Saturday, February 19, 2011

காதல் தோற்றால் கல்லறையா ?



இந்தப் பாட்டை ரசித்து கேட்டால் கண்டிப்பா உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் சுரக்கும்.

காதல் தோற்றதால் ..........
கல்லறை காண துடிக்கிராயோ!
கருவறையில் உன்னை தாங்கிய
தாயின் மனம் அறிவாயோ!
கண்ணுக்குள் வைத்து தாலாட்டும் 
தந்தையின் மனம் உணர்வாயோ!

உறவுகள் வந்து பந்தல் போட
ஊரார்கள் வந்து பூ தூவ
வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்தி வைக்க
இரு இதயம் துடித்துகொண்டிருக்கையில்
நீ உன் இதய துடிப்பை நிறுத்த
நினைப்பது நியாயமோ?

கனவுகளோடு தொடர்ந்தாய்
உன் காதல் நாட்களை
கண்ணீரோடு தொடர விடுவாயோ
உன் தாயின் மீதி நாட்களை
கனவு கண்ட உன் தாயின்
மனம் கலங்கி தவிக்கிறது
ஆசை வைத்த உன் தந்தையின்
மனம் அலுது துடிக்கிறது
கண்மணியே!

கல் நெஞ்சம் கொண்டவளா... நீ ?
காதலின் கண்கள் பார்த்து இறங்கிய
உன் இதயம்.
உன் தாய் தந்தையின்
கண்ணீர் பார்த்து இறங்காதோ?

உன் காதலன் வேறொரு
கண்மணி தேடிவிட்டான்
நீ உனக்கொரு கணவன்
தேடுவது தவறோ?

தோழியே ஒன்றை புரிந்து கொள்
கண்கள் காட்டித்தந்த உறவே காதலன்
கருவறை காட்டி தந்த உறவே
உன் தாய்தந்தை.

கலங்கியது போதும்.. கண்கள் துடைத்திடு
இன்னும் உன் வாழ்க்கை தொடரவில்லை
முடிக்க நினைக்காதே.

ஈன்றெடுத்த ஈர் உயிரின் உள்ளம்
உணர்ந்திடு காட்டி தரும் கணவனோடு
கண்கள் கலந்திடு உனக்கும் வாழ்வுண்டு
இந்த பாரில் வாழ்ந்து பார்த்திடு..

சல்மா.


என் அன்பு நெஞ்சங்களே இது நான் படைத்த படைப்பு அல்ல, நண்பர்கள் மெயிலில் எனக்கு அனுப்பியது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது கவிதைக்கு மேலே வந்து குவிந்து கிடக்கின்றது வலைப் பூவில் இணைப்பதற்கு.

ஆனால் எனக்கு என்ன பயம் என்றால் பயவுல்லைக எங்காவது களவாண்டு நமக்கு அனுப்பியிருந்தால் நம்மலின் கதி என்னாவது ?

அதான் எதையுமே பிரசுரிக்க வில்லை இந்தக் கவிதை சொந்த படைப்புதான் என்று உறுதி மொழிக்குப் பிறகு படைத்தவரின் பெயரோடு இதில் இணைக்கிறேன்.தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.




30 comments:

  1. அந்நியன், இப்பாடல் வரிகள் கண்கலங்க
    வைக்கின்றன. பெண்களுக்கு மன உறுதியைத்
    தரும் என்று நம்பலாம்.
    பகிர்வுக்கு நன்றி1

    ReplyDelete
  2. வலைச்சர அறிமுகத்தில் வந்ததற்கு
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //NIZAMUDEEN said...
    அந்நியன், இப்பாடல் வரிகள் கண்கலங்க
    வைக்கின்றன. பெண்களுக்கு மன உறுதியைத்
    தரும் என்று நம்பலாம்.
    பகிர்வுக்கு நன்றி //

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி அண்ணே !

    இந்த கவிதைக்கு சொந்தக்காரர் அற்ப்புதமாக எழுதியுள்ளார் அவர்களுக்கு நன்றிகள்.

    இந்தப் பாடலும் பச்சைக் கிளிகளின் வாழ்க்கையும் கண்ணீர் வர வைக்கின்றன.

    ReplyDelete
  4. அருமையான வரிகள், சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.

    ReplyDelete
  5. கவிதை நல்லாருக்கு அந்நியன்..

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நல்ல தொகுப்பு

    சகோ எதாவது ஆய்வுரீதியான பதிவு போடுங்களேன்

    ReplyDelete
  7. //இளம் தூயவன் said...
    அருமையான வரிகள், சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.//

    உங்கள் வருகைக்கும் அன்பு கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோதரே,எனக்கும் அப்படித் தோன்றியதுனாலேயே இக் கவிதையை இங்கு ஒட்டினேன்.

    ReplyDelete
  8. //Riyas said...
    கவிதை நல்லாருக்கு அந்நியன்..//

    ரொம்ப நன்றி ரியாஸ் பாய்.

    நீங்களோ பெரிய கவிஞர் உங்களின் வாழ்த்திற்கு ரொம்ப நன்றி கவிதைக்கு சொந்தக்காரர் வாழ்க.

    ReplyDelete
  9. /ஹைதர் அலி said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நல்ல தொகுப்பு

    சகோ எதாவது ஆய்வுரீதியான பதிவு போடுங்களேன்.//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் அண்ணே.

    என்னை வச்சு காமெடி கீமடி ஒன்னும் பண்ணலியே....ஆய்வு ரீதியான பதிவுதான் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கின்றீர்களே பிறகு எதற்கு நான் ?
    அந்த அளவிற்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லண்ணே,ஏதோ எனக்கு தெரிஞ்சதைப் போடுவேன் இல்லாவிட்டால் பின்னூட்டம் போடுவேன் அவ்வளவுதான் நம்ம பொழப்பு.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  10. ஈன்றெடுத்த ஈர் உயிரின் உள்ளம்
    உணர்ந்திடு காட்டி தரும் கணவனோடு
    கண்கள் கலந்திடு உனக்கும் வாழ்வுண்டு
    இந்த பாரில் வாழ்ந்து பார்த்திடு..


    பெற்றவர்களின் மனமறிந்து செயல் படுவதே நலம் இளம் காதலர்களே சிந்தியுங்கள் காதல் தோல்வியென்பது காலனின் அழைப்பில்லை என்பதை உணருங்கள் .....

    ReplyDelete
  11. வலைச்சர அறிமுகத்தில் வந்ததற்கு
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. கவிதை நல்லாருக்கு அந்நியன்..

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    கவிதை நல்லாருக்கு.வரிகள் அருமை.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. //தினேஷ்குமார் said...
    ஈன்றெடுத்த ஈர் உயிரின் உள்ளம்
    உணர்ந்திடு காட்டி தரும் கணவனோடு
    கண்கள் கலந்திடு உனக்கும் வாழ்வுண்டு
    இந்த பாரில் வாழ்ந்து பார்த்திடு..


    பெற்றவர்களின் மனமறிந்து செயல் படுவதே நலம் இளம் காதலர்களே சிந்தியுங்கள் காதல் தோல்வியென்பது காலனின் அழைப்பில்லை என்பதை உணருங்கள் .....//

    வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் நன்றி கவிஞரே.

    ReplyDelete
  15. //போளூர் தயாநிதி said...
    வலைச்சர அறிமுகத்தில் வந்ததற்கு
    வாழ்த்துக்கள்!//

    ரொம்ப நன்றி டாக்ட்டர் அய்யா உங்களின் சேவையும் பாராட்டக் கூடியதே.
    ஆமாம் வலைச்சரத்தில் இரண்டாம் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளேன் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  16. //ஆயிஷா said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    கவிதை நல்லாருக்கு.வரிகள் அருமை.வாழ்த்துக்கள்!//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ கருத்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  17. ஆமாங்க சல்மாவின் கவிதைகள் சில படிச்சிருக்கேன். இதுவும் அதுபோல அருமையான கவிதைதான்.எழுதியவருக்கும் பதிவில் போட்டவருகும் நன்றிகள்.

    ReplyDelete
  18. உண்மையிலே உருக்கமான பாடல்...
    கவிதையும் அருமை...

    ReplyDelete
  19. கனவுகளோடு தொடர்ந்தாய்
    உன் காதல் நாட்களை
    கண்ணீரோடு தொடர விடுவாயோ
    உன் தாயின் மீதி நாட்களை
    கனவு கண்ட உன் தாயின்
    மனம் கலங்கி தவிக்கிறது
    ஆசை வைத்த உன் தந்தையின்
    மனம் அலுது துடிக்கிறது
    கண்மணியே!

    மிகவும் கனந்த இதயத்தோடு படிக்க வேண்டியிருக்கிறது..
    அருமை..

    வாழ்த்துகளு ம்ற்றும் வாக்குகளும்...

    ReplyDelete
  20. //Lakshmi said...
    ஆமாங்க சல்மாவின் கவிதைகள் சில படிச்சிருக்கேன். இதுவும் அதுபோல அருமையான கவிதைதான்.எழுதியவருக்கும் பதிவில் போட்டவருகும் நன்றிகள்.//

    ஐயோ..அம்மா ..நீங்கள் நினைக்கிற கவிஞர் சல்மா இல்லை இது.
    இது ஷார்ஜாவில் இருக்கின்ற சல்மா.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றியம்மா.

    ReplyDelete
  21. // கவிதை வீதி # சௌந்தர் said...
    உண்மையிலே உருக்கமான பாடல்...
    கவிதையும் அருமை...
    February 21, 2011 6:00

    ரொம்ப நன்றி கவிஞரே.

    உங்கள் கருத்திற்கும் ஓட்டிற்கும் நன்றிகள்

    ReplyDelete
  22. arumaiyana kavidhai .thanks for sharing."தோழியே ஒன்றை புரிந்து கொள்
    கண்கள் காட்டித்தந்த உறவே காதலன்
    கருவறை காட்டி தந்த உறவே
    உன் தாய்தந்தை".arpudhamaana varigal.

    ReplyDelete
  23. அருமையான் விழிப்புணர்வு கவிதை. காதல் என்ற பெயரில் காமம்தான் கண்ணை மறைக்கிற்து என்பது பட்டவுடன் தானே பலருக்கு தெரிகிற்து.

    ReplyDelete
  24. //மு.ஜபருல்லாஹ் said...
    அருமையான் விழிப்புணர்வு கவிதை. காதல் என்ற பெயரில் காமம்தான் கண்ணை மறைக்கிற்து என்பது பட்டவுடன் தானே பலருக்கு தெரிகிற்து.//



    சரியாக சொன்னிர்கள் அண்ணே,உண்மையாகவே நான் இந்தக் கவிதையை எழுதிய கவிஞருக்கு பொற்காசு..சாரி காசோலை அனுப்பலாம்னு நினைக்கிறேன்.

    என்னைக் கவர்ந்த வரிகள் அனைத்தும்,தோல்வியில் துவண்டு கிடக்கும் தோழிக்கு இது ஒரு சரியான புத்துணர்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறேன்.

    நன்றிண்ணே !

    ReplyDelete
  25. angelin said...
    arumaiyana kavidhai .thanks for sharing."தோழியே ஒன்றை புரிந்து கொள்
    கண்கள் காட்டித்தந்த உறவே காதலன்
    கருவறை காட்டி தந்த உறவே
    உன் தாய்தந்தை".arpudhamaana varigal.

    ரொம்ப நன்றி சகோ..வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் மீண்டும் நன்றிகள்.
    உங்களின் தளமும் பயனுள்ளதாக இருக்கின்றது சகோ..

    ReplyDelete
  26. //ரஹீம் கஸாலி said...
    good sharing, thanks vottum pottaachchu//

    Thanks Brother

    ReplyDelete
  27. this was writen awareness poet for ladies.but now boys are cheated by ladies .so u should write poet for gens .this is not written for harm ur heart.this is truths.believe my words

    ReplyDelete
  28. //eswar said...
    this was writen awareness poet for ladies.but now boys are cheated by ladies .so u should write poet for gens .this is not written for harm ur heart.this is truths.believe my words
    February 23, 2011 6:11 AM //

    GO AHEAD Sir.

    ReplyDelete
  29. ஐயயோ, தெரியாம உளறிட்டேனா. சாரிங்க.

    ReplyDelete