Thursday, July 14, 2011

அர்த்தமற்ற வாழ்க்கை.

வீடிழந்து,வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து,வாழ்க்கை வண்டியை ஓட்ட நினைப்பவறே கொஞ்சம் கேளுங்கள்.


வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள்,துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது சமாளித்து எழுவது எப்படி?

அலையும் மனங்களோடு,அலையாத மனிதர்களோடு,அள்ளி தர ஆள் இருந்தும் வாங்குவதற்க்கு உன் "கை" வரவில்லையே ஏன்?
ஒரு வேளை இரவல் வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணமா ?

இந்திரியாத்தால் உருவெடுத்து ஒரு பிடி மண்ணில் உனைப் படைத்து உயிரை இரவலாக தந்து உமை காத்த இறைவனை மறக்கலாமா ?

சத்தியம் வெல்லும் தருவாயில் அசத்தியம் வென்று உமைக் கொன்றாளும் கலங்காதே நாளை நீதான் வெற்றி அடைவாய்.

துன்பச் சுமைகள் உமை அழுத்த கண்களில் கண்ணீர் மடை திறக்க இதயமே வெடித்து போனாலும் கலங்காதே.

அடுத்தவர்,பணம் படைத்தவர்,உமை ஏசினாலும்,அல்லது "நா"கூவ பேசினாலும் கண்டு கொள்ளாதே.


நித்தம் புறியாமல் நிசப்த்தம் கூடாமல் துணிச்சலான உம் வாழ்க்கையை நீச்சல் அடித்து கரை சேர்க்க வந்து விட்டான் நல்லோர் வடிவில்.

ஆம்...தானம் தர்மம் என்ற பெயரிலும்,தானும் உண்டு மீதி போக,பிறருக்கு கொடுக்கும் நல்ல மனப்பான்மையும் வந்து விட்டது பலருக்கு.


நித்தம் புரியாமல் நீண்ட நினைவலைகள்,அர்த்தம் விளங்காமல் ஆயிரமாயிரம் கனவுகள்,அர்த்தமற்ற காத்திருப்பு,நிரப்பப்படாத இடைவெளியாய்
நீண்ட சிந்தனைகள்...போதும்..போதும்..நிறுத்து விடு இக்கனவினை.

அதோ பார்....வானத்தில் விடி வெள்ளி அது போல உமது வாழ்க்கையிலும் வந்து விழும் பெரும் சள்ளி.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல.
நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம்.

நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,இன்பத்திலும்,துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும்.

தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.

அது போல வறுமையில் வாடியிருக்கும் குடும்ப நண்பர்களை நல் வழி காண்பிப்போம் அதில் அவர்களுக்கு கிடைக்கப் போவது அற்ப்ப சுகமே அதில் நமக்கு கிடைப்பது பெரும் சொர்க்கமே.

11 comments:

  1. நல்ல கனா...நல்ல பதிவு..

    ReplyDelete
  2. கனவு நனவாகும் ஒரு நாள் .!!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோதரர் அவர்களுக்கு.

    அரசியல் வேண்டாம், பெரிய சர்ச்சைகள் வேண்டாம்,தத்துவங்கள் எல்லாம் வேண்டாம், மச்சி..!ஜாலியாக பொழுது போக ப்ளாக்கில் எதாவது எழுதி விட்டு போயிகிட்டே இருக்க வேண்டும் என்பது தன் இன்றைய பதிவளர்களின் பெரும்பான்மையினரின் நிலை. அதிலிருந்து நீங்கள் வித்தியாசப்படுகிறீர்கள் சகோ
    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  4. சிநேகிதி..சொன்னது
    நல்ல கனா...நல்ல பதிவு..


    வருகைக்கும் உங்கள் கருத்திர்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. //ஜெய்லானி அணணன் சொன்னது.
    கனவு நனவாகும் ஒரு நாள் .!!//

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோ.

    நன்றி சகோ.

    ReplyDelete
  6. //ஹைதர் அலி சொன்னது.
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோதரர் அவர்களுக்கு.

    அரசியல் வேண்டாம், பெரிய சர்ச்சைகள் வேண்டாம்,தத்துவங்கள் எல்லாம் வேண்டாம், மச்சி..!ஜாலியாக பொழுது போக ப்ளாக்கில் எதாவது எழுதி விட்டு போயிகிட்டே இருக்க வேண்டும் என்பது தன் இன்றைய பதிவளர்களின் பெரும்பான்மையினரின் நிலை. அதிலிருந்து நீங்கள் வித்தியாசப்படுகிறீர்கள் சகோ
    வாழ்த்துக்கள் சகோ//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    நீங்கள்தானே சொன்னிர்கள் நாம் எதை எழுதினாலும் பிறருக்கு பயன் படும் படியாக எழுதனும்னு அதான் சகோ.

    நமக்கு ஓட்டும் வேண்டாம் புகழும் வேண்டாம் மனம் திருப்த்திற்க்காக எழுதுகிறேன் சகோ.

    நம் சகாக்கள் இடும் பின்னூட்டமே போதும்.

    நன்றி சகோ.

    ReplyDelete
  7. //துன்பச் சுமைகள் உமை அழுத்த கண்களில் கண்ணீர் மடை திறக்க இதயமே வெடித்து போனாலும் கலங்காதே.//
    உங்கள் பதிவு கண் கலங்க வைத்தது .

    ReplyDelete
  8. //angelin said...
    //துன்பச் சுமைகள் உமை அழுத்த கண்களில் கண்ணீர் மடை திறக்க இதயமே வெடித்து போனாலும் கலங்காதே.//
    உங்கள் பதிவு கண் கலங்க வைத்தது .
    July 15, 2011 3:57 AM //

    வருகைக்கு நன்றி சகோ.

    கண்கள் குளம் ஆகுமே ஏழைகளைப் பற்றி எழுதியால்.

    விடுமுறை முடிந்ததா?

    ReplyDelete
  9. ஆங்கில வலைபூவுக்குதான் விடுமுறை .தமிழ் வலைப்பூவில் ஜூலை இறுதி வரை எழுதுவேன் .(நீங்க சொல்லித்தான் நான் தமிழில் எழுத ஆரம்பித்தேன்
    நீங்க தான் இன்னும் அங்கே வரவே இல்லை )

    ReplyDelete
  10. நெகிழச்செய்யும் பதிவு.அருமையாக உள்ளது அந்நியன்.

    ReplyDelete
  11. angelin said...
    ஆங்கில வலைபூவுக்குதான் விடுமுறை .தமிழ் வலைப்பூவில் ஜூலை இறுதி வரை எழுதுவேன் .(நீங்க சொல்லித்தான் நான் தமிழில் எழுத ஆரம்பித்தேன்
    நீங்க தான் இன்னும் அங்கே வரவே இல்லை )
    July 15, 2011 5:53 AM


    ஸாதிகா said...
    நெகிழச்செய்யும் பதிவு.அருமையாக உள்ளது அந்நியன்.

    Thanks Sisters for comments.

    ReplyDelete