Tuesday, February 22, 2011

நீங்கள் உண்மையான இந்தியன் என்றால் இதைப் படியுங்கள்.


இந்தியா ஒரு ஏழை நாடு என்று மேலை நாடுகள் சொல்லுகிறதே அது என்ன உண்மையா ?

இந்தியாதான் உலகத்திலே முதல் பணக்கார நாடு,சுவீஸ் வங்கியில் திருட்டுத் தனமாக ஒளிந்து கிடக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவேமேயானால்.

சுவீஸ் வங்கியின் பொது மேலாளர் ஒருவர் இந்திய அரசியல் வாதிகளையும் பிரபல தொழில் அதிபர்களையும் மற்றும் சினிமா டாப் நடிகர்களையும் காரசாரமாக சாடியுள்ளார்.

எல்லோரும் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள்,ஏன் என்றால் நான் சொல்லப் போகும் விசயத்தில் உடம்பில் ஓடும் ரத்தம் நின்னாலும் நின்னு விடும்,கடந்த முப்பது வருசமா இந்திய மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் இருநூற்றி என்பது லட்சம் கோடி ருபாய் அனாதையாக சுவிஸ் பேங்கில் கிடக்கின்றது,எல்லாமே அரசியலில் ஜொலிக்கும் பெரும் தலைவர்களின் பணமாகும்,அந்த அயோக்கியர்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி பண மூட்டையாக கட்டி சுவிஸ் வங்கியில் ஒளித்து வைத்திருக்கின்றாகள்.

இப்படி யாருக்குமே உதவாமல் முடங்கிக் கிடக்கும் அந்த கருப்பு பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து சாலைகளுக்கும் நாலு வழிப் பாதையாக மாற்ற முடியும்,அறுபது கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்,நூற்றி இருபது கோடிப் பேரில் எத்தனை நபர்கள் அறுபது வயதை தாண்டியவரா உள்ளார்களோ,அவர்களுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இலவசமாக வழங்க முடியும்,வறுமையில் வாடும் மக்கள்களுக்கு நல்ல கல்வி மற்றும் சுகாதரான முறையில் வீடு மற்றும்..மற்றும் என்று போட்டுக் கொண்டே போகலாம் என்பது படித்தவர்களின் கருத்து.

ஒரு கட்டிடம் எழுப்ப அடித்தளம் அவசியம். அதே போல நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் மிக முக்கியம் இதனைக் கருத்தில் கொண்டு அந்நியனால் ஒரு கட்டுரை எழுதப் படுகின்றது இக்கட்டுரையினை பொது மக்களாகிய நீங்கள் படித்து தவறுகளை சுட்டிக் காட்டும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகள் அவையால் 1992 ஆம் ஆண்டில் அதிகாரப் பட்சாமக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் 1987 முதலாவதாக fபிராண்சின் paris நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்,சாதனையும் புரிந்தார்கள்.

சுமார் நூற்றி இருபது கோடி மக்கள்களை சுமந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் இந்தியாவைப் பார்க்கும் போது காந்தி ஏன் சுதந்திரம் வாங்கி தந்தார் என்று காந்தி மேலே எரிச்சலாக வருகிறது,வெள்ளைக்காரன் கொள்ளை அடிச்சாலும் மனிதாபிமான முறையில் மக்கள்களுக்கும் நல்லதை செய்து விட்டுத்தான் அவனும் சாப்பிடுவான்,ஆனால் நம்ம அரசியல் வாதிகளோ அவர்கள் குடும்பத்தையும் கோத்திரத்தையும் காப்பதிலே குறியாக இருப்பதால் நாட்டு மக்கள்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதே நாடறிந்த உண்மை.

உழவன் உழைக்கிறான்,கிழவன் அழுகிறான்,ஒண்ணுமே புரிய வில்லை அரசியல்.

மக்களிடம் செருப்படி வாங்கினாலும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு ஒட்டு கேட்க்கும் அரசியல் வாதிகளையும் குறை சொல்லி பயன் இல்லை காரணம் மானம் என்று ஒன்று இருந்தால்தான் அவனுக்கு கவலை வரும் அதுதான் அவனுக்கு கிடையாதே அதான் அவன் மக்களைப் பற்றிக் கவலைக் கொள்வது இல்லை.

இவர்களைப் பற்றிப் பேசி இனி பிரயோஜினம் இல்லை,எப்படி சுவிஸ் பேங்கிலிருந்து நமது நாட்டிற்கு அந்தப் பணத்தை கொண்டு வர முடியும் என்று ஒவ்வொரு இந்தியனும் யோசிக்கணும் அப்போதுதான் நாம் உலக வங்கியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியும்.

சுமார் அஞ்சு வருசத்திற்கு முன்பு தலா ஒரு இந்தியக் குடிமகனுக்கு 475 ரூபாய் கடனாக இருந்தது,120  கோடி x 475 = ???????? இவ்வளவு தொகை பாக்கி இருந்துச்சு அப்போ...இப்போ ???

கட்டுரையை நீளமாக எழுத ஆசை ஆனால் நீங்கள் படிக்க மாட்டிர்கள் என்று எனக்குத் தெரியும் அதுனாலே இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

மக்கள் விழித்திருப்பது வேணும் இப்போது ?


அரசிடம் கேள்விகள் கேட்பது எப்போது ?







32 comments:

  1. தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.அந்நியன்2...
    ஸ்ஸ்ஸ்ஸ்....அப்ப்ப்ப்ப்பாஆஆஆஅ.... பதிவு என்னா காரம்...!

    நம் நாட்டின் உலக வங்கி கடனை அடைக்கத்தான் இப்படி கஷ்டப்பட்டு சுவிஸ் வங்கியில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்களோ?

    பேசாமல், கருப்பு பணங்கள் எல்லாம் கடன் அடைக்க எடுத்துக்கொள்ளப்படும் என்று புது சட்டம் போட்டு விட்டால் என்ன?

    ReplyDelete
  2. நீங்க எழுதி இருப்பதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். நாம சாதாரண ஜனங்கள் என்னதான் செய்துவிட முடியும்? அரசிடம் கேள்விகள் கேட்டுஎன்னபயன் கிடைக்கும்?

    ReplyDelete
  3. //முஹம்மத் ஆஷிக் said...
    தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.அந்நியன்2...
    ஸ்ஸ்ஸ்ஸ்....அப்ப்ப்ப்ப்பாஆஆஆஅ.... பதிவு என்னா காரம்...!

    நம் நாட்டின் உலக வங்கி கடனை அடைக்கத்தான் இப்படி கஷ்டப்பட்டு சுவிஸ் வங்கியில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்களோ?

    பேசாமல், கருப்பு பணங்கள் எல்லாம் கடன் அடைக்க எடுத்துக்கொள்ளப்படும் என்று புது சட்டம் போட்டு விட்டால் என்ன? //

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.

    உலக வங்கியில் நாம் வாங்கியிருக்கும் கடனை கழித்தாலும் கூட மீதம் உள்ள பணத்தில் இந்தியாவில் உள்ள ஏழைகளை பட்டினி இன்றி காப்பாற்றி விடலாம்.

    அவர்கள்தான் பணத்தை பதுக்கி வைத்துள்ளார்கள் பிறகு எப்படி சட்டம் இயற்றுவார்கள் ?
    நாம்தான் முடிவு எடுக்கணும் அதாவது அனைத்து மக்களும் ஜாதி மதம் கட்சி வேறுபாடுன்றி நாட்டு நன்மையை கருத்தில் கொண்டு.

    நன்றி சகோ !

    ReplyDelete
  4. Lakshmi said...
    நீங்க எழுதி இருப்பதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். நாம சாதாரண ஜனங்கள் என்னதான் செய்துவிட முடியும்? அரசிடம் கேள்விகள் கேட்டுஎன்னபயன் கிடைக்கும்?
    February 22, 2011 8:30 AM //

    இப்படி சாதாரண ஜனங்கள்..சாதாரண ஜனங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிரமோ தவிர துணிந்து யாருமே கேள்விக் கேட்பது இல்லை.

    கேட்க்கும் நல்ல மனிதர்களுக்கு ஆதரவும் அளிப்பது இல்லை,இந்த நிலைமையில் இருக்கும் நாம் எப்படி முன்னேறுவது ?

    காரு,பங்களா,ஏசி,பணம் என்று பவனி வரும் அரசியல்வாதி உங்கள் ஒரு ஓட்டை பெறுவதற்கு தோப்புக் கரணம் போடசொன்னாலும் காதைப் பிடித்துக் கொண்டு உங்கள் ஆணைக்காக காத்திருப்பான்.

    போதும் என்று எப்போ நீங்கள் ஆணை இடுகிறிர்களோ....அதுவரைக்கும் உங்கள் பேச்சை அவன் மீரா மாட்டான் இப்படிப் பட்டவணிடமா கேள்விக் கேட்கப் பயப்புடுகிறிகள் ?

    அரசிடம் கேள்விக் கேட்க்காமல் மக்களிடமா கேள்விக் கேட்க்க முடியும் ?

    வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் நன்றிமா.

    அந்நியன் ஷ்ட்டைலில் உங்களுக்கு பதில் சொன்னதுனாலே கொஞ்சம் காரமாக இருக்கின்றது, மனம் பொருந்தவும்.

    ReplyDelete
  5. கட்டுரை அருமை.இறுதில் கூறிய பஞ்ச் டயலாக் அருமையோ அருமை.

    ReplyDelete
  6. பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது மக்களிடம் பணம் அதிகம் இருக்கும், அரசிடம் பணம் இருக்காது. அப்போது விலைவாசி உயரும். ஆனால் தற்போது அரசிடமும் பணமில்லை, மக்களிடமும் இல்லை. அப்படியானால் பணம் எங்கே போனது? இதற்கு பதில் தெரியவில்லை.

    ReplyDelete
  7. “Indians are Poor but India is not a poor country”.says one of the swiss bank directors.
    He says that “280 lac crore” of Indian money is deposited in swiss banks which can be used for ‘taxless’ budget for 30years.Can give 60 crore jobs to all Indians. From any village to Delhi 4 lane Roads. Forever free power supply 2 more than 500 social projects.Every citizen can get monthly Rs2000/- for 60years. No need of world bank & IMF loan. Think how our money is blocked by rich politicians .We have full right against corrupt politicians. Take dis seriously, be a responsible citizen !!!

    unmaivrumbi.
    Mumbai.

    ReplyDelete
  8. //ஸாதிகா said...
    கட்டுரை அருமை.இறுதில் கூறிய பஞ்ச் டயலாக் அருமையோ அருமை.//

    வருகைக்கும் உங்கள் அன்பான கருத்திற்கும் நன்றி அக்கா.

    ReplyDelete
  9. //பாலா said...
    பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது மக்களிடம் பணம் அதிகம் இருக்கும், அரசிடம் பணம் இருக்காது. அப்போது விலைவாசி உயரும். ஆனால் தற்போது அரசிடமும் பணமில்லை, மக்களிடமும் இல்லை. அப்படியானால் பணம் எங்கே போனது? இதற்கு பதில் தெரியவில்லை.

    பணம் எல்லாம் பத்திரமாக சுவிஸ் பேங்கில் இருக்கிறது பாலா சார்.

    முட்டாள் மக்கள்கள் நினைத்துக் கொள்கிறார்கள் பணம் பத்தாவிட்டால் மிசினில் அச்சடிக்க வேண்டியதுதானே என்று.
    இது போன்ற மக்கள்கள் இருக்கும் வரை அரசியல் வாதிகள் காட்டில்தான் மழை பெய்யும்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  10. //unmaivrumbi said...
    “Indians are Poor but India is not a poor country”.says one of the swiss bank directors.
    He says that “280 lac crore” of Indian money is deposited in swiss banks which can be used for ‘taxless’ budget for 30years.Can give 60 crore jobs to all Indians. From any village to Delhi 4 lane Roads. Forever free power supply 2 more than 500 social projects.Every citizen can get monthly Rs2000/- for 60years. No need of world bank & IMF loan. Think how our money is blocked by rich politicians .We have full right against corrupt politicians. Take dis seriously, be a responsible citizen !!!

    unmaivrumbi.
    Mumbai.

    Thank You Sir,For your kind information That,s very nice for each Indian it is important to know all this swiss matter
    My question is what are your expectation from our political leader ?
    India's economic lost in coming past the 30 years !!! Indian peoples seems to be in temper in this situation.

    thank you very much sir for your visit with comments.

    ReplyDelete
  11. //மக்களிடம் செருப்படி வாங்கினாலும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு ஒட்டு கேட்க்கும் அரசியல் வாதிகளையும் குறை சொல்லி பயன் இல்லை காரணம் மானம் என்று ஒன்று இருந்தால்தான் அவனுக்கு கவலை வரும் அதுதான் அவனுக்கு கிடையாதே அதான் அவன் மக்களைப் பற்றிக் கவலைக் கொள்வது இல்லை.//

    என்ன அந்நியன் பண்ண சொல்றிங்க...கோவம்..எரிச்சல்...எல்லாத்தையும் புளுங்கிட்டே நாமளும் இவர்களோட இவர்களாய் தான் வாழ வேண்டிருக்கு...எகிப்து..லிபியா மாதிரி ஒரு புரட்சி எல்லாம் கூட நம்ம ஊரில் பண்ண முடியாது...அதிலும் சாதி,இன வாரியா அரசியல் வாதிகள் மக்களை பிரிச்சிடுவானுங்க...தமிழன் உணர்ச்சி வசப்பட மட்டுமே படைக்க பட்டவன்...சரிதானே சகோ..???

    ReplyDelete
  12. //ஆனந்தி சொன்னது
    என்ன அந்நியன் பண்ண சொல்றிங்க...கோவம்..எரிச்சல்...எல்லாத்தையும் புளுங்கிட்டே நாமளும் இவர்களோட இவர்களாய் தான் வாழ வேண்டிருக்கு...எகிப்து..லிபியா மாதிரி ஒரு புரட்சி எல்லாம் கூட நம்ம ஊரில் பண்ண முடியாது...அதிலும் சாதி,இன வாரியா அரசியல் வாதிகள் மக்களை பிரிச்சிடுவானுங்க...தமிழன் உணர்ச்சி வசப்பட மட்டுமே படைக்க பட்டவன்...சரிதானே சகோ..???//

    வாங்க சகோ...சரியா சொன்னிர்கள் ஜாதி மதம்தான் அரசியல் வாதிகளின் ஆயுதம் தமிழனுக்கு உணர்ச்சியும் மானமும் இருக்கிறதுனாலேதான் இந்தியா இன்னும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நடக்கின்றது.

    ஆனால் தமிழனுக்கு ஒரு ஆபத்து என்றால் மட்டுமே இந்தியா தலையை குனிந்து கொள்ளும்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ ...

    ReplyDelete
  13. அந்நியன்2 நீங்க விரிவாகபதில் கொடுப்பதுதான் உங்கஸ்டைல், இதுல காரமோ,இனிப்போ, தவராக நினைக்க என்ன இருக்கு.சாதாரண மக்களிடமே கேள்வி
    கேக்க தயங்கரவங்க அரசிடமா கேள்விகேட்டு பதில் வாங்கமுடியும்? இதுவும் நம்ம கையாலாகாத்தனம்தானே.

    ReplyDelete
  14. யாரு சொன்னது நீளமா இருந்தா படிக்க மாட்டோம்ன்னு.. உங்கள் எழுத்துக்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அருமையாகத்தான் இருக்கிறது.. தயவு செய்து தொடருங்கள்..

    நியூட்டனின் 3ம் விதி

    ReplyDelete
  15. //Philosophy Prabhakaran said...
    இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...//

    ரொம்ப நன்றி பிரபா.

    இத்தோடு மூன்று மிகப் பதிவர்களின் பாராட்டைப் பெறுகிறேன் நன்றி பிரபா.

    ReplyDelete
  16. //Lakshmi said...
    அந்நியன்2 நீங்க விரிவாகபதில் கொடுப்பதுதான் உங்கஸ்டைல், இதுல காரமோ,இனிப்போ, தவராக நினைக்க என்ன இருக்கு.சாதாரண மக்களிடமே கேள்வி
    கேக்க தயங்கரவங்க அரசிடமா கேள்விகேட்டு பதில் வாங்கமுடியும்? இதுவும் நம்ம கையாலாகாத்தனம்தானே.
    February 24, 2011 9:37 PM //

    ஆமாம்மா..நீங்கள் சொல்லுவதும் சரிதான் கார்ப்பிரேசன் அலுவலகத்திலியே நம்மால் எழிதில் போக முடியாது இந்த அரசியல் வாதிகளின் கோட்டைக்குள்ளேயா நுழைய முடியும்? என்று கேட்க்கின்றிகள்,இப்போது மன்னர் ஆட்சிகள் எல்லாம் மலை ஏறி வருகின்றது அது போல பொது மக்கள் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்தால் எத்தனை கேள்வினாலும் நாம் கேட்கலாம் ஆனால் நாம் இணைய மாட்டோம் என்று நம் எல்லோருக்குமே தெரிந்த ரகசியம் அதுதான் இந்திய அரசியல்.

    நன்றிமா.

    ReplyDelete
  17. //கவிதை காதலன் said...
    யாரு சொன்னது நீளமா இருந்தா படிக்க மாட்டோம்ன்னு.. உங்கள் எழுத்துக்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அருமையாகத்தான் இருக்கிறது.. தயவு செய்து தொடருங்கள்..//

    நன்றி சார் கண்டிப்பா அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் தகவலுடன் எழுதுகிறேன் நன்றி..நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.

    ReplyDelete
  18. வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு நாம் உலக வங்கியில் வாங்கிய கடனை அடைக்க போகிறோம் என்று ஒரு அறிவிப்பு அரசு விட வேண்டும்.

    ReplyDelete
  19. //இளம் தூயவன் said...
    வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு நாம் உலக வங்கியில் வாங்கிய கடனை அடைக்க போகிறோம் என்று ஒரு அறிவிப்பு அரசு விட வேண்டும்.//

    எப்படி அரசால் அறிவிப்பு விட முடியும் ?

    எல்லாமே அவர்கள்தான் போட்டு வைத்துள்ளார்கள் இதுலே காங்கிரஸ் தலைவர்களின் பங்குதான் நம்பர் ஒன்னில் நிக்குதாம்.
    வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி இளம் தூயவன்.

    ReplyDelete
  20. அதுதாங்க பிரச்சினையே நாம இணையமாட்டோம். தனிதனியா கூவிகிட்டு இருப்போம். ஒன்று சேரனும். அதுதான் வேலைக்காகும்.

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    //அதுதாங்க பிரச்சினையே நாம இணையமாட்டோம். தனிதனியா கூவிகிட்டு இருப்போம். ஒன்று சேரனும். அதுதான் வேலைக்காகும்.//

    சகோதரி லஷ்மி அவர்களின் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன்

    சகோ அந்நியன் அருமையான விழிப்புணர்வு பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. சுவிஸ் பாங்க்கில் இருக்கும் பணம் மக்களுக்குச் சேர வேண்டிய பணம்.. ஆனால் அதனை திருப்பி இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் நீங்கள் காட்டும் கணக்குகள் எல்லாம் நடக்காது நண்பா..

    அது எப்படிப் போகும் என்று எனக்குத் தெரியும்.. வேண்டுமானால், அரசிடம் ஒழுங்காங்க வரியைக் கட்டி அதனை இந்தியாவுக்குக் கொண்டு வரலாம் என்று சொன்னால், கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏதேனும் செய்யலாம்.. இல்லை என்றால், சுவிஸ் பான்க்கிலேயே வைத்து அந்தப் பணத்தை அழித்து விடலாம்.. திடீரென வரும் பணம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கும்.. அதுவும் நமது அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா..??

    ReplyDelete
  23. //Lakshmi said...
    அதுதாங்க பிரச்சினையே நாம இணையமாட்டோம். தனிதனியா கூவிகிட்டு இருப்போம். ஒன்று சேரனும். அதுதான் வேலைக்காகும்.//

    பிரார்த்திப்போம் நாட்டு நலமும் மக்கள் நலமும்தான் நமக்கு வேணும்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றியம்மா.

    ReplyDelete
  24. //ஹைதர் அலி said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    //அதுதாங்க பிரச்சினையே நாம இணையமாட்டோம். தனிதனியா கூவிகிட்டு இருப்போம். ஒன்று சேரனும். அதுதான் வேலைக்காகும்.//

    சகோதரி லஷ்மி அவர்களின் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன்

    சகோ அந்நியன் அருமையான விழிப்புணர்வு பதிவு
    வாழ்த்துக்கள்.

    வ அலைக்கும் வஸ்ஸலாம் அண்ணன்

    நீங்கள் வழி மொழிந்ததை நான் பின் தொடர்கிறேன்.
    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி அண்ணே.

    ReplyDelete
  25. //சாமக்கோடங்கி said...
    சுவிஸ் பாங்க்கில் இருக்கும் பணம் மக்களுக்குச் சேர வேண்டிய பணம்.. ஆனால் அதனை திருப்பி இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் நீங்கள் காட்டும் கணக்குகள் எல்லாம் நடக்காது நண்பா..

    அந்நியன் : ஏன் நடக்காது சகோ ? மக்களுக்கு சேர வேண்டியப் பணம்தான் நான் இல்லைன்னு சொல்ல வில்லை.

    அது எப்படிப் போகும் என்று எனக்குத் தெரியும்.. வேண்டுமானால், அரசிடம் ஒழுங்காங்க வரியைக் கட்டி அதனை இந்தியாவுக்குக் கொண்டு வரலாம் என்று சொன்னால், கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏதேனும் செய்யலாம்.. இல்லை என்றால், சுவிஸ் பான்க்கிலேயே வைத்து அந்தப் பணத்தை அழித்து விடலாம்.. திடீரென வரும் பணம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கும்.. அதுவும் நமது அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா..??
    February 26, 2011 4:39 அம

    அந்நியன் : கொண்டு வரப் படுகின்ற பணம் அரசியல்வாதிகள் கையில் போகக் கூடாது மனித நேயம் உள்ள ஒரு கமிட்டியிடமோ அல்லது மக்கள் மன்றத்தின் கமிட்டியோ பெற்று மாநில வாரியாக பிரித்து எடுக்கணும் கந்த சாமியில் கூட விக்ரம் கொஞ்சம் புது யுக்த்தியை கையாளுகிறார் அது கொஞ்சம் சிரமம்தான் நமக்கு.

    சுவிஸ் பாங்கிலேயே வைத்து அழிப்பதற்கு அது என்ன வெறும் காகிதமா சகோ ? பணம்...இந்தியாவின் தலை எழுத்தை மாற்றக் கூடிய சக்தி அதற்க்கு இருக்கு.

    அது ஒன்னும் திடிர்னு வந்த பணம் இல்லை சகோ.. இந்தியாவிலிருந்து சுரண்டப் பட்டதுதான்.

    எந்த அடிப்படையில் வைத்து பணம் கூடுவதால் பொருளாதாரப் பிரச்சினை வரும் என்று கூறுகிறிகள்?

    அந்தப் பணத்தை கொண்டு நீங்கள் நாட்டு நலனுக்கு செலவிட வேண்டாம்,நாலு வழிப் பாதை ஒன்னும் போட வேண்டாம்,இலவசமா யாருக்கும் கொடுக்க வேண்டாம்,நல்ல கல்வி ஒன்னும் ஏற்ப்படுத்த வேண்டாம்,ஒண்ணுமே செய்ய வேண்டாம்,ஆனால் உலக பேங்கிலிருந்து வாங்கிய கடனை திருப்பி கொடுத்தாலே போதும் இந்தியா எங்கேயோ போயி விடும்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  26. நல்ல பதிவு .நீங்கள் அந்நியன் இல்லை .நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் உண்மை இந்தியன் .
    எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் ,தாமதித்தாலும் வந்து உங்கள் பதிவுகளை படித்து விடுவேன் .

    ReplyDelete
  27. உண்மையான இந்தியன் அப்படீன்னு ஒண்ணு இல்லியே ராசா ! மலையாளி இருக்கான் கன்னடன் இருக்கான் தமிழன் தெலுங்கன் மராட்டி பஞ்சாபி இப்படி இருக்கான். அவனவனுக்கு மொழி கலாச்சாரம் பண்பாடு இருக்கு ஆனா இந்தியன் அப்படீன்னு ஒண்ணு அடிப்படையில பொய். இந்த பொய் எங்கிற பவுண்டேசன்ல இருந்து தான் நீங்க உண்மைய உண்மை எங்கிற பில்டிங்க கட்ட முற்படுறீங்க. தமிழனும் கன்னடனும் இந்தியன் எங்கிறதுக்காக காவிரில தண்ணிய விடவாபோறான்? இல்ல மலயாளிதான் விடப்போறானா?

    அரசியல் அதிகாரக் கூட்டுக் கொள்ளையை தடுக்கவே முடியாது. சுரண்டல் லஞ்சத்தை ஒழிக்கவே முடியாது. திருந்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை ஏன்னா திருந்தணும்னா அதுக்கும் ஒரு அடிப்படை வேணும். இங்க அடிப்படையே பெய். எரியிற வீட்ல புடுங்கிறது வரை லாபம் எங்கிறது தான் இந்தியக் கணக்கு. முன்னாடி பிச்சக்காரன் ஊனமுற்றவனுக்கு உதவி செய்யக் கூடாதுன்னு சொன்னாங்க ஏன்ன அவங்க முன்வினை பாவத்த அனுபவிக்கிறாங்களாம். எவன் சொன்னானோ அவனே இந்திய அதிகாரவர்க்கம். இந்தியாவுக்கான பண்பு. யார் மேல இரக்கப்பட்டு சுவிஸ் வங்கீல போட்ட பணத்த திரும்ப எடுக்கணும்? நடமுறைக்கு எதுவுமே சாத்தியமில்லை. இனி ஊழல்கள் எல்லாம் ஐயாயிரம் கோடி பத்தாயிரம் கோடின்னு தான் நடக்கும். ஒரே வழிதான் இருக்கு இந்தியன் எங்கிற பொய்யை துறந்து தமிழன் எங்கிற உண்மைக்குள் வரவேண்டும். உன்னோட வீட்ட சுத்தி வேலிய முதல்ல போடு. ஊருக்கு வேலி அப்புறமா போட்டுக்கலாம்.

    ReplyDelete
  28. //angelin said...
    நல்ல பதிவு .நீங்கள் அந்நியன் இல்லை .நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் உண்மை இந்தியன் .
    எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் ,தாமதித்தாலும் வந்து உங்கள் பதிவுகளை படித்து விடுவேன் .//

    நன்றி சகோ..இப்போ நீங்கள் தமிழ் கற்றுக் கொண்டதை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது இப்படி பதிவுகள் எழுதுவது மூலம் நாட்டிற்கு ஒன்னும் ஆகப் போகிறது இல்லை,என்னுடைய ஆதங்கத்தை வெளிப் படுத்துகிரேனே தவிர,வேறே ஒன்னும் இல்லை, கணினிக்கு முன்பு அமர்ந்து ஹாயா என்னவேணும்னாலும் எழுதி விடலாம் ஆனால் ப்ராக்ட்டலில் அது ரொம்ப கஷ்ட்டம்.

    வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  29. //E.சாமி said...
    உண்மையான இந்தியன் அப்படீன்னு ஒண்ணு இல்லியே ராசா ! மலையாளி இருக்கான் கன்னடன் இருக்கான் தமிழன் தெலுங்கன் மராட்டி பஞ்சாபி இப்படி இருக்கான். அவனவனுக்கு மொழி கலாச்சாரம் பண்பாடு இருக்கு ஆனா இந்தியன் அப்படீன்னு ஒண்ணு அடிப்படையில பொய். இந்த பொய் எங்கிற பவுண்டேசன்ல இருந்து தான் நீங்க உண்மைய உண்மை எங்கிற பில்டிங்க கட்ட முற்படுறீங்க. தமிழனும் கன்னடனும் இந்தியன் எங்கிறதுக்காக காவிரில தண்ணிய விடவாபோறான்? இல்ல மலயாளிதான் விடப்போறானா?

    அந்நியன் : நீங்கள் சொல்லும் விளக்கங்களில் சிந்திப்போமேயானால் நாம் இந்தியனாகவே வாழ முடியாது சார்,தனி தமிழ் நாடு கேட்டுப் போராடிய தலைவர்கள் எல்லாம் இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கின்றார்கள் ஹிந்தியை எதிர்த்த கரை வேட்டிகளெல்லாம் ஹிந்தியில் கல்லூரிகளும் தொலைக் காட்சி நிறுவனங்களும் வைத்திருக்கிறார்கள் சாதாரண மனிதர்கள் நாம் அற்ப விசயங்களுக்காக பிரித்து பேசுவது முறையற்றது என்று நான் நினைக்கிறேன்.

    கன்னடத்தானும் மலையாளியும் தண்ணீர் தருவதற்கு தடங்கலாக இருக்கிறான் என்பது எனக்கும் தெரியும் எல்லா மக்களுக்கும் தெரியும் இதில் நாம் அரசு உதவியின்றி மக்கள் அமைப்பின் மூலமாக அவர்களிடம் கோரிக்கை வைத்தால் கண்டிப்பாக தண்ணீர் கிடைக்கும்,இதில் அரசியல் தலையீடோ அல்லது நீதி மன்றத்தின் குறுக்கீடோ இல்லாமல் ஒரு ஐம்பது ஆயிரம் தமிழர்கள் ஒன்றாய் கூடி அம்மக்களிடம் தண்ணீர் கேட்டால் கண்டிப்பாக ஏதாவது ரீதியில் நமக்கு நல்லது பயக்கும்.

    அரசியல் வாதிகள் ஓட்டிர்க்காவே மக்கள்களை குழப்புகிரார்களே தவிர நல்லது நடக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கிடையாது.

    குஜராத் பூகம்பத்தில் மொத்த இந்தியாவும் ரத்தக் கண்ணீர் வடித்தது,மும்பை தாக்குதலில் ஒவ்வொரு இந்தியனும் வெறி கொண்டு இருந்தனர் கார்கில் போரில் எல்லா இந்திய மக்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள்,இந்தியாவை பஞ்சம் கவ்விக் கொண்ட போது இந்தியா முழுதும் மக்கள்கள் மடிப் பிச்சை ஏந்தினார்கள்,இப்படி எல்லா துன்பத்திலும் ஒற்றுமையாக இருக்கும் நாம் சுவிஸ் பாங்கில் இருந்து பணத்தை எடுத்து யாரிடம் கொடுக்கவென்று பிரித்து பார்ப்பது நமக்கு அழகல்ல,யாருக்கும் கொடுக்க வேண்டாம் இந்தியாவின் கடனை மட்டும் கழித்தாலே போதும்.

    நாம் இந்தியன் என்று வாழ்வதே பெருமை ஏன் என்றால் இந்தியாவை அந்நியர்களிடம் இருந்து மீட்டது தமிழர்களே அதில் நமது உயிர்கள்தான் பல ஆயிரக் கணக்கில் காவு கொண்டுள்ளது,காந்திஜியோ,ஜவகர்லால் நேஹ்ருவோ வெறும் கை எழுத்துப் போடும் சமயத்தில் சில இன்னல்களை பட்டாரே தவிர சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் ஒன்னும் செய்து விடவில்லை,கடைசியில் ஒரு இந்தியனாலேயே காந்திஜி கொல்லப் பட்டார்,வெள்ளைக்காரன் நினைத்திருந்தால் ஒரு நிமிடம் போதும் காந்தியைப் போட்டு தள்ள,ஆனால் அவன் பயந்தது இந்திய மக்களைப் பார்த்துதான்.

    நம்மை சுற்றி வேலிப் போடுவதால் நமக்கு என்ன லாபம் ?

    நமது மனம் பரந்த மனம் மற்றவர்கள் நம்மிடம் வந்து தஞ்சம் அடைகிறார்களே தவிர நாம் யாரிடமும் தஞ்சம் கேட்டு அழுக வில்லை வந்தாரை வாழ வைப்பதுதான் தமிழகம்,அதில் அரசியல் தலைவர்களாகட்டும் ஆன்மிக குருக்கலாகட்டும்,அலது சினிமா துறையினராக இருக்கட்டும்,யாருக்கு என்ன குறைச்சல் தமிழகத்தில் ?

    அரசியல்வாதிகளை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை நமக்கு நாமே என்ற திட்டத்தின் படி மக்கள்கள் பொங்கி எழுந்து நதி நீர் பிரச்சனைக்கும் நமக்கு கிடைக்கவேண்டிய சழுகைகள் பிரச்சனைக்கும் ஒன்றாய் திரண்டு கோட்டையை முற்றுகை இட்டாலே போதும் எல்லாம் தானாக கிடைத்து விடும் இதில் சாதி,மதம்,அரசியல் பாகுபாடு இல்லாமல் எல்லா மக்கள்களும் ஒன்றாய் திரண்டால்....நம் வாழ்வில் பூக்கும் விடி வெள்ளி.

    நன்றி சார் வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும்.

    ReplyDelete
  30. வணக்கம் வழக்கரிஞ்சரே.
    உங்களின் பாராட்டத்தக்க
    பதிவு ஒன்று
    கண்டேன் உண்மையில் உங்களின்
    உள்ளம் கொதிக்கும்
    என்ற முன்னுரை
    படிப்பவரின்
    இதயத்தை
    இதயத்தின் குருதி ஓட்டத்தை
    மிகையாக்குகிறது
    இன்றைய இளஞர்கள்
    இதை வேறுவிதமாக
    பார்க்கவேண்டிய
    நிலையில் உள்ளோம்
    காரணம்
    இங்கு எந்த அரசியல்
    தலைவரும்
    தூய்மையனவரும் இல்லை
    அதேவேளை
    தண்டிக்கப்படவும் இல்லை
    காரண,காரியம் புரியாதது அல்ல
    எல்லோரும்
    இளங்கோவடிகள்
    சொன்னமாதிரி
    அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்று ...
    இளைஞ்சர் களே சிந்திபீர்
    பாராட்டுகள் நண்பரே .

    ReplyDelete
  31. வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் நன்றிகள் மருத்துவர் அய்யா அவர்களே.

    தாமதமான பதிலுக்கு மனம் பொறுக்கவும்.

    ReplyDelete