Saturday, December 11, 2010

வக்கீலை கொத்தி கொலை செய்ய முயன்ற சேவல் கைது !!!
.சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு அதிரடியாக விரைந்து சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை வலை வீசி தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

போலிசாரின் அதிரடி நடவடிக்கையை பற்றி பொது மக்கள் சிலரிடம் கேட்டபோது :

@ சேவல் கொத்துனதுனாலே அந்த வக்கீல் புகார் கொடுத்தார் ஒரு பாம்பு கொத்தி இருந்துச்சுனா புகார் கொடுத்திருப்பாரா ? இல்லை அந்த போலீசுதான் பாம்பை கைது பண்ணியிருக்குமா ?


@ கைது செய்யப் பட்ட சேவலை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தாதது போலிசின் மெத்ததனத்தை காட்டுகிறது.


@ கைது பண்ணுவதற்கு முன்னாள் அர்ரஸ்ட் வாரன்ட் இல்லாமல் கைது பண்ணியது மிகப் பெரிய குற்றம்.


@ இரவு முழுதும் காவல் நிலையத்தில் உயிரோடு அந்த சேவல் இருந்தது ஆச்சர்யமாக இருக்கு.


@ இந்த வழக்கை சிபி சிஐ டி போலீசார் விசாரிக்கணும்.


@ இந்த கைது விசயத்தில் நீதி மன்றம் முன்னுக்கு பின்னா தீர்ப்பளிச்சது வேதனையா இருக்கு,இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.


@ எங்க ஊரு கொலைகாரனை பிடிக்க சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் பிடிக்காமல் இருப்பது வெட்கமா இருக்கு.


@ சேவல் தப்பியோடியால் சூட்டிங் ஆர்டர் கொடுத்தது கண்டிக்க தக்கது.


@ குற்றவாளியை பிடிக்கிறதை விட்டுட்டு பேசாமல் போலீசார் கோழிகளை வலை விரித்து தேடலாம்.


@ ஒரு வேலை இது கந்த சாமியோடு வேலையாக இருந்தாலும் இருக்கலாம்,அந்த வக்கீலு கொஞ்சம் கறாரா பணம் கரப்பாறு.

எது எப்படியோ நடந்த சம்பவம் போலீசாருக்கு மெடலை ஒன்னும் வாங்கி தந்திடாது,சும்மாவே தமிழனை கேலி செய்யும் மலையாளிகளுக்கு வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைச்சு இருக்கு,வருஷம் பூரா மெண்டு கொண்டே இருப்பான்,நாமளும் இல்லைன்னா..நொல்லைன்னா..என்று சமாதனம் சொல்ல வேண்டியதுதான்.

ஆறறிவு படைத்த நமக்குத்தான் நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியும்,அறிவே இல்லாத அந்த சேவலுக்கு தெரியுமா நாம செய்றது நல்லதா அல்லது கெட்டதா என்று ?

19 comments:

 1. இந்தியாவுல கூட இந்த மாதிரி காமெடி நியூஸ் எல்லாம் நடக்குதா...

  ReplyDelete
 2. இது கந்தசாமி படக்கதை மாதிரியே இருக்கே...

  ReplyDelete
 3. நல்லவேளை சேவலின் உரிமையாளரை கைது செய்து கம்பி எண்ண வைக்கலை...

  ReplyDelete
 4. //philosophy prabhakaran said...
  நல்லவேளை சேவலின் உரிமையாளரை கைது செய்து கம்பி எண்ண வைக்கலை.//

  சரியா சொன்னீர்கள் பிரபா.கருத்திற்கு நன்றிகள்

  ReplyDelete
 5. ஹா..ஹா....வாழ்க தமிழ் நாட்டு போலீஸ் கடமை உணர்ச்சி

  ReplyDelete
 6. //ஜெய்லானி said...
  ஹா..ஹா....வாழ்க தமிழ் நாட்டு போலீஸ் கடமை உணர்ச்சி
  December 11, 2010 8:57 PM //

  Karuththirkku Rompa Nandri Brother

  ReplyDelete
 7. இந்த நியூஸ் கேட்டதும் பயங்கர சிரிப்பு தான் வந்துச்சு....ஏன் இப்படி காமெடி பண்ணாங்கன்னு தெரியல. எல்லாரும் தமிழ்நாட்டு போலிஸை நாரடிச்சுட்டு இருக்காங்க

  ReplyDelete
 8. //ஆமினா said...
  இந்த நியூஸ் கேட்டதும் பயங்கர சிரிப்பு தான் வந்துச்சு....ஏன் இப்படி காமெடி பண்ணாங்கன்னு தெரியல. எல்லாரும் தமிழ்நாட்டு போலிஸை நாரடிச்சுட்டு இருக்காங்க
  December 12, 2010 2:18 AM //

  செய்தி உண்மைதான் சகோ.மக்கள்கள் இப்படிலாம் பேசிகொள்வார்கள் என்று அந்நியனால் எழுதப் பட்டது கருத்திற்கு நன்றி !

  ReplyDelete
 9. சிரிப்பதா சிந்திப்பதா இது போன்ற நிகழ்வுகளை எண்ணி . பகிர்வுக்கு நன்றி சகா . தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 10. //♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  சிரிப்பதா சிந்திப்பதா இது போன்ற நிகழ்வுகளை எண்ணி . பகிர்வுக்கு நன்றி சகா . தொடர்ந்து எழுதுங்கள்
  December 12, 2010 5:18 AM //

  ரொம்ப நன்றி சார்.

  ReplyDelete
 11. >>> சேவலுக்கே காவல்....என்ன கொடுமை இது...அந்நியன்! தங்கள் பதிவை Follow செய்யும் வெள்ளி விழா நாயகன் நானேதான்.. எண் 25!

  ReplyDelete
 12. //சிவகுமார் said...
  >>> சேவலுக்கே காவல்....என்ன கொடுமை இது...அந்நியன்! தங்கள் பதிவை Follow செய்யும் வெள்ளி விழா நாயகன் நானேதான்.. எண் 25 //


  அதுக்காக கேக்குலாம் வெட்டச் சொல்லிட்ராதிய சிங்கம்,வருகைக்கும் உங்களின் கருத்திற்கும் ரொம்ப நன்றி குமார்.

  ReplyDelete
 13. நல்ல கமெடியா ஆக அல்லவா இருக்கு!!//அதுக்காக கேக்குலாம் வெட்டச் சொல்லிட்ராதிய சிங்கம்,// நூறாவது பதிவுக்கு கேக் வெட்டுவீங்கல்ல..?

  ReplyDelete
 14. ஐயா , உங்க பதிவை பார்த்ததற்கும் படித்ததற்கும் கருத்துகள் சொல்வதற்கும் தண்டனை உண்டோ ?
  பாராட்டுகள் நண்பரே நல்லபதிவு . எப்படி ? முடியுது வயிற்று வலி தாங்கல சாமி

  ReplyDelete
 15. //ஸாதிகா said...
  நல்ல கமெடியா ஆக அல்லவா இருக்கு!!//அதுக்காக கேக்குலாம் வெட்டச் சொல்லிட்ராதிய சிங்கம்,// நூறாவது பதிவுக்கு கேக் வெட்டுவீங்கல்ல..?//

  வெட்டிட்டா போச்சு,உங்கள் கருத்திற்கு நன்றி அக்காள், கீலக்கரைக்கும் உங்களுக்கும் ரொம்ப நெருக்கமோ ?

  ReplyDelete
 16. // polurdhayanithi said...
  ஐயா , உங்க பதிவை பார்த்ததற்கும் படித்ததற்கும் கருத்துகள் சொல்வதற்கும் தண்டனை உண்டோ ?
  பாராட்டுகள் நண்பரே நல்லபதிவு . எப்படி ? முடியுது வயிற்று வலி தாங்கல சாமி//

  என்ன.. மறுத்தவர் அய்யா, நோய் தீர்க்கும் உங்களை தண்டிப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை உங்களைப் போன்ற நாட்டு மருத்தவர்கள்தான் நம் நாட்டிற்கு தேவை,தொடரட்டும் உங்களின் சேவை.

  வயிற்று வலிக்கு கீவா நெல்லியை அரைத்து சாரெடுத்து, விளக்கென்னையையோடு கலந்து,மிதுவான சூடா வயிற்றில் தேய்த்து வந்தால்,வலி குறையும்னு பாட்டி சொல்லியிருக்கு. கருத்திற்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 17. அடுத்து ஒரு ஆளை சிங்கத்தை விட்டு கடிக்க சொல்லுவோம்... என்ன பன்றாய்ங்கன்னு பாப்போம்...

  ReplyDelete
 18. //சாமக்கோடங்கி said...
  அடுத்து ஒரு ஆளை சிங்கத்தை விட்டு கடிக்க சொல்லுவோம்... என்ன பன்றாய்ங்கன்னு பாப்போம்...//

  என்னது சிங்கமா ..! அப்புறம் பேண்டை அசிங்கம் பண்ணிவிடப் போகிறார்கள் போலிசார்க்கள். ரொம்ப நன்றி நண்பா !

  ReplyDelete