Friday, November 12, 2010

சட்டத்தின் சலுகைகள்





ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா?

ஆம் அளிக்கிறது.

நம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது நள்ளிரவில் திருடர்களோ அல்லது சமூக விரோதிகளோ வீட்டினுள் நுழைந்து உங்களை கொடூரமாக தாக்கிவிட்டு உங்களின் சொத்துக்களை கொள்ளையடித்துப் போகும் சமயத்தில் தாராளமாக நீங்கள் அவர்களைக் கொல்லலாம்.

நீங்கள் கொல்லப் போவது இல்லை தற்க்காப்பிற்க்காக நீங்கள் எதிர்தாக்குதல் செய்யும் பட்ச்சத்தில் அவர்கள் உயிர் துறக்க நேரிட்டால்,அத்தைகைய செயல் குற்றமாகாது இதைப் பற்றி நமது இந்திய அரசியலைமைப்பு சட்டப் பிரிவு என்ன சொல்லுது ?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, தற்காப்புரிமை செயல் (Act Of Private Defence) என்று சட்டம் அங்கிகரிக்கிறது.

இந்த உரிமையை பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத்தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதை பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது.

ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

எதிர்த்துப் போராடுங்கள் அதுதான் வீரனுக்கு அழகு என்னைக்கோ ஒரு நாளைக்குப் போகப் போகிற உயிர் ஒரு ரெண்டு தீயவர்களை கொண்டோம்னு போகட்டுமே அதுனாலே ஒரு நூறு பேராவது சந்தோசப் படடுட்டுமே.

அப்படி நீங்கள் தற்க்காப்பிற்க்காக செய்யும் குற்றத்தை குற்றம் என்று எந்த நீதி மன்றத்திலேயும் நிரூபிக்க முடியாது போலிசு வேணா உங்களைக் கைது பண்ணலாம் விசாரணையில் நீங்கள் நிராபாரதிதிதான் என்ன நீங்கள் சட்டம் தெரிந்தவராக இருக்க வேணும் அப்போதுதான் வெல்ல முடியும் தற்காப்பு பிரிவு சட்டம் மக்களுக்கு என்ன என்ன சழுகை அளிக்கிறது பாருங்கள்.


இந்திய தண்டனை சட்டத்தின்

(Indian Penal Code) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை
பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள
உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிப்பு, அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

ஆகவே நீங்கள் கோழையாக இருக்காமல் நம்மை கொன்னு நம் உடமைகளை அள்ளிப் போகவரும் கயவர்களை கொல்வதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கு ஆனால் யாருமே இதை செயவதுக் கிடையாது காரணம் நமது கோழைத்தனமும் அறியாமையும்தான்.

இப்படி பட்ட ஒரு சூழ் நிலையில் நீங்கள் சட்டத்தைக் கையில் எடுங்கள் அதற்காக குடும்பச் சண்டைக்கெல்லாம் சட்டத்தைக் கையில் எடுத்து விடாதிர்கள்,அது உங்களையும் உங்கள் வாரிசுகளையும் அழித்து விடும்.



அந்நியன் :

6 comments:

  1. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. சரி. கோவையில் நடந்த என்கவுண்டர் பற்றி அந்நியனின் கருத்து என்ன?

    ReplyDelete
  3. தயவு செய்து வேர்ட் வேரிபிகேஷனை நீக்கவும்.
    கருத்துரை வழங்க சிரமமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி பாரதி கோவை என் கௌண்டருக்கு உங்கள் தளத்தில் வந்து பதில் சொல்லுகிறேன்.

    வேர்ட் வெர்பிகேசனை எப்படி நீக்கணும்னு சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  5. அதிகம் படித்தவன் எல்லாம் முட்டாள் என்று படித்திருக்கிறேன் நண்பா . அப்படித்தான் இன்றைய நமது வளர்ச்சியும் . வாழ்த்துக்கள்.
    சிறந்தப் பதிவு சிந்திக்க வைக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் . எனக்கு மற்றொரு பெயரும் உண்டு .உங்களின் பெயருக்கு முன்னால் RDX செர்த்துப்பாருங்கள் தெரியும் .தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் அவதரிப்பான் இந்த .............??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  6. வருகைக்கும் உங்களின் கருத்திற்கும் நன்றி அண்ணே.
    நிஜத்தில்தான் நம்மால் ஒண்ணுமே செய்யமுடிவதில்லை இந்த தளத்தின் மூலமாவாது மக்களுக்கு (!)நல்லதை சொல்லலாம் என்று ..
    உங்களுக்கும் ஆர் டி எக்சுக்கும் சம்பந்தம் இருந்தால் அண்ணனடிடம் எச்சரிக்கையாக இருக்கணும்னு நினைக்கிறேன்.
    நன்றி அண்ணே !

    ReplyDelete