Thursday, September 22, 2011

பெற்ற குழந்தையை உயிரோடு திண்ணும் அப்பா !!!


தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசியான இக்கொடியவன் தாம் பெற்ற பிள்ளையை உயிரோடு கடித்து சாப்பிட்டுள்ளான்.

பெற்ற மனம் கல்லாகி
குற்றமெனும் தெரிந்தும்
கற்றதறியா பிஞ்சுதனை
கடித்து குதறும் காட்சியினை பார்.


மழை துளி விழுந்தும்
மலர் பல நனைந்தும்
மங்காத மண் பூமியில்
கொடூரத்தின் சாட்சியினை பார்.


பசிக்காத வயிறும்
ருசிக்காத நாவும்
இக்கொடுஞ் செயலை 
செய்வதை நன்றாக பார்.


என் இதயம் கிழித்து
குரல் வளையை நெரித்து
என் குருதி குடித்த
கொலைகாரனை உற்றுப் பார்.


நெற்றி முத்தமிட்டு
வெற்றி என சத்தமிட்டு
எனை சுற்றி நீ வருவாய் என
காத்திருந்தேனே அப்பா.


கன்னத்தில் என் வண்ணத்தில்
என்ன குறை கண்டாயோ
மது கிண்ணத்தில் பொடியாக்கி
குடிக்கிறியே நான் பிறந்தது தப்பா?


உதிர்ந்த முத்தங்களும்
உணர்வற்ற சத்தங்களும்
உணர்ச்சிகள் இல்லாமல்
அழுத்து போகவில்லையே.


கறை படிந்த உன் உள்ளங்களை
சிறை பிடிக்க வேண்டும் என
பறை போட்டு சொல்லவும்
என் உயிரும் இல்லையே.


என் நினைவுகளை நீ சுமந்து
பின் விளைவுகளை நீ அடைந்து
மனித கழிவை திண்ணும்
நாளும் உனக்கு வராதோ?


உன் உயிரோடு உயிராக
நான் இல்லாமலும்...
உன் உயிருக்கு உறவாக 
ஆள் இல்லாமலும்...
உன் உயிர் இருக்கும் வரை
உணர்ச்சியின் வலிகள் தொடரட்டும்.44 comments:

 1. பதிவ போட்டீங்க சரி, அந்த போட்டோவையும் போடனுமா.. சாப்பிட போற நேரம் நைனா

  ReplyDelete
 2. இன்னும் மூன்று போட்டோக்கள் இருக்கு சகோ.

  அதை இடுவதற்கு மனம் வரவில்லை அதான் ஒரே ஒரு போட்டோ மட்டும் இணைத்தேன்.

  எழுத்தைவிட போட்டோவின் வலிதான் அதிகம்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 3. கடைசிப்படம் போல கண்களில் ரத்தம் தான் வருகிறது.மற்ற படங்களை வெளியிடாததர்க்கு நன்றி!

  ReplyDelete
 4. வாங்க கோகுல் வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 5. அசோ. இப்டிலாம் கூட இருப்பாங்களா சகோ...

  ReplyDelete
 6. எழுத்திலும் படத்திலும் வலி தெரிகிறது நண்பரே...ரெவெரி

  ReplyDelete
 7. //கார்பன் கூட்டாளி said...//
  அச்..சச்சோ இப்படிலாம் கூட இருப்பார்களோ சகோ?//

  இருக்கிறானே சகோ.

  வருகைக்கும் உங்கல் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 8. //ரெவெரி said...
  எழுத்திலும் படத்திலும் வலி தெரிகிறது நண்பரே//


  பொருத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 9. என்ன குடுமை அப்பா
  இப்பிடியும் இருக்கிறாங்களா

  ReplyDelete
 10. //மதுரன் said...
  என்ன குடுமை அப்பா
  இப்பிடியும் இருக்கிறாங்களா?//

  இருக்கிறதுனாலேதானே போட்டிருக்கேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 11. கொடூரம்,கொடுமை.அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது.

  ReplyDelete
 12. //R.Elan. said...
  கொடூரம்,கொடுமை.அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது.//

  கடவுளுக்குத்தான் வெளிச்சம் சகோ.

  எப்படி கொல்ல மனம் வந்தது என்று தெரியவில்லையே.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  போட்டோ பார்த்தவுடன் மன ரெம்பவும் வலித்து விட்டன சகோ

  யா அல்லாஹ்... இது என்ன கொடுமை.

  மனித ரூபத்தில் உலாவிவரும் மிருக ஜென்மங்கள்.

  அதுவும் பெற்ற பிள்ளையை சுபுஹானல்லாஹ்...

  ReplyDelete
 14. கடவுளே... என்ன படமதூஊஊஊஊஊஊஊஊஊ என்னால மேலே படிக்கவே முடியேல்லை அந்நியன்.... பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உப்படிப் படமெல்லாம் போடாதீங்க.. உடம்பெல்லாம் என்னவோ செய்யுது.

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  புகைப்படத்தை பார்த்தவுடன் உளவியல்ரீதியாக மனதை ரொம்ப பாதிக்கிறது சகோ.

  இருந்தாலும் இதுபோன்ற பதிவுகளுக்கு ஆதரம் கண்டிப்பாக தேவை

  ஆனாலும் இந்த புகைப்படம் மனதை ரொம்ப தான் பாதிக்கிறது.

  ReplyDelete
 16. பதறடிச்சிட்டீங்க...

  ReplyDelete
 17. ச்சே.... மிருகங்கள் மனித உருவில் உலாவிக்கிட்டு தான் இருக்காய்ங்க போல... என்ன கொடுமையா இது

  ReplyDelete
 18. இதைபோன்ற பதிவுகளளை கொஞ்சம் தவிர்க்கலாமே சகோதரா

  ReplyDelete
 19. மாப்ள என்ன கொடுமையா இது....மனித மிருகம்யா அவன்!

  ReplyDelete
 20. எங்காவது கோடியில் ஒன்றாக நடக்கும் இப்படியான நிகழ்வுகளைப் பதிவிடுவதன் மூலம் ஆகப் போவது ஒன்றும் இல்லை அயுப். இது விழிப்புணர்வுப் பதிவு அல்ல.

  கட்டாயம் போட்டுத்தான் ஆகவேண்டுமானால்... முதல் படமாக இரண்டாவது படத்தைப் போட்டு ஒரு எச்சரிக்கையையும் போட்டிருக்கலாம்.

  ;(((((

  ReplyDelete
 21. கர்ர்ர்ர்ர்ர் ;(((
  என் டாஷ்போர்ட்ல வேற தெரியுது. கொடுமையா இருக்கு. Sorry, நான் பின்தொடர்வதை நிறுத்துகிறேன் அயுப்.

  ReplyDelete
 22. //இமா said...
  எங்காவது கோடியில் ஒன்றாக நடக்கும் இப்படியான நிகழ்வுகளைப் பதிவிடுவதன் மூலம் ஆகப் போவது ஒன்றும் இல்லை அயுப். இது விழிப்புணர்வுப் பதிவு அல்ல.

  கட்டாயம் போட்டுத்தான் ஆகவேண்டுமானால்... முதல் படமாக இரண்டாவது படத்தைப் போட்டு ஒரு எச்சரிக்கையையும் போட்டிருக்கலாம்.

  ;(((((//

  இப்படியெல்லாம் எதிர்ப்பு வரும்னு நினைக்கவில்லை சகோ.

  மூன்று போட்டோக்களில் இது ஒன்றுதான் ஆட் செய்தேன் மற்றவை எல்லாம் திண்பது போன்ற காட்சியாக இருப்பதால் டிலேட் செய்து விட்டேன்.

  இப்பதிவின் மூலம் நமக்கு ஒன்னும் ஆகப் போவதில்லைதான் ஆனால் இப்படியுமா மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்று நாமும் அக்கயவனை திட்டுவதற்கோ அல்லது சாபம் இடுவதற்கோ வழி வகுக்கும் அல்லவா ?

  அதன் மூலமாவது அக்குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  ReplyDelete
 23. //ஆயிஷா அபுல். said...
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  போட்டோ பார்த்தவுடன் மன ரெம்பவும் வலித்து விட்டன சகோ

  யா அல்லாஹ்... இது என்ன கொடுமை.

  மனித ரூபத்தில் உலாவிவரும் மிருக ஜென்மங்கள்.

  அதுவும் பெற்ற பிள்ளையை சுபுஹானல்லாஹ்...//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

  இது போன்ற கொடுமைகள் எந்த மனிதருக்கும் வரக் கூடாது என துஆ செய்வோமாக.

  மனித ரூபத்தில் உலா வரும் மிருகங்கள் என்பது நூற்றுக்கு நூறு கரெக்ட் சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 24. //athira said...
  கடவுளே... என்ன படமதூஊஊஊஊஊஊஊஊஊ என்னால மேலே படிக்கவே முடியேல்லை அந்நியன்.... பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உப்படிப் படமெல்லாம் போடாதீங்க.. உடம்பெல்லாம் என்னவோ செய்யுது.//

  ஓகே..சகோ.

  இனி வரும் பதிவுகளில் இது போன்ற படங்களை தவிற்கிறேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 25. //ஹைதர் அலி said...
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  புகைப்படத்தை பார்த்தவுடன் உளவியல்ரீதியாக மனதை ரொம்ப பாதிக்கிறது சகோ.

  இருந்தாலும் இதுபோன்ற பதிவுகளுக்கு ஆதரம் கண்டிப்பாக தேவை

  ஆனாலும் இந்த புகைப்படம் மனதை ரொம்ப தான் பாதிக்கிறது.//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

  இதற்கு ஆதரமாக பத்திரிக்கை மட்டும்தான் என்னிடம் இருக்கு சகோ.

  ஒரு வலை பூவில் கருவின் குழந்தையை சீனர்கள் சமைத்து சாப்பிடுவதையும் மற்றொரு வலை பூவில் காட்டில் கொரியர்கள் ஒரு பிணத்தை அறுத்து கை தனியா கால் தனியா சாப்பிடுவதையும் போட்டுள்ளார்கள் என்பதால் நானும் இதை போட்டேன் சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 26. //Philosophy Prabhakaran said...
  பதறடிச்சிட்டீங்க...//

  பேப்பரை பார்த்ததுமே அதிர்ச்சிதான் பாஸ்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 27. //மாய உலகம் said...
  ச்சே.... மிருகங்கள் மனித உருவில் உலாவிக்கிட்டு தான் இருக்காய்ங்க போல... என்ன கொடுமையா இது//

  சரியாக சொன்னிர்கள் ராஜேஷ்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 28. //மு.ஜபருல்லாஹ் said...
  இதைபோன்ற பதிவுகளளை கொஞ்சம் தவிர்க்கலாமே சகோதரா//

  ஓகே சகோ...

  இனி இது போன்ற பதிவுகள் வராது.
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 29. //விக்கியுலகம் said...
  மாப்ள என்ன கொடுமையா இது....மனித மிருகம்யா அவன்!//

  வாங்க மாப்ளே.

  சரியாக சொன்னிர்கள் அவன் ஒரு மிருகம்தான்.
  வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி மாப்ளே.

  ReplyDelete
 30. //இமா said...
  கர்ர்ர்ர்ர்ர் ;(((
  என் டாஷ்போர்ட்ல வேற தெரியுது. கொடுமையா இருக்கு. Sorry, நான் பின்தொடர்வதை நிறுத்துகிறேன் அயுப்.//

  பரவா இல்லை சகோ.

  உங்களுக்கு அந்நியன் 2 தளம் பிடிக்க வில்லையென்றால் பின் தொடர்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  காரணம் அமைதி பூங்காவாக திகழும் உங்கள் வலைப் பூவிற்கு எனது எனது தளம் இடையூராக இருக்கின்றது பசுமை தெரியும் பக்கங்களில் ரத்தம் தெரியக் கூடாதுதான்.

  மன வருத்தம்லாம் படமாட்டேன் சகோ.

  நிறுத்திக் கொள்ளுங்கள் அப்பப்ப வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 31. படத்தை பார்க்கவே மனம் வலிக்கிறது ..இந்த நினைவு இரவிலும் இனி எத்தனை நாளைக்கு கனவாக வரப்போகிரதோ :-(

  நினை(படி)க்கவே பிடிக்க வில்லை. :-(
  ஸாரி

  ReplyDelete
 32. தலைப்பையும் போட்டோவையும் பார்த்துவிட்டு ஒரு தாயாக இருந்து என்னாள் இந்த பதிவை படிக்க மனம் வரவில்லை...

  ReplyDelete
 33. நெஞ்சை நெகிய வைக்கிற நிகய்ச்சி நேரில் கொண்டு வந்திருகிர்கள் அருமை

  ReplyDelete
 34. நெஞ்சை நெகிய வைக்கிற நிகய்ச்சி நேரில் கொண்டு வந்திருகிர்கள் அருமை

  ReplyDelete
 35. நெஞ்சை நெகிய வைக்கிற நிகய்ச்சி நேரில் கொண்டு வந்திருகிர்கள் அருமை

  ReplyDelete
 36. //ஜெய்லானி said...
  படத்தை பார்க்கவே மனம் வலிக்கிறது ..இந்த நினைவு இரவிலும் இனி எத்தனை நாளைக்கு கனவாக வரப்போகிரதோ :-(

  நினை(படி)க்கவே பிடிக்க வில்லை. :-(
  ஸாரி//

  எதுக்கு பாஸ் ஸாரி....?

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 37. //சிநேகிதி said...
  தலைப்பையும் போட்டோவையும் பார்த்துவிட்டு ஒரு தாயாக இருந்து என்னாள் இந்த பதிவை படிக்க மனம் வரவில்லை...//

  மன்னிக்கவும்.

  பெண்கள் வர தடை என்று எதாவது முன் அறிவிப்பு செய்யாமல் பதிவை போட்டு விட்டேன் சகோ.

  நன்றி.

  ReplyDelete
 38. //mohan said...
  நெஞ்சை நெகிய வைக்கிற நிகய்ச்சி நேரில் கொண்டு வந்திருகிர்கள் அருமை//

  நன்றி சகோ.

  சிலருக்கு பிடிக்க வில்லை ஒரு சிலருக்கு பிடிக்கின்றது இதுதான் உலகம் மற்றும் வாழ்க்கை.

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete
 40. கவலைப்படாதீங்க அந்நியன், உங்கள் பதிவில் எக்குறையும் இல்லை. எப்பவும் நல்லதை மட்டுமே சொல்லாமல், இப்படியும் உலகில் நடக்கிறது எனக் காட்டியிருக்கிறீங்க... பதிவு நல்ல பதிவுதான், ஆனால் அந்தப் படம்தான் எல்லோர் மனதையும் என்னவோ போலாக்கிவிட்டது. மற்றும்படி ஏதும் குறையில்லை.

  ReplyDelete
 41. அஸ்ஸலாமு அலைக்கும்
  பார்த்ததும் குடலே கலங்குது.

  பயங்கரமான படங்கள் செய்திகள் பார்க்க ப்டிக்க மனம் இடம் கொடுக்காது ரொமப் இள்கிவிடும், கண்கள் கடலாகிடும்

  ReplyDelete
 42. //athira said...
  கவலைப்படாதீங்க அந்நியன், உங்கள் பதிவில் எக்குறையும் இல்லை. எப்பவும் நல்லதை மட்டுமே சொல்லாமல், இப்படியும் உலகில் நடக்கிறது எனக் காட்டியிருக்கிறீங்க... பதிவு நல்ல பதிவுதான், ஆனால் அந்தப் படம்தான் எல்லோர் மனதையும் என்னவோ போலாக்கிவிட்டது. மற்றும்படி ஏதும் குறையில்லை.//

  நன்றி சகோ.

  ReplyDelete
 43. //Jaleela Kamal said...
  அஸ்ஸலாமு அலைக்கும்
  பார்த்ததும் குடலே கலங்குது.

  பயங்கரமான படங்கள் செய்திகள் பார்க்க ப்டிக்க மனம் இடம் கொடுக்காது ரொமப் இள்கிவிடும், கண்கள் கடலாகிடும்//

  வ அலைக்கும் வஸ்ஸலாம்.

  நன்றி சகோ.

  ReplyDelete
 44. விண்டோஸ் கணினியில் ரகசியமான, மிக முக்கியமான கோப்புகளை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்படி எப்படி என்பதையும், மறைத்த கோப்புகளையும், போல்டர்களையும் மீண்டும் தெரிய வைப்படி எப்படி என்பதையும் தெளிவாக எளியமுறையில் கற்றுக்கொடுக்கும் பதிவு இது. முழுவதுமாக கற்க சுட்டி http://tinyurl.com/k6lv4g2

  ReplyDelete