Tuesday, April 26, 2011

பெண்ணாய் பிறந்துவிட்டால்... இதுலாம் சகஜம்...!!!

கண்ணில் ஒரு மின்னல்,முகத்தில் ஒரு சிரிப்பு,சிரிப்பில் ஒரு பாசம்,பாசத்தில் ஒரு நேசம், நேசத்தில் ஒரு இதயம்,இதயத்தில் ஒரு உதயம்,அவ்வுதயத்தில் ஒரு புரட்சி,அப்புரட்சியில் இருதியாய் கண்டது மிரட்சி.

காரணம் பெண்ணாய் பிறந்த நீ எத்தனை சுமைகளை தாங்குவாய் ?

மருத்துவச்சி பார்வையிலே,நீ பிரசவிச்சு போகையிலே,தலை மன்னன் உறுதி என்றால்...உச்சி முகம் முகர்ந்து, பிச்சிப் பூவால் பிணைந்து, உச்சி வாங்கெடுத்து, உலராத பூவெடுத்து, உன்னை போல வருமா ? என் கண்ணைப் போல வருமா என்று புகழ்கின்ற,மாமியாக்களும் பெண்கள்தானே ?

அவள்தான் காரணம் கைக்கூலி வாங்குவதர்க்கும் உன்னை வதைத்து எடுப்பதர்க்கும்.

மகளின் உணர்வை மதிக்கும் தாயவள் மருமகளின் உணர்வை கொல்வது ஏனோ?

அழகு அறிவு அருங்கலை ஆற்றல்,அடக்கம் பனிவு உயர்ந்தோரை போற்றல் என்று தம்மை பம்பரமாக சுற்றிக் கொள்ளும் பெண்ணவள் பாவம்.
ஆட்டி வைப்பதும் பெண்ணே,நிலை தடுமாறி ஆடுவதும் பெண்ணே.

"வரதட்சனை" இதைப் பிறித்து எழுதியால் வர+தட்சனை=வருவதற்க்கு தட்சனை.
யார் வருவதர்க்கு யார் தட்சனை கொடுக்கனும் ?

சமுதாய கணக்கின்படியே வருவோம் ஒரு பெண் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு ஆடவனை திருமணம் செய்துள்ளாள் என்று வைத்துக் கொள்வோம் விலைக் கொடுத்து வாங்கப்பட்ட அந்த ஆடவன் யாருக்கு சொந்தம் ?
அவளுக்குத்தானே சொந்தம் இது ஏன் மர மண்டை மாமியார்மார்களுக்கு தெரிய மாட்டேங்கிறது விலை கொடுத்து வாங்கப்பட்ட அந்த அடிமை உயிர் உள்ளவரை எசமாணியம்மாளான மனைவிக்குத்தான் உழைத்துக் கொடுக்கனும் இதில் யாரும் பங்கு கேட்பதை அனுமதிக்க முடியாது.

கடுமையான குளிரிலும் கொடுமையான பிரிவினிலும் கொடூரத் தனிமையிலும் கடும் நிசப்த்த இரவினிலும் காவியம் படைப்பாள் பெண்ணவள் ஆனால் அவளின் வாழ்க்கை இருட்டறையே.

பெண் எழுத்து...பெண் எழுத்து.. என்று பறை சாற்றும் நாம் சாதித்தது என்ன ?

நான்கு பெண்கள் நன்றாக இருப்பதினால் பெண் சமுதாயம் முன்னேறி விட்டதா?

இங்கு நான்காயிரம் பெண்கள் பஞ்சத்திலும் பசியிலும் வரதட்சனைக் கொடுமையிலும் செத்து மால்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது ?

பிச்சை எடுத்து வயிற்றை கழுவும் மனித ஜாதி கூட நிம்மதியாய் மூன்று வேலை சாப்பிடுகிறது எச்சை தட்டு கழுவிப் செத்து பிழைக்கும் மனித ஜாதிக்கு ஒரு வேலை சாப்பாடு கிடைப்பதே அரிது.

வரதட்சனையை ஒழிப்போம் !
வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !
யா அல்லாஹ்..எங்களை போன்ற கோடான கோடிஏழைகளுக்குவெளிச்சத்தை தந்தருள்வாயாக. 


ஆமின்.


18 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.அய்யூப்,

  உங்கள் ஆதங்கங்களை ஆங்காரமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். வரதட்ச்சிணைக்கு எதிரான சூடான பதிவு சகோ. மிக்க நன்றி..!

  ஆனால்...

  பதிவை படித்துவிட்டு மீண்டும் அந்த தலைப்பை படித்தால்... 'இதெல்லாம் சகஜம்' என்று கூறி எல்லா கோபத்தையும் புஸ்ஸ்ஸ்ஸ்... ஆக்கி விடுகிறதே... சகோ..!

  அதையும் பதிவைப்போலவே சூடாய் வைத்திருக்கலாமோ..?

  ReplyDelete
 2. நண்பா தலைப்பு வலிக்கிறது!

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு

  //வரதட்சனையை ஒழிப்போம் !
  வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !//

  ReplyDelete
 4. "ஆட்டி வைப்பதும் பெண்ணே,நிலை தடுமாறி ஆடுவதும் பெண்ணே."
  பெண்ணே பெண்ணுக்கு எதிரி .நல்ல பகிர்வு .

  ReplyDelete
 5. வரதட்சனையை ஒழிப்போம் !
  வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !

  அந்தப் பெண்களுக்கு துணை போகும் ஆண்களை ??

  ReplyDelete
 6. வரதட்சனையை ஒழிப்போம் !
  வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !//

  அதை செய்யனும்

  அந்தப் பெண்களுக்கு துணை போகும் ஆண்களை ?? //

  அதானே தவறை செய்பவர்களைவிட அதற்க்கு மறைமுகமாகவோ துறைமுகமாகவோ துணைபோவது குற்றத்திலும் குற்றமல்லவா.

  பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் இதுபோன்ற அநியாங்கள் செய்பவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவேண்டும்..

  ReplyDelete
 7. என்று ஒழியும் இந்த கொடுமை...

  ReplyDelete
 8. //முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' said...
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.அய்யூப்,

  உங்கள் ஆதங்கங்களை ஆங்காரமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். வரதட்ச்சிணைக்கு எதிரான சூடான பதிவு சகோ. மிக்க நன்றி..!

  ஆனால்...

  பதிவை படித்துவிட்டு மீண்டும் அந்த தலைப்பை படித்தால்... 'இதெல்லாம் சகஜம்' என்று கூறி எல்லா கோபத்தையும் புஸ்ஸ்ஸ்ஸ்... ஆக்கி விடுகிறதே... சகோ..!

  அதையும் பதிவைப்போலவே சூடாய் வைத்திருக்கலாமோ..?//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

  முதலில் தலைப்பு வைக்கும் போது பெண்ணாய் பிறந்து விட்டால்...என்றுதான் வைத்தேன் பிறகுதான் சரி எல்லா துன்பத்தையும் பெண்கள் பொருத்து போகிறார்கலே என்று அப்படி வைத்து விட்டேன் நீங்கள் சொல்றதைப் போல எல்லாவற்றையும் படித்து விட்டு தலைப்பைப் படிக்கும் போது ஒன்னுமே இல்லைதான்.

  குறையை சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி சகோ.

  ReplyDelete
 9. //விக்கி உலகம் said...
  நண்பா தலைப்பு வலிக்கிறது!//

  வணக்கம் நன்பரே.

  அவசரத்தில் இட்ட தலைப்பினால் மனது வலிக்கத்தான் செய்யும்.

  மனம் பொருக்கவும்.

  வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 10. //சிநேகிதி said...
  நல்ல பகிர்வு

  //வரதட்சனையை ஒழிப்போம் !
  வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !//

  வருகைக்கும் உங்கள் கருத்திர்க்கும் நன்றி ஃபாயிஜா.

  ReplyDelete
 11. //angelin said...
  "ஆட்டி வைப்பதும் பெண்ணே,நிலை தடுமாறி ஆடுவதும் பெண்ணே."
  பெண்ணே பெண்ணுக்கு எதிரி .நல்ல பகிர்வு .

  வருகைக்கும் உங்கள் கருத்திர்க்கும் நன்றி ஏன்ஜலின்.

  ReplyDelete
 12. //மு.ஜபருல்லாஹ் said...
  வரதட்சனையை ஒழிப்போம் !
  வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !

  அந்தப் பெண்களுக்கு துணை போகும் ஆண்களை ??//

  இது வரைக்கும் ஆண்கள் வரதட்சனை கேட்டு கல்யாணம் நின்று போனாதாகவோ அல்லது வரதட்சனைக் கேட்டு ஆண்கள் கொடுமை பன்னியதாகவோ கேள்விப் பட்டிருக்க மாட்டிர்கள் அண்ணன்.

  நூற்றில் பத்து பேரு வேன்றால் இருக்கலாம் அவர்களுக்கும் இது பொறுந்தும்.

  வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி ப்ரதர்.

  ReplyDelete
 13. //அன்புடன் மலிக்கா said...
  வரதட்சனையை ஒழிப்போம் !
  வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !//

  அதை செய்யனும்

  அந்தப் பெண்களுக்கு துணை போகும் ஆண்களை ?? //

  அதானே தவறை செய்பவர்களைவிட அதற்க்கு மறைமுகமாகவோ துறைமுகமாகவோ துணைபோவது குற்றத்திலும் குற்றமல்லவா.

  பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் இதுபோன்ற அநியாங்கள் செய்பவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தவேண்டும்..//


  கவியரசி வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி.

  ஏழைகளின் வீட்டிர்க்கும் இப்படி வந்து கருத்து சொல்வீர்களானால் கண்ணீரில் தவிக்கும் ஏழைகளும் கொஞ்சம் மனம் சிறப்பார்கள்.

  யார் தவரு செய்தாலும் குற்றம் குற்றமே.

  வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 14. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  என்று ஒழியும் இந்த கொடுமை...//

  எல்லோரும் மனது வைத்தால் இந்த கொடுமை நீங்கும் சகோ.

  வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 15. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

  என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

  http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

  ReplyDelete
 16. நல்ல கருத்துக்களுடன் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மாஷா அல்லாஹ்.யார் எது சொன்னாலும் நம் கடமையை நாம் செய்து இறைவனிடம் கருணை பெறுவோம்,அக்கா ,இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 17. பாத்திமா ஜொஹ்ரா said...
  நல்ல கருத்துக்களுடன் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மாஷா அல்லாஹ்.யார் எது சொன்னாலும் நம் கடமையை நாம் செய்து இறைவனிடம் கருணை பெறுவோம்,அக்கா ,இன்ஷா அல்லாஹ்.
  May 1, 2011 7:36 PM

  THANK YOU SISTER.
  SORRY FOR THE LATE REPLY

  சி.பி.செந்தில்குமார் said...
  நீட் போஸ்ட்.

  THANK YOU BROTHER SORRY FOR THE LATE REPLY.

  ReplyDelete