Wednesday, August 31, 2011

திரண்ட தமிழகம்!


ஏழு கோடி...தலையுடையாள்
ஏழாதவற்கும் அள்ளி தருவாள்
நாளு நாளாய் கண்ணீர் துயரால்
தவிக்கின்றாள் தமிழ் தாயவள்.

மத்திய அரசின் ஆனவமும்
கத்திய தமிழனின் ஆவனமும்
நீதியரசின் முன்னிலையில்
முட்டித்தான் பார்த்தது.

நீதிக்கு தலை வணங்கி
அநீதிக்கு குரல் சினுங்கி
வீர கம்பீரத்துடன்
தீர்ப்பளித்தார் நீதிமான்கள்.

மத்திய அரசின் படைகளும்
காந்திய பேரில் மனிதர்களும்
சிறையை பிடித்து வைத்தாலும்
திரையை அகற்ற முடியாது.

கொக்கரிக்கும் சுப்ரமணி சாமியும்
அதற்கு துணை போகும் ஆசாமியும்
குளத்தில் மிதக்கும் ஆமையென்று
செய்தி தாள்கள் சொல்லுகிறது.

மனித காந்தி சோனியாவும்
மவுனம் காப்பது சரியல்ல
மன்னிக்கும் பக்குவம் காந்திக்கு உண்டு
என்னைக்கு மாறும் இந்நிலை கண்டு.

மாநில அரசின் தீர்மானம்
மத்திய அரசு மதிக்காதாம்
விடையும் அவர்கள் நடையும்
வியப்பளிக்கிறது எங்களுக்கு.

ஓர் இந்தியா ஒரு மக்கள் ஒரு நாடு
கொள்கைக்கு உகந்ததல்ல உம் கோட்பாடு
மறவோம் மன்னிப்போம் மனித நேயத்தோடு
இறையான்மை காப்போம் ஒரு பலத்தோடு.

வாழ்க இந்தியா.

28 comments:

  1. அயூப்.. பெருநாள் வாழ்த்துக்கள்...
    கொஞ்ச நாளா பொங்கி எழுரீங்க...

    ReplyDelete
  2. //ரெவெரி said...
    அயூப்.. பெருநாள் வாழ்த்துக்கள்...
    கொஞ்ச நாளா பொங்கி எழுரீங்க...//

    நன்றி ப்ரதர்.

    உணர்ச்சியின் வலிகளை கொட்டி தீர்க்க இதுதான் எனக்கு தெரிந்த வழி சகோ.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. நல்ல கவிதை சகோ.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கவிதை நல்ல இருக்கு, எல்லாத்தையும் கொட்டி தீர்க்க நமெக்கெல்லாம் ஒரு பிளாக் கிடைத்தது..

    ReplyDelete
  5. //R.Elan. said...
    நல்ல கவிதை சகோ.வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி brother

    ReplyDelete
  6. //Jaleela Kamal said...
    கவிதை நல்ல இருக்கு, எல்லாத்தையும் கொட்டி தீர்க்க நமெக்கெல்லாம் ஒரு பிளாக் கிடைத்தது..//


    எனக்கு தெரிந்த வழி சகோ.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  7. மனித காந்தி சோனியாவும்
    மவுனம் காப்பது சரியல்ல
    மன்னிக்கும் பக்குவம் காந்திக்கு உண்டு
    என்னைக்கு மாறும் இந்நிலை கண்டு.

    ஒவ்வொரு வரிகளிலும் உங்கள் ஆதங்கம்
    புரிகிறது சகோ .நல்லதே நடக்கும் என நம்புவோம் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  8. //அம்பாளடியாள் said...

    ஒவ்வொரு வரிகளிலும் உங்கள் ஆதங்கம்
    புரிகிறது சகோ .நல்லதே நடக்கும் என நம்புவோம் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு ..//

    கண்டிப்பாக நம்புவோமாக சகோ எல்லாம் நன்மையிலியே முடியும்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. ஏழு கோடி...தலையுடையாள்
    ஏழாதவற்கும் அள்ளி தருவாள் ????????

    ReplyDelete
  10. //மு.ஜபருல்லாஹ் said...
    ஏழு கோடி...தலையுடையாள்
    ஏழாதவற்கும் அள்ளி தருவாள் ????????//

    ஏழு கோடி தலையுடையாள்

    தமிழர்களின் தலையை சொன்னேன்.

    ஏழாதவற்கும் அள்ளி தருவாள்.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் எம்ஜிஆரிலிருந்து இன்றைய ரஜினி வரை.

    தவறு இருந்தால் சுற்றி காண்பிக்கவும் திருத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  11. நல்ல கவிதை உங்க ஆதங்கம் புரியுது.

    ReplyDelete
  12. //Lakshmi said...
    நல்ல கவிதை உங்க ஆதங்கம் புரியுது.//

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.

    ReplyDelete
  13. இறையான்மை காப்போம் ஒரு பலத்தோடு... கவிதை கலங்கவைத்து கலக்குகிறது நண்பா... தொடர்ந்து கலக்குங்ககள்..

    ReplyDelete
  14. //மாய உலகம் said...
    இறையான்மை காப்போம் ஒரு பலத்தோடு... கவிதை கலங்கவைத்து கலக்குகிறது நண்பா... தொடர்ந்து கலக்குங்ககள்..//

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. ஏழாதவருக்கும் அள்ளித் தருவாள்

    பின்னே இந்தியா இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது?

    ReplyDelete
  16. உணர்ச்சிப்பூர்வமான வரிகள் சகோ. பார்க்கலாம் சோனியா மனது வைக்கிறார்களா என்று.

    என் தளத்தில் ஃபால்லோவர் விட்ஜெட் உள்ளது நண்பா.

    ReplyDelete
  17. //மு.ஜபருல்லாஹ் said...
    ஏழாதவருக்கும் அள்ளித் தருவாள்

    பின்னே இந்தியா இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது?//

    பணக்கார நாடாகிப் போனால் அமெரிக்கா போன்ற நாடுகள் கடன் கேட்டு விடும் என்ற காரணத்தால் மறைமுக பணக்கார நாடாக திகழ்கிறது சகோ.

    புதைந்து கிடப்பதை வெளியே கொண்டு வந்தால்தான் தெரியும்.

    நன்றி.

    ReplyDelete
  18. //காந்தி பனங்கூர் said...
    உணர்ச்சிப்பூர்வமான வரிகள் சகோ. பார்க்கலாம் சோனியா மனது வைக்கிறார்களா என்று.

    என் தளத்தில் ஃபால்லோவர் விட்ஜெட் உள்ளது நண்பா.//


    ஓK சகோ.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    கவிதை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவுக்கு வரும் கமெண்டை நீங்கள் படித்து விட்டு வெளியிடுமாறு{கமெண்ட் மட்டுமருத்தல்} வைக்கவும்.

    ReplyDelete
  20. பொங்கிய கவிதைக்கு நன்றி மாப்ள! TM 6 voted

    ReplyDelete
  21. //ஆயிஷா அபுல். said...
    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    கவிதை நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவுக்கு வரும் கமெண்டை நீங்கள் படித்து விட்டு வெளியிடுமாறு{கமெண்ட் மட்டுமருத்தல்} வைக்கவும்.//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    எனக்கு எதிரிகளே கிடையாது சகோ அதுனாலே அது தேவை இல்லைனு நினைக்கிறேன்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  22. //விக்கியுலகம் said...
    பொங்கிய கவிதைக்கு நன்றி மாப்ள! TM 6 voted/


    நன்றி விக்கி சார்.

    ReplyDelete
  23. சோனியா என்ற வெறி பிடிச்ச பெண்ணுக்கு இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் தேவைன்னு தெரியவில்லை .காலம் ஒரு நாள் நிச்சயம் பதில் சொல்லும்

    ReplyDelete
  24. வாங்க பாஸ் வந்த கையோடு ஆசிர்வாதமும் தந்து விட்டிர்கள் சோனியவுக்கு.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதில் சொல்லும் காலம் வெகு விரைவில்....

    ReplyDelete
  25. ஆஆஆஆஆஆஆ இப்பவெல்லாம் அந்நியன் கவிதையிலயே புளொக் எழுதிக் கலக்குறார்...

    ReplyDelete
  26. கவிதை மிக நன்று...

    ReplyDelete
  27. அதிர சொன்னது...
    ஆஆஆஆஆஆஆ இப்பவெல்லாம் அந்நியன் கவிதையிலயே புளொக் எழுதிக் கலக்குறார்...

    நன்றி சகோ.

    ஸாதிகா said...
    கவிதை கலக்கல்,


    நன்றி சகோ.

    Saravanan said...
    கவிதை மிக நன்று...

    நன்றி சகோ.

    ReplyDelete