Showing posts with label COMEDY. Show all posts
Showing posts with label COMEDY. Show all posts

Monday, February 7, 2011

ஹா..ஹா..விஐபி சூட்கேஸ் சிரியுங்கள்...சிரியுங்கள்.



கண்டிப்பா இந்த வீடியோ பதிவை பாருங்கள் !

நண்பர்களே நாமும் கொஞ்சம் இங்க்லிசை கற்று வைத்துக் கொண்டு சும்மா டாஷ்..பூஷ்ணு பில்டாப் காட்டுறோம்.
ஆனால் நாம பேசுவது தவறுதான் என்று நமக்கு தெரியும் இருந்தாலும் எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் ஆச்சர்யம் !!!
--------------------------------------------------------------------------------------------------------


டீச்சர்: கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?

ஸ்டூடன்ட்: அட்ரஸ்ஸா மாத்திக் கொடுக்கனும் டீச்சர்.......

டீச்சர்: ? ? ? 

=================================================================

பேராசிரியர்: தம்பி...ஏன்பா லேட்?

மாணவன்: சாரி சார்..பஸ்லயே அசந்து தூங்கிட்டேன்

பேராசிரியர்: முட்டாள்...!!! கிளாஸ்க்கு வர்றதுக்குள்ள என்ன அவசரம்???
==================================================================

ரவுடி: நீங்க சொன்னமாதிரியே அசிஸ்டன்ட் கமிஷ்னர கொன்னுட்டோம்

எம்.ல்.ஏ: நான் எங்கடா கொல்ல சொன்னேன்

ரவுடி:நீங்கதானே டென்ஷனா இருக்கு.. ACஅ போடுன்னு சொன்னீங்க..[

எம்.ல்.ஏ: !!!
==================================================================
டீச்சர் : முதல் மாசம் ஜனவரி ! 
ரெண்டாவது மாசம் பிப்ரவரி ! 
பத்தாவது மாசம் என்ன ? 

மாணவன் : டெலிவரி டீச்சர்

டீச்சர் : !!!
=================================================================

வாத்தியார் : டேய் மண்டுகளா...பாம்பு கடிச்சா கடிச்ச இடத்தில் நல்லா இறுக்கி கட்டி கொள்ளனும்.

மாணவன் : எதை வச்சு சார் கட்டுப் போடணும் ?

வாத்தியார் : மடையன்..மடையன்... துணி வச்சோ அல்லது கயிறு வச்சோ கட்டனும்டா சரியா ?

மாணவன் : பாம்பு கழுத்திலே கடிச்சாலுமா சார் ?

வாத்தியார் : ஹீ..ஹீ..நாந்தான் மடையனோ !!!

==============================================================

ஓடும் ஆத்துலே மீன் பிடிக்கலாம் !
காவேரி ஆத்துலேயும் மீன் பிடிக்கலாம் !
ஆனால் அய்யர் ஆத்துலே மீன் பிடிக்க முடியுமோ ?

=============================================================

வாத்தியார் : பசங்களா உலகம் ஏன் சுத்துதுன்னு தெரியுமா ?
மாணவன் : என்ன சார் நீங்கள் குவாட்டர் அடிச்சிட்டு என் அப்பாவே சுத்தும் போது.. த்ரீ குவாட்டர் தண்ணீ இருக்கி உலகம் சுத்தாமல் இருக்குமா ?

வாத்தியார் : !!!
============================================================
கருணாநிதி அமெரிக்காவிற்கு ஒபாமா வீட்டிற்கு போகிறார் !

கருணாநிதி : எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டுனிங்க ?
ஒபாமா : அங்கே... தூரத்துல ஒரு பிரிட்ஜ் தெரியுதா ?
கருணாநிதி: ஆமா தெரியுது .
ஒபாமா : அந்த பிரிட்ஜ் கட்டும் போது அடிச்ச காச வச்சு கட்டினேன் ...

ஒபாமா தமிழ் நாட்டிற்கு கருணாநிதி வீட்டிற்கு வருகிறார் !

ஒபாமா : என்னோட வீட்டை விட உங்க வீடு பெருசா இருக்கே ?
எப்படி கட்டுனிங்க.?
கருணாநிதி : அதோ ஒரு பிரிட்ஜ் தெரியுதா ?
ஒபமா : இல்லையே
கருணாநிதி : அங்கே பிரிட்ஜ் கட்ட வேண்டிய பணத்திலேதான் கட்டினேன்.
ஒபாமா : !!!

==========================================================

டாக்டர் : நான் எழுதி குடுத்த மருந்துல எதாச்சும் இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?

நோயாளி : ஓ! இருக்கே... 20 ரூபாய் இருந்த மருந்து இப்போ 25 ரூபாய் ஆயிடுச்சு....
===========================================================

ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்.

பெற்றோர் :   இந்த காலேஜ் நல்ல காலேஜா ?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்கே படிச்சா ரொம்ப ஈஸியா வேலைகிடைக்கும்...

பெற்றோர் :    அப்படியா!
வாட்ச்மேன் : ஆமா... நானும் இந்த காலேஜ்ல தான் இன்ஜினியரிங் படிச்சேன். படிச்சு முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சுடுச்சு....

பெற்றோர் : !!!
============================================================

அம்மா : என்னடி... உன் புருஷன் இப்படி குடிச்சிட்டு வர்றாரே... நல்லாவா இருக்கு?
மகள் : தெரியலம்மா... நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பாக்கலை.....
அம்மா : !!!
============================================================

ஹாஸ்பிடலில் மேதாவி !!!

நோய் வாய்ப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்ட நண்பர் ஒருவரை பார்க்க மேதாவி ஹாஸ்பிடல் சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்று கொண்டிருந்த மேதாவி, நண்பரின் நிலைமை திடீரென்று மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார்.


அந்த நிலையில் பேச முடியாத நண்பர் ஒரு பேபரும் பேனாவும் வேண்டுமெனக் கேட்டார்.அவசரமாக எழுதிகொன்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே பிரிந்தது.


பேப்பரில் தன் குடும்பத்திற்கு எதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்க கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பையில் வைத்து கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் நண்பர் வீட்டிற்கு போய் துண்டு பேப்பர் விசயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி படித்து பார்க்க சொன்னார். 


பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி உடனே மயக்கம் அடைந்து கீழேயே விழுந்து விட்டார். அப்பொழுது தான் மேதாவி அந்த பேப்பரில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்தார். அதில் " நீ என் ஆக்ஸிஜன் குழாய் மீது நின்று கொண்டிருகிறாய்" என்று எழுதி இருந்தது....

==============================================================
பையன் : அப்பா... நான் படிக்க போகலை...
அப்பா : ஏன்டா?
பையன் : கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்னு சார் சொல்கிறார்.அப்பறம் நான் எதுக்கு படிக்கணும்.....

==============================================================
நோயாளி : டாக்டர்... முகத்துல மீசை வளரவே மாட்டேங்குது...
டாக்டர் : ஒரு பொண்ண லவ் பண்ணி பாருங்க... மீசை என்ன, தாடி கூட வளரும்.....

===============================================================

டாக்டர் : அடிபட்ட இடத்துல 18 தையல் போடணும்...
மேதாவி : போடுறது தான் போடுறீங்க... பூ டிசைன்ல எம்பிராய்டரி மாதிரி போட்டு விடுங்க...
டாக்டர் : ???
===============================================================
மேதாவியின் மனைவி : எதுக்கு அடிக்கடி கிட்சன் ரூமுக்கு போயிட்டு வரீங்க...?

மேதாவி :டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கானு செக் அப் பண்ண சொன்னார்.....

================================================================
நண்பர் : சின்ன ஆபரேஷன் தான் பயபடாதீங்க, தைரியமா இருங்கன்னு நர்ஸ்சொல்லியும் ஏன் ஓடி வந்துடீங்க?

நோயாளி : நர்ஸ் என்கிட்டே சொல்லலை... டாக்டரிடம் சொன்னாங்க ...

=================================================================
நபர் 1 : நேத்து என் மனைவிக்கு பளார்னு ஒரு அறை விட்டேன்...
நபர் 2 : அதுக்கு அவங்க என்ன பண்ணாங்க?
நபர் 1 : அதுக்குள்ள கனவு கலைஞ்சுடுச்சு சார்.....

==================================================================
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
 டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
==================================================================
கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே? 
பின்னே.... கபாலி சென்னைக்குப் போயிருக்கான்கிறதை களவாணி மதராசபட்டினம் போயிருக்குன்னு சொல்றாளே!

===================================================================
தொட்ட இடமெல்லாம் வலி !!!

உடம்புல எங்கு தொட்டாலும் வலிக்குது டாக்டர், என்று சொல்லிக்கொண்டு ஒரு மேதாவி டாக்டரிடம் வந்தார்.


டாக்டர் மேதாவியை படுக்க வைத்து ஒவ்வொரு பகுதியாக செக் செய்து பார்த்தார். எல்லா இடமும் நன்றாக இருந்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். ஸ்கேன் எடுத்து பார்த்தார். டாக்டரால் கண்டே பிடிக்க முடியவில்லை. சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு, ஆகா இவன் மேதாவியாச்சே என்று பொறி தட்டியது டாக்டருக்கு. நேராக மேதாவிடம் வந்து கையை பிடித்து விரல்களை சோதித்தார். தொடு விரலில் காயம் இருந்தது......

=====================================================================
ராமு: சட்டை புதுசா இருக்கே! தீபாவளிக்கு எடுத்ததா?

சோமு: இல்லை... எனக்கு எடுத்தது.....
===================================================================

நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......

===================================================================
ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....

==================================================================

மேதாவி 1: வானம் கூட குடிக்கும் போலிருக்கே...
மேதாவி 2: எப்படி சொல்றீங்க?
மேதாவி 1: பின்னே... இன்றும் வானம் தெளிவா இருக்கும்னு ரேடியோலசொன்னங்க்ளே.....

==================================================================
மேதாவி : கான்ஸ்டபிள், நான் இந்த ரோட்டில் போகலாமா?
கான்ஸ்டபிள் : வாகனங்கள் தான் போக கூடாது... நீங்க போகலாமே...
மேதாவி : என் பேரு மயில் வாகனம் சார்!
கான்ஸ்டபிள் : !!!
===================================================================

நபர் 1: எங்க தாத்தாவுக்கு 100 வயசு ஆகுது... ஆன இது வரைக்கும் டாக்டர்கிட்டபோனதே கிடையாது... 
நபர் 2: நீங்க 100 வயசுன்னு சொல்லும்போதே நெனச்சேன்...

===================================================================

மாடி பஸ்ஸில் மேதாவிகள் !!!

ஒரு முறை சந்தா, பந்தா இருவரும் டபுள் டக்கரில் (மாடி பஸ்ஸில்) ஏறினார்கள். சந்தா கீழ் தளத்திற்கும், பந்தா மேல் தளத்திற்கும் சென்று அமர்ந்துகொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடைய ஸ்டாப்பிங் வந்தும் பந்தா இறங்காததை கண்டு, கீழே இருந்த சாந்த மேல் தளத்திற்கு சென்று பார்க்க போனார். அங்கு தன்னுடைய நண்பன் பந்தா பேயறைந்தது போல், வேர்த்து விறுவிறுத்து, முன்னாலிருந்த கம்பியை கெட்டியாக பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னவென்று சந்தா கேட்டதற்கு பந்தா சொன்ன பதில்... ஐயோ! இங்கே டிரைவரெ காணோமே.. பஸ் தானா ஓடுது.....
===================================================================


நகைச்சுவை மடலை தந்து உதவிய ஜமால் சாதிக்(மலேசியா) 
சல்மா,(ஷார்ஜா) மற்றும் சிவகங்கை செல்வராஜ் அவர்களுக்கு ரொம்ப நன்றி !









Sunday, January 30, 2011

அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சிரிக்கவும் !!!



மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றது !!!
இதுக்கெல்லாம் காரணம் எய்ட்ஸை பற்றி மக்கள்களுக்கு ஒழுங்கான முறையில் விழிப்புணர்வை அரசு செய்ய தவறியக் காரணத்தால் அரசியல்வாதிகள் அனைவரும் நம் சமுதாயத்தை அவர் அவர் சக்த்திக்குயேற்றவாறு சீரழிக்கின்றனர் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.

சாரிங்க எனது அடுத்தப் பதிவு எய்ட்ஸை பத்தியதுங்க கொஞ்சம் முன்னோட்டம் எழுதி பார்த்தேன் இதில் என்ன கொடுமை என்றால் இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.....


1 போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,  
                          உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் :    அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

2 எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...." "
அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

3 ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை
நினைச்சுக்கிட்டீங்களா?

இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!


4 ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன்
பண்ணப் போறீங்க...?

நீங்கதானே....ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!



5 டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"

ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!

ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?


6 ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!

யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!"


7 குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..

குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல்
போயிருப்பார் என்றுதான்....


8 அந்த ஆள் உண்மையிலயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா
இருக்கு...

ஏன்?

துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!


9 சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!

ஏன்..?

பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!



10 எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?

நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!


11 ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?

சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."


12 ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"

டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!


13 அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"

மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!


14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!


15 அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல எச்சு துப்பினேன்

சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக
தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??


16 ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை "

EXAMPLE:
மனிதர்கள் யாரும் ஆசை பட கூடாது என்று "ஆசை " பட்டார் புத்தர்..!

ஆசைப்படகூடாது எண்டு சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?


17 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்..

ஆசிரியர்: !!!


18 தமிழ் நாட்டில மொத்தம் 3 கடல் , 45 ஆறு, 239 ஏறி, 1836 குளம், 3200 வாய்கள், 21340கிணறு ..

இத்தனை இருந்தும் ஏன்டா என்னோட படத்த பாத்து சாவுரிங்க ??? (T.RAJENDAR )


19 உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குதுஇதிலிருந்து என்ன தெரியுது?

ஒரு பொண்ணு நினைச்சா,எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)


20 டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
AJITH: இல்லை 200நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......
AJITH: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


21 அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
     இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
      அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
       இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூனு பேர்தான்..........

22 மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.

ஏங்க என்னாச்சி!

அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட்
இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

23 மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!

ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!

முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!

அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!


24 கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;

"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."

" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam


25 ஆசிரியர் :: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..

     மாணவர் :: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..

      ஆசிரியர் :: ஏண்டா???

       மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..


26 ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?

மாணவன்: டன் டன் டன்.

உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப் பட்டு இருப்பிர்கள் ஆனால் தினமும் ஒரு அரை மணி நேரம் சிரித்திர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.