Thursday, April 14, 2011

மனித இனம் நாயை விட கேவலமானதா ?





திரைப்படங்களின் ஹீரோக்களை தலைவராகவும் கடவுளாகவும் சித்தரிக்கும் நமது தமிழக திரு மக்கள் ஒன்றை நன்றாக புறிந்து கொள்ள வேண்டும்.
படத்தில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று நம்பி கரவோஷம் போடுங்கள்,கை ஓஷம் போடுங்கள்.கொஞ்சம் பொறுப்புள்ள உண்மையான தமிழனாகவும் வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் ,சேவை மனப்பான்மையுடனும் ,துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக ,தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக,ஆசிரியாராக,சமுக சேவகராக,துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்,அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்.அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஓட்டு போடுவோம்.என்று நான் சொன்னால் என்னை நீங்கள் "லூசு" என்றுதான் சொல்லுவீர்கள்,காரணம் நமது அரசியல் கலாச்சாரம் அப்படி.

சொற்போர்,விற்போர்,மற்போர் என அனைத்து விதத்திலும் பொது மக்களை போர் அடித்து கொண்டிருக்கும் ஆளும்,மற்றும் எதிர் கட்சியினர் கண்டிருப்பதெல்லாம் ஓட்டு போடுபவருக்கு எல்லாம் இலவசம்.

சில நேரங்களில் நாம் காண்பது உண்மையா அல்லது பொய்யா என்பது உணர்வது மிகவும் கடினமாக உள்ளது,அந்த அளவிர்க்கு இலவச சழுகைகளை வாரி வழங்குகின்றனர்,ஆனால் வறுமையை ஒழிப்போம் என்று எந்த ஒரு கட்சியும் அறிவிப்பு கொடுக்க வில்லை என்பது நெஞ்சில் பாரமாக உள்ளது.

மேலே கண்ட வீடியோ பதிவைப் பார்த்த நாம் கற்றுக் கொண்டது என்ன?

தம் பிள்ளை ஒரு வேளை சாப்பிட வில்லை என்பதர்க்காக நாம் எத்தனை மருத்தவரிடம் சென்று ஆலோசனை பெற்றிருப்போம் ?

எத்தனை லக்ஷ்மிகள் பசியால் மாண்டு மண்ணறைக்கு சென்றிருப்பார்கள்?

இப்படி என்னற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டேபோகலாம் ஆனால் தீர்வுதான் கிடைக்கப் போவது இல்லை.

மனித இனம் நாயை விட கேவலமாக நடத்தப் படுவதைப் பார்க்கும் போது இறைவன் ஏன் இன்னும் இந்த உலகை அழிக்காமல் வைத்திருக்கான் என்று மனசு கேட்கின்றது.

பிரபலங்கள் உடுத்திய உள்ளாடைகளை கோடிக்கு மேலே ஏலம் எடுத்து பொக்கிஷமாக அலமாரியில் வைத்து அழகு பார்க்கும் அயோக்கிய மனிதர்கள்
கிழிசல் ஆடைகளை உடுத்தி பல வருடங்காலாக பட்டினியினில் செத்து பிழைக்கும் ஏழைகளை ஏறெடுத்து பார்க்கமால் இருப்பது விசித்திரமே !!!

உலக கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்து இந்தியா ஜெயித்து பட்டத்தை வென்றதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்,ஆனால் அதில் கிடைத்த கோடானு கோடிகள் பணம் மறைக்கப்பட்ட இடம் எங்கே?

அடுத்து ஒரு கிரிக்கெட் சூதாட்டம் தொடங்கி விட்டது போயி தாராளமாக பணத்தை அள்ளி வீசுங்கள் அந்த கொள்ளைக் காரர்களிடம்.

அந்தக் கயவர்களும் ஆயிரம் கோடிக்கு மாளிகை கட்டட்டும்,மது போதை பெண்களுடன்,உல்லாச உணவோடு,ஒவ்வொரு நாளும் பல லட்சங்களை செலவு செய்யட்டும்.

இந்த குறும் படத்தில் பார்த்த லக்ஷ்மியை போன்ற பல லட்ச அப்பாவி ஏழைகள் பட்டினியால் செத்தால் இவர்களுக்கு என்ன ?

இறைவனின் கோபம் இந்த பணக்காரகள் மீது விழாத வரை லக்ஷ்மி போன்ற ஏழைகளுக்கு விடிவு காலம் பொறக்காது.













                                    .












10 comments:

  1. சகோதரர் அந்நியன் 2,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    பலருடைய மனதில் ஏற்படும் ஆதங்கங்களை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.

    சென்ற வாரம் பள்ளியில், மகள் திருமணத்திற்கு என்று யாசகம் வேண்டி நின்றவரை பார்த்த போது என்னுள் எழுந்த போராட்டம், கோபம் இருக்கின்றதே...இஸ்லாம் என்ன அருமையாக திருமணத்தை சொல்லியிருக்க, இந்த சமூகம் மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டதே என்று பெற்றோரிடம் வந்து என் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினேன்.

    என்ன செய்யலாம் சகோதரர்? நாம் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கலாம். மற்றவர்களை அழைத்தும் பார்க்காலாம். பிறகு என்ன செய்வது? ஏதாவது ஆலோசனை இருந்தால் கூறுங்கள்.

    நிச்சயமாக இவை நமக்கான இறைவனுடைய சோதனைகள்...மற்றவர்களுக்கு உதவி அந்த சோதனையில் வெற்றி பெற இறைவன் துணை நிற்க வேண்டும்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  2. இது போல் நாட்டில் எத்துனை லட்சுமிகள் கஷ்டபடுகிறார்கள்.. இது போல் கண்ணுக்கு தெரிந்து கஷ்டபடும் பல குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்யவேண்டும். இந்த குறுபடம் பார்த்த பிறகு கட்டாயம் ஏதாவது ஒரு நல்லது நிலையான ஏற்பாடு செய்யனும் என்ற எண்ணம் வருகிறது. இதனை படிக்கும் வலைப்பூ நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டு கோள் .. வீட்டில் விசேஷ நாட்களில்.. வீட்டில் லட்சுமி போல் வேலைபார்க்கும் குழந்தைகளே அல்லது பெரியவர்களோ ..யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதலில் ஒரு தட்டில் உணவு எடுத்து வைத்துவிடுகள்.. பிறகு விருந்தினருக்கு பரிமாருங்கள் நிச்சயம் உங்கள் உணவில் பரகத் (உணவில் விருத்தி இருக்கும்)

    "வேலையாட்களுக்கு உழைப்பின் வியர்வை காயும் முன்பே அவர்களுக்குள்ள கூலி கொடுத்துவிடுகள்: "உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்" என்று இஸ்லாம் கூறுகிறது

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அய்யூப்,
    மிகவும் ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள். இதற்கான தீர்வு, மக்கள் ஒவ்வொருவரும் தம்மைச்சுற்றி பசித்து இருப்போருக்கு தர்மம் செய்து அவர்களின் வயிறை நிறையவைத்தபின்தான் தான் புசித்து வாழ்தல் வேண்டும் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மனிதநேயம் கூட இல்லாமல் வாழ்ந்தால் அவர் மனிதரே அல்ல எனலாம்.

    ReplyDelete
  4. ஆஷிக் அஹமது சொன்னது.
    சகோதரர் அந்நியன் 2,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..

    //சென்ற வாரம் பள்ளியில், மகள் திருமணத்திற்கு என்று யாசகம் வேண்டி நின்றவரை பார்த்த போது என்னுள் எழுந்த போராட்டம், கோபம் இருக்கின்றதே...இஸ்லாம் என்ன அருமையாக திருமணத்தை சொல்லியிருக்க, இந்த சமூகம் மக்களை பிச்சை எடுக்க வைத்து விட்டதே என்று பெற்றோரிடம் வந்து என் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினேன்.

    என்ன செய்யலாம் சகோதரர்? நாம் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கலாம். மற்றவர்களை அழைத்தும் பார்க்காலாம். பிறகு என்ன செய்வது? ஏதாவது ஆலோசனை இருந்தால் கூறுங்கள்.//

    நாம் இஸ்லாம் கற்று தந்த வழியில் வாழ்ந்தாலே போதும் சகோ இதை விட மிக எழிதாக யாரால் கூற முடியும்?

    மனித குலத்தையும் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் உண்வும் மற்றும் ஏனைய குறைகளையும் போக்கி வைக்கின்றவன் அல்லாஹ்வே அவன் மிகவும் நன்கறிந்தவன்.

    அநாவசியமாக பணங்களை செலவழிக்கும் மனிதர்கள் இது போன்ற ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு உல்லாசமாக இருக்கட்டுமே என்பது எனது நப்பாசை.

    எல்லா ஊர் பள்ளிகளிலும் வெள்ளிகிழமை அன்று ஏழை மக்கள்களை காணலாம் என்ன செய்வது நம்மால் ஏன்றதை செய்வோம் அல்லாஹ் போதுமானவன்.

    வருகைக்கும் கருத்திட்டதிர்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. //சிநேகிதி சொன்னது.

    "வேலையாட்களுக்கு உழைப்பின் வியர்வை காயும் முன்பே அவர்களுக்குள்ள கூலி கொடுத்துவிடுகள்: "உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்" என்று இஸ்லாம் கூறுகிறது//


    ஆமாம் சகோ..

    ரஸூல்(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
    அண்ணார் சொன்னது போன்று நாம் வாழ்VOமேயானால் ஏழைகள் இந்த உலகத்தில் காணப் கிடைப்பது அரிதாகி விடும்.

    உங்களின் கருத்துக்கள் எல்லா நண்பர்களுக்கும் சென்றடையட்டும் சகோ.
    வருகைக்கும் கருத்திட்டதிர்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  6. முஹம்மத் ஆஷிக் சொன்னது
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அய்யூப்,

    வலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    //மிகவும் ஆதங்கத்துடன் எழுதியுள்ளீர்கள். இதற்கான தீர்வு, மக்கள் ஒவ்வொருவரும் தம்மைச்சுற்றி பசித்து இருப்போருக்கு தர்மம் செய்து அவர்களின் வயிறை நிறையவைத்தபின்தான் தான் புசித்து வாழ்தல் வேண்டும் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மனிதநேயம் கூட இல்லாமல் வாழ்ந்தால் அவர் மனிதரே அல்ல எனலாம்.//

    அருமையான எடுத்துக்காட்டுடன் சொல்லி உள்ளிர்கள் சகோ.

    நபி(ஸல்)அவர்கள் சொன்ன வழியில் நாம் வாழ்வோமேயானால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.

    வருகைக்கும் கருத்திர்க்கும் ந்னறி சகோ.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோ அய்யூப் அவர்களுக்கு

    அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
    முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

    ”எந்த விருந்தில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு,ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களோ அந்த விருந்தின் உணவே மிக மோசமான உணவாகும்.”
    (நூல்:புகாரி முஸ்லிம்)

    இது போன்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு சாப்பிட்டால் அவர்களே சிறந்தவர்கள்.

    //எத்தனை லக்ஷ்மிகள் பசியால் மாண்டு மண்ணறைக்கு சென்றிருப்பார்கள்?//

    உண்மைதான் சகோ

    வீடியோவை பார்த்த போது மனதுக்குள் என்னமோ செய்தது மனசு வலிக்குது சகோ

    ReplyDelete
  8. //ஹைதர் அலி said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோ அய்யூப் அவர்களுக்கு//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.ஹைதர்.

    //
    அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
    முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

    ”எந்த விருந்தில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு,ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களோ அந்த விருந்தின் உணவே மிக மோசமான உணவாகும்.”
    (நூல்:புகாரி முஸ்லிம்)//

    அழகான முறையில் ஹதிஷ்களை தொகுத்தமைக்கு நன்றி சகோ.

    நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை முறையை ஒவ்வொருவரும் பேனி நடந்தாலே போதும் வாழ்க்கையின் அர்த்தம் புறியும்.

    வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. ஸலாம் சகோ அந்நியன்,..
    மனதை மிகுந்த வேதனையுறச்செய்துவிட்டது இந்த குறும்படம்.இது நிதர்சனம்...அன்றாடம் நடக்கும் ஒன்று..

    ஸகாத்தை அடுத்து என்னால் இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவுகிறேன்.மேலும் உதவிட வல்லோன் நம் கைகளில் செல்வத்தை விஸ்தீரனப்படுத்த போதுமானவன்.

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  10. //RAZIN ABDUL RAHMAN said...
    ஸலாம் சகோ அந்நியன்,..
    மனதை மிகுந்த வேதனையுறச்செய்துவிட்டது இந்த குறும்படம்.இது நிதர்சனம்...அன்றாடம் நடக்கும் ஒன்று..

    ஸகாத்தை அடுத்து என்னால் இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவுகிறேன்.மேலும் உதவிட வல்லோன் நம் கைகளில் செல்வத்தை விஸ்தீரனப்படுத்த போதுமானவன்.

    அன்புடன்
    ரஜின்//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ரஜின்.

    உங்களின் கருத்திர்க்கும் வருகைக்கும் நன்றி.
    எல்லோருக்கும் இறைவன் உங்களின் ஆசையைப் போன்று தந்தருள்வனாக.

    ஆமின்

    ReplyDelete