்ந்து மூன்று நாட்கள் பேசாமளிருப்பாறேனில், அவர் என்னை சார்ந்தவர் இல்லை என்று.
அண்ணல் மகாத்மாவும், மனிதருக்கு மனிதர் நேசித்து கொள்ளுங்கள்,துரோகித்துக் கொள்ளாதிர்கள் என்று தமது நண்பர்களுக்கு தினமும் அறிவுருத்துபவராக இருந்தார்.
குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுக்கு உணர்ச்சிவசப் படாமல், உறவுகள் செய்த நன்மையை மட்டும் எண்ணி, முடிவு எடுத்தால், குடும்பம் பிரிவதற்கு யாரும் காரணமாக இருக்கமாட்டார்கள்.
ஒரு ஊரை,சுற்றி ஆராய்ந்தோம் என்றால்,நாற்ப்பது சதவிகித மக்கள் குடும்ப பிரச்சினையால், சகோதர சகோதரிகளை இழந்து வாழ்கிறார்கள்.
இதற்க்கு காரணம் என்ன ?
வசதியும், வாய்ப்புகளும் கூடும்போது, தமது சம்பாத்தியத்தின் நிழலில், மற்ற உறவுகள் ஒண்டி வாழ்வதால், நமது குடும்பத்திற்கு நஷ்ட்டம் ஏற்படுமே என்று எண்ணம் கொள்வது. (ஒரு வகையினர்)
சொத்தினை பங்கிடும்போது, ஏற்ப்படும் பிரச்சினைகளுக்கு, சரியான முறையில், பேசி தீர்வு காணாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் விவாதிப்பது.(ஒரு வகையினர்)
கவுரவம் என்று அழைக்கப்படும் பெருமதிப்பை, உடையவர்கள் தமக்குத் தரவில்லையே என்று வருந்தி, ஒதுங்குபவர்கள்.
(ஒரு வகையினர்)
மரணத்தின் வாயிக்குள் போய் கொண்டிருக்கும் இந்த மனிதப் பிறவிகள், வாழும் கொஞ்ச நாட்களில் நன்மையை செய்து, தீமையை தவிர்த்து,உற்றார் உறவினருடன்,ஏழை எளியவருடன் ஒற்றுமையாய் வாழ்வதற்கு, மனம் வரவில்லையே ஏன் ?
கடினமான காரியத்தையும்,தமது பேச்சு திறனால் சாதிக்கும் மனித ஜாதி, காசுகள் பெருகியதும் கண்டும் காணாமல் போவது ஏன் ?
பணப் புழக்கம் அதிகரிப்பதால், உங்களின் அறிவுகளும்,அன்பு இதயங்களும் மங்கி போகின்றன, உங்களின் பலமும்,பலவீனமும் உணரும் சந்தர்ப்பம், கண்டிப்பாக ஒரு நாள் வரும்.
இது எல்லா மனிதருக்கும் பொருந்தாது.
நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படி சொந்தங்களால் துரத்தி அடிக்கப் பட்டு,
நடுத்தெருவில் வீசி எறியப்பட்ட இந்த மூன்று ஜீவன்களை,
யார் காப்பாற்றுவார் ?
உழைக்கிறார்,தெருவில் சாப்பிடுகிறார்,நடை பாதையில் தூங்குகிறார்.
பச்சை மண்ணோடு...!!!
மழை பெய்வதற்கு முன்னேயே, நம் குழந்தைகளுக்கு குடையை கொடுத்து பள்ளிக்கு அனுப்பும் நாம்,திடிரென்னு மழை பெய்து விட்டால் இவர்கள் எங்கு போயி தூங்குவார்கள் ?
சொந்தங்களை அரவணைப்போம்..!!!
ஏழைகளை தத்தெடுப்போம்...!!!
Subscribe to:
Posts (Atom)
