Saturday, January 15, 2011

மரணங்கள் எல்லாம் ஒன்றல்ல !!!




இதோ இந்த வீடியோ பதிவினைப் பாருங்கள் அப்பாவி மக்கள்களும் குழந்தைகளும் இஸ்ரேலியர்களால் எப்படி கொல்லப் படுகிறார்கள் என்று.

இந்தியாவில் ரிக்ஸா மிதிப்பவன் கொலையாவதும் ரோல்ஸ் ராய்ஸ் ஓட்டுபவன் கொலையாவதும் ஒன்றாகிவிடாது,ரிக்ஸாகாரன் குத்திக் கொல்லப் பட்டால் அவனின் சடலம் போலவே அந்த நியுசும் ஏழாம் பக்கத்தில் ஏதோ ஒரு மூலையில் நாலு வரிகளில் புதைக்கப்படும்,கோடீஸ்வரன் கொலை என்றால்,தலைப்பு செய்தி போட்டு ஏழெட்டு நாளைக்கு கொண்டாடிட மாட்டார்களா பத்திரிகை உலகமும்,மீடியாவும்.

அதுபோலதான் பாலஸ்த்தினியரின் நிலைமையும்,அப்பாவி மக்கள்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இஸ்ரேலிய காட்டு மிராண்டிகளை எந்த ஒரு மீடியாவும் அல்லது பத்திரிக்கைகளும் செய்தியாகவே போட வில்லை ஒன்னிரெண்டை தவிர.

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று,அமெரிக்காவால் கூறப்பட்டு இராக்கையும் இராக் மக்கள்களையும் கொன்னு குவித்த அமெரிக்காவை எந்த ஒரு பத்திரிக்கையும் அல்லது மீடியாவும் அமெரிக்கா செய்தது தவறு என்று சுட்டிக் காட்டாமல்,அந்த ரெட்டைக் கோபுரத்தையே ஒரு அஞ்சு வருசத்திற்கு தலைப்பு செய்தியாக காண்பித்துக் கொண்டு இருந்தார்கள் இந்த பச்ச துரோக பச்சோந்திகள்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து எந்த ஒரு மீடியாவும் தலைப்பு செய்தியாக வெளியிட வில்லை,தமிழ்நாட்டை தவிர.
போலி வேடம் பூண்டு பொறம்போக்கு செய்திகளை தரும் அந்த பத்திரிகை சுதந்திரம் எதற்கு ???

மிருகங்களை வதை செய்தால் பெருங்குற்றம் என்று கூறும் மனித ஜென்மங்கள்,மனித வர்க்கம் சல்லடை சல்லடையாக நச்சுக் குண்டால் துளைக்கப் பட்டு கொடூரமாக கொல்லப் படுவதை தடுப்பதற்கு ஒரு அமைப்பும் இல்லாதது வருந்தக்கூடிய விஷயம்,மனித உரிமை மீறல் என்று போலி அமைப்பை வைத்துக் கொண்டு அந்த அமைப்பிற்கு தலைவராய் அமெரிக்காவை பொருத்திக் கொண்டு,தீர்ப்பு சொல்லுங்கள் என்றால் எப்படி ???

காட்டு மிராண்டிகள் இஸ்ரேயிலிகளை தட்டிக் கேட்கப் போவது யாரு ?

இந்த அயோக்கிய ராணுவத்திற்கு உலக அரங்கில் மரியாதை வேறே,நாம் பார்த்த கோப்பினைத்தான் ஐநா என்று சொல்லப்படும் குருட்டு மன்றமும் பார்த்திருக்கும்,அவர்கள் மூலமாவது தீர்வு காணலாம் என்று பார்த்தாலும்கூட அந்த அமைப்பிற்கு அமெரிக்காதான் தலைவன் !!! பிறகு எப்படி நியாயம் கிடைக்கும் ?

இப்படி ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களகளையும்,பச்சிளம் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் அரசாங்கம் நாசமாக போகட்டும்,இறைவனின் கோபமும்,உலக மக்கள்களின் சாபமும் உண்டாகட்டும்,அவர்களின் சவத்தை கழுகுகளும்,நாயிகளும் புசித்து திங்கட்டும்,உலகத்தில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்,எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

குறிப்பு : முன்னாள் ஐநா சபையின் செயலாளர் காபிஅண்ணன் புஷ்ஷுவின் வலது கையாக இருந்தார்.இராக்கிற்கு எதிரா நடந்த போரில்.

தற்போதுள்ள ஐநா பொதுசெயலாளர் பான் கீ மூன்,இலங்கை அதிபர் ராஜ பக்சேயின் தீவிர அரசியல் ஆதரவாளர்.
செயலாளர்கள் இப்படி இருந்தால் எப்படி நியாயம் கிடைக்கும் ?



நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ! அதில் பாரபட்ச்சம் பார்க்கக் கூடாது !

12 comments:

 1. என்ன சொல்வது இந்த கொடுமைகள் என்று தீருமோ..

  உங்கள் தளம் இப்போதுதான் பார்க்கிறேன்.. நான் அபூ தாபியில்..

  ReplyDelete
 2. //Riyas said...
  என்ன சொல்வது இந்த கொடுமைகள் என்று தீருமோ..

  உங்கள் தளம் இப்போதுதான் பார்க்கிறேன்.. நான் அபூ தாபியில்..//

  கண்டிப்பாக இந்த மக்கள்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்கும் ரியாஸ் பாய் பிரார்த்திப்போம் இறைவனிடம்.
  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி !

  ReplyDelete
 3. கொடுமையான வீஷயம்

  மனதில் பாடத்தை விதைக்கும் கடைசி போட்டோ அருமை

  ReplyDelete
 4. //ஆமினா said...
  கொடுமையான வீஷயம்.

  கருத்திற்கு ரொம்ப நன்றி தங்கச்சி.

  ReplyDelete
 5. //முன்னாள் ஐநா சபையின் செயலாளர் காபிஅண்ணன் புஷ்ஷுவின் வலது கையாக இருந்தார்.இராக்கிற்கு எதிரா நடந்த போரில்.

  தற்போதுள்ள ஐநா பொதுசெயலாளர் பான் கீ மூன்,இலங்கை அதிபர் ராஜ பக்சேயின் தீவிர அரசியல் ஆதரவாளர்.
  செயலாளர்கள் இப்படி இருந்தால் எப்படி நியாயம் கிடைக்கும்//

  ம்ம்...உண்மை தான்...அவங்க அனேகமா பொம்மை தான்னு எனக்கு தோணுது...வல்லரசுகளின் கைப்பாவை தான்னு எப்பவோ புரிஞ்சிடுச்சு(இராக்,இலங்கை போர்..)
  எல்லாமே உட்டாலக்கடி அந்நியன்...

  ReplyDelete
 6. //ஆனந்தி.. said..//

  அவங்க அனேகமா பொம்மை தான்னு எனக்கு தோணுது...

  வாங்க மேடம் உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி !

  என்ன செய்வது ? இது போன்ற ஊமையனையும் குருடனையும் செயலாளராக போடுவதற்கு பதிலாக ஒரு பொம்மையை வைத்து இயக்கினாலும் செல்லும்.

  வாழ்க வல்லரசு நாடுகள்.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

  கொடுமையான வீஷயம்.

  காட்டு மிராண்டிகள் இஸ்ரேயிலிகளை தட்டிக் கேட்கப்

  போவது இறைவன்.

  ReplyDelete
 8. //ஆயிஷா said...
  அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

  கொடுமையான வீஷயம்.

  காட்டு மிராண்டிகள் இஸ்ரேயிலிகளை தட்டிக் கேட்கப்

  போவது இறைவன்.//

  Va Alaikkum Vassalaam Sago..

  Insha Allha.

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி !

  ReplyDelete
 9. வீடியோ காட்சி மனதினை பதறச்செய்தது.

  ReplyDelete
 10. //ஸாதிகா said...
  வீடியோ காட்சி மனதினை பதறச்செய்தது.
  January 18, 2011 6:03 AM//

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி !
  sister.

  ReplyDelete
 11. மனதைப்பதர வைத்த காட்ச்சிகள்.

  ReplyDelete
 12. //Lakshmi said...
  மனதைப்பதர வைத்த காட்ச்சிகள்.//

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றிம்மா..

  ReplyDelete