Thursday, December 23, 2010

டிஆர். புரட்சி பாடல்பதிவைப் படித்து,போரடித்துப் போன நண்பர்களுக்கு ஒரு மாற்றத்திற்காக நகைச்சுவை இதில் இடம் பெறுகிறது,பாட்டைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்.


"
ஜெயில்ல இவ்வளவு நாள் இருந்தேனே.....ஒரு மரியாதைக்காவது அந்த ஆள் வந்து பாத்தானா பாரு?"

"நேரமில்லையாம் தலைவரே.... இன்னும் எத்தனையோ கேஸ்ல உள்ளே போகப்போறாரு, அப்போ போய்ப் பாத்துக்கலாம்னு சொல்லிக்கிட்டுருக்காராம்!"

-------------------------------------------------------
எங்க தலைவரோட நாட்டுப்பற்று வேற யாருக்குமே இருக்காதுங்க!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"தீபாவளிக்குக்கூட தெருவுல 'நாட்டு வெடிகுண்டு'தான் வெடிப்பாரு!"

--------------------------------------------------------
வேட்பாளர்: என் பேரை "தர்மம்"னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?

உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட "தர்மம்" தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!
----------------------------------------------------------------


சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?

அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!

----------------------------------------------------------------

வேட்பாளர்: அந்த தொகுதிக்கு "கால்நடை"யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!

தொண்டர்: "மனுஷனா"வே போயி கேளுங்க தலைவரே!
------------------------------------------------------------------

"ஓட்டுப் போட்டுட்டு வெளியே வர்ற வாக்காளர்களுக்கெல்லாம் அந்த வேட்பாளர் ஏதோ ஸ்வீட் தர்றாரே...என்னங்க அது?"

"வேறென்ன...."அல்வா"தான்!"

"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"

"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"

------------------------------------------------------------------------------------

"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!"

“எதைப்பார்த்துச் சொல்கிறீர் அமைச்சரே?"

"அண்டை நாட்டுக்கு நாம் ஓலை கொடுத்து அனுப்பிய புறா, அந்த ஓலையை ஒரு மரத்தில் வைத்துத் தின்றுகொண்டிருக்கிறதாம் மன்னா!"

-----------------------------------------------------------------------------------

"
என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!"

"ஏன் சந்தேகம் மன்னா?"

"சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"

------------------------------------------------------------------------------------

"பட்டினியால் வாடும் நம் மக்கள் அகழியிலுள்ள முதலைகளைப் பிடித்துச் சாப்பிடுகிறார்களாம் மன்னா....!"

"ஆகா! மக்களுக்குத் தெரிந்த மாற்றுணவுத் திட்டம் மந்திரியாகிய உமக்குத் தெரியவில்லையே....யாரங்கே? இன்று முதல் அரண்மணையிலும் முதலைக்கறி சமைக்க ஏற்பாடு செய்யுங்கள்!"
கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி


------------------------------------------------------------------------------------11 comments:

 1. தர்மம் தோத்துப்போன ஜோக் சூப்பர்... அவர் இறந்துபோனா கூட தர்மம் செத்துப்போச்சுன்னுதான் சொல்லுவாங்க :)

  ReplyDelete
 2. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  :))//

  வருகைக்கு ரொம்ப நன்றி அண்ணே

  ReplyDelete
 3. //.philosophy prabhakaran said...
  தர்மம் தோத்துப்போன ஜோக் சூப்பர்... அவர் இறந்துபோனா கூட தர்மம் செத்துப்போச்சுன்னுதான் சொல்லுவாங்க :) //

  ஹ.ஹா..பிரபா..ஆமா அவர் இறந்துபோனா கூட அப்படித்தான் சொல்லுவார்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி !

  ReplyDelete
 4. எல்லா ஜோக்கும் அருமைங்க
  கடைசி போட்டோ பத்தி தான் இப்ப பதிவு போட போறேன். இங்கே வந்து நிக்குது. சூப்பர் போட்டோ!!

  ReplyDelete
 5. //ஆமினா said...
  எல்லா ஜோக்கும் அருமைங்க
  கடைசி போட்டோ பத்தி தான் இப்ப பதிவு போட போறேன். இங்கே வந்து நிக்குது. சூப்பர் போட்டோ!//

  Thank You Sister

  ReplyDelete
 6. //சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!" //

  இதான் டாப் ஜோக் ஹா..ஹா....

  ReplyDelete
 7. கருத்திற்கு ரொம்ப நன்றி அண்ணே !

  எனக்கு பிடிச்சது தர்மம் தோத்து போச்சு.

  ReplyDelete
 8. ELLA JOKES UM SOOOOPER.
  ANDHA DYNAMIC WED POST IL IRUNDHU UNGAL ELLA PADHIVUM NAAN PADIKKIREN
  VERY NICE.

  ReplyDelete
 9. ரொம்ப நன்றி சகோ...நீங்கள் மறைந்து இருந்து எனதுப் பதிவை படிக்கிரதைப் பார்த்தால் நானும் ஒரு பதிவரா ஆகிவிடுவேன் போல தெரியுது.

  வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி. தீவிரமாகத்தான் எழுதிக் கொண்டு இருந்தேன் ஏன்னு தெரியலை காமடி இல்லாமல் என்னாலே இருக்க முடியலை அதான் கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு.

  ReplyDelete
 10. பாஸ் உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
  http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

  ReplyDelete