Monday, February 7, 2011

ஹா..ஹா..விஐபி சூட்கேஸ் சிரியுங்கள்...சிரியுங்கள்.கண்டிப்பா இந்த வீடியோ பதிவை பாருங்கள் !

நண்பர்களே நாமும் கொஞ்சம் இங்க்லிசை கற்று வைத்துக் கொண்டு சும்மா டாஷ்..பூஷ்ணு பில்டாப் காட்டுறோம்.
ஆனால் நாம பேசுவது தவறுதான் என்று நமக்கு தெரியும் இருந்தாலும் எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் ஆச்சர்யம் !!!
--------------------------------------------------------------------------------------------------------


டீச்சர்: கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?

ஸ்டூடன்ட்: அட்ரஸ்ஸா மாத்திக் கொடுக்கனும் டீச்சர்.......

டீச்சர்: ? ? ? 

=================================================================

பேராசிரியர்: தம்பி...ஏன்பா லேட்?

மாணவன்: சாரி சார்..பஸ்லயே அசந்து தூங்கிட்டேன்

பேராசிரியர்: முட்டாள்...!!! கிளாஸ்க்கு வர்றதுக்குள்ள என்ன அவசரம்???
==================================================================

ரவுடி: நீங்க சொன்னமாதிரியே அசிஸ்டன்ட் கமிஷ்னர கொன்னுட்டோம்

எம்.ல்.ஏ: நான் எங்கடா கொல்ல சொன்னேன்

ரவுடி:நீங்கதானே டென்ஷனா இருக்கு.. ACஅ போடுன்னு சொன்னீங்க..[

எம்.ல்.ஏ: !!!
==================================================================
டீச்சர் : முதல் மாசம் ஜனவரி ! 
ரெண்டாவது மாசம் பிப்ரவரி ! 
பத்தாவது மாசம் என்ன ? 

மாணவன் : டெலிவரி டீச்சர்

டீச்சர் : !!!
=================================================================

வாத்தியார் : டேய் மண்டுகளா...பாம்பு கடிச்சா கடிச்ச இடத்தில் நல்லா இறுக்கி கட்டி கொள்ளனும்.

மாணவன் : எதை வச்சு சார் கட்டுப் போடணும் ?

வாத்தியார் : மடையன்..மடையன்... துணி வச்சோ அல்லது கயிறு வச்சோ கட்டனும்டா சரியா ?

மாணவன் : பாம்பு கழுத்திலே கடிச்சாலுமா சார் ?

வாத்தியார் : ஹீ..ஹீ..நாந்தான் மடையனோ !!!

==============================================================

ஓடும் ஆத்துலே மீன் பிடிக்கலாம் !
காவேரி ஆத்துலேயும் மீன் பிடிக்கலாம் !
ஆனால் அய்யர் ஆத்துலே மீன் பிடிக்க முடியுமோ ?

=============================================================

வாத்தியார் : பசங்களா உலகம் ஏன் சுத்துதுன்னு தெரியுமா ?
மாணவன் : என்ன சார் நீங்கள் குவாட்டர் அடிச்சிட்டு என் அப்பாவே சுத்தும் போது.. த்ரீ குவாட்டர் தண்ணீ இருக்கி உலகம் சுத்தாமல் இருக்குமா ?

வாத்தியார் : !!!
============================================================
கருணாநிதி அமெரிக்காவிற்கு ஒபாமா வீட்டிற்கு போகிறார் !

கருணாநிதி : எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டுனிங்க ?
ஒபாமா : அங்கே... தூரத்துல ஒரு பிரிட்ஜ் தெரியுதா ?
கருணாநிதி: ஆமா தெரியுது .
ஒபாமா : அந்த பிரிட்ஜ் கட்டும் போது அடிச்ச காச வச்சு கட்டினேன் ...

ஒபாமா தமிழ் நாட்டிற்கு கருணாநிதி வீட்டிற்கு வருகிறார் !

ஒபாமா : என்னோட வீட்டை விட உங்க வீடு பெருசா இருக்கே ?
எப்படி கட்டுனிங்க.?
கருணாநிதி : அதோ ஒரு பிரிட்ஜ் தெரியுதா ?
ஒபமா : இல்லையே
கருணாநிதி : அங்கே பிரிட்ஜ் கட்ட வேண்டிய பணத்திலேதான் கட்டினேன்.
ஒபாமா : !!!

==========================================================

டாக்டர் : நான் எழுதி குடுத்த மருந்துல எதாச்சும் இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?

நோயாளி : ஓ! இருக்கே... 20 ரூபாய் இருந்த மருந்து இப்போ 25 ரூபாய் ஆயிடுச்சு....
===========================================================

ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்.

பெற்றோர் :   இந்த காலேஜ் நல்ல காலேஜா ?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்கே படிச்சா ரொம்ப ஈஸியா வேலைகிடைக்கும்...

பெற்றோர் :    அப்படியா!
வாட்ச்மேன் : ஆமா... நானும் இந்த காலேஜ்ல தான் இன்ஜினியரிங் படிச்சேன். படிச்சு முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சுடுச்சு....

பெற்றோர் : !!!
============================================================

அம்மா : என்னடி... உன் புருஷன் இப்படி குடிச்சிட்டு வர்றாரே... நல்லாவா இருக்கு?
மகள் : தெரியலம்மா... நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பாக்கலை.....
அம்மா : !!!
============================================================

ஹாஸ்பிடலில் மேதாவி !!!

நோய் வாய்ப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்ட நண்பர் ஒருவரை பார்க்க மேதாவி ஹாஸ்பிடல் சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்று கொண்டிருந்த மேதாவி, நண்பரின் நிலைமை திடீரென்று மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார்.


அந்த நிலையில் பேச முடியாத நண்பர் ஒரு பேபரும் பேனாவும் வேண்டுமெனக் கேட்டார்.அவசரமாக எழுதிகொன்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே பிரிந்தது.


பேப்பரில் தன் குடும்பத்திற்கு எதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்க கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பையில் வைத்து கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் நண்பர் வீட்டிற்கு போய் துண்டு பேப்பர் விசயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி படித்து பார்க்க சொன்னார். 


பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி உடனே மயக்கம் அடைந்து கீழேயே விழுந்து விட்டார். அப்பொழுது தான் மேதாவி அந்த பேப்பரில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்தார். அதில் " நீ என் ஆக்ஸிஜன் குழாய் மீது நின்று கொண்டிருகிறாய்" என்று எழுதி இருந்தது....

==============================================================
பையன் : அப்பா... நான் படிக்க போகலை...
அப்பா : ஏன்டா?
பையன் : கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்னு சார் சொல்கிறார்.அப்பறம் நான் எதுக்கு படிக்கணும்.....

==============================================================
நோயாளி : டாக்டர்... முகத்துல மீசை வளரவே மாட்டேங்குது...
டாக்டர் : ஒரு பொண்ண லவ் பண்ணி பாருங்க... மீசை என்ன, தாடி கூட வளரும்.....

===============================================================

டாக்டர் : அடிபட்ட இடத்துல 18 தையல் போடணும்...
மேதாவி : போடுறது தான் போடுறீங்க... பூ டிசைன்ல எம்பிராய்டரி மாதிரி போட்டு விடுங்க...
டாக்டர் : ???
===============================================================
மேதாவியின் மனைவி : எதுக்கு அடிக்கடி கிட்சன் ரூமுக்கு போயிட்டு வரீங்க...?

மேதாவி :டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கானு செக் அப் பண்ண சொன்னார்.....

================================================================
நண்பர் : சின்ன ஆபரேஷன் தான் பயபடாதீங்க, தைரியமா இருங்கன்னு நர்ஸ்சொல்லியும் ஏன் ஓடி வந்துடீங்க?

நோயாளி : நர்ஸ் என்கிட்டே சொல்லலை... டாக்டரிடம் சொன்னாங்க ...

=================================================================
நபர் 1 : நேத்து என் மனைவிக்கு பளார்னு ஒரு அறை விட்டேன்...
நபர் 2 : அதுக்கு அவங்க என்ன பண்ணாங்க?
நபர் 1 : அதுக்குள்ள கனவு கலைஞ்சுடுச்சு சார்.....

==================================================================
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
 டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
==================================================================
கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே? 
பின்னே.... கபாலி சென்னைக்குப் போயிருக்கான்கிறதை களவாணி மதராசபட்டினம் போயிருக்குன்னு சொல்றாளே!

===================================================================
தொட்ட இடமெல்லாம் வலி !!!

உடம்புல எங்கு தொட்டாலும் வலிக்குது டாக்டர், என்று சொல்லிக்கொண்டு ஒரு மேதாவி டாக்டரிடம் வந்தார்.


டாக்டர் மேதாவியை படுக்க வைத்து ஒவ்வொரு பகுதியாக செக் செய்து பார்த்தார். எல்லா இடமும் நன்றாக இருந்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். ஸ்கேன் எடுத்து பார்த்தார். டாக்டரால் கண்டே பிடிக்க முடியவில்லை. சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு, ஆகா இவன் மேதாவியாச்சே என்று பொறி தட்டியது டாக்டருக்கு. நேராக மேதாவிடம் வந்து கையை பிடித்து விரல்களை சோதித்தார். தொடு விரலில் காயம் இருந்தது......

=====================================================================
ராமு: சட்டை புதுசா இருக்கே! தீபாவளிக்கு எடுத்ததா?

சோமு: இல்லை... எனக்கு எடுத்தது.....
===================================================================

நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......

===================================================================
ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....

==================================================================

மேதாவி 1: வானம் கூட குடிக்கும் போலிருக்கே...
மேதாவி 2: எப்படி சொல்றீங்க?
மேதாவி 1: பின்னே... இன்றும் வானம் தெளிவா இருக்கும்னு ரேடியோலசொன்னங்க்ளே.....

==================================================================
மேதாவி : கான்ஸ்டபிள், நான் இந்த ரோட்டில் போகலாமா?
கான்ஸ்டபிள் : வாகனங்கள் தான் போக கூடாது... நீங்க போகலாமே...
மேதாவி : என் பேரு மயில் வாகனம் சார்!
கான்ஸ்டபிள் : !!!
===================================================================

நபர் 1: எங்க தாத்தாவுக்கு 100 வயசு ஆகுது... ஆன இது வரைக்கும் டாக்டர்கிட்டபோனதே கிடையாது... 
நபர் 2: நீங்க 100 வயசுன்னு சொல்லும்போதே நெனச்சேன்...

===================================================================

மாடி பஸ்ஸில் மேதாவிகள் !!!

ஒரு முறை சந்தா, பந்தா இருவரும் டபுள் டக்கரில் (மாடி பஸ்ஸில்) ஏறினார்கள். சந்தா கீழ் தளத்திற்கும், பந்தா மேல் தளத்திற்கும் சென்று அமர்ந்துகொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடைய ஸ்டாப்பிங் வந்தும் பந்தா இறங்காததை கண்டு, கீழே இருந்த சாந்த மேல் தளத்திற்கு சென்று பார்க்க போனார். அங்கு தன்னுடைய நண்பன் பந்தா பேயறைந்தது போல், வேர்த்து விறுவிறுத்து, முன்னாலிருந்த கம்பியை கெட்டியாக பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னவென்று சந்தா கேட்டதற்கு பந்தா சொன்ன பதில்... ஐயோ! இங்கே டிரைவரெ காணோமே.. பஸ் தானா ஓடுது.....
===================================================================


நகைச்சுவை மடலை தந்து உதவிய ஜமால் சாதிக்(மலேசியா) 
சல்மா,(ஷார்ஜா) மற்றும் சிவகங்கை செல்வராஜ் அவர்களுக்கு ரொம்ப நன்றி !

33 comments:

 1. மிகப்பெரிய கலெக்ஷன்... சூப்பர்ப்... கருணாநிதி ஒபாமா ஜோக் பிரமாதம்...

  ReplyDelete
 2. //Jaleela Kamal said...
  ப்ரெசென்ட்//

  நன்றிக்கா ! தமிழ் கன்வட்டர் இப்போ ரொம்பத்தான் மக்குர் பண்ணுது

  ReplyDelete
 3. ////மதுரை சரவணன் said...
  anaiththum aruputham... வாழ்த்துக்கள் //

  ரொம்ப நன்றி பாஸ் !//

  ReplyDelete
 4. //Philosophy Prabhakaran said...
  மிகப்பெரிய கலெக்ஷன்... சூப்பர்ப்... கருணாநிதி ஒபாமா ஜோக் பிரமாதம்...//

  நன்றி நண்பா உங்கள் பக்கம் வர முடியலை கொஞ்சம் பிசி.

  கருத்திற்கும் வருகைக்கும் நன்றி !

  ReplyDelete
 5. salaams 2 u சகோ.
  சில முன்பே படித்திருந்தாலும் பல புதிது.
  நல்லா சிரிக்க முடிஞ்சுது. நன்றி.
  இதில் மட்டும் சின்ன மாற்றம் பண்ணலாம்...

  //மேதாவி 1: வானம் கூட குடிக்கும் போலிருக்கே...
  மேதாவி 2: எப்படி சொல்றீங்க?
  மேதாவி 1: பின்னே... நேற்று மப்பாக இருந்த வானம் இன்று தெளிவா இருக்கும்னு ரேடியோல சொன்னாங்களே.....//

  ReplyDelete
 6. இப்பத்தான்... வீடியோ பஃபர் ஆகி முடிஞ்சுது....

  அப்பப்பாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ.......
  என்னால முடியல சகோ. சிரிச்சு சிரிச்சு அம்ம்ம்ம்ம்ம்ம்மாடீஈஈ.. தாங்க முடியலை.

  அந்த பொண்ணு வேலையே வேணாம்னு இந்நேரம் ராஜினாமா பண்ணிட்டு போயிருக்கும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. //முஹம்மத் ஆஷிக் said...
  salaams 2 u சகோ.
  சில முன்பே படித்திருந்தாலும் பல புதிது.
  நல்லா சிரிக்க முடிஞ்சுது. நன்றி.
  இதில் மட்டும் சின்ன மாற்றம் பண்ணலாம்...

  //மேதாவி 1: வானம் கூட குடிக்கும் போலிருக்கே...
  மேதாவி 2: எப்படி சொல்றீங்க?
  மேதாவி 1: பின்னே... நேற்று மப்பாக இருந்த வானம் இன்று தெளிவா இருக்கும்னு ரேடியோல சொன்னாங்களே.....//

  வலைக்கும் வஸ்ஸலாம் சகோ....கருத்திட்டதிர்க்கு நன்றிகள்,ஓக்கே..உங்கள் காமடியும் சிரிப்பாத்தான் இருக்கு வாழ்த்துக்கள் !

  நினைச்சேன் கடைசியாகத்தான் வீடியோவை பார்த்திருப்பீர்கள் என்று.

  எனக்கு எழுத்து ஜோக்கை விட கஷ்ட்டமர் (!) இங்க்ளிசில் பில்டாப் உட்றதைப் பார்த்தால் கண்டிப்பா அந்த பொண்ணு வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிருக்கும் இதுலே வேறே டாடா....
  சரியான காமடி.

  நன்றி ஆசிக் !

  ReplyDelete
 8. அந்த வி.ஐ.பி சூட்கேஸ்!
  ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா! என்னா கொல வெறி! முடியல! இப்பத்தான் தெரியுது ஏன் இது போன்ற சேவைகளுக்கு பெண்களை அதிகமாகப் பயன்படுத்துகிரார்கள் என்று! ஒரு ஆண் என்றால் நடப்பதே வேறு! கேட்டுக் கொண்டிருக்கிற என்னாலயே முடியல...! :-)

  ReplyDelete
 9. எப்படித்தான் யோசிக்கிரீங்களோ? சிலது ஏற்கனவே படிச்சிருக்கேன். ஆனாலும் ரசிக்கும்படி சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 10. //ஜீ... said...
  அந்த வி.ஐ.பி சூட்கேஸ்!
  ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா! என்னா கொல வெறி! முடியல! இப்பத்தான் தெரியுது ஏன் இது போன்ற சேவைகளுக்கு பெண்களை அதிகமாகப் பயன்படுத்துகிரார்கள் என்று! ஒரு ஆண் என்றால் நடப்பதே வேறு! கேட்டுக் கொண்டிருக்கிற என்னாலயே முடியல...! :-)

  கரெக்ட்டா சொன்னியே பாஸ் அந்த பெண்ணின் பக்கத்தில் ரெண்டு மூன்று Men சிரிப்பொலியும் மெதுவா கேட்டுருக்கனுமே ?

  என்ன செய்றது பேசாமல் ஹிந்தியிலியே பேசி இருக்கலாம்னு நினைக்கிறேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ..

  ReplyDelete
 11. //Lakshmi said...
  எப்படித்தான் யோசிக்கிரீங்களோ? சிலது ஏற்கனவே படிச்சிருக்கேன். ஆனாலும் ரசிக்கும்படி சொல்லி இருக்கீங்க.//

  ரொம்ப நன்றிம்மா நண்பர்கள் எங்கேயோ சுட்டு சுட சுட எனக்கு மெயிலில் அனுப்பி இருந்தார்கள் கொஞ்சம் ரீ மிக்ஸ் செய்து போட்டிருக்கேன்மா.

  வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி !

  அனேகமா நகைச்சுவை டாட் காம்னு நினைக்கிறேன்.

  நன்றி ! இந்த தளத்திற்கு

  ReplyDelete
 12. அப்பப்ப இந்த மாதிரி காமெடி போடுறது உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்குது ... பல நான் கேள்விப்படாதவையாக இருக்கிறது... பகிர்ந்ததற்கு நன்றி... ஓட்டு போட்டுவிட்டேன்.

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...


  அனைத்து காமெடிகளும் அருமை.

  இன்டிலியில் இணைத்துவிட்டேன் சகோ.

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
  அத்துனையும் அருமை..
  பெரும்பாலும் புதிது..
  டாக்டர்,நர்ஸ் காமெடி நல்லாவே சிரிக்க வெச்சது..

  சிரிப்பு மனதை லேசாக்கி விடுகிறது..

  நன்றிகள் பல

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 15. VIP SUITCASE ... .ha hahaaaa.
  ella jokesum arumai.

  ReplyDelete
 16. ஹ ஹ...அந்த வீடியோ பேச்சு சூப்பர் சூப்பர்...சூட்கேஸ் னு அந்த ஆளு கும்மி அடிச்ச லொள்ளும்...customer service க்கு நுங்கு கொடுத்ததும்..அந்த பொண்ணு எப்படி அவளவு நேரம் சிரிக்காமல் கேட்டுட்டு இருந்திச்சுன்னு தெரில...எங்க ஊரு அழகிரி அண்ணாவும் இப்படி தான் ஆங்கிலம் பேசுவதா ஊருக்குள் சொல்லிகிறாங்க அந்நியன்...superb

  ReplyDelete
 17. enrenrum16 said...

  அப்பப்ப இந்த மாதிரி காமெடி போடுறது உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்குது ... பல நான் கேள்விப்படாதவையாக இருக்கிறது... பகிர்ந்ததற்கு நன்றி... ஓட்டு போட்டுவிட்டேன்.

  Nandri Sister unkal varugaikkum ottirkkum.

  ReplyDelete
 18. enrenrum16 said...

  அப்பப்ப இந்த மாதிரி காமெடி போடுறது உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்குது ... பல நான் கேள்விப்படாதவையாக இருக்கிறது... பகிர்ந்ததற்கு நன்றி... ஓட்டு போட்டுவிட்டேன்.
  nandri Sister One week safety training abudhabiyil.konjam busy 16th feb ellorudauya saittirkku varukiren thanks.

  ReplyDelete
 19. ஆயிஷா said...

  அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...


  அனைத்து காமெடிகளும் அருமை.

  இன்டிலியில் இணைத்துவிட்டேன் சகோ.

  va Alaikkum Vassalam SISTER ROMPA NADRI safety training mudindhadhum ellor saittirkku varukiren thanks sako

  ReplyDelete
 20. ரஜின் அப்துல் ரஹ்மான் said...

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
  அத்துனையும் அருமை..
  பெரும்பாலும் புதிது..
  டாக்டர்,நர்ஸ் காமெடி நல்லாவே சிரிக்க வெச்சது..

  சிரிப்பு மனதை லேசாக்கி விடுகிறது..

  நன்றிகள் பல

  அன்புடன்
  ரஜின்
  va alaikkum vassalam brothe thanks.
  insha Allha one week kazhiththu santhippom.
  rompa nandri.

  ReplyDelete
 21. gelin said...

  VIP SUITCASE ... .ha hahaaaa.
  ella jokesum arumai.

  Thanks Sister c.u next week training mudinthadhum santhippom.

  ReplyDelete
 22. ஆனந்தி.. said...

  ஹ ஹ...அந்த வீடியோ பேச்சு சூப்பர் சூப்பர்...சூட்கேஸ் னு அந்த ஆளு கும்மி அடிச்ச லொள்ளும்...customer service க்கு நுங்கு கொடுத்ததும்..அந்த பொண்ணு எப்படி அவளவு நேரம் சிரிக்காமல் கேட்டுட்டு இருந்திச்சுன்னு தெரில...எங்க ஊரு அழகிரி அண்ணாவும் இப்படி தான் ஆங்கிலம் பேசுவதா ஊருக்குள் சொல்லிகிறாங்க அந்நியன்...superb
  February 8, 2011 10:20 PM

  Thanks Sister one week training irukku abu dhabiyil mudinthadhum theevirkku ponadhum ellor saittirkkum varukiren thanks.

  ReplyDelete
 23. எப்படித்தான் யோசிக்கிரீங்களோ?

  ReplyDelete
 24. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
  http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

  ReplyDelete
 25. //டாக்டர் : அடிபட்ட இடத்துல 18 தையல் போடணும்...
  மேதாவி : போடுறது தான் போடுறீங்க... பூ டிசைன்ல எம்பிராய்டரி மாதிரி போட்டு விடுங்க...
  டாக்டர் : ???//

  ஹ ஹ ஹா... அந்த நேரத்திலும் டைமிங்கா யோசிச்சிருக்காங்க பாருங்க... ஹ ஹ ஹா... செம...

  பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி..!!

  ReplyDelete
 26. போளூர் தயாநிதி said...
  எப்படித்தான் யோசிக்கிரீங்களோ? //

  வாங்க மருத்துவர் அய்யா வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றிகள்

  ReplyDelete
 27. ரஹீம் கஸாலி said...
  நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
  http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.ஹ்த்ம்ல்//

  ரொம்ப நன்றி நண்பரே !

  என்றும் நான் மறவேன் உங்களை

  ReplyDelete
 28. //அன்னு said...
  //டாக்டர் : அடிபட்ட இடத்துல 18 தையல் போடணும்...
  மேதாவி : போடுறது தான் போடுறீங்க... பூ டிசைன்ல எம்பிராய்டரி மாதிரி போட்டு விடுங்க...
  டாக்டர் : ???//

  ஹ ஹ ஹா... அந்த நேரத்திலும் டைமிங்கா யோசிச்சிருக்காங்க பாருங்க... ஹ ஹ ஹா... செம...

  பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி..!!
  February 19, 2011 8:55 AM //

  வருகைக்கும் உங்கள் anbaana கருத்திற்கும் நன்றி sako

  ReplyDelete
 29. ம்ம் நல்ல படிச்சி படிச்சி சிரிச்சாச்சு, என்ன ரொம்ப பெரிய சிரிப்ப்ப்ப்பு, முன்று பகுதியா போட்டு இருக்கலாம்

  ReplyDelete
 30. //Jaleela Kamal said...
  ம்ம் நல்ல படிச்சி படிச்சி சிரிச்சாச்சு, என்ன ரொம்ப பெரிய சிரிப்ப்ப்ப்பு, முன்று பகுதியா போட்டு இருக்கலாம்//

  Thank u sister.

  ReplyDelete