Sunday, January 30, 2011

அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சிரிக்கவும் !!!மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றது !!!
இதுக்கெல்லாம் காரணம் எய்ட்ஸை பற்றி மக்கள்களுக்கு ஒழுங்கான முறையில் விழிப்புணர்வை அரசு செய்ய தவறியக் காரணத்தால் அரசியல்வாதிகள் அனைவரும் நம் சமுதாயத்தை அவர் அவர் சக்த்திக்குயேற்றவாறு சீரழிக்கின்றனர் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.

சாரிங்க எனது அடுத்தப் பதிவு எய்ட்ஸை பத்தியதுங்க கொஞ்சம் முன்னோட்டம் எழுதி பார்த்தேன் இதில் என்ன கொடுமை என்றால் இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.....


1 போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,  
                          உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் :    அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

2 எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...." "
அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

3 ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை
நினைச்சுக்கிட்டீங்களா?

இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!


4 ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன்
பண்ணப் போறீங்க...?

நீங்கதானே....ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!5 டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"

ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!

ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?


6 ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!

யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!"


7 குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..

குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல்
போயிருப்பார் என்றுதான்....


8 அந்த ஆள் உண்மையிலயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா
இருக்கு...

ஏன்?

துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!


9 சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!

ஏன்..?

பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!10 எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?

நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!


11 ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?

சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."


12 ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"

டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!


13 அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"

மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!


14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!


15 அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல எச்சு துப்பினேன்

சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக
தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??


16 ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை "

EXAMPLE:
மனிதர்கள் யாரும் ஆசை பட கூடாது என்று "ஆசை " பட்டார் புத்தர்..!

ஆசைப்படகூடாது எண்டு சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?


17 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்..

ஆசிரியர்: !!!


18 தமிழ் நாட்டில மொத்தம் 3 கடல் , 45 ஆறு, 239 ஏறி, 1836 குளம், 3200 வாய்கள், 21340கிணறு ..

இத்தனை இருந்தும் ஏன்டா என்னோட படத்த பாத்து சாவுரிங்க ??? (T.RAJENDAR )


19 உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குதுஇதிலிருந்து என்ன தெரியுது?

ஒரு பொண்ணு நினைச்சா,எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)


20 டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
AJITH: இல்லை 200நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......
AJITH: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


21 அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
     இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
      அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
       இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூனு பேர்தான்..........

22 மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.

ஏங்க என்னாச்சி!

அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட்
இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

23 மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!

ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!

முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!

அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!


24 கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;

"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."

" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam


25 ஆசிரியர் :: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..

     மாணவர் :: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..

      ஆசிரியர் :: ஏண்டா???

       மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..


26 ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?

மாணவன்: டன் டன் டன்.

உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப் பட்டு இருப்பிர்கள் ஆனால் தினமும் ஒரு அரை மணி நேரம் சிரித்திர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.


30 comments:

 1. யப்பா! முடியல ராசா! வாய் விட்டே சிரித்தேன். சரியான லொள்ளுபா!

  ReplyDelete
 2. நிறைய ஜோக்ஸ் நீங்களே சிந்தித்து போல இருக்கு... உதாரணம் லிப்ட், துப்பாக்கி ஜோக்ஸ்.... சுமாராகவே இருந்தாலும் நல்ல முயற்சி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. //மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..//

  ரொம்ப சிரிக்க வச்ச ஜோக்

  ReplyDelete
 4. ஸலாம் சகொ...
  சிரிக்கவைத்ததற்கு நன்றிகள் பல...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 5. சார் உண்மைய சொல்லனும்னா அடுத்தவுங்கள தொந்தரவு பண்ணாம சிரிக்க முடியல , நல்லா இருக்கு

  ReplyDelete
 6. டன் டன் டன்...சத்தம் போட்டே சிரித்து விட்டேன்.... பலரை சிரிக்க வைத்த இப்பதிவிற்க்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அழைக்கும்

  பலரை சிரிக்க வைத்த பதிவிற்க்கு வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 8. VERY NICE .NANDRAGA RASITHU SIRITHEN .
  WAITING FOR YOUR NEXT POST.

  ReplyDelete
 9. //மு.ஜபருல்லாஹ் said...
  யப்பா! முடியல ராசா! வாய் விட்டே சிரித்தேன். சரியான லொள்ளுபா! //

  வாங்க அண்ணே வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி !
  கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே என்றுதான் சிரிப்பு பதிவை போடுகிறேன்,ஒரே... வசனமா எழுதிக் கொண்டு போனால் எல்லோரும் அப்புறம் இந்த பக்கமே வரமாட்டாங்க.

  ReplyDelete
 10. //Philosophy Prabhakaran said...
  நிறைய ஜோக்ஸ் நீங்களே சிந்தித்து போல இருக்கு... உதாரணம் லிப்ட், துப்பாக்கி ஜோக்ஸ்.... சுமாராகவே இருந்தாலும் நல்ல முயற்சி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...//

  வாங்க தலை வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
  இனிமேல்தான் சுயமா ஜோக் எழுதலாம்னு இருக்கேன்.

  ReplyDelete
 11. //ஆமினா said...
  //மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..//

  ரொம்ப சிரிக்க வச்ச ஜோக்.

  ரொம்ப நன்றிங்கோ......

  இடையில் இப்படியொரு பதிவு போட்ரதுனாலேதான் இன்ட்லியிலே இருந்து அதிகமான வாசகர்கள் மெயில் அனுப்புகிறார்கள் இன்ட்லி நண்பர்களும் இருபதுக்கு மேலே ஓட்டு போடுகிறார்கள் அனேகமா வரப் போகும் எலக்சனில் சீட் கிடைச்சாலும் கிடைக்கும்.
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ..

  ReplyDelete
 12. //RAZIN ABDUL RAHMAN said...
  ஸலாம் சகொ...
  சிரிக்கவைத்ததற்கு நன்றிகள் பல...//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ...வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி !
  சிரிப்பதும் ஒரு வகையான மருந்துதான்.

  ReplyDelete
 13. //நா.மணிவண்ணன் said...
  சார் உண்மைய சொல்லனும்னா அடுத்தவுங்கள தொந்தரவு பண்ணாம சிரிக்க முடியல , நல்லா இருக்கு

  ரொம்ப நன்றி சார் நீங்கல்லாம் பெரிய ..பெரிய பதிவர் உங்களையும் இந்த பதிவு சிரிக்க வைத்தது என்றால் எனக்கு ரொம்ப சந்தோசம்.
  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சார் .

  ReplyDelete
 14. //என்றும் பதினாறு .
  டன் டன் டன்...சத்தம் போட்டே சிரித்து விட்டேன்.... பலரை சிரிக்க வைத்த இப்பதிவிற்க்கு பாராட்டுக்கள்...//

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி !
  உங்களின் தளமும் பூத்து குலுங்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 15. //ஆயிஷா said...
  அஸ்ஸலாமு அழைக்கும்
  பலரை சிரிக்க வைத்த பதிவிற்க்கு வாழ்த்துக்கள் பல...//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ உங்களின் வருகைக்கும் vaazththirkkum ரொம்ப நன்றி !

  ReplyDelete
 16. //angelin said...
  VERY NICE .NANDRAGA RASITHU SIRITHEN .
  WAITING FOR YOUR NEXT POST.//

  வாங்க சகோ....வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி ..ரொம்ப bisiyaa irukkira maadhuri theriyudhu ?
  kandippaa aduththa பதிவு rediyaaki கொண்டு irukkindradhu சகோ...

  ReplyDelete
 17. செமத்தியாக சிரிக்க வைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 18. //ஸாதிகா said...
  செமத்தியாக சிரிக்க வைத்து விட்டீர்கள்.//

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி !

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  //இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு//

  இந்த பதிவை எதிர்பார்க்கிறேன் கண்டிப்பாக எழுதுங்கள்

  அப்புறம் நான் தொந்தி சம்பந்தமாக பதிவு போட்டுயிருக்கிறேன்
  உங்களுடைய கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்

  http://valaiyukam.blogspot.com/2011/01/blog-post_30.html

  ReplyDelete
 20. //ஹைதர் அலி said...
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  //இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு//

  இந்த பதிவை எதிர்பார்க்கிறேன் கண்டிப்பாக எழுதுங்கள்

  அப்புறம் நான் தொந்தி சம்பந்தமாக பதிவு போட்டுயிருக்கிறேன்
  உங்களுடைய கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்//

  Va Alaikkum Vassalam Brother OK..........

  ReplyDelete
 21. சிரியோ சிரின்னு சிரிச்சாச்சி சகோ..அருமையா எல்லாரையும் சிரிக்கவச்சுட்டீங்க..

  ReplyDelete
 22. சிரி சிரி சிரி ஹ்ஹாஆஅ புவாஹாஹா

  ReplyDelete
 23. //அன்புடன் மலிக்கா said...
  சிரியோ சிரின்னு சிரிச்சாச்சி சகோ..அருமையா எல்லாரையும் சிரிக்கவச்சுட்டீங்க..//

  ரொம்ப நன்றி சகோ...நீங்கதான் என்னோடு "கா"...சொல்லிட்டு போயிட்டியே,காரணம் அந்நியனா மாறியதற்கு,திரும்ப வந்து சிரிச்சுட்டு போனதிற்கு நன்றிகள்.

  ReplyDelete
 24. //Jaleela Kamal said...
  சிரி சிரி சிரி ஹ்ஹாஆஅ புவாஹாஹா//

  சகோ..மச்சான் கண் விழித்து விடப் போகிறார்கள் சத்தம் போடாமல் சிரியுங்கள்..உஷ்...உஷ்...
  நன்றி சகோ !

  ReplyDelete
 25. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  கலக்கல் - மிக்க நன்றி//

  ரொம்ப நன்றி சார் உங்கள் வாழ்த்திற்கு !
  மற்றவர்கள் சந்தோசமா இருப்பதுதான் நமக்கு சந்தோசத்தை கொடுக்கும்.

  ReplyDelete
 26. //" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam //


  இதை கேட்ட பிறகு அவருக்கு ராகு காலம்தான் ஹா..ஹா..... செம ஜோக் :-)))))))))))))

  ReplyDelete
 27. //ஜெய்லானி said...
  //" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam //


  இதை கேட்ட பிறகு அவருக்கு ராகு காலம்தான் ஹா..ஹா..... செம ஜோக் :-))))))))))))) //

  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி !

  Neenkalum சிரிக்கவச்சுட்டீங்க..

  ReplyDelete
 28. //14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

  மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

  ஆசிரியர் : ?!?!///

  super :)

  Youtube video also superb...still laughing..:)))

  ReplyDelete
 29. ஆனந்தி.. said...
  //14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

  //மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

  ஆசிரியர் : ?!?!///

  super :)

  Youtube video also superb...still laughing..:)))//
  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ ..

  ReplyDelete