உணவு,வீட்டு வாடகை, நீர், மின்சாரம்,எரி பொருள்,போக்குவரத்து என இது போன்ற அடிப்படை செலவுகளையே நாம் சமாளிக்க முடியாமல் போனால் பிள்ளைகளின் கல்வியை எப்படி சமாளிக்கப் போகிறோம்?
நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் நாமே இப்படி விலை வாசி ஏற்றத்தக் கண்டு பயந்தால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைப் பற்றி நினைக்கும் போது மனம் படபடக்கிறது அவர்களின் நிலை உண்மையில் பரிதாபத்துக்குரியது நாமும் அவர்களின் நிலையில் இருந்தால் எப்படி வாழ்க்கையைச் சமாளிப்போம் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த சில வருடங்களில் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் நிச்சயம் கடந்த ஐந்து வருட காலங்களில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை பெட்ரோலின் விலை உலகச் சந்தையில் ஏறிக் கொண்டிருந்தபோது வெளி நாட்டில் கொள்முதல் செய்யும் இந்தியா மட்டும் பெட்ரோலின் விலையை உயர்த்துவதற்க்கு யோசித்தது காரணம் அரசியல் தலைவர்களும் பொருப்புள்ள எதிர்க்கட்ச்சியும் நேர்மையாக நடந்து கொண்ட காரணத்தினால்.
ஆனால் இன்றைய நிலமையை ஆராய்வோமேயானால் ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சியினர் வரை ஊழல் பரந்து விரிந்து கிடப்பதால் வாயளவில் கூவி விட்டு பாராளு மன்றத்தில் வெட்டிப் பேச்சு பேசி மக்கள்களின் வரிப் பணத்தை ஏமாற்றி நாடகமாடும் அரசியல் குள்ள நரிகள் செய்யும் தவறுகளால் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சரித்திரம் காணாத வகையில் நாளுக்கு ஒரு விலையாக அதிகரித்துக் கொண்டு போகிறது.
அரசாங்கமோ,இஷ்டத்துக்கு பொருட்களின் விலையை ஏற்றும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விடுவதில் மட்டுமே மும்முரமாக இருந்ததை தவிர அதற்க்கு முற்றுப் புள்ளி வைப்பதற்க்கு எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்க வில்லை என்பதே நாடறிந்த உண்மை.
உண்மை நிலவரம், மக்கள் குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் விலையேற்றத்தால் பட்ட இன்னல்கள் இன்றும் கூட புரிந்து கொள்ளப்பட்டதா என்பது கேள்விக்குறியே?
ஒன்று மட்டும் உண்மை. பொருட்களின் விலை ஒரு வழி பாதையை போன்றது ஏற்றம் மட்டும்தான்....விலை குறைவு என்ற பேச்சுக்கு இடமில்லை.
அரசாங்கம் தமது செலவீனங்களில் வீண் விரயத்தைத் தவிர்ப்பதையும், ஊழலைத் தடுப்பதையும் தனது முதல் கடமையாகக் கருதிச் செயல்பட்டால் நாடு மட்டு மின்றி நாட்டு மக்கள்களும் உம்மை போற்றுவார்கள்.
ஆயிரக் கணக்கில் கொள்ளை அடித்த அரசியல் அயோக்கியர்கள் எல்லாம் லட்சம்,கோடி,என்று ஊழல் புரிவதால் நாட்டு மக்கள்களுக்கு சேர வேண்டிய அந்தப் பணம் சேராமலியே நின்று விடுகிறது.
ஊழல் செய்தவர்களுக்கு எதிராக,சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து இருந்தாலும் இது நடை முறைக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருக்கின்றது அவருக்கும் தெறியும் அதை எழுதிக் கொடுத்தவருக்கும் தெரியும்.
500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.
கரூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் சர்வேயராக உள்ள
கிருஷ்ணன் அவரிடம் நில அளவை செய்வதற்காக வந்த கண்ணன் என்பவரிடம் ரூபாய்.500 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கண்ணன் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர் புகாரின் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை சர்வேயர் கிருஷ்ணன் பெறும் போது பாய்ந்து சென்று பிடித்து கைது செய்தனர்.
இது போன்ற பல்வேறு செய்திகளை வாசகர்கள் செய்தித் தாளில் படித்திருப்பீர்கள் அந்த சர்வேயர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது தவறில்லையா என்றால் தவறு தான் சந்தேகமே இல்லை.
இப்படி 500ம்,1000மும் லஞ்சம் வாங்கும் கீழ் மட்ட ஊழியர்களை பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் என்றைக்காவது கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கும் அரசியல் தலைவர்களை கைது செய்ததுண்டா?
தி.மு.க.ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது.ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள கமிஷன் சம்பாதிப்பதற்காக,அரசு மின் உற்பத்தி நிலையங்களை முடக்கிவிட்டு,அதிக விலை கொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கினர் என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார் நூற்றுக்கு நூறு உண்மையும் அதுதான்.
தீமுக்கா ஆட்சி இழந்தற்க்கு முக்கிய காரணமே இந்த மின்சாரம்தான்.
இலவச மின்சார திட்டத்தின் மூலம் பல லட்சம் கோடிகளை அரசாங்கம் இழந்து வருகின்றது இத்திட்டத்தின் மூலம் அற்ப்ப விவசாயிகளே பயன் அடைகிறார்கள் இருபத்தி நாளு மணி நேரமும் கரண்ட் தேவைப்படும் மில்களை தென்னந் தோப்பில் மறைத்து வைத்து பணம் சம்பாதிக்கும் பெரும் பணக்காரர் முதலாளிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.
முதலில் முதல்வர் இதற்க்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும்.
ஊழல் என உயர் நிலையில் உள்ளவர்கள் செய்யும் தவற்றுக்கு விலையேற்றம் என்ற தண்டனையை பாமர மக்களுக்கு வழங்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது !
அந்நியன் 2
ஸலாம் ஆன் யூ சகோ அய்யூப்..!
ReplyDeleteபதிவு நல்ல சிந்தனை தூண்டல்.
இலவச மின்சாரம் என்பதால்...//இருபத்தி நாளு மணி நேரமும் கரண்ட் தேவைப்படும் மில்களை தென்னந்தோப்பில் மறைத்து வைத்து பணம் சம்பாதிக்கும்...//---அடி சக்கை..!
என் வீட்டை சுத்தி நானும் இனி வீட்டை மறைக்கும் உயர தென்னை மரங்களா வளர்த்து "நான் என் வீட்டை தோப்பாக்கிட்டேனே"ன்னுட வேண்டியதுதான்..!
இதுக்கு என்னா புரோசிஜர்...? யாராவது சொல்லுங்க சகோ..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
ReplyDelete//நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் நாமே இப்படி விலை வாசி ஏற்றத்தக் கண்டு பயந்தால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைப் பற்றி நினைக்கும் போது மனம் படபடக்கிறது அவர்களின் நிலை உண்மையில் பரிதாபத்துக்குரியது நாமும் அவர்களின் நிலையில் இருந்தால் எப்படி வாழ்க்கையைச் சமாளிப்போம் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.//
சரியாகச் சொன்னீர்கள் சகோ.
உண்மையில் அவர்களின் நிலையிலிருந்து யோசித்தால் தான் அதன் வலி புரியும்.
நன்றி சகோ
வ அலைக்கும் வஸ்ஸலாம் ஆஷிக் சகோ.
ReplyDelete//என் வீட்டை சுத்தி நானும் இனி வீட்டை மறைக்கும் உயர தென்னை மரங்களா வளர்த்து "நான் என் வீட்டை தோப்பாக்கிட்டேனே"ன்னுட வேண்டியதுதான்..! //
அப்படி அரசை ஏமாற்றி நாம் வாழனும்னு அவசியம் இல்லை சகோ அல்லாஹ் நமக்கு நல்ல வாழ்க்கையினை தந்துள்ளான் அல்ஹம்ந்துலில்ல்ஹ.
ஏழைகளுக்கென கொண்டு வரப்படும் சட்டம் உண்மையான ஏழைகளுக்கே சேரனும் அதுதான் நியாயம்.
வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ
வ அலைக்கும் வஸ்ஸலாம் ஹைதர் சகோ.
ReplyDelete//சரியாகச் சொன்னீர்கள் சகோ.
உண்மையில் அவர்களின் நிலையிலிருந்து யோசித்தால் தான் அதன் வலி புரியும்.//
பட்டால்தானே புறியும்.
கருத்திர்க்கும் வருகைக்கும் நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDelete///அப்படி அரசை ஏமாற்றி நாம் வாழனும்னு அவசியம் இல்லை சகோ அல்லாஹ் நமக்கு நல்ல வாழ்க்கையினை தந்துள்ளான் அல்ஹம்ந்துலில்ல்ஹ.
ஏழைகளுக்கென கொண்டு வரப்படும் சட்டம் உண்மையான ஏழைகளுக்கே சேரனும் அதுதான் நியாயம்.///----மிக மிக சரியான சொற்கள் சகோ.அய்யூப்.
என்னங்க சகோ.,
"இதெல்லாம் நன்கு அறிந்திருந்தும் அரசு இப்படி கண்டுக்காம இருக்கே..." என்றே மனம் நொந்து போய்த்தான்... நான் அதை எதிர்மறையில் எழுதி கேள்வி கேட்டிருந்தேன் சகோ.
அதாவது, யாராவது அரசியல்-அடியாள் செல்வாக்கு அற்ற ஒர் எளியவர்... இப்படி செய்தால் உடனே அரசு ஓடிவந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமே... லஞ்சம் கொடுக்க வில்லை என்றால்..?
அதைத்தான் அப்படி சொல்லிவிட்டேன் சகோ.அய்யூப்.
ஒரு சீரியசான பதிவில் இப்படி நான் ஜோவியலாக எழுதிவிட்டது தவறுதான் சகோ. மன்னிக்கவும்.
மற்றப்படி... மறுமை பயம் கொண்டு, இறையச்சம் கொண்டு, தர்மம் பல செய்து நேர்மையாக இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதருக்கும் இப்படி ஏழைகளுக்காக அவர்களின் முன்னேற்றத்துக்காக உள்ள இலவச திட்டங்களை தன் சுயநலத்துக்காக கபளீகரம் செய்யும் கள்ள எண்ணம் வரவே வராது சகோ.அய்யூப்.
இதுபோன்ற தீய எண்ணங்களை விட்டு நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.
முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//இதுபோன்ற தீய எண்ணங்களை விட்டு நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.//
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
நன்றி ஆஷிக் (அண்ணன் அல்லது தம்பி)இதுக்குப் போயி மன்னிப்பு போன்ற வார்த்தைகளை பயன் படுத்தலாமா?
இன்ஷா அல்லாஹ் நாம் நண்மையை ஏவி தீமையை தடுப்போம் கூடிய சீக்கிரம் அந்நியன் வலைப் பூவை மூடி விட்டு வேரு பெயரில் எதாவது திறக்கலாமா என்று யோசிக்கிறேன்.
வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ.