Wednesday, September 7, 2011

டெல்லியில் குண்டு வைத்தது யார்?



டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். 65 பேர் காயம் அடைந்தனர். 

இந்த குண்டு வெடிப்புக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பாராளுமன்றம் இன்று கூடியதும்,சபாநாயகர் மீராகுமார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முடிந்தது வேலை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பம் நாதியற்று நிற்கின்றது அந்நிலையில் உணரப்பட்ட வலியும் மரணித்து மண்ணாகி போயின காயங்கள் பட்டு அக்காயத்திற்கு மருந்துகளை இட்டு வரும் தருவாயில் மற்றொரு குண்டு வெடிப்பு !!!
உள்துறை அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு கமிட்டியும் அவசரம் அவசரமாக ஒரு புகைப் படத்தை வெளியிட்டு இவனாக கூட இருக்கலாம் என்று இறந்து போனவனின் புகைப் படத்தை காட்டி இந்திய மக்கள்களை முட்டாளாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்,மும்பையில் நடந்த குண்டு வெடிப்பே இதுவரையிலும் கண்டு பிடிக்காமல் இருக்கும் நிலையில் இன்னொரு துர திருஷ்ட்டம் வந்திருப்பதை எந்த ஒரு ஆன்மாவும் மன்னிக்காது.

பிரதமர் தொடங்கி அனைத்து தலைவர்களின் கண்டனமும் கடுதாசியும் பத்திரிக்கையில் வந்தாச்சு ஆனால் இறந்து போனவரின் உயிர்தான் வரவில்லை இந்திய தேசிய கொடியை நெஞ்சில் சுமந்து கொண்டு ஒவ்வொரு இந்தியனும் உலா வரும் நிலையில் இரக்கமற்று கொன்னு குவிக்க எப்படி மனம் வந்தது என்றுதான் புறியவில்லை!
அரசியல் முடிவு எடுக்கப்படவேண்டிய நேரமிது இல்லையேல் மிஞ்சிய இந்தியாவும் சீரழிந்து போகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவைகளை யார் செய்கிறது?

பாக்கிஸ்த்தானை குற்றம் சுமத்தும் நாம் ஏன் அநாட்டுடன் உறவை வைத்திருக்க வேண்டும்?
சீனாவுடன் கூட்டு அமர்த்தி நம்மை குத்தி விடுவார்கள் என்ற பயமா?
இல்லை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறி நமக்கு தொல்லை தருவார்கள் என்ற பீதியா?
நாம் உறவை வைத்துக் கொண்டே இத்தனையயும் சந்தித்து வருகின்றோம் பிறகு எதற்கு அவர்களுடன் நமக்கு நட்பு?
தீவிராவாத இயக்கங்களும் அதனை வளர்க்கும் மனித மிருகங்களும் தண்டிக்கப் படகூடியவர்கள் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முன்பே மக்கள் முன்பு கொல்லப்பட வேண்டும் காரணம்,வழக்குகளும் விசாரனைகளும் அவர்களை காப்பாற்றிவிடும் அதற்க்காகத்தான் வழக்கறிஞர் மஹான்கள் காத்திருக்கின்றனர் அவர்களின் வேலையோ அவர்களின் வாதத்திறமையால் நல்லதையும் கெட்டதாக நிரூபிக்கவேண்டும் கெட்டதையும் நல்லதாக நிரூபிக்கவேண்டும் இத மாயஜால வித்தையை கற்று வைத்திருக்கும் இவர்கள் குற்றவாளியை வெளியில் கொண்டு வருவதற்கு செத்த பிணத்தை கூட திண்ண தயங்க மாட்டார்கள்.

தீவிரவாதம் முற்றிலுமாய் அழிக்கப் படவேண்டும் அதற்கு வழி வகுத்து கொடுக்கும் ஆசாமிகளும் அரசியல் வாதிகளும் தண்டிக்கபட வேண்டும் இல்லையேல் நாட்டின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும்.
பாக்கிஸ்த்தான் முஸ்லிம் செய்யும் குற்றத்திற்கு இந்திய முஸ்லிம் எப்படி பொறுப்பு ஏற்ப்பான்?
இஸ்லாம் என்று தம்மை தம்பட்டம் அடித்து கொண்டு திமிர் பிடித்து அலையும் தீவிரவாதிகளையும் ஹிந்துத்துவா நாங்கள்தான் என்று பறைசாட்டி திறியும் போலி காவிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

குண்டு வெடிப்பில் இறந்த ஆன்மாக்களுக்கும் அவ்வான்மாவின் உறவுகளுக்கும் எனது அனுதாபங்கள்.
காணொளியில் நீங்கள் பார்த்தது பாக்கிஸ்த்தான் அப்பாவிகளை தாலிபான் தீவிரவாதிகள் கொல்லும் காட்சிதான் இப்போ தெறிகிறதா தீவிரவாதி என்றால் எப்படி இருப்பார்கள் என்று?
கொல்லுகிறவனும் முஸ்லிம்தான் கொல்லப் படுகிறவனும் முஸ்லிம்தான்.
தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை இதை புறியாமல் நடப்பவர்கள் ஒரு போதும் முஸ்லிமாக இருக்கமாட்டார்கள்.

வாழ்க இந்தியா.







16 comments:

  1. //பாக்கிஸ்த்தானை குற்றம் சுமத்தும் நாம் ஏன் அநாட்டுடன் உறவை வைத்திருக்க வேண்டும்?
    சீனாவுடன் கூட்டு அமர்த்தி நம்மை குத்தி விடுவார்கள் என்ற பயமா?
    இல்லை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறி நமக்கு தொல்லை தருவார்கள் என்ற பீதியா?
    நாம் உறவை வைத்துக் கொண்டே இத்தனையயும் சந்தித்து வருகின்றோம் பிறகு எதற்கு அவர்களுடன் நமக்கு நட்பு? ///

    அமெரிக்கா அண்ணண் ஓகே சொல்லாத வரை நட்புதான் .அவர் தலைஅயை ஆட்டினா உடனே சண்டைதான்
    இன்னும் சின்ன பிள்ளையவே இருக்கீங்களே

    ReplyDelete
  2. //கொல்லுகிறவனும் முஸ்லிம்தான் கொல்லப் படுகிறவனும் முஸ்லிம்தான்.//
    பாகிஸ்தானியிடம் நான் அடிக்கடி கேக்கும் கேள்வியே இதுதான் .
    அவர்கள் சொல்லும் பதில் இந்தியாவும் , தாலிபான்களும் (ஆஃப்கானி) ச்ந்ந்ர்ந்து செய்யும் செயல் இது. அதில் ஒரு சில உண்மைகளும் இருக்கு .

    என்ன் தான் சாக்கு போக்கு சொன்னாலும் மனசு கேட்பதில்லையே என்ன செய்ய.? :-(

    ReplyDelete
  3. மதிப்பிடமுடியாத மனித உயிரை பறிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

    தீவிரவாதத்தால் இதுவரை யார், எதனை சாதிக்கமுடிந்தது?

    இவர்களின் மிருகத்தன்மையை இவர்கள் எப்போதுதான் உணர்வார்கள்?

    ReplyDelete
  4. அவசரப்பட்டு எழுதிவிட்டீர்களோன்னு நினைக்கிறேன்...நாளை சீக்கிய தீவிரவாதிகள் என்பார்கள்...

    ரெவெரி

    ReplyDelete
  5. யாரு குண்டு வைத்தாலும் பரிதாபமாக உயிர் இழப்பது அப்பாவி பொதுமக்கள் தானே. என்ன ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.

    ReplyDelete
  6. பாதுகாப்பில் குறைபாடு இருக்காம் பிரதமர் சொல்றாரு......


    மும்பை வெடிகுண்டுக்கு அப்பறமுமா இவனுங்க திருந்தல?????

    ReplyDelete
  7. நம்மீது ஸலாம் நிலவட்டுமாக.

    இந்த குண்டு வெடிப்புக்கும் என் வன்மையான கண்டனங்கள்.

    உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் மற்றும் காயமடைந்தோருக்கும் என் வருத்தம் மிகுந்த ஆழ்ந்த அனுதாபங்கள்.


    "ஆதாரம் இல்லை என்றாலும் 'பெருவாரியான இந்திய மக்கள் ஆசைக்கிணங்க' தூக்கு தண்டனை வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தால் 'அறிவிக்கப்பட்ட' அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று ஆசைப்பட்டால்... அதற்காக குண்டுகள் வைக்க வேண்டாம்"

    ----என்று இந்த 'ஈ மெயில் பயங்கரவாதிகளை' நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.

    இப்படி குண்டுகள் வைத்து அப்பாவி பொதுமக்களை சாகடிக்கும் இவர்களை... பெருவாரியான மக்கள் விருப்பத்திர்கிணங்க தூக்கில் போட வேண்டும் என்று அரசுக்கும் நீதி மன்றத்துக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ReplyDelete
  8. தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை//

    u r right

    ReplyDelete
  9. அண்ணன் ஜெய்லானி அவர்களுக்கு.

    என்ன செய்ய ?
    விபரிதமான செயல்கள் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது சின்னப் பிள்ளைத்தனமான கேள்விதான் கேட்க தோன்றுகிறது.

    வருகைக்கும் உங்களின் அன்பு இரண்டு கருத்திற்க்கும் நன்றி அண்ணே.

    ReplyDelete
  10. அண்ணன் ஜபருல்லாஹ் அவர்களுக்கு.

    உயிரை பறிக்கிற உரிமை இறைவனை தவிர வேர யாருக்கும் கிடையாது.

    தீவிரவாதத்தால் மக்கள்கள் அழிந்தார்களே தவிர வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

    அவர்களின் மிருக தன்மையை உணரும் நாள் வெகு விரைவில்....

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணே.

    ReplyDelete
  11. சகொதரர் ரெவெரி அவர்களுக்கு...

    இந்தியாவில் குண்டு எங்கு வெடித்தாலும் பலி முஸ்லிம்கள் மீதுதான் அதை சீக்கியர்கள் வைத்தாலும் சரி அல்லது மோடி குருப் வைத்தாலும் சரி அல்லது பாக்கிஸ்தானி வைத்தாலும் சரி.

    மனதளவில் நாங்கள் ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கின்றோம் பொது வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை இரண்டு அர்த்தத்தில் பேசக்கூடிய பேச்சை கேட்டு மனது வெம்பி கண்ணீரை வர வைக்கின்றது.

    இது போன்று செயல்கள் நடக்ககூடாது என்று நாங்கள் இறைவனிடம் அன்றாடம் அழுது கேட்கின்றோம்.

    வருகைக்கும் கருதிற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  12. லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு.

    நீங்கள் சொல்லுவதும் சரிதான் அரசியல் வாதிகள் உயிர் இழக்காததினால் உயிரின் வலி அவர்களுக்கு தெரியவில்லை போனது அப்பாவிகளின் உயிர்தானே.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.

    ReplyDelete
  13. தங்கை ஆமினா அவர்களுக்கு.

    அவரை எப்படி பாதுகாத்து கொள்ள துரித நடவடிக்கை எடுக்கின்றாரோ அது போல பொது மக்கள்களின் பாதுகாப்பிற்கு ஒரு பத்து சதவிகிதமாவது நடவடிக்கை எடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  14. சகோ ஆஸிக் அவர்களுக்கு.

    விஷமிகளின் துண்டு பிரச்சாரம்தான் என்னை இந்த பதிவை எழுத வைத்துள்ளது.

    உங்களுடைய கருத்திற்கு அதிக மேல் கருத்து தேவை இல்லைனு நினைக்கிறேன் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்கள் சொல்லி விட்டிர்கள்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. சக்தி சார் அவர்களுக்கு.

    உங்களுடைய ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  16. இப்படி செய்திகளை படித்தாலே ரொம்ப கழ்டமா இருக்கு



    //தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை//

    கண்டிப்பாக

    ReplyDelete