ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)
Showing posts with label seval. Show all posts
Showing posts with label seval. Show all posts
Saturday, December 11, 2010
வக்கீலை கொத்தி கொலை செய்ய முயன்ற சேவல் கைது !!!
.சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு அதிரடியாக விரைந்து சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை வலை வீசி தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.
போலிசாரின் அதிரடி நடவடிக்கையை பற்றி பொது மக்கள் சிலரிடம் கேட்டபோது :
@ சேவல் கொத்துனதுனாலே அந்த வக்கீல் புகார் கொடுத்தார் ஒரு பாம்பு கொத்தி இருந்துச்சுனா புகார் கொடுத்திருப்பாரா ? இல்லை அந்த போலீசுதான் பாம்பை கைது பண்ணியிருக்குமா ?
@ கைது செய்யப் பட்ட சேவலை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தாதது போலிசின் மெத்ததனத்தை காட்டுகிறது.
@ கைது பண்ணுவதற்கு முன்னாள் அர்ரஸ்ட் வாரன்ட் இல்லாமல் கைது பண்ணியது மிகப் பெரிய குற்றம்.
@ இரவு முழுதும் காவல் நிலையத்தில் உயிரோடு அந்த சேவல் இருந்தது ஆச்சர்யமாக இருக்கு.
@ இந்த வழக்கை சிபி சிஐ டி போலீசார் விசாரிக்கணும்.
@ இந்த கைது விசயத்தில் நீதி மன்றம் முன்னுக்கு பின்னா தீர்ப்பளிச்சது வேதனையா இருக்கு,இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
@ எங்க ஊரு கொலைகாரனை பிடிக்க சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் பிடிக்காமல் இருப்பது வெட்கமா இருக்கு.
@ சேவல் தப்பியோடியால் சூட்டிங் ஆர்டர் கொடுத்தது கண்டிக்க தக்கது.
@ குற்றவாளியை பிடிக்கிறதை விட்டுட்டு பேசாமல் போலீசார் கோழிகளை வலை விரித்து தேடலாம்.
@ ஒரு வேலை இது கந்த சாமியோடு வேலையாக இருந்தாலும் இருக்கலாம்,அந்த வக்கீலு கொஞ்சம் கறாரா பணம் கரப்பாறு.
எது எப்படியோ நடந்த சம்பவம் போலீசாருக்கு மெடலை ஒன்னும் வாங்கி தந்திடாது,சும்மாவே தமிழனை கேலி செய்யும் மலையாளிகளுக்கு வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைச்சு இருக்கு,வருஷம் பூரா மெண்டு கொண்டே இருப்பான்,நாமளும் இல்லைன்னா..நொல்லைன்னா..என்று சமாதனம் சொல்ல வேண்டியதுதான்.
ஆறறிவு படைத்த நமக்குத்தான் நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியும்,அறிவே இல்லாத அந்த சேவலுக்கு தெரியுமா நாம செய்றது நல்லதா அல்லது கெட்டதா என்று ?
Subscribe to:
Posts (Atom)
