டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். 65 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பாராளுமன்றம் இன்று கூடியதும்,சபாநாயகர் மீராகுமார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
முடிந்தது வேலை.
கொல்லப்பட்டவர்களின் குடும்பம் நாதியற்று நிற்கின்றது அந்நிலையில் உணரப்பட்ட வலியும் மரணித்து மண்ணாகி போயின காயங்கள் பட்டு அக்காயத்திற்கு மருந்துகளை இட்டு வரும் தருவாயில் மற்றொரு குண்டு வெடிப்பு !!!
உள்துறை அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு கமிட்டியும் அவசரம் அவசரமாக ஒரு புகைப் படத்தை வெளியிட்டு இவனாக கூட இருக்கலாம் என்று இறந்து போனவனின் புகைப் படத்தை காட்டி இந்திய மக்கள்களை முட்டாளாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்,மும்பையில் நடந்த குண்டு வெடிப்பே இதுவரையிலும் கண்டு பிடிக்காமல் இருக்கும் நிலையில் இன்னொரு துர திருஷ்ட்டம் வந்திருப்பதை எந்த ஒரு ஆன்மாவும் மன்னிக்காது.
பிரதமர் தொடங்கி அனைத்து தலைவர்களின் கண்டனமும் கடுதாசியும் பத்திரிக்கையில் வந்தாச்சு ஆனால் இறந்து போனவரின் உயிர்தான் வரவில்லை இந்திய தேசிய கொடியை நெஞ்சில் சுமந்து கொண்டு ஒவ்வொரு இந்தியனும் உலா வரும் நிலையில் இரக்கமற்று கொன்னு குவிக்க எப்படி மனம் வந்தது என்றுதான் புறியவில்லை!
அரசியல் முடிவு எடுக்கப்படவேண்டிய நேரமிது இல்லையேல் மிஞ்சிய இந்தியாவும் சீரழிந்து போகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவைகளை யார் செய்கிறது?
பாக்கிஸ்த்தானை குற்றம் சுமத்தும் நாம் ஏன் அநாட்டுடன் உறவை வைத்திருக்க வேண்டும்?
சீனாவுடன் கூட்டு அமர்த்தி நம்மை குத்தி விடுவார்கள் என்ற பயமா?
இல்லை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறி நமக்கு தொல்லை தருவார்கள் என்ற பீதியா?
நாம் உறவை வைத்துக் கொண்டே இத்தனையயும் சந்தித்து வருகின்றோம் பிறகு எதற்கு அவர்களுடன் நமக்கு நட்பு?
தீவிராவாத இயக்கங்களும் அதனை வளர்க்கும் மனித மிருகங்களும் தண்டிக்கப் படகூடியவர்கள் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முன்பே மக்கள் முன்பு கொல்லப்பட வேண்டும் காரணம்,வழக்குகளும் விசாரனைகளும் அவர்களை காப்பாற்றிவிடும் அதற்க்காகத்தான் வழக்கறிஞர் மஹான்கள் காத்திருக்கின்றனர் அவர்களின் வேலையோ அவர்களின் வாதத்திறமையால் நல்லதையும் கெட்டதாக நிரூபிக்கவேண்டும் கெட்டதையும் நல்லதாக நிரூபிக்கவேண்டும் இத மாயஜால வித்தையை கற்று வைத்திருக்கும் இவர்கள் குற்றவாளியை வெளியில் கொண்டு வருவதற்கு செத்த பிணத்தை கூட திண்ண தயங்க மாட்டார்கள்.
தீவிரவாதம் முற்றிலுமாய் அழிக்கப் படவேண்டும் அதற்கு வழி வகுத்து கொடுக்கும் ஆசாமிகளும் அரசியல் வாதிகளும் தண்டிக்கபட வேண்டும் இல்லையேல் நாட்டின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும்.
பாக்கிஸ்த்தான் முஸ்லிம் செய்யும் குற்றத்திற்கு இந்திய முஸ்லிம் எப்படி பொறுப்பு ஏற்ப்பான்?
இஸ்லாம் என்று தம்மை தம்பட்டம் அடித்து கொண்டு திமிர் பிடித்து அலையும் தீவிரவாதிகளையும் ஹிந்துத்துவா நாங்கள்தான் என்று பறைசாட்டி திறியும் போலி காவிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
குண்டு வெடிப்பில் இறந்த ஆன்மாக்களுக்கும் அவ்வான்மாவின் உறவுகளுக்கும் எனது அனுதாபங்கள்.
காணொளியில் நீங்கள் பார்த்தது பாக்கிஸ்த்தான் அப்பாவிகளை தாலிபான் தீவிரவாதிகள் கொல்லும் காட்சிதான் இப்போ தெறிகிறதா தீவிரவாதி என்றால் எப்படி இருப்பார்கள் என்று?
கொல்லுகிறவனும் முஸ்லிம்தான் கொல்லப் படுகிறவனும் முஸ்லிம்தான்.
தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை இதை புறியாமல் நடப்பவர்கள் ஒரு போதும் முஸ்லிமாக இருக்கமாட்டார்கள்.
வாழ்க இந்தியா.