மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றது !!!
இதுக்கெல்லாம் காரணம் எய்ட்ஸை பற்றி மக்கள்களுக்கு ஒழுங்கான முறையில் விழிப்புணர்வை அரசு செய்ய தவறியக் காரணத்தால் அரசியல்வாதிகள் அனைவரும் நம் சமுதாயத்தை அவர் அவர் சக்த்திக்குயேற்றவாறு சீரழிக்கின்றனர் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.
வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட மேன்மையதாகும் அத்தகைய ஒழுக்கத்தை ஆணினமோ அல்லது பெண்ணினமோ இழக்க நேரிட்டால்,மனித இனத்திற்கும் மிருக இனத்திற்கும் வாழ்க்கை,வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.
இறைவன் படைப்பான ஆண் மற்றும் பெண் இனத்திடம் பல விதமான வித்தியாசங்கள் காணப் பட்டாலும் அதிகம் மன உளைச்சலுக்கு காரணமாவது பெண்ணினமே,காரணம் தவறுகள் செய்யும் இரு பாலாரும் அற்ப இன்பத்திற்காகவும் சொற்ப்ப பணத்திற்காகவும் தன் மானத்தை காற்றில் பறக்கவிட்டப் பிறகு அதின் எதிரொலி பெண்ணின் கருவறையில் தெரியும்.
நாகரிகம் என்று சொல்லி ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நண்பராக பழகின்றனரே அது என்ன நல்ல வழியிலியா கொண்டு போகும் ?
கண்டிப்பாக கொண்டு செல்லாது ?
இதோ ஆண்கள் எல்லாம் நண்பர்கள் என்று பழகிய ஒரு பெண்ணின் சோகத்தை கேளுங்கள் இது மதுரை கல்லூரியில் நடந்த சம்பவம்.
கதிரவன் காலையில் கண் விழித்து கடமைகளை முடித்தவுடன் கண் எதிரே இருக்கும் கயல் விழியின் வீட்டிற்க்கே கண்கள் செல்லும்,கதிரவன் என்பவன் படிக்கும் மாணவன் கயல் விழி என்பவள் அவனின் கல்லூரி தோழி,படிக்கும் பருவமும்,நடிக்கும் அவன் செயல்களும் கயல் விழி கண்களுக்கு நல்ல நண்பனாகத்தான் தெரிந்தது,ஆனால் அவன் ஒரு நய வஞ்சகன் என்று,அவள் மனதிற்குத்தான் தெரியவில்லை, சான்றோர் அதட்டியும் அவளை ஈன்றோர் அடித்தும் பார்த்து விட்டனர்,அவளின் பதில் ஒன்றுதான்...அவன் என் பாய் fபிரெண்ட்.
இருவரின் நட்பும் இருள் சூள்வதர்க்குள் காதலாக மாறியது,விளைவு இருவரும் ஊரை விட்டு ஓடினர்,ஒண்டுவதற்கு சிறிதும் இடம் இல்லை தமிழ் நாட்டில்.
எல்லை தாண்டுவதற்கு அவனிடம் கையில் நிறையப் பணம் இருந்தது,ஓடினர்,ஓடினர் மொழி தெரியாத பாம்பைக்கு ஓடினர்,முழுதும் அவளை தீண்டிவிட்டு,முடிவு செய்தான் அவளை விற்று விட !!!
கணினி உதவியுடன் கண்டதை மேயும் காமூகர்களின் நட்பும் கிடைத்தது அவனுக்கு,ரிசப்ஷன் என்று பெயரிட்டு பெரிய ஆடம்பர பங்களாவை தேர்ந்தெடுத்து அள்ளிசென்றான் அவளை,ஒன்னும் புரியாத அவளுக்கு வியப்பாகவே இருந்தது அவனின் நடவடிக்கை !!!
ஆடலும் இளமைப் பாடலும் ஆங்காங்கே ஒலிக்கவே சிறிது பயந்துதான் போனாள்,பிறகுதான் தெரிந்தது இது வரவேற்கும் பங்களா இல்லை பணம் கறக்கும் பங்களா என்று !
இருண்டது அவளின் வாழ்க்கை,கண்ணீர் சுரந்தது தாரை தாரையாக,என்னை ஏமாற்றிய பாவியே பெண்ணின் சாபம் உன்னை சும்மா விடாது என்று சாபம் இட்டாலும்,அவனின் காதுகளுக்கு அது கேட்கவில்லை.
ஐயோ....என் தலையில் நானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டேனே ! இப்போது நான் யாரை உதவிக்கு அழைப்பேன் என்று தலையில் அடித்துக் கொண்டு அலறினாலும் ஆறுதல் சொல்லுவதர்க்கோ அல்லது அவளின் கண்ணீரை துடைப்பதற்க்கோ எந்த ஒரு ஆண் மகனும் அங்கு இல்லை என்பதே உண்மை,எல்லாமே பசிக்கு பிணத்தைக் கூட திங்கும் கழுகு கூட்டமே அங்கு கூடி நின்றது.
ஒரு லட்ச்ச ரூபாய்க்கு விற்கப் பட்டாள்.
ஒரு லட்ச்சப் பேருக்கு விநியோகிக்கப் பட்டாள்.
தனக்கு நேர்ந்த கொடுமை வேறே எந்த பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணி,எப்படியோ மதுரையில் படிக்கும் அவளின் தோழிகளை தொலைப் பேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த விசயங்களை சொல்லி அழுது என்னை விடுவிக்கா விட்டாலும் பரவா இல்லை எனக்கு கிடைத்த நரக தண்டனை வேறே எந்த பெண்ணிற்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் சொல்லுகிறேன் என்று கண்ணீர் வடிக்கும் போது...அழாதக்கா,என்று ஒரு பதிமூன்று வயது சிறுமி கண் கலங்கினாள்.
அவளின் சோகத்தை நாம் பகிர்ந்து கொண்டால் கண்ணில் கண்ணீர் வராது குர்திதான் வரும்.ஆமாம் அவளும் இந்த தொழிலில் புகுத்தப் பட்டு HIV என்னும் கொடிய நோயால் பாதிக்கப் பட்டுள்ளாள்.
கயல்விழியின் கதறலும்,கண்ணீர் மல்கிய பேச்சுக்களும் தோழிகளுக்கு தூக்கத்தைக் கெடுத்தது,இதை யாரிடம் போயி சொல்வது ?
அவளின் பெற்றோரை தொடர்பு கொண்டால் அவளை தலை முழுகி முப்பது நாளாச்சு என்று பதில்தான் வந்தது,தம்மோடு படித்த பாவத்திற்காக அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணி,தோழிகள் அனைவரும் சகா மாணவ மாணவிகளிடம் நிலைமையை சொல்லி சிவகங்கை மாணவன் செல்வராஜ் உதவியுடன் (அவர் அப்பா போலிஸ் இன்ஸ்பெக்டர்) நடவடிக்கை எடுத்தாலும்...திடு திப்பென்று பாம்பைக்கு எப்படி போவது என்று ஆலோசனை நடத்தினர்,இதில் பெரும்பாலான மாணவ மாணவிகளின் கோரிக்கை என்னவென்றால் இந்த செய்திகள் பத்திரிகையில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று.அப்படியென்றால் கதிரவனை பிடித்தால் மட்டுமே கயல் விழியைக் காப்பாற்ற முடியும் என்று முதலில் கதிரவனுக்கு வலையை வீசினார் தனிப்பட்ட முறையில்.
வாரங்கள் இரண்டு ஓடியப் பிறகே கதிரவன் சென்னையில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டு இருப்பதாக செய்திகள் அவர் காதுக்கு வருகிறது,அவன் திருட்டு வழக்கில் கைதாகி இருப்பதாகவும் இரண்டு மாத தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப் படுவான் என்றும் செய்திகள் வரவே அவருக்கு ஏமாற்றம் அளித்தது.
காரணம் ஒரு கைதியை போலிஸ் அதிகாரி தனிப்பட்ட முறையில் சந்தித்தால் அவருக்கு சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கு,அவர் அறிவுரையின்படி சில மாணவர்கள் முன் வந்தார்கள் அந்த கயவனை ஜாமீன் எடுப்பதற்கு,நிபந்தனை ஜாமினுக்குப் பிறகு அவனை அள்ளி வந்தார்கள் மாணவர்கள் இன்ஸ்பெக்ட்டர் வீட்டிற்கு,அவனை ரவுண்டு கட்டிய அவரோ அவன் அரசு கட்டுப் பாட்டில் இருக்கும் ஒரு கைதி என்பதை மறந்தும்தான் போயி விட்டார்.
விரைந்தது நம் பட்டாளம் பாம்பைக்கு முகவரியை கண்டு பிடித்து முற்ப் புதரில் நடப்பதை போன்றே கதிரவனின் துணையோடு உள்ளே நுழைந்த நண்பர்களுக்கு சகா மாணவியின் நிலையைக் கண்டு கண்ணீர் மல்கியதோடு அல்லாமல் அவளை மீட்பதற்கு பல ஆயிரங்களை படு பாவிகளின் மூஞ்சியில் வீசி எரிந்து விட்டு தமிழ் மண்ணிற்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்கள்,சகா தோழிகளை கண்ட அவளுக்கு....உண்மை என்று நினைப்பது எல்லாம் இறுதியில் பொய்யாக இருப்பதை கண்டேனே... என்று கதறி அழுதது நெஞ்சை பாரமாக்கியது.
இனி வாழ்ந்து பயன் என்ன? என் வாழ்வே துயரம் என,கண்ணீர் மல்கிய போதும் தோழிகள் அவளை அரவணைத்துக் கொண்டது நம் மனசுக்கு நிம்மதி அளிக்கின்றது.
அந்நியன் :
உழும் காலத்தில் ஊர் சுற்றி விட்டு அறுக்கிற காலத்தில் அரிவாள் எடுத்துக் கொண்டு போகக்கூடாது.
அது போல படிக்கின்ற வயதில் கண்டவனிடம் நட்ப்பு கொள்ளாதே என்று பெற்றோர் கூறினால் கேட்டு நடப்பதே மேல்.
இல்லையெனில் கயல் விழியின் நிலைமையை எண்ணி பாருங்கள்.
குறிப்பு : மேலே உள்ள போட்டோவுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை
paavam . ithu marravarkalukku paatamaaka irukkattum . thotarak kuutaathu. echcharikkai theevai.
ReplyDeleteதாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html
ஸலாம்,சகோ அன்னியன்.
ReplyDeleteஅவசியமான பதிவு..இக்கால ஆண் பெண் நட்பு,குறித்து பேசினாலே ஏதோ,மூனு ஜெனரேஷன் பின்னாடி நாம இருக்குறமாதிரி நம்மல பாக்குராங்க..
மேலும் அதில் உள்ள ஆபத்தை உணராமலிருக்க காரணம்,அது அவர்களை அதிகம் ஈர்ப்பதும்.இப்போது ஒரு பாய்/கேர்ள் பிரண்ட் இல்லன்னா நண்பர்கள் மத்தியில்,கேளிக்குள்ளாக்கப்படும் கேவலமான நிலையும்,தவறுகளை,சரியாக்கி,இப்படி சறுக்கலில் போய் விட்டுவிடுகிறது..
அந்த சகோதரியின் நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு மனசு வேண்டுது..ரொம்பவே வேதனையாய் இருக்கிறது சகோ...
அன்புடன்
ரஜின்
தற்போதைய இளைஞர்களின் நட்பு ஆரோக்யமானதாகத்தான் தெரிகிரது. எல்லாவற்றிலும் விதி விலக்கு உண்டே அத்போல சில பேர்கள் மிஸ் யூஸ் பண்ணிக்கிடராங்க.யாரைக்குறை சொல்வது?
ReplyDelete/மதுரை சரவணன் said...
ReplyDeletepaavam . ithu marravarkalukku paatamaaka irukkattum . thotarak kuutaathu. echcharikkai theevai.//
வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் ரொம்ப நன்றி சார் இது போல சம்பவங்கள் நடக்க கூடாது என்பதுதான் எல்லோருடைய ஆசையும் கண்டிப்பாக தொடராது.
மாணவிகள் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று நம்புவோமாக !
தாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.ஹ்த்ம்ல்//
என் அன்பு சகோதரி மற்றும் கவியரசிக்கு மனப்பூர்வமான நன்றிகள் புகழ் படைத்த வலைச் சரத்தில் உம்மை தலைமை பொறுப்பேற்க்க அழைத்த போது நான் கூட நினைத்தேன் சகோதரி நம்மையெல்லாம் மறந்துவிடுவார் என்று,ஆனால் தாங்களோ என்னை தங்கள் தளத்திலும் அறிமுகம் செய்தது மட்டுமின்றி,உலகமே திரண்டு படிக்கும் வலைச் சரத்திலும் என்னையும் ஒரு மனிதானாக நினைத்து அறிமுகப் படுத்தி, ஒரே நாளில் ஆயிரத்தி நானுற்றி எழுபத்தி ஏழு பக்கங்கள் படிக்கப்பட்ட போது என் மனம் என்னிடமே இல்லை.
உங்களின் ஆக்கமும் அறிவுப்பூர்வமான பதிவின் நோக்கமும் ஏழைகளின் வீடான அந்நியன் 2 என்றும் உம்மை மறவாது.
நன்றி ! நன்றி ! நன்றி !
/RAZIN ABDUL RAHMAN said...
ReplyDeleteஸலாம்,சகோ அன்னியன்.
அவசியமான பதிவு..இக்கால ஆண் பெண் நட்பு,குறித்து பேசினாலே ஏதோ,மூனு ஜெனரேஷன் பின்னாடி நாம இருக்குறமாதிரி நம்மல பாக்குராங்க..//
வ அழைக்கும் வஸ்ஸலாம் சகோ..உங்களின் அன்பான கருத்திற்கும் தகுந்த விளக்கத்திற்கும் என் நட்ரியை தெரிவித்துக் கொள்கிறேன்.
//அந்த சகோதரியின் நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு மனசு வேண்டுது..ரொம்பவே வேதனையாய் இருக்கிறது சகோ...//
என்ன செய்ய எல்லாம் தலை எழுத்து என்று போக வேண்டியதுதான் பட்டால்தான் புரியும் என்று பெண் சமுதாயம் நினைக்கும் போது இந்த ஆண் சமுதாயத்தின் வேகம் கொஞ்சம் கூடித்தான் போகும்.
நிச்சயம் எல்லா மாணவிகளும் புரிந்து கொள்ளுவார்கள் என நம்புவோமாக.
//Lakshmi said...
ReplyDeleteதற்போதைய இளைஞர்களின் நட்பு ஆரோக்யமானதாகத்தான் தெரிகிரது. எல்லாவற்றிலும் விதி விலக்கு உண்டே அத்போல சில பேர்கள் மிஸ் யூஸ் பண்ணிக்கிடராங்க.யாரைக்குறை சொல்வது?//
பெற்றோர்களைத்தான் குறை சொல்ல வேண்டும்,படிக்கப் போகும் பெண்ணினை தமது விழியை இமைகள் காப்பது போல தம் மகளையும் பாதுகாக்க வேண்டும்.
இளைஞர்கள் ஆரோக்கியமாத்தான் இருக்கின்றாகள் அவர்களை கெடுப்பது பலான சினிமாக்களும் தவறான மனிதர்களும்தான்.ரொம்ப நன்றி அம்மா கருத்திட்டதிர்க்கும் மற்றும் வருகைக்கும்.
வணக்கங்களும்,வாக்குகளும்...
ReplyDeletemiga arumaiyaana padhivu.
ReplyDeleteகாதல் வருவது தவறு இல்லை , ஆனால் அதை ஆரம்பத்திலேயே வீட்டில் சொல்லி இது தகுந்த ஆள்தானா என்று பெரியவர்கள் முடிவு செய்யட்டும் ..அப்போதுதான் . இது மாதிரியான தவறான செயல்கள் நடை பெறாது..!!
ReplyDeleteபெற்று வளர்த்தவர்களுக்கு தெரியாதா எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டுமென்று...!! இதுக்கு 98 சதம் சினிமாதான் காரணம்....
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteவணக்கங்களும்,வாக்குகளும்...//
வருகைக்கும் ஓட்டிற்கும் ரொம்ப நன்றி பாரத்.
//angelin said...
ReplyDeletemiga arumaiyaana padhivu.//
நன்றி சகோ உங்கள் கருத்திற்கு.
/ஜெய்லானி said...
ReplyDeleteகாதல் வருவது தவறு இல்லை , ஆனால் அதை ஆரம்பத்திலேயே வீட்டில் சொல்லி இது தகுந்த ஆள்தானா என்று பெரியவர்கள் முடிவு செய்யட்டும் ..அப்போதுதான் . இது மாதிரியான தவறான செயல்கள் நடை பெறாது..!!
பெற்று வளர்த்தவர்களுக்கு தெரியாதா எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டுமென்று...!! இதுக்கு 98 சதம் சினிமாதான் காரணம்....//
சரியாக சொன்னீர்கள் பாஸ்.
உங்கள் கருத்தையும் பதிவில் இணைத்தாலும் தகும்.
ரொம்ப நன்றி பாஸ்.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
ReplyDeleteநல்ல பகிர்வு.பகிவுக்கு நன்றி.
படிக்கும் போதே வேதனையாக இருக்கு.
சகோ,இதே போல் நம் முஸ்லீம் சகோதரிக்கு,
இதே சம்பவம் தான் நடந்தது.முஸ்லீம் பெண்ணை குறிவைத்து செய்த சதி. பாவம் அந்த பெண் தன காதலை உண்மை என நம்பி போய்,பாம்பேயில் விற்கபட்டாள்.
வசதியான குடும்பம்.ஒரே பெண்.அப்பா, அம்மா
அவமானம் தாங்காமல் தற்கொலை பண்ணி கொண்டார்கள்.
தாங்களும் இந்த செய்தியை கேள்விபட்டு இருப்பீர்கள் சகோ.
எல்லா மக்களையும், அல்லாஹ் நேரான பாதையில் கொண்டு செல்வானாக !
கேட்கவே கஷ்டமாக இருக்கு... பெற்றோரை மதிக்காத அவளுக்கு தண்டனை என்று சொல்லக்கூட கஷ்டமாக இருக்கிறது... ரொம்பவே அளவுக்கதிகமான தண்டனை கிடைத்துவிட்டது :(... இப்போது என்ன சொல்லி என்ன ஆகும்?!:(
ReplyDelete//ஆயிஷா said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ //
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ...
இப்போதுதான் கேள்விப் படுகிறேன் !
துயரமான செய்திதான்,பெற்ற பாவத்திற்காக பெற்றோர்கள் உயிரை மாய்த்துக் கொண்டது துரதிருஷ்ட்டவசம்,எல்லரோரையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
வாழ்க்கையை விழையாட்டக எடுக்கும் பெண்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இந்த சம்பவம்,என்ற கோணத்தில் எழுத பட்டதுதான் இந்த பதிவு.உங்களின் தகவலுக்கும் வருகைக்கும் நன்றி சகோ.....
//அது போல படிக்கின்ற வயதில் கண்டவனிடம் நட்ப்பு கொள்ளாதே என்று பெற்றோர் கூறினால் கேட்டு நடப்பதே மேல்.//
ReplyDelete>>> நல்ல பதிவு நண்பரே. தொடர்க இதுபோன்ற சமூகப்பார்வை உள்ள பதிவுகளை.
//enrenrum16 said...
ReplyDeleteகேட்கவே கஷ்டமாக இருக்கு... பெற்றோரை மதிக்காத அவளுக்கு தண்டனை என்று சொல்லக்கூட கஷ்டமாக இருக்கிறது... ரொம்பவே அளவுக்கதிகமான தண்டனை கிடைத்துவிட்டது :(... இப்போது என்ன சொல்லி என்ன ஆகும்?!:(//
என்ன செய்வது ?
பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அவளை பெற்ற நாளிலிருந்து கல்யாணம் முடித்து கொடுக்கும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது போலதான் நாள்களும் கழியும்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ......
// சிவகுமார் ! said...
ReplyDelete//அது போல படிக்கின்ற வயதில் கண்டவனிடம் நட்ப்பு கொள்ளாதே என்று பெற்றோர் கூறினால் கேட்டு நடப்பதே மேல்.//
>>> நல்ல பதிவு நண்பரே. தொடர்க இதுபோன்ற சமூகப்பார்வை உள்ள பதிவுகளை.//
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி சகோ....உண்மையில் எனக்கு சமூக கட்டுரைகளை எழுதுவதற்கு ஆசைதான் மக்கள் படித்து போரடித்துப் போவார்கள் என்று... இடையில் சிரிப்பு தொகுப்புக்கள் எதையாவது எழுத வேண்டி இருக்கு.
நன்றி நண்பரே !
>>> சிரிப்பு பதிவு ரொம்ப அவசியம். விட்டு விட வேண்டாம்!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDelete”விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக,அது மானங்கெட்ட செயலாகவும்
மிகத் தீய வழியாகவும் இருக்கிறது”
அல்குர்ஆன் 17:32
எவ்வளவு அழகாக இறைவன் எச்சரித்திருக்கிறான் பின்பற்றினால் நன்மை அடையலாம்
//சிவகுமார் ! said...
ReplyDelete>>> சிரிப்பு பதிவு ரொம்ப அவசியம். விட்டு விட வேண்டாம்!
February 6, 2011 12:53 AM //
ஓகே....அப்படியே ஆகட்டும் brother
//ஹைதர் அலி said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
”விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக,அது மானங்கெட்ட செயலாகவும்
மிகத் தீய வழியாகவும் இருக்கிறது”
அல்குர்ஆன் 17:32
எவ்வளவு அழகாக இறைவன் எச்சரித்திருக்கிறான் பின்பற்றினால் நன்மை அடையலாம்.//
வ அழைக்கும் வஸ்ஸலாம் சகோ
வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி !
திரு குரான் வழியில் நாம் நடந்தாலே போதும்