Friday, April 29, 2011

வாங்க...வாங்க....வந்து சிரிச்சிட்டு போங்கள். நகைச்சுவை கலாட்டா.



"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

**************

"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..."

"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!"

***************

நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்..."

"அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..

****************
படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.

ஏன் என்னாச்சு..?

அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.

*****************
"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"

"ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க!"

*****************

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?

டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

*****************

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?

ஆபீஸ்லியா வீட்டிலியா...?

*****************

ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?

ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.

*****************

தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?

ஏன்?

டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

**************

தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!

இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...!

**************

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

***************

இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?

ஏனாம்?

தீப கர்ப்பமா இருக்கிறதுனால.

***************

உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.

*****************

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.

மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

******************

எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?

என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.

இந்நேரம் விழுந்திருக்குமே சார்?

இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

************

மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?

டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.

மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?

டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!

**************

"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"

"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

***************
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

***************

முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

பின்னவர் : எப்படி?

முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

******************
வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!

ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?

******************

நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."

"போகும் போது டாக்டர் ...?"

"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"

*****************

"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..."

"அவ்வளவு அழகா?."

"இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."

**************





இந் நிகழ்ச்சியை வழங்கியோர் கோபால் பல் பொடி நிருவனத்தினர்.

பற்க்கள் பல..பலனு இருக்க.


கோபால் பற்பொடி உபயோகிங்கள்.


12 comments:

  1. வீட்டுக்கு போதும் போது இம்புட்டு நகைச்சுவையா...

    கலக்குங்க பாஸ்...

    ReplyDelete
  2. ஆஹா ஆஹா கோப்பால் பல் பொடி... வழஙகிய நிகழ்ச்சி ரொம்ப சூப்பர்...

    ReplyDelete
  3. //கவிதை வீதி # சௌந்தர் said...
    வீட்டுக்கு போதும் போது இம்புட்டு நகைச்சுவையா...//

    ஐய்யோ...மறந்து போச்சே...!!!

    ReplyDelete
  4. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    ஐ.. நான்தான் பஸ்ட்டா...//

    ஆமா தலை நீங்கள்தான் ஃபர்ஸ்ட்.

    வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. //சிநேகிதி said...
    ஆஹா ஆஹா கோப்பால் பல் பொடி... வழஙகிய நிகழ்ச்சி ரொம்ப சூப்பர்...//

    வருகைக்கும் உங்கள் கருத்திர்க்கும் நன்றி தங்கச்சி.

    ReplyDelete
  6. நிறைய சிரிப்பு சிரிப்பு , ஆனால் விளம்பரம் இங்கே???

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    //வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!

    ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?//

    இதுபோன்ற நகைச்சுவைகள் வரவேற்க்கதக்கது

    வாழ்த்துக்கள் சகோ தொடருங்கள்

    ReplyDelete
  8. //Jaleela Kamal said...
    நிறைய சிரிப்பு சிரிப்பு , ஆனால் விளம்பரம் இங்கே???
    May 1, 2011 5:07 AM

    சிரித்தமைக்கு நன்றி சகோ.

    இப்பத்தான் விளம்பர கஷ்ட்டமர் வந்திருக்கார் கண்னு கிண்னு வச்சுடாதியே.

    ReplyDelete
  9. //ஹைதர் அலி said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    //வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!

    ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?//

    இதுபோன்ற நகைச்சுவைகள் வரவேற்க்கதக்கது

    வாழ்த்துக்கள் சகோ தொடருங்கள்.

    கருத்திட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  10. ஹா !ஹா!ஹா! .எல்லா ஜோக்ஸும் சூப்பர் .
    கோபால் பற்பொடி .எனக்கு ரொம்ப பிடிக்கும்
    (நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது அப்படியே சாப்டிடுவேன்.)

    ReplyDelete
  11. //angelin said...
    ஹா !ஹா!ஹா! .எல்லா ஜோக்ஸும் சூப்பர் .
    கோபால் பற்பொடி .எனக்கு ரொம்ப பிடிக்கும்
    (நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது அப்படியே சாப்டிடுவேன்.)//


    கோபால் பல் பொடி பிடிக்காத ஆள் இருக்குமா?

    நீங்களாவது பாக்கெட்டை பிரிச்சுதான் சாப்பிடுவியே நான் பாக்கெட்டோடு சாப்பிட்டு இருக்கேன் சகோ.

    வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete