Friday, April 8, 2011

லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் அதிகாரி காலைப் பிடித்து கதறல்...!!!




லஞ்சம்,ஊழல் இவற்றை ஒழிக்க முடிகிறதோ இல்லையோ பெயரளவில் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் தம்மை விளம்பரம் பண்ணிக் கொள்கின்றார்கள்,லஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்து விட்டோம் என்று.

திருப்பூர் நகரில் இப்படியொரு சம்பவம் நடந்தேரியது நம்மை அதிர்ச்சிக்கி உள்ளாக்கியுள்ளது அந்த பெண் போலிஸ் அதிகாரியின் நிலையினைக் காணும்போது மனது ரொம்ப கஷ்ட்டப் படுகின்றது.

இந்திய நாட்டில் எந்த அதிகாரிதான் ஊழல் புரிய வில்லை ?

மேல் அதிகாரி,கீழ்அதிகாரி,அரசியல்வாதி,ஆன்மிகவாதி,
போலிசு,வக்கீலு,டாக்ட்டரு,நீதியரசர் இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.


பாவம் இந்த அதிகாரியும் ஒரு பெண் தானே எத்தனை கெஞ்சல் எத்தனை கதறல் அதையும் தாண்டி அந்த நபரின் காலைப் பிடிக்கும் பரிதாபக் காட்சி அந்த வீடியோ மனிக்கு தெரிய வில்லையே !

தவறுகள் செய்யாத மனிதரை உலகத்தில் காணக் கிடைப்பது அரிது,தவறுகள் செய்வதும் பின்பு திருந்துவதும் மனித இயல்புதான்,அந்த வகையில் அந்த பெண் போலீஸ் அதிகாரி மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்ட்டவஷமே,இருந்த போதும் எப்போ ஒரு அதிகாரி தம் காலைப் பிடித்து மன்னிக்கும்படி சொன்னாரோ அப்பவே அவ்விசயத்தை மன்னிப்பதும் மறப்பதும் பிறருக்கு தெரியாமல் மறைப்பதும் நல்ல ஒரு மனிதனுக்கு அடையாளம்.

யார் இந்த வீடியோ மணி ?

இவரும் ஒரு அரசியல் வாதிதான் அரசியல் செல்வாக்கில் பிரசிடன்ட்டாக வலம் வருபவர்தான் இவரும் ஊழல் செய்யாமலா இருந்திருப்பார்?

சென்னை பாஸ் போர்ட் அலுவலகத்தில் பெரும் ஊழல் செய்து கைதாகி அடுத்த பனிரெண்டு மணி நேரத்தில் ஜாமினில் வெளியாகி
எண்ணிமுப்பதே நாளில் அஞ்சல் துறையில் அதிகாரியாக பணி புரிய வில்லையா ?

கோடிக் கணக்கில் ஊழல் புறிந்தவர்கள் ஹாயாக வலம் வரும்போது ஒரு அரசியல் வாதியிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியது ஒன்னும் குற்றமா தெரிய வில்லை.

அவரின் காலில் விழுந்து கதறியதுதான் குற்றமா தெரியுது,பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திர்க்காக உங்களை என்ன தூக்கிலியா போட்டு விடப்போகிறார்கள்?

இல்லை நாடு கடத்திவிடப் போகிறார்களா?

லட்சம் கோடிகளை கொள்ளை அடித்த கும்பல்கள் எல்லாம் ஹாயா வரும்போது ஒரு அரசியல் வாதி மிரட்டலுக்கு அழுது கண்ணிர் வடித்தது போலிஸ் இனத்திர்க்கே அவமானமாக இருக்கின்றது,இதுவே ஒரு ஆண் சிங்கம், போலிஸ் அதிகாரியாக இருந்திருந்தால் இப்படியா அழுது கொண்டிருந்திருப்பார் ?

துப்பாக்கியை எடுத்து அவரின் நெற்றியை குறி பார்த்திருப்பாரல்லவா.

இந்த பெண் அதிகாரியைப் பார்க்கும்போது புதுசா லஞ்சம் வாங்கிரதை போல் தெரிகின்றது அதுனாலேதான் காலைப் பிடிக்கும் அளவிற்கு சென்று விட்டார்



எதற்கு லஞ்சம்?

அரசு தரும் சம்பளமும் சழுகைகளும் போதாதா?









9 comments:

  1. ம்.. இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்களா...

    ReplyDelete
  2. அவங்க சரியா டிரைனிங் எடுக்கல போல..

    ReplyDelete
  3. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    அவங்க சரியா டிரைனிங் எடுக்கல போல..//

    ஹா..ஹா...இதுக்கு வேறே ட்ரைனிங் இருக்கோ..

    பாவம் புதுசா லஞ்சம் வாங்குகிறார் போல தெரிகிறது இன்னும் நிரையா கற்றுக் கொள்ளவேண்டியது நிறையா இருக்குனு நினைக்கிறேன்.

    வருகைக்கும் உங்கள் கருத்திர்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  4. small correction.. this thing not happened in chennai, it happened in tiruppur. Lady police belong to Tiruppur North Police station.. Even video mani also belong to tiruppur..

    ReplyDelete
  5. Well Mr,Manoj.

    It,s been good seeing your Massage here thank you very much.

    i will correct all things.

    again one more thanks for your visit and information.

    ReplyDelete
  6. லஞ்சம் இல்லாததுறை எதுங்க? நாம கேள்விப்படுவதெல்லாம் நம்மால ஜீரணிக்கவேமுடியாமத்தான் இருக்கு. யாரு பூனைக்கு
    மணி கட்டப்போராங்க?

    ReplyDelete
  7. //Lakshmi said...
    லஞ்சம் இல்லாததுறை எதுங்க? நாம கேள்விப்படுவதெல்லாம் நம்மால ஜீரணிக்கவேமுடியாமத்தான் இருக்கு. யாரு பூனைக்கு
    மணி கட்டப்போராங்க?//

    பூனைக்கு மணி கட்ட கூட லஞ்சம் கேட்டாலும் கேட்ப்பார்கள்.

    லஞ்சம் இல்லாத துறைனு எதையும் சொல்லுவதர்க்கு இல்லைமா.

    வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி.

    ReplyDelete
  8. லஞ்சம் பெறுவதும்,கொடுப்பதும் தவறு என்றாலும் அந்த பெண் அதிகாரியின் நிலை மனதை சங்கடம் செய்கிறது,பெரிய பணமுதலைகள் எல்லாம் லஞ்சத்தில் நீந்தும் பொழுது ....சே...

    ReplyDelete
  9. //asiya omar said...
    லஞ்சம் பெறுவதும்,கொடுப்பதும் தவறு என்றாலும் அந்த பெண் அதிகாரியின் நிலை மனதை சங்கடம் செய்கிறது,பெரிய பணமுதலைகள் எல்லாம் லஞ்சத்தில் நீந்தும் பொழுது ....சே...//

    இந்த அப்பாவி இன்ஸ்பெக்டருக்கு மட்டும் ஏன் இந்த கதி என்று நீங்கள் கேட்ப்பது காதில் விழுகிறது சகோ.

    வருகைக்கும் உங்கள் கருத்திர்க்கும் நன்றி.

    ReplyDelete