Thursday, July 21, 2011

கொஞ்சம் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ காட்டிச் சிரிங்க!


நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'

குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமீ.
நீதிபதி:              !!!
^^^^^^^^^^^^^^^^^^^^
ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன். 
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்.
அவ சிரிச்சா சிரிப்புல, 100 பேரு செத்து போயிட்டான்!!!

அய்யோ...யோ..அய்யோ...யோ..
^^^^^^^^^^^^^^^^^^^
ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.

மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே.

^^^^^^^^^^^^^^^^^^^

ஏண்டா ஹோம் வொர்க் பண்ணலை கோபாலு?

கரண்ட் இல்லை

மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி எழுத வேண்டியதானே?

தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு.

போய் எடுக்க வேண்டியதானே?

நான் குளிக்காம சாமி ரூம் போக மாட்டேன்.

ஏன் குளிக்கலை?

மோட்டார் ஓடலை. தண்ணி வரலை.

ஏன் மோட்டார் ஓடலை?


சனியனே அதான் சொன்னனே. கரண்ட் இல்லைன்னு

^^^^^^^^^^^^^^^^^^^^^^

மதுரையில் ஒரு டயர் கடையிலுள்ள விளம்பரம்

"உங்கள் தலை வழுக்கையாக இருந்தால் அறிவு அதிகம் என்று அர்த்தம்.

உங்கள் கார் டயர் வழுக்கையாக இருந்தால் ஆபத்து அதிகம் என்று அர்த்தம்."

-----------------------------

கணவன்; "நான் சொல்றது எதையுமே, உன் காதிலே போட்டுக்க 
மாட்டேங்கிறியே?"

மனைவி;"முதல்ல நான் கேட்ட வைரத்தோடு வாங்கித் தாங்க!
என் காதுல போட்டுக்கிறேன்!" [கல்கி

-----------------------------

"இன்னிக்கு பட்டினி கிடந்து ஆஃபீஸ்ல வேலை செஞ்சேன்....!"

"ஏன்...?"

"சாப்பாட்டு நேரத்துல யாருமே என்னை எழுப்பிவிடல..அதான்!"
[கல்கி]

------------------------

“செல்ஃபோனை எதுக்குடா பல் டாக்டரிடம் எடுத்துட்டுப் போறே?”

‘ப்ளூ டூத்’ நல்லாயிருக்கான்னு செக் பண்ணத்தான்!”

------------------------

தொழில் படுத்துட்டுதுன்னு சோகமா இருக்கீங்களே....என்ன பிசினஸ்?"

"பாய் வியாபாரம்!"

------------------------

கணவர்: நமக்குள்ள எது நடந்தாலும் நாலு சுவத்துக்குள்ளதான் நடக்கணும்...''

மனைவி: ""அதைத்தானே நானும் சொல்றேன்... இதைப் புரிஞ்சுக்காம போன வாரம், நாலு தட்டு தட்டுனதுக்குச் சத்தம் போட்டு, ஊரையே நீ கூட்டிட்டேய்யா...!''

------------------------

"நம்ம தலைவரோட பேரன் அழும்போது, பூச்சாண்டி கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன்னு சொன்னா பயப்படமாட்டேங்கிறானே..எப்படி
அழுகையை நிறுத்தறது?"

"சி.பி,ஐ.,கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன்னு சொல்லிப்பாருங்க.....
உடனே அழுகையை நிறுத்திடுவான்!"

----------------------------

"நம்ம டாக்டர் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகு மாறிட்டார்..."

"மாறிட்டாரா?"

"ஆம், சாதாரண காய்ச்சலுக்குக்கூட ஆறு மாதம் மாத்திரை தருகிறாரே!" [கல்கி]

------------------------

"ஒரு வாரமா என் காது சரியா கேட்கவே மாட்டேங்குது டாக்டர்?"

"நீங்க சொல்லியே கேட்காத காது நான் சொன்னா மட்டும் கேட்கவா
போகுது?" [குமுதம்]

--------------------

டாக்டர்! இந்த ஆப்ரேஷனுக்காக நான் நிறைய பேர் கிட்ட கடன் வாங்கி இருக்கேன்."

"கவலைப்படாதீங்க,
ஆப்பரேஷனுக்கு அப்புறம் எந்த கடன்காரனும் உங்களைத் தேடி
வரமாட்டாங்க." [குமுதம்]

---------------------------

"தலைவர் சந்தோஷப்படுற மாதிரி எதை வாங்கிக் கொடுக்கலாம்?"

"ஜாமீன் வாங்கிக் கொடுங்க!" [விகடன்]

----------------------------

"அந்த டாக்டர் உங்களை ஆறுமாசம் தங்கி வைத்தியம் பார்க்கச் சொல்றாரே...ஏன்?

என்னோட சொத்து மதிப்பு இருபது லட்சமுன்னு சொன்னேன்."

----------------------------

"கட்சியில மாற்றம் தேவைன்னு தலைவர் சொன்னது தப்பாப் போச்சா... ஏன்?

அவரைத் தவிர எல்லோரும் வேற கட்சிக்கு மாறிட்டாங்க...

----------------------------


(ராஜபாளையம் கடைத் தெருவில் இரண்டு நண்பர்கள்)

""என்ன மச்சான் ரொம்ப மூடு அவுட்டா இருக்கிறே?''

""அதையேன்டா கேக்குற? எங்கப்பா என்னை அரை லூசுன்னு திட்டிட்டாரு''

""சரி.. சரி... கவலைப்படாதே... அவரு உன்னை இன்னும் முழுசாப் புரிஞ்சுக்கலை''

----------------------------

"சார், கேடி பக்கிரி போட்டோ வேணும்னு கேட்டிங்கல்லே...எந்த அமைச்சரோட சேர்ந்து இருக்கிற போட்டோ வேணும்'னு கேக்கிறான்!"

----------------------------

"வரவேற்பு வாசகம் எழுதினதுக்கு, தலைவர் என்னை பின்னி எடுத்துட்டாரு!"

"சரி...அதுக்காக' இன்னும் சி.பி.ஐ. கையில் சிக்காத சிங்கமே வருக'ன்னா எழுதறது?" [விகடன்]

---------------------------------

கொஞ்சம் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ காட்டிச் சிரிங்க!

கண்டக்டர்: டிக்கெட் வாங்கிட்டியா??

பயணி: பஸ்ஸிலே போகும்பொழுது யாரு என்ன கொடுத்தாலும் வாங்கக் கூடாதுனு என் அம்மா சொல்லி இருக்காங்க சார்!

கண்டக்டர்: ???

------------------------

ஹெல்லோ, ஹெல்லோ, நான் தேனீ மாவட்டம் கம்பத்துலே இருந்து பேசறேங்க.

ஹைய்யோ...யோ,..கீழே விழுந்து வைக்கப் போறீங்க, இறங்கி வந்து பேசுங்க.

--------------------------

உன்னிடம் எட்டு ஆப்பிள்கள் இருக்கு. அவற்றை ஆறு பேருக்குச் சமமாக எப்படிப் பிரிச்சுக் கொடுப்பே?

ஜூஸ் போட்டுத் தான்.

---------------------------

"ஆட்சியில பங்கு கேட்க மாட்டோம்னு கூட்டணித் தலைவர்கள் எல்லாம் சொல்லிட்டாங்க தலைவரே...!

"ரொம்ப சந்தோஷம்...!

ஆனா, ஊழல்ல பங்கு கேட்பாங்களாம்...!"

-----------------------------

"என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!

ஐயையோ! அப்படியெல்லாம் வளர்க்காதீங்க... நல்ல பையனா வளர்க்கப் பாருங்க!"

---------------------------------

ஒரு அழகான பொண்ண 'பப்'ல பாத்துட்டு சர்தார்ஜி நாளைக்கு வீட்டுக்கு வா.... யாரும் இருக்க மாட்டாங்கன்னுட்டு அட்ரஸ் கொடுத்துட்டு போயிட்டார்.

மறு நாள் நைட் அந்த பொண்ணு வந்து பாத்தா, யாருமேயில்ல. 

எப்படி சர்தார்ஜீ ?

--------------------------

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.


டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?


நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்

-------------------------

சிரியுங்கள் ஆனால் பிறர் சிரிக்கும்படி நடந்து கொள்ளாதிர்கள்,சிரிப்பு என்பது நமது வாழ்க்கையில் ஒரு பகுதி நேரமாக இருக்காமல் நூற்றில் இருபது சதவீதமாக இருக்கட்டும்.


அதிகமாக சிரிப்பது ஆபத்தில் முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.


இவை அனைத்தும் வார இதழ் மற்றும் மாத இதழ்களில் சுட்டது.

சந்திப்போம்.


21 comments:

  1. தப்பு தப்பு

    நாட்டாம இப்படி சிரிக்க வச்சா....

    மக்கள்ஸ் பயப்படமாட்டாங்க..............

    நாட்டாம தீர்ப்ப மதிக்க மாட்டாங்க...............

    ReplyDelete
  2. //சனியனே அதான் சொன்னனே. கரண்ட் இல்லைன்னு//

    சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்

    ReplyDelete
  3. //ஐயையோ! அப்படியெல்லாம் வளர்க்காதீங்க... நல்ல பையனா வளர்க்கப் பாருங்க!"//

    எம் மவன மந்திரி மாதிரி ஆக்கி காட்டுவேன்னு சொன்னா நீங்க மந்திரி அழகிரி, மந்திரி கனிமொழி, மந்திரி தயாநிதி வ இழுப்பீங்களோ???

    ReplyDelete
  4. செம கலக்கல்!
    என் வயிற்றை சொன்னேன்!

    ReplyDelete
  5. ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)

    ReplyDelete
  6. அடக்க முடியாமல் பொங்கி வரும் நகைச்சுவை. பச்சை முட்டை, தாலி கட்டிட்டாலே நல்ல நேரம் போயிடும், டாப் கிளாஸ்.

    ReplyDelete
  7. //போன வாரம், நாலு தட்டு தட்டுனதுக்குச் சத்தம் போட்டு, ஊரையே நீ கூட்டிட்டேய்யா...!''//

    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-)

    ReplyDelete
  8. //ஆமினா சொன்னது.
    தப்பு தப்பு

    நாட்டாம இப்படி சிரிக்க வச்சா....

    மக்கள்ஸ் பயப்படமாட்டாங்க..............

    நாட்டாம தீர்ப்ப மதிக்க மாட்டாங்க...............//

    நாட்டாமை செம்பு களவு போயதிலிருந்து தீர்ப்புலாம் சொல்றது இல்லை சகோ.

    மக்களைப் பார்த்து இப்போ நாட்டாமைகள் பயப்புடுகிற காலம் வந்திருச்சுமா....

    ReplyDelete
  9. //ஆமினா சொன்னது.
    ஐயையோ! அப்படியெல்லாம் வளர்க்காதீங்க... நல்ல பையனா வளர்க்கப் பாருங்க!"//

    எம் மவன மந்திரி மாதிரி ஆக்கி காட்டுவேன்னு சொன்னா நீங்க மந்திரி அழகிரி, மந்திரி கனிமொழி, மந்திரி தயாநிதி வ இழுப்பீங்களோ???


    ச்சே..ச்சே..அவர்களைலாம் இழுப்பேனா...

    நீங்கள் முதல் மந்திரியாக ஆக்கி காட்டுங்கள் சகோ..

    வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி சகோ

    ReplyDelete
  10. நிஜாமுதீன் சொன்னது.
    ஹா..ஹா..ஹா.

    நன்றிண்ணே..வருகைக்கு.

    ReplyDelete
  11. மு.ஜபருல்லாஹ் சொன்னது.
    செம கலக்கல்!
    என் வயிற்றை சொன்னேன்!

    அண்ணே பதிவை படித்து விட்டு நக்கல் கிக்கல் பன்னலியே?

    நன்றிண்ணே..வருகைக்கும் கருத்திர்க்கும்.

    ReplyDelete
  12. முஹம்மத் ஆஷிக் 'சிட்டிசன் ஆஃப் வேர்ல்ட் சொன்னது.
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :)

    நன்றி சகோ வருகைக்கு.

    ReplyDelete
  13. இமா சொன்னது.
    ;))

    வாங்க சகோ உங்களை புரிஞ்சிக்குவே முடியலை நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  14. //பாலா சொன்னது.
    அடக்க முடியாமல் பொங்கி வரும் நகைச்சுவை. பச்சை முட்டை, தாலி கட்டிட்டாலே நல்ல நேரம் போயிடும், டாப் கிளாஸ்.//

    வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி பாலா சார்.

    ReplyDelete
  15. ஜெய்லானி said...
    //போன வாரம், நாலு தட்டு தட்டுனதுக்குச் சத்தம் போட்டு, ஊரையே நீ கூட்டிட்டேய்யா...!''//

    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-)

    வாங்க பாஸ்.

    ஊருக்கு போயிட்டு வந்து இருக்கியே எல்லாம் அனுபவம் பேசுர மாதுரி தெரியுதே...

    ReplyDelete
  16. இமா சொன்னது.
    ;)))


    சகோ இன்னும் சிரிப்பை முடிக்கவில்லை மாதுரி தெரியுது.

    ReplyDelete
  17. சிரிக்க வச்சிட்டீங்க...அயூப்

    ReplyDelete
  18. Reverie said...
    சிரிக்க வச்சிட்டீங்க...அயூப்

    Thanks Brother

    ReplyDelete