Sunday, November 7, 2010

லஞ்சம்


அரசியல்வாதியானாலும் சரி,அரசு அதிகாரியானாலும் சரி,லஞ்சம் என்ற வார்த்தையை உபயோகிக்காத நாளேக் கிடையாது.
கேட்க்கும் விதம் பலவிதமாக இருக்கலாம்,ஆனால் பொருள் லஞ்சமே!

இந்தியத் தாய் வெள்ளைக் காரனிடம் பல நூறு வருடம் அடிமைபட்டிருந்தாள்
பாவம் அவளை மீட்க்க நமது தேசத் தலைவர்கள் ஜாதி மதம் மறந்து, ஒன்றிணைந்து பல உயிர்களை பலியிட்டு,பல இன்னல்களை மதித்தேற்று,வீர மரணித்தப் பிறகு அவளை மீட்டார்கள்.

பசுமை நிறைந்த காடுகளும்,பலகோடி ஏக்கர் பல்ல மேடுகளையும் திகைப்பூட்டும் வன விலங்குகளையும்,பாங்காய் பலவித அருவிகளையும்,கம்பீரமான மலைத் தோற்றங்களையும்,இன்னும் பல ஆயிரம் இயற்க்கை வளங்களையும் இறைவனடிமிருந்து இலவசமாக பெற்று இருந்தாள்.இவ்வளவு அழகினைப் பெற்றத் தாயவள் இன்று உலக மக்களிடம் தலை குனிந்து நிக்கிறாள்.

ஆம் ! உலக தர வரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடமாம்,
முதலிடம் என்றால் சந்தோசப் படவேண்டியதுதானே என்று நீங்கள் கேள்விக் கேட்கலாம்,
* பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் பெற்றிருந்தால் சந்தோசப் பட்டிருப்போம்.
*வறுமையை ஒழித்திருந்தால் கூட சந்தோசப் பட்டிருப்போம்.
*இன்னும் எத்தனையோ நல்ல விசயங்களில் முதலிடம் பெற்றிருந்தாலும் சந்தோசப் பட்டிருப்போம்.
ஆனால் லஞ்சம் வாங்குவதலில் முதலிடமாம்.
நூற்றி பத்துக் கோடி மக்கள்கள் வசிக்கும் நாட்டில் இதுலாம் சகஜம்தானே, என்று கேட்டு விடாதிர்கள், ஏன் என்றால் சிறி சிறிய தப்புக்களை நாம் முளையிலையே கிள்ளி எரியாததுனாலே இன்று வேரூன்றி பெரிய ஆல மரமாக வளர்ந்து நிக்குது,லஞ்சம் என்ற விசச் செடி.
பக்கத்து நாடான சீனாவையும் பாருங்கள், நம்மை விட மக்கள் பெருக்கத்தில் கூடுதலானவர்கள்தான்,இன்று உலகத் தர வரிசையில் சீனா முதலிடம்.          ( ஆசியக்கண்டம் மட்டும் )
லஞ்சம் வாங்குவதிலியா ?
இல்லை உணவு உற்ப்பத்திலேயும் சரி,ஆயுத உற்பத்தியிலும் சரி,மற்றும் ஏனைய வர்த்தக ரீதியிலும் சரி,சீனா நம்பர் ஒண்ணாகவே திகழ்கிறது,
அதுக்குக் காரணம் ???
மக்கள்கல்தான் காரணம்,அயராத உழைப்பு,அனாவசியமாக வாகனத்தை உபயோகிக்காமல்,ஏன் என்றால் வாகன போக்குவரத்தினால் மாசு ஏற்ப்பட்டு விடுமாம்,எரி பொருள் வீணாகி விடுமாம்,என்று காரணம் காட்டி பெரியவர் முதல் சிறியவர் வரை,பணக்காரனிலிருந்து ஏழைகள் வரை,அரசியல் வாதியிலிருந்து,அரசு அதிகாரி வரை, பத்துக் கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நகர் களுக்கு சைக்கிளில்தான் செல்லுகிறார்கள்.

நம்ம நாட்டிலேயும்தான் இருக்கார்களே, சைக்கிள் ஓட்டுவதை கேவலமாக நினைக்கும் மக்கள்.

மிக சமிபத்தில் உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கு,லஞ்சம் பெறுபவர்கள்,அவர்கள் செய்து கொடுக்கும் பணிக்கு ஏற்றவாறு தொகையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், அதிகமாக வசூல் பண்ணக் கூடாது என்றும், விசித்திர தீர்ப்பை வாரி வழங்கி இருக்கிறார்கள் நீதிமான்கள் ??

இந்தியச் சட்டத்தில் ஆயிரம் ஓட்டை இருக்கு,கீழ் கோர்ட் தண்டனை வழங்கியால்,மேல் கோர்ட் அதை தடை செய்கிறது ,மேல் கோர்ட் விதித்த தடையை தற்காலிகமாக சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து விடுகிறது,இப்படி தடை,தடைன்னு, தடையை விதித்தால் தண்டனை யார் கொடுப்பது ??? அப்போ பாதிக்கப் பட்டவரின் கதி ?
குற்றம் சுமத்தப் பட்டவனுக்கு குற்றம் செய்வதற்கு மேலும் ஆர்வம் தூண்டுமே.... இன்னும் பல குற்றம் புரிவதற்கு.

இதுக்கெல்லாம் யார் காரணம் ?
லஞ்சம்தான் காரணம்.

இலவசப் பாடப் புத்தகம் பெற லஞ்சம்,இலவச சீருடைப் பெற லஞ்சம்,இலவச சைக்கிள்கள் பெற லஞ்சம்,அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய இலவச சலுகைகளை பெற லஞ்சம்,பிறப்பு சான்றிதழ்கள் பெற லஞ்சம்,இறப்பு சான்றிதழ்கள் பெற லஞ்சம்,இப்படி ஈவு இரக்கமின்றி லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளையும்,அரசு அதிகாரிகளையும் என்ன செய்வது ?

இவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா ? என்று நீங்கள் கேள்விக் கேட்கலாம் ,
இவர்களை நாம் சட்டத்தின் முன்பு கொண்டு போவதற்கு முன்பு பாமரக் குடி மகனும் சட்டத்தை அறிந்திருக்கனும்,அப்பத்தான் இவர்கள் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பமுடியாமல் பாது காக்க முடியும்.

அதுக்காக வக்கிலுக்கா படிக்க முடியும் என்று முனங்காதிர்கள்.
வக்கீலும்,போலிசும்,நீதிமான்களும் மட்டுமே சட்டத்தை தெரிந்து இருப்பதுனாலேதான் மக்கள்களை அவர்கள் ஒரு தூசியாகவே பார்க்கிறார்கள்,சட்ட புதுத்தகத்தை ஒரு முறை புரட்டிப் பாருங்கள், அது மக்கள்களுக்கு என்ன... என்ன சலுகைகளை வழங்கியிருக்கு என்று,போலிஸ் நமக்கு சேவை செய்யக் கூடிய வேலைக் காரன்தான் என்று சட்டம் சொல்லுது,ஆனால் போலிசுக்கு நாமாதான் வேலைக்காரனா இருக்கோம்.

இந்த அறியாமை ஒழிக்கப் படனும்,சட்டத்தை அனைவரும் கட்டாயக் கல்விப் போல படிக்கணும், அப்பத்தான் இந்த ஊழல் பெருச்சாளிகளை ஒழிக்க முடியும்,நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.சட்டத்தைத்தான் நாம் கையில் எடுக்கக் கூடாது 
சட்டப் புத்தகத்தை எடுக்கலாம். 


15 comments:

 1. நாட்டாம சொம்ப தூக்கி போய் நாட்டம செய்ததற்கு மிக்க நன்றி
  இனி யாருக்காச்சும் இபப்டி நாட்டம தேவை பட்டால், இங்கு தான் வந்து சொல்வோம்.

  ReplyDelete
 2. வாருங்கள்....சும்மா வராமல் தப்பு செய்தவரின் முகவரியோடு வாருங்கள்.

  ReplyDelete
 3. நல்ல சமூக அக்கரைகொண்ட இடுகை சகோ ஐயூப்.தொடருங்கள்.எப்போ நாட்டாமையில் இருந்து அந்நியனானீர்கள்?:-)

  ReplyDelete
 4. ரெண்டு நாளுக்கு முன்புதான் சகோ...
  ஜலீலா அக்காள் போட்டக் கூச்சலில் நாட்டாமையா போன என்னை,அந்தப் பதிவரின் தவற்றைப் பார்த்து அந்நியனா மாறிவிட்டேன் .இது ஒன்னும் புதுசு இல்லை, ரெண்டு வருஷம் தினகரன் ஆன் லைனில் போட்ட வேசம்தான் அக்காள்.
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. நான் கேட்க வந்தேன் அக்கா கேட்டுடாவோ..

  அந்நியன் அந்நியனாக செயல்பட வாழ்த்தமாட்டோம்.
  அப்படியே நாட்டமை [நாட்டு ஆமையாக] இருந்தால் பாராட்டுவோம்..

  நல்ல பதிவுங்கோ நாட்டாமையிலிருந்து மாறிய அந்நியனுக்கு ஒரு ஓஹோ..

  ReplyDelete
 6. ஓஹோ..போட்ட நீங்களும் சரி,ஆஹா போட்ட மற்றவரும் சரி,எல்லோருமே எனக்கு கூடப் பிறக்காத சகோதரிகள்தான்.
  நாட்டாமையா வந்து "லே" லேனு..பேசுறதை விட, அந்நியனா இருந்து மக்களுக்கு நாலு நல்ல வார்த்தைகளை சொல்லாலாம்னுதான் அக்காள்.
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. அடடா!
  தப்பு பண்ணா உங்க கிட்ட சொன்னா போதுமா? :)

  எங்கேயோ நல்லது நடந்தா சரி தான். இப்படி சொல்றதுக்கே நல்ல மனசு வேண்டும்.


  //சட்டத்தைத்தான் நாம் கையில் எடுக்கக் கூடாது
  சட்டப் புத்தகத்தை எடுக்கலாம். // ரசித்த வரிகள் :)

  ReplyDelete
 8. வருக ! வருக ! ஆமினாஅக்காள், வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.
  சில விசம பதிவர்களால் உங்களின் மனது புண் படும்படியாகவோ,அல்லது உங்களின் ஆக்கத்தை உங்களின் அனுமதியில்லாமல் வெளியிடும் பதிவர்களின் முகத்திரையைக் கிழிப்பது,மற்றும் நம்மால் ஏன்ற அளவு மக்களுக்கு நல்ல சேதியை சொல்லுவது மட்டுமே தொழில்

  ReplyDelete
 9. வரவேற்கிறேன் அந்நியரே

  அந்நியம்
  அகலுமா
  பேச்சொன்று
  பேசிவிட்டு
  கைவீசி
  நடக்கலாகாது
  விடைகொண்டு
  வாறேன்
  விடுவி என்னை
  எனுமாம்
  எண்ணம்..........

  ReplyDelete
 10. கடமை கண்ணியமா நடக்கும் எந்த ஒரு ஆன்மாவும் கட்டுப் பாடுடுத்தான் செயல் பட வேண்டும்.
  அவை அத்து மீறிப் போகும்போது குற்றங்களும்,தவறுகளும் தலை தூக்கி ஆடுகின்றன,இவையை தட்டிக் கேட்க்க அரசு தயங்கும் பட்ச்சத்தில்,பாதிக்கப் பட்ட அப்பாவி மானிடனும் அந்நியனாக மாறிவிடுகிறான்,
  பல இணையத் தளங்களில் அந்த அயோக்கிய டாக்டரைப் பற்றித்தான் பேச்சு.
  இதுக்கெல்லாம் யார் காரணம் ?
  அறியாமைதான் காரணம்.

  சொல்லிய சொல்லை நிறைவேற்றி முடிக்கும் வரை, பேச்சு என்றுமே மாறாது அந்நியனின் வடிவமைப்புக்கு,அந்த எண்ணமே என்னை விடுவி என்றாலும்.

  வரவேற்கிறேன் தினேஷ் அண்ணே.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சகோதரா வீழ்த்த நினைக்கும் வினையை வீழ்த்து விடிவு கொள்ளட்டும் சமுதாயம் சட்டத்தில் வீழாவிடின் யுத்தத்தில் வீழ்த்தும் நேரம் வருமாயின் என் கரம் கோரும் அருவாளுடன் உன் கரம் சேருவேன்
  ........

  ReplyDelete
 12. சரி. கோவையில் நடந்த என்கவுண்டர் பற்றி அந்நியனின் கருத்து என்ன?

  ReplyDelete
 13. உங்கள் தளத்தில் சொல்லி விட்டேன் வருகைக்கு நன்றி பாரதி

  ReplyDelete
 14. வருகைக்கு நன்றி பாரதி

  ReplyDelete