Showing posts with label love sad song. Show all posts
Showing posts with label love sad song. Show all posts

Saturday, February 19, 2011

காதல் தோற்றால் கல்லறையா ?



இந்தப் பாட்டை ரசித்து கேட்டால் கண்டிப்பா உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் சுரக்கும்.

காதல் தோற்றதால் ..........
கல்லறை காண துடிக்கிராயோ!
கருவறையில் உன்னை தாங்கிய
தாயின் மனம் அறிவாயோ!
கண்ணுக்குள் வைத்து தாலாட்டும் 
தந்தையின் மனம் உணர்வாயோ!

உறவுகள் வந்து பந்தல் போட
ஊரார்கள் வந்து பூ தூவ
வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்தி வைக்க
இரு இதயம் துடித்துகொண்டிருக்கையில்
நீ உன் இதய துடிப்பை நிறுத்த
நினைப்பது நியாயமோ?

கனவுகளோடு தொடர்ந்தாய்
உன் காதல் நாட்களை
கண்ணீரோடு தொடர விடுவாயோ
உன் தாயின் மீதி நாட்களை
கனவு கண்ட உன் தாயின்
மனம் கலங்கி தவிக்கிறது
ஆசை வைத்த உன் தந்தையின்
மனம் அலுது துடிக்கிறது
கண்மணியே!

கல் நெஞ்சம் கொண்டவளா... நீ ?
காதலின் கண்கள் பார்த்து இறங்கிய
உன் இதயம்.
உன் தாய் தந்தையின்
கண்ணீர் பார்த்து இறங்காதோ?

உன் காதலன் வேறொரு
கண்மணி தேடிவிட்டான்
நீ உனக்கொரு கணவன்
தேடுவது தவறோ?

தோழியே ஒன்றை புரிந்து கொள்
கண்கள் காட்டித்தந்த உறவே காதலன்
கருவறை காட்டி தந்த உறவே
உன் தாய்தந்தை.

கலங்கியது போதும்.. கண்கள் துடைத்திடு
இன்னும் உன் வாழ்க்கை தொடரவில்லை
முடிக்க நினைக்காதே.

ஈன்றெடுத்த ஈர் உயிரின் உள்ளம்
உணர்ந்திடு காட்டி தரும் கணவனோடு
கண்கள் கலந்திடு உனக்கும் வாழ்வுண்டு
இந்த பாரில் வாழ்ந்து பார்த்திடு..

சல்மா.


என் அன்பு நெஞ்சங்களே இது நான் படைத்த படைப்பு அல்ல, நண்பர்கள் மெயிலில் எனக்கு அனுப்பியது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது கவிதைக்கு மேலே வந்து குவிந்து கிடக்கின்றது வலைப் பூவில் இணைப்பதற்கு.

ஆனால் எனக்கு என்ன பயம் என்றால் பயவுல்லைக எங்காவது களவாண்டு நமக்கு அனுப்பியிருந்தால் நம்மலின் கதி என்னாவது ?

அதான் எதையுமே பிரசுரிக்க வில்லை இந்தக் கவிதை சொந்த படைப்புதான் என்று உறுதி மொழிக்குப் பிறகு படைத்தவரின் பெயரோடு இதில் இணைக்கிறேன்.தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.