Tuesday, August 2, 2011

சிரிப்பு....சிரிப்பு...இன்ட்லி மக்களே உங்களுக்காக.1) போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

புகார் கொடுத்தவர்: என்ன சார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ர வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
2) பையன்: பாட்டி! நா ஓட்ட பந்தயத்தில கலந்துக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!

பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
3) ஆசிரியர்: கடல் பக்கத்தில ஏன் லைட் ஹௌஸ் கட்டறாங்க?

மாணவன்: லைட் ஹௌஸ் பக்கத்தில கடல் கட்ட முடியாது. அதனால தான் சார்!

4) ஆசிரியர்: கோழி ஏன் முட்டை போடுது?

மாணவன்: ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
5) ஆசிரியர்: இடுக்கண் வருங்கால் நகுக...

மாணவன்: நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
6)இன்ஸ்பெக்டருக்கு அரசியல் ஆர்வம் வந்திடுச்சுன்னு எப்படிச் சொல்ற கபாலி?

கபாலி : மாமூலை "பண மாலையா" போடச் சொல்றாரே!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
7)மன்னன் : வறுமையின் காரணமா நிறைய பொய் சொல்லிட்டேன்னு புலம்பறீங்களே... அப்படி என்ன பொய் சொன்னீர் புலவரே...?"

புலவர் : "தங்களைப் புகழ்ந்து ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடியதைத்தான் சொல்கிறேன் மன்னா...!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
8)கல்யாண தரகர்: நாம நாளைக்கு பொண்ணு பாக்க போறேமே... அவுங்க வீட்ல நேத்து திருடன் பூந்து எல்லாத்தையும் அபேஸ் பண்ணிட்டான்...

பையனின் தாய்: நாசமா போன திருடன் நமக்கு முந்திட்டானே...!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
9)டாக்டர்: இந்தா மூணு நாளைக்கு மருந்து. அப்புறமா இருந்தா வந்து பார்!

நோயாளி:ன்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க?

டாக்டர்: இல்லேப்பா... நா ஊர்ல இருந்தா வந்து பார்னு சொன்னேன்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
10)டாக்டர்: தேவைப்பட்டா அடுத்த வாரம் ஆபேரஷன்.

நோயாளி: யாருக்கு தேவைப்பட்டா?...!!!

டாக்டர்: எனக்கு தேவைப்பட்டா!! இது கூடவா சொல்லணும்?!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
11)ஒருவர் :குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?

மற்றவர் : நாம கேட்டா கொடுப்பாரா...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
12)கணவர் :சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.

ஏட்டையா : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே?

கணவர் : ங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.

13)பாட்டி : டேய்! உங்க மிஸ் வர்றாங்க...
ஓடி போய் ஒளிஞ்சிகோ...டா

பேரன் : ஐயோ பாட்டி..நீ போய் ஒளிஞ்சிகோ...
நீ செத்துடேனு சொல்லி தான் ஒரு வாரம் லீவ் போட்டு வீட்ல இருக்கேன்...

பாட்டி : அட சனியனே...!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
14)ஒருவர் : உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?

மற்றவர் : தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
15)ஒரு வீட்டில திருடன் வந்து நகை,பணம் எல்லாத்தையும் சுருட்டிகிட்டான்.அவன் கிளம்பும் போது அந்த வீட்டு குழந்தை பார்த்துட்டுச்சு.அந்த குழந்தை என்ன சொல்லிச்சு தெரியுமா?

என்ன சொல்லிச்சு ?

டேய் திருடா மரியாதையா என் ஸ்க்கூல் பேக்கையும் எடுத்திட்டு போ.இல்லையெண்டால் அம்மாவை எழுப்பிடுவேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
16)பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்,மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க

ஆசிரியர் :!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
17)வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?

சர்தார்: ஆகிவிட்டது.

வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?

சர்தார்: ஒர் பெண்ணை.

வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?

சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
18)பையன்: டிரஸ் சூப்பர்!

லேடி: தேங்ஸ்

பையன்: லிப்ஸ்டிக் சூப்பர்!

லேடி: தேங்ஸ்

பையன்: மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!

லேடி: தேங்ஸ் டா

பையன்: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
19)மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க,குழந்தை அழுவுது.

கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.


20) ஆசிரியர் : கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற மாங்காயை எப்படி பறிப்பாய்?

மாணவன் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.

ஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு?

மாணவன் : அப்ப கடல் நடுவில மரம் உங்க அப்பாவா வச்சாரு?

ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற உங்களுக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
21)தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது.

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா...என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன்.நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
22)மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்..

அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோம்ங்க.

கணவன்:சரி...அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..

மனைவி:எதுக்குங்க..

கணவன்:பிச்சை எடுக்கத்தான்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
23)நோயாளி: இப்போ சொல்றது அடுத்த நிமிடம் மறந்து போகுது டாக்டர்.

டாக்டர் : அப்படியா... எத்தனை நாளா இருக்குது இந்த வியாதி?

நோயாளி: எந்த வியாதி டாக்டர்??

டாக்டர்: !!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
24)ஒருவர் : உங்க மனைவி எதுக்கு உங்களை அடித்தார்கள்?

மற்றவர் : "பொறுத்தது போதும்"என்பதற்குப் பதிலாக "பெருத்தது"போதும்"முன்னு வாய் தவறிச் சொல்லிட்டேன் அதுக்குத்தான்.


25)சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார் நான்,மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
26)நெப்பொலியன் : முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
27)தலைவர் ஏன் மேடையில பீர்பாட்டில்,பிராந்தி
பாட்டிலையெல்லாம் தூக்கிக் காட்டுறாறு...?

தலைவர்கிட்ட 'சரக்கு இல்லை'ன்னு யாரோ
சொல்லிட்டாங்களாம்.....அதான்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மக்களே சிரித்திர்களா?

உங்கள் ப்ளாக் பிரபலம் அடைய வேண்டுமா அந்நியனின் சிறிய ஆலோசனைகள்.

ஆலோசனை நம்பர் ஒன்று : பதிவுகளை காப்பி&பேஸ்ட் செய்துவிட்டு உங்கள் ப்ளாக்கில் ஒட்டிவிடுங்கள்,பிறகு பதிவு சுட்ட இடத்திற்கு போய் அவர் இடும் பதிவிற்கு ஆகா... ஓகோ.. என்று கமெண்ட்ஸ் எழுதுங்கள்,அவரும் ஓடோடி உங்கள் ப்ளாக்கிற்க்கு வருவார் வந்ததுமே பதிவை பார்த்து விட்டு "அதிர்ச்சி"ஆகி விடுவார்.

பிறகு என்ன... அலறி அடித்து பஞ்சாயத்தைக் கூட்டுவார் பதிவுலக நண்பர்கள் எல்லோரும் கண்டன கனைகளை ஏவுவார்கள் பிறகு மிக சுலபமாக பிரபலம் அடையலாம்.
தினம் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும் நீங்கள் இடும் இடுகையை படிப்பதற்கு இல்லை நீங்கள் எங்கிருந்து என்ன சுட்டிருக்கிய என்று பார்ப்பதற்கு.

ஆலோசனை நம்பர் இரண்டு: வித்தியாசமான தலைப்பை தேர்ந்தெடுங்கள் மொக்கை பதிவாக இருந்தாலும்.

ஆலோசனை நம்பர் மூன்று: சினிமா நடிகர் நடிககைகளை பற்றி கிசு கிசு எழுதிக் கொண்டு இருங்கள்,குமுதம் மாதிரி.
26 comments:

 1. காமடி எல்லாம் சூப்பர், ஐடியாவும் சூப்பர்

  ReplyDelete
 2. //ஆலோசனை நம்பர் இரண்டு: வித்தியாசமான தலைப்பை தேர்ந்தெடுங்கள் மொக்கை பதிவாக இருந்தாலும்.

  ஆலோசனை நம்பர் மூன்று: சினிமா நடிகர் நடிககைகளை பற்றி கிசு கிசு எழுதிக் கொண்டு இருங்கள்,குமுதம் மாதிரி..//
  எப்படி எழுதுவது

  ReplyDelete
 3. //aleela Kamal said...
  காமடி எல்லாம் சூப்பர், ஐடியாவும் சூப்பர்//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 4. //Jaleela Kamal said...

  ஆலோசனை நம்பர் மூன்று: சினிமா நடிகர் நடிககைகளை பற்றி கிசு கிசு எழுதிக் கொண்டு இருங்கள்,குமுதம் மாதிரி..//
  எப்படி எழுதுவது//

  இப்படி எழுதுங்கள் சகோ.

  இது கோடம்பாக்கத்தின் குவா..குவா சீஸன் மனம் திறக்கிறார் டைரக்டர் பாலா.
  ஷ்ரேயாவிற்கு ஐஸ் க்ரீம் என்றால் உயிராம்...இப்படி ஸ்ரேயாவில் தொடங்கி நமிதாவில் முடித்தால் வாக்குகளும் கருத்துகளும் விழுகிறது என்று அய்யா கந்தசாமி அவர்கள் மனம் குமுறியது.

  நன்றி சகோ.

  ReplyDelete
 5. ஆஆஆஆஆஆ.. இதைப் படிச்சதும் கொலை வெறி அடங்கியிருக்குமே:))(நான் என்னைச் சொல்லல்லே:)).

  கலக்கல்.... சூப்பர்... மனம் விட்டுச் சிரிச்சாச்சூஊஊஊஊஊஊஉ..

  ஒருவர் :குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?

  மற்றவர் : நாம கேட்டா கொடுப்பாரா...//

  இது நல்லாயிருக்கு.

  ReplyDelete
 6. 23 வது நோயாளியைக் கண்டு பிடிச்சிட்டேன்... காலில் கயிறைப் போட்டு, தலைகீழாகத் தொங்கி, தன் 2 வது ஆசையை இனிதே நிறைவேற்றிக் கொண்டிருக்கும்.... செல்லமாக அழைத்தால் ரெண்டு எழுத்துக்கொண்டவர்..... ஹா..ஹா...ஹா... எப்பூடி என் கிட்னியின் கண்டுபிடிப்புயா???.

  //சினிமா நடிகர் நடிககைகளை பற்றி கிசு கிசு எழுதிக் கொண்டு இருங்கள்,குமுதம் மாதிரி.
  // அந்நியனுக்கும் ஆசை வந்திட்டுதுபோல, சினிமா நடிகையை பற்றி எழுத கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
 7. ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் .அதை விட ஐடியா ஜுப்பெரோ ஜூப்பர்.
  ஊருக்கு செல்கிறேன் .இதே மாதிரி ஜோக்ஸ் போட்டு எல்லாரையும் சிரிக்க வைங்க .மீண்டும் சந்திப்போம் .

  ReplyDelete
 8. மிரட்டல் கடி...அயூப்..
  கலக்கல்...
  குறிப்பா ஓட்ட பந்தய ஜோக் அருமை...

  ReplyDelete
 9. தினம் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும் நீங்கள் இடும் இடுகையை படிப்பதற்கு இல்லை நீங்கள் எங்கிருந்து என்ன சுட்டிருக்கிய என்று பார்ப்பதற்கு.

  ஹி..ஹி... இதுவும் ஜோக்தானே.....!

  ReplyDelete
 10. //thira said...
  ஆஆஆஆஆஆ.. இதைப் படிச்சதும் கொலை வெறி அடங்கியிருக்குமே:))(நான் என்னைச் சொல்லல்லே:)).

  கலக்கல்.... சூப்பர்... மனம் விட்டுச் சிரிச்சாச்சூஊஊஊஊஊஊஉ..//

  மனம் விட்டு சிரித்தமைக்கும் வந்து கலக்கியமைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 11. //athira said...
  23 வது நோயாளியைக் கண்டு பிடிச்சிட்டேன்... காலில் கயிறைப் போட்டு, தலைகீழாகத் தொங்கி, தன் 2 வது ஆசையை இனிதே நிறைவேற்றிக் கொண்டிருக்கும்.... செல்லமாக அழைத்தால் ரெண்டு எழுத்துக்கொண்டவர்..... ஹா..ஹா...ஹா... எப்பூடி என் கிட்னியின் கண்டுபிடிப்புயா???.

  அபாரம்...அனேகமாக உங்களை அமெரிக்காவில் உள்ள எஃப் பி ஐ(உளவு துறை)பணி நிமித்தம் செய்தாலும் செய்யலாம்.

  // அந்நியனுக்கும் ஆசை வந்திட்டுதுபோல, சினிமா நடிகையை பற்றி எழுத கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  அய்யோ அந்த கன்றாவி வேறயா?

  அப்படி ஒரு நிலமை வருவதற்குள் ப்ளாக்கை இழுத்து மூடிட்டு பேசமால் அய்யா அப்துல் கலாம் சொன்ன மாதிரி கனவு காண போய் விடுவேன் சகோ.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 12. //angelin said...
  ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் .அதை விட ஐடியா ஜுப்பெரோ ஜூப்பர்.
  ஊருக்கு செல்கிறேன் .இதே மாதிரி ஜோக்ஸ் போட்டு எல்லாரையும் சிரிக்க வைங்க .மீண்டும் சந்திப்போம் .
  சென்று வாருங்கள்.
  நினைத்ததை வென்று வாருங்கள்.
  நல்ல கருத்தை கொண்டு வாருங்கள்.
  நல்லவை நடக்கட்டும்...

  ReplyDelete
 13. //Reverie said...
  மிரட்டல் கடி...அயூப்..
  கலக்கல்...
  குறிப்பா ஓட்ட பந்தய ஜோக் அருமை...//


  நன்றி சகோ.

  கருத்திட்டமைக்கும் வருகைக்கும்.

  ReplyDelete
 14. //மு.ஜபருல்லாஹ் said...
  தினம் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும் நீங்கள் இடும் இடுகையை படிப்பதற்கு இல்லை நீங்கள் எங்கிருந்து என்ன சுட்டிருக்கிய என்று பார்ப்பதற்கு.

  ஹி..ஹி... இதுவும் ஜோக்தானே.....!

  அண்ணா...எல்லாவற்றையும் நீங்கள் சிரிப்பாக பார்க்கின்றிர்கள்.

  நானும் பிறகுதான் பார்த்தேன்...ஆமாலே நக்கலாத்தான் தெரிகிறது.

  நன்றிணா.

  ReplyDelete
 15. ஜோக் நம்பர் 25 தான் டாப்.

  ReplyDelete
 16. முயற்சி செய்து பார்க்கீறேன்

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  சிரிக்க வைத்த ஜோக்


  //25)சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

  சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார் நான்,மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..//


  சகோ ரமலான் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. செம கடிங்க. நல்ல டைம் பாஸ்.

  ReplyDelete
 19. நல்லாயிருக்கு

  ReplyDelete
 20. //ஸாதிகா said...
  ஜோக் நம்பர் 25 தான் டாப்.//

  கருத்திட்டமைக்கும் வருகைக்கும்,
  நன்றி சகோ.

  ReplyDelete
 21. //Jaleela Kamal said...
  முயற்சி செய்து பார்க்கீறேன்//

  ஹா..ஹா..எதுக்கு பிரபலம் அடைவதற்கா?

  நன்றி சகோ.

  ReplyDelete
 22. //ஆயிஷா அபுல். said...
  அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  சிரிக்க வைத்த ஜோக் //

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

  சிரித்தமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 23. //பாலா said...
  செம கடிங்க. நல்ல டைம் பாஸ்.//

  ஓகே...! பாஸ்

  வருகைக்கும் கருத்திற்கும் தேங்ஸ் பாஸ்.

  ReplyDelete
 24. //Raazi said...
  நல்லாயிருக்கு//

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

  மற்றும் இணைந்ததற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 25. அ ந் நியன்2 ரொம்ப நாள் கழிச்சு உங்கபக்கம் வந்தேன்.
  வயிறு குலுங்க சிரிக்கமுடிஞ்சது. உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்(மாட்டி விட்டேன்)
  முடியும்போது தொடருங்க.

  ReplyDelete